முத்தம் சிதறிய முகிலே
“எப்படி வேதா முடியும்? இல்ல எப்படி முடியும்னு கேட்கிறேன். நாங்க இருக்கும் போதே, இத்தனை பேரை கூப்பிட்டு வச்சு சட்டமா சொத்தை எழுதிக் கேட்குற உன் அண்ணி, அதை அமைதியா வேடிக்கை பார்க்குற உன் அண்ணன், இவங்களை நம்பி என் பொண்ணுக்கு ஒண்ணுமில்லாம எப்படி நான் விட முடியும்.” என்றார் காதம்பரி.
“அம்மா..! எப்பவுமே உங்களுக்கு...
அத்யாயம் 9:
மொட்டை மாடியில் துணியை காயவைத்துக் கொண்டிருந்தாள் சந்தியா. பக்கத்து மாடியில் இருந்து அவளைப் பார்த்த நீலாவதி,
“என்னம்மா சந்தியா? உன் நாத்தனார் கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது?” என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
“அதெல்லாம் படு ஜோரா நடந்துகிட்டு இருக்கு சின்ன அத்தை..” என்றவள் செய்யும் வேலையில் கவனமாக இருக்க, அதைப் பார்த்த நீலாவதிக்கு எரிச்சலாக...
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..” என்றார் கமரிய குரலில்.
“ஒன்னும் இல்லைன்னா சந்தோசம் தான்.” என்றவள் அவரின் கையில் சூடான டீ டம்ளரை கொடுத்துவிட்டு, தந்தைக்கும் எடுத்துச் சென்றாள்.
“நானே கேட்கனும்னு நினைச்சேன்டா. நீயே டீ கொடுத்துட்ட” என்றவரின் முகமும் எதையோ மறைக்க,
“என்னப்பா பிரச்சனை?” என்றாள் பட்டென்று.
கொஞ்சம் தயங்கியவர்..
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..” என்றார்.
“உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதாப்பா?” என்றாள். அவர் நிமிர்ந்து...
அத்யாயம் 8
வீடு வந்து சேர்ந்த பின்னும் அவள் அமைதியாகவே இருக்க, சரணுக்கு உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது. அதிலும் யாரின் முகத்தையும் பார்த்து அவள் பேசவில்லை. அதுவே அவனுக்கு சந்தேகத்தை கிளப்ப,
“உடம்புக்கு இப்போ ஓகே வா வேதாம்மா..! வேற எதுவும் பிரச்சனையில்லையே?” என்றான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தாள் வேதா. அந்த பார்வையின் பொருளை அவனால் அறிந்து...
“எஸ்..! டென் டேஸ் முன்ன தான் வந்தேன். வந்ததும் உன்னை வந்து பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட், ஆபீஸ்ல கொஞ்சம் டைட் வொர்க். இன்னைக்கு இங்க எதிர்பார்க்காம சந்திப்பேன்னு நினைக்கலை..” என்றான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா. அவனைப் பார்ப்பதற்கு முன்பு கூட, அவனைப் பார்க்க வேண்டும்,பேச வேண்டும் என்று சில நேரங்களில் தோன்றியதுண்டு. ஆனால் இன்று...
அத்யாயம் 7
அகரனுக்கு ஒரு பிராண்டேட் பேண்ட்டும் ஷேர்ட்டும் எடுத்த வேதா, ஒரு ப்ராண்டேட் வாட்சும் எடுத்தாள். ஒவ்வொரு வருடமும் அவள் எடுத்துக் கொடுப்பதைத் தான் அவன் அணிய வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்றை வைத்திருந்தாள்.
“டேய் தம்பிப் பையா..! நாளைக்கு இதைத் தான் போடணும்” என்றாள் செல்லமாய்.
“அது தான உலக வழக்கம்” என்றான் அகரனும்...
“அகரா..!” என்ற விஜய்யின் குரலில் அவன் திரும்பினானோ இல்லையோ, வேதா திரும்பி விட்டாள்.
“சண்டே அதுவுமா இவ்வளவு காலையில எங்க போற?” என்றான்.
“பால் பாக்கெட் வாங்கண்ணா” என்றான்.
“நாளையில் இருந்து உங்களுக்கும் சேர்த்து போட சொல்லியிருக்கேன்..” என்றவன், அவன் கையில் ஒரு பிளாஸ்கை திணித்து,
“இன்னைக்கு ஒரு நாள் காபி குடிங்க ரெண்டு பேரும்..” என்றான்.
“ஓகேண்ணா..! தேங்க்ஸ்” என்றான்....
அத்யாயம் 6:
அன்று மாலையே விஜய்யின் வீட்டிற்கு மாறியிருந்தனர் வேதாவும், அகரனும். அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்கள் பொருளை அடுக்குவதைத் தவிர. மற்றபடி வீட்டிற்கு தேவையான அனைத்து அத்யாவசிய பொருட்களும் அங்கு இருந்தது.
“அண்ணா, நான் கேட்கணும்னு நினைச்சேன். வீட்டு யூஸ்க்கு தேவையான எல்லா பொருளும் இருக்கு. இதெல்லாம் நாம வாங்கவே இல்லையே. அது...
அவள் கத்திய கத்தலில் அகரன் அதிர்ந்து விழிக்க,
“என்னாச்சு வேதா? ஏன் காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்றான் சரண். அப்போது தான் நிஜம் உரைத்தது அவளுக்கு.
“சாரிண்ணா..! ஏதோ ஒரு கோபத்துல என்னை மீறி கத்திட்டேன்..” என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு,
“சாரி அகரா” என்றாள்.
“என்னாச்சு வேதாக்கா? தலை வலிக்குதா?” என்றான் அகரன் எதுவும் நடவாததைப் போல். அவள்...
அத்யாயம் 5:
காலேஜ் கேன்டீனில் அமர்ந்திருந்த வேதா அகரனைக் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருக்க,
“இப்ப எதுக்கு வேதா வந்ததுல இருந்து முறைச்சுட்டே இருக்க?” என்றான். அவனுக்கு காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
“ஏன்னு உனக்குத் தெரியாதாடா எருமை..” என்று அவள் மீண்டும் பல்லைக் கடிக்க,
“சொன்னாத்தான தெரியும்” என்றான்.
“அடேய்..! சரண் அண்ணா பிரண்டு அந்த ரகு...
“எதுக்கு கீர்த்தனா இந்த விஷப் பரீட்சை எல்லாம். நான் வேணும்னா வெளிய ஆர்டர் போடட்டுமா?” என்று ரகு கேட்க,
“போதும் நீங்க ஓட்டுனது. ஆனா, நானும் நல்லா சமைச்சு, ஒரு நாள் இல்ல ஒரு நாள்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,
“இந்த சபதம் எல்லாம் வேண்டாம் அண்ணி . அதுக்குள்ள எல்லார் உசுரும் ஊசல் ஆடிடும்.....
அத்யாயம் 4
விஜய ரகு நந்தனின் முன் அமர்ந்திருந்தனர் சரணும், ராமச்சந்திரனும். அவன் அமைதியே அவன் கோபத்தைக் சொல்லாமல் சொல்லியது. நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டதில் தான் அவனுக்கு இவ்வளவு கோபம். எல்லோரும் சேர்ந்து ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை பந்தாடுகிறார்கள் என்றே அவன் நினைத்தான்.
“எந்த விஷயத்தையும் யோசிக்காம செய்ய வேண்டியது. அப்பறம் பீல் பண்ண...
வீட்டிற்கு வந்தவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். மற்றவர்களுக்காக வெளியே சிரிப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், மனதின் ரணங்களை உடனடியாக எப்படி மறக்க முடியும் அவளால். அங்கிருந்த பால்கனியின் ஓரத்தில் அமர்ந்தவளுக்கு, தன் வீடும், அதில் நிறைந்திருந்த வாழ்வியலும் ஞாபகத்திற்கு வர, தன்னையறியாமல் கண் கலங்கினாள். எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல்...
அத்யாயம் 3:
நான்கு மாதங்களுக்குப் பிறகு...
சென்னையின் புகழ் பெற்ற அந்த பொறியியல் கல்லூரியின் அலுவலக வாசலில் நின்றிருந்தாள் வேத வர்ஷினி. சரணும், மனோகரனும் உள்ளே சென்றிருக்க, வெளியே நின்றிருந்தவளின் பார்வை இலக்கின்றி ஏதோ ஒரு ஒரு புள்ளியை வெறித்துக் கொண்டிருந்தது. இந்த நான்கு மாதங்கள் அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்க, புயலில் சிக்கிய பூங்கொடி போல்...
அத்யாயம் 2:
சரண்- கீர்த்தனா திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. இதோ இன்று அவர்களை சென்னை அழைத்துச் செல்ல கீர்த்தனாவின் குடும்பத்தினரும், அவர்களுடன் ரகுவும் வந்திருந்தான். முன்தினம் பெய்த மழையில் காலநிலையும், சுற்றுப்புறமும் ரசிக்கும் படியாகவே இருந்தது.
அண்ணன் தம்பிகள் மூன்று பேரின் வீடும் அடுத்தடுத்து வரிசையாக, ஒரே மாதிரியான கட்டமைப்பில் இருந்தது. வீட்டினை சுற்றிலும்...
மேடையில் போட்டோ செஷன் முடிந்து, நண்பர்களின் கேலியும், கிண்டலும், நடனமும் என்று ஆரவாரமாய் இருந்தது. டிஜேவும், அவர்களின் வைபிற்கு ஏற்றவாறு பாடல்களை ஒலிபரப்ப.. ஆட்டமும்,பாட்டமும் ஆனது அவ்விடம்.
“எங்க காலத்துல எல்லாம் மாப்பிள்ளை முகத்தை பார்க்கவே அவ்வளவு வெட்கப்படுவோம். இப்ப இருக்க பிள்ளைங்க எல்லாம் வெட்கம்னா என்னன்னு கேட்குறாக? இதுல ஆட்டம் வேற ஆடுறாக” என்று...
“டேய்..! இதெல்லாம் ரொம்ப ஓவர். அது ஞாபகம் இல்லாமையா இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ். வந்திடுறேன்..” என்றான்.
“இவன் மாறவே மாட்டானாடா?” என்றான் ஒருவன்.
“அவன் மாறிட்டா உலகம் அழிஞ்சுடும், பரவாயில்லையா?” என்று மற்றொருவன் பதில் கொடுக்க,
“சரண் ரெடியா? அங்க மணமேடைக்கு கூப்பிடுறாங்க!” என்றபடி வந்த மைதிலி, மகனின் கன்னம் வரித்து திருஷ்டி சொடக்கு...
“கொஞ்சம் குடிச்சா பெட்டரா பீல் பண்ணுவேன் வேதா..! ஆனா மேக்கப் ஸ்பாயில் ஆகிடுமே?” என்றாள் கீர்த்தனா.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டச்சப் பண்ணிக்கலாம்.இருங்கண்ணி நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றேன்..” என்றபடி நகர்ந்தாள்.
“ஹேய் கீர்த்தனா! சான்சே இல்லடி, உன் நாத்தனார் எவ்வளவு அழகா இருக்கா பாரேன்.அந்த லாங் ஹேர்..வாவ்,எப்படி மெயின்டெயின் பண்றான்னு தெரியலையே?ஸ்டன்னிங் பியுட்டி! ...
அத்யாயம் 1:
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. இரவில் அடர்ந்திருந்த பனி மகள், தலைவனின் பார்வை பட்டால் உருகிக் கரைந்துவிடும் எண்ணத்தில்,காதலுடன் ஆதவனை எதிர்பார்த்திருக்க,இன்னும் சிறிது நேரத்தில் உதயமாகி விடுவான் சூரியத் காதலன். ஒவ்வொரு விடியலும்,தன்னுள் சில எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி, ஏதோ ஒன்றை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அழகான விடியலில், மதுரையின் பிரதான சாலையில் இருந்த...