Thursday, July 16, 2026

    முத்தம் சிதறிய முகிலே

    அத்யாயம் 31: வீட்டிற்கு வந்த வேதா,அங்கே விஜயின் காரை காணாமல் திகைத்தாள். ‘சரண் அண்ணா வீட்டுக்குப் போறதாத் தான சொன்னான். இங்க வந்து பார்த்தா காரைக் காணோம்?’ என்று யோசித்தபடியே உள்ளே சென்றாள். அங்கே கீர்த்தனா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள். “அண்ணி” என்றவளின் குரலில் நிமிர, “என்னாச்சு வேதா? என்ன இந்த டைம்ல? காலேஜ் முடிய இன்னும் டைம்...
    “விஜய் சாருக்கு என்னாச்சு? அவங்க அம்மா தவறிட்டாங்களாமே?” என்று ரம்யா கேட்ட கேள்விகளுக்கு கூட அவள் பதில் சொல்லியிருக்கவில்லை. “சாரோட அம்மா இறந்ததுக்கு நீ ஏன் ஒரு வாரம் காலேஜ் வரலை?” என்ற கேள்விக்கு கூட அவள் பதில் சொன்னாளில்லை. முப்பதாம் நாள் மோட்ச தீபமேற்றி, படையலிட்டு சாமி கும்பிட்டு முடித்த மறுநாள் காலை கிளம்புவதற்கு ஆயத்தமாய்...
    அன்று அவர்கள் தங்கிவிட்டு செல்வதாக இருக்க, வேதாவை கையில் பிடிக்க முடியவில்லை. அண்ணன்களுடன் பேசி அரட்டையடித்து, மைதிலியின் கையால் சாப்பிட்டு என்று பிசியாக இருந்தாள். விஜய்  தான் அவளை ஏக்கமாக பார்த்து வைத்தான். “வாய்ப்பில்லை ராஜா” என்ற சரணின் குரலில் முறைத்தவன், “ஏண்டா சொல்ல மாட்ட?” என்றான் கடுப்புடன். “நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் என் தங்கச்சி...
    “இப்ப தாண்டா ஒரு அரைமணி நேரம் இருக்கும். நாங்க வர்றது சரணுக்குத் தெரியுமே” என்றனர். “இந்த அண்ணா எங்ககிட்ட சொல்லவே இல்லப்பா” என்றாள். “அவங்களை நிக்க வெச்சே பேசிட்டு இருப்பியா வேதா?” என்றான் விஜய். “ஆமால்ல..! நீங்க உட்காருங்கப்பா. எல்லாருக்கும் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்றாள். “அதெல்லாம் டீ போட்டாச்சு, எல்லாரும் குடிச்சாச்சு” என்றார் மைதிலி. “நான் வந்து பண்ணியிருப்பேன்ல...
    அத்யாயம் 30: “இப்ப ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?” என்றாள் வேதா புரியாமல். விஜயோ வாயைத் திறந்தான் இல்லை. அவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். “உங்களைத்தான் கேட்குறேன்” என்றாள் மீண்டும். “ஏன்னு உனக்குத் தெரியாது?” என்றான் கோபத்துடன். “தெரியாததுனால தானே கேட்குறேன்?” “கிளாஸ் ரூம்ல அந்த லயா பொண்ணுகிட்ட என்னடி பேசிட்டு இருந்த?” என்றான். “என்ன...
    “மைண்ட் யுவர் வோர்ட்ஸ்” என்றாள் லயா கோபமாக. “என்னடி மைண்ட் யுவர் வோர்ட்ஸ்? எப்பப் பார்த்தாலும் வந்து அவனைப் பார்க்காத இவனைப் பார்க்காதன்னுட்டு. எனக்கு வேற வேலை இல்லை பாரு. உனக்கு அந்த விஜய் சாரை சைட் அடிக்கனுமா அடி. கல்யாணம் கட்டனுமா? கட்டிட்டு போ. அதைவிட்டுட்டு இனிமேல் அவரைப்  பார்க்காத, இவரைப் பார்க்காத அப்படி...
    “நீங்க ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க” “எஸ்..! வேத மார்க்கம்.” என்றான் விடாமல். வேதா அவனை முறைக்க, அவளின் முறைப்பில் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டிருந்தவனையே அவள் ஆசையாய் பார்க்க, “என்னடி புருஷனை சைட் அடிக்கிற?” என்றான் அதே சிரிப்புடன். “யார் யாரோ சைட் அடிக்கிறாங்க. ப்ராப்பர்ட்டி ஓனர் நானு. நான் சைட் அடிக்கக் கூடாதா?” என்றாள் அவளும் விடாமல். “யார்...
    அத்யாயம் 29: “அம்மாடி வேதா அக்கா உன்னை கூப்பிடுறாங்கடா” என்றவரின் குரலில் கீழே வந்தாள் வேதா. “என்னாச்சு ஆன்ட்டி?” என்றாள். “தெரியலைடா அக்கா தான் கூப்பிட சொன்னாங்க” என்றவர் அவளை அழைத்துக் கொண்டு போக, உள்ளே சென்றவள், “சொல்லுங்க அத்தை” என்றாள் அமுதாவின் அருகில் சென்று. அவளின் கையை தன் நடுங்கிய கரங்களால் தொட்டவர், ஏதோ சொல்ல வர, அவளுக்கோ எதுவும்...
    “வேதாம்மா..! கங்க்ராட்ஸ்டா” என்ற சரண் அருகில் வந்து தங்கையை அணைத்துக் கொள்ள, “தேங்க்ஸ்ண்ணா!” என்றாள் அமைதியாக. “என்னாச்சு வேதா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது சாப்பிட்டியா?” என்றான் சரண். “டீ குடிச்சேன்” என்றாள். கவனம் என்னமோ எழுதுவதில் தான் இருந்தது. “நாம வீட்டுக்கு போவமா?” என்றான் கீர்த்தனாவிடம். “என்னால சமைக்க முடியாது. இன்னைக்கு இங்க தான். அம்மா சமைச்சுடுவாங்க. சாப்பிட்டு போகலாம்”...
    “இன்னைக்கு நான் வெளிய போனாலும் பரவாயில்லை. உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும்” என்றாள். “என்னடி?” என்று பல்லைக் கடித்தாள். “அது வந்து.. இத்தனை நாள் இந்த லயாவுக்கு பயந்து விஜய் சாரை சைட் அடிக்காம விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இன்னைக்கு பீல் பண்றேண்டி” என்றாள் மெதுவான குரலில். “அதுக்கு??” என்றாள் வேதா அதிர்ச்சியாக. “நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற?...
    அத்யாயம் 28: பிங்க் நிற அனார்கலியில் கூடுதல் அழகுடன் ஜொலிஜொலிப்பாய் கல்லூரி வந்தவளை பிடித்துக் கொண்டது நண்பர்கள் கூட்டம். ரம்யாவும் ஆனந்தும் அவளையே சுற்றி சுற்றி பார்க்க, “இப்ப எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் சிரிப்புடன். “இல்ல, எங்க வேதா தானா? இல்லை வேற யாருமான்னு பார்த்துட்டு இருக்கோம். இல்லையா ஆனந்து?” என்றாள் ரம்யா. “ஆமா மச்சான். அது தான்...
    “வேதாம்மா..! உன்னை குற்றவாளி ஆக்கனும்னோ, இல்லை குற்ற உணர்ச்சில தள்ளனும்னோ நான் இதை சொல்லலை. புருஷன் பொண்டாட்டினா, ஒருத்தரோட கஷ்ட்டமான நேரங்கள்ல இன்னொருத்தர் ஆறுதலா துணையா இருக்கணும். அப்பவும் நீயா, நானான்னு போட்டி போட்டுட்டு இருக்கக் கூடாது. உன்னோட எல்லா கஷ்ட்டமான சூழ்நிலையிலும் அவன் கூட இருந்திருக்கான். உனக்காக அழுதிருக்கான், தவிச்சிருக்கான். ஏன்? பைத்தியம்...
    “எப்படியோ இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரித்தான்.” என்றாள் கீர்த்தனா. அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்திருந்தாள் வேதா. “ஹேய் வேதா இந்த ஸ்கேர்ட் அழகா இருக்கு. எங்க எடுத்த?” என்று கீர்த்தனா கேட்க பல்லைக் கடித்தான் சரண். “இங்க என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு? உள்ள போன ஒருத்தனோட நிலைமை என்னன்னு தெரியலை. ஆனா,...
    அத்யாயம் 27: அவன் அறைந்து சாற்றிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரை தாரை தாரையாய் வெளியேற்றிக் கொண்டிருக்க, அப்படியே நின்றிருந்தவளின் மனதிற்குள் அத்தனை போராட்டம். தனக்கான உரிமையை  அவனே பறைசாற்ற வேண்டும் என்று அவள் நினைக்க, தன்னிடத்தில் அவளின் உரிமையை அவளே விருப்பப்பட்டு நிலைநாட்ட வேண்டும் என்று அவன் நினைக்க, நடுவில் அடிபட்டது போனது...
    “அந்த உரிமைக்கெல்லம் உன் மக தான் வச்சாளே ஆப்பு. அவ இப்படி ஆனதுக்கு காரணமே நீதான். நீ குடுக்குற இடத்துல தான் இப்படி ஆடுறா.கிளம்புங்க ரெண்டு பேரும்” என்றவர், “சாரிப்பா விஜய். உனக்கு கல்யாணம் ஆன விஷயம் எனக்குத் தெரியாது. ஏதோ இனியாவது பொண்ணு வாழ்க்கை சரியாகிடாதான்னு ஒரு நப்பாசை. அதான் இவங்க கூப்பிட்ட உடனே...
    ‘எதே..! விஜய் மாமா வேணுமா?’ என்ற வேதா வேகமாய் விஜயை பார்க்க அவனோ வெட்டவா குத்தவா என்ற ரீதியின் நின்றிருந்தான். “ஏன் அன்னைக்கு மணமேடை வரைக்கும் வந்து கல்யாணத்துல லெட்டர் எழுதி வச்சுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகத் தெரிஞ்ச உங்களுக்கு இப்ப என்ன திடீர் ஞான உதயம். எங்க அமுதாம்மா இப்படி இந்த நிலைமைக்கு...
    அத்யாயம் 26: அந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறையாய் இருக்க, விடிந்து வெகு நேரமாகியும் படுக்கையை விட்டு எழ விருப்பமில்லாமல் படுத்திருந்தாள் வேத வர்ஷினி. முதல் நாள் இரவு வெகு நேரம் படித்துவிட்டு நேரம் சென்று உறங்கியதால் கண்ணெல்லாம் தீயாய் எறிந்தது. “என்ன இன்னைக்கு இவ்வளவு டயர்டா இருக்கு?தலை வேற இப்படி வலிக்குது” என்று...
    அதே மனநிலையில் கிளம்பி கல்லூரி வந்தவளை வரவேற்றது என்னவோ ஆனந்தின் சோகமான முகம் தான். “என்ன மச்சான் டல்லா இருக்க?” என்றாள் சிரிப்புடன். “அதையேன் கேட்கிற வேதா? நானும் வந்தப்ப இருந்து அதைத்தான் கேட்கிறேன். வாயவே திறக்க மாட்டேன்றான்” என்றாள் ரம்யா. “வொய் சோகம்?” என்றாள். “எல்லாம் உன்னால தான்” என்றான் ஆனந்த். “நான் என்னடா பண்ணேன்?” “நீதான வேதா அனுப்பறேன்னு சொல்லிட்டு...
    அத்யாயம் 25: “இவளுக்கு பாவம் பார்த்தது என்னோட தப்புத்தான்” என்று எண்ணியவன், “உங்க அக்காவை எழுப்பு அகரா. அசைன்மென்ட்டை எழுதிட்டே தூங்கட்டும்” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு. “சரிங்கண்ணா” என்றவன் அவளை எழுப்ப, அவளோ அசைவேனா என்று தூங்கிக் கொண்டிருந்தாள். அகரனோ வேறு வழியின்றி அருகில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, தூக்கம் தடைபட்டதில் எரிச்சலுடன்...
    “அண்ணியையும் வர சொல்லியிருக்கலாம் ஆன்ட்டி. அவங்களும் ஆபீஸ் முடிஞ்சு டயர்டா தான் வருவாங்க” என்று பேசிய படியே அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்திருந்தாள். “ஆமா இதென்ன ட்ரஸ்” என்றார் விஜயின் சித்தி. “பட்டுப்பாவாடையும் டீ ஷேர்ட்டும்” என்றாள் பக்கோடாவை வாயில் வைத்தபடி. “இதென்ன காம்பினேஷன்” என்றார் புரியாமல். “அது ஊர்ல இருக்கும் போது போட்டு அப்படியே பழகிடுச்சு ஆன்ட்டி.” என்றாள்...
    error: Content is protected !!