முத்தம் சிதறிய முகிலே
அத்யாயம் 17:
கல்லூரி முடிந்து வெளியே வந்தவளை வரவேற்றது என்னவோ நந்த குமார் தான். அகரனுக்காக காத்திருந்தவள் நிச்சயம் அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை. அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியும், இதமும் துணி கொண்டு துடைத்ததைப் போன்று இருந்தது.
“ஹாய் வேதா..!”
“ஹாய்..!” என்றவள்,
“நீங்க எப்படி இங்க?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஜஸ்ட் ஒரு கெஸ் தான். உங்க சரண் அண்ணா...
ஓரக்கண்ணால் அவள் லயாவைப் பார்க்க, அவளோ விஜய்யை பார்ப்பதே தன் வேலை என்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு நடக்கும் அனைத்தும் விஜய்யின் கண்களில் இருந்து தப்பாமல் விழுந்திருக்க, எதையும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான்.
“வேதா..!” என்றாள் ரம்யா, அவள் புறம் திரும்பாமலே.
“ம்ம்..!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“ஒரு விஷயம் கவனிச்சியா?” என்றாள்...
“அதுவா மச்சி,நம்ம ஆனந்த் இருக்கான்ல..!” என்று ஆனந்தின் தோளில் கைபோட்டு இழுத்த ரம்யா,
“இவனுக்கென்ன?” என்றாள் புரியாமல்.
“மச்சானுக்கு லவ் செட்டாகிருச்சு. சார் நேத்து பர்ஸ்ட் இயர் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்கார். இன்னைக்கு ரிசல்ட்க்காக நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வெயிட் பண்றோம். இப்ப நீயும் ஜாயின்ட் பண்ற” என்றாள் ரம்யா.
“டேய் சோடா புட்டி சொல்லவே இல்லை..!...
அத்யாயம் 16:
நாட்கள் அதன் போக்கில் செல்ல, இப்போதெல்லாம் விஜயை நன்கு ஊன்றி கவனிக்க ஆரம்பித்திருந்தாள் வேதா. அவனது பழக்க வழக்கங்கள் கூட அவளுக்கு அத்துபடி ஆகியிருந்தது. இத்தனை நாட்கள் கருத்தில் படாத விஷயங்கள் ஒவ்வொன்றும் இப்போது கண்ணிலும், கருத்திலும் பட, ஒவ்வொன்றையும் கவனித்தவள், மறந்தும் எந்த இடத்திலும் தனக்கு உண்மை தெரியும் விஷயத்தை சரணைத்...
‘இப்ப என்ன திடீர்ன்னு?’ என்று யோசிக்க,
‘எல்லாம் சித்தியோட வேலையாத்தான் இருக்கும்’ என்று தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.
‘இன்னைக்கு வீட்ல இருந்தா ஆபத்து விஜய்.கிளம்பி வெளிய போறது தான் உத்தமம்’ என்று நினைத்தவன், வேகமாய் குளித்து கிளம்பினான். டார்க் புளு கலர் ஜீனும், வொய்ட் கலர் ஷேர்ட்டும் அணிந்தவன், கிளம்பி வெளியே வந்தான்.
அகரனுடன் அமர்ந்திருந்த வேதா, சோபாவில்...
“வேண்டாம் சித்தி..! இதுல நீங்க யாரும் தலையிடாதிங்க” என்றான்.
“எனக்கு அந்த உரிமை இல்லையா விஜய்? என்ன இருந்தாலும் நான் உன்னைப் பெத்தவ கிடையாது. சித்தி தான?” என்றார்.
“உங்களுக்கு இல்லாத உரிமைன்னு இங்க எதுவுமே இல்லை. நான் அம்மாவையும் உங்களையும் எப்பவும் பிரிச்சுப் பார்த்ததில்லை. இப்பவும் சொல்றேன் என்னோட வாழ்க்கைக்காக ஏன் அந்த பொண்ணு ஆசையை...
அத்யாயம் 15:
விஜய் கோபத்துடன் வீட்டிற்குள் நுழைய, அங்கே அவனின் சித்தியும், சித்தப்பாவும் வந்திருந்தனர். உடன் கீர்த்தனாவும் இருக்க,
“வாங்க சித்தி, வாங்க சித்தப்பா!” என்றான்.
“அண்ணா, இவரையும் வேதாவையும் பார்த்திங்க? காலையில இருந்து ரெண்டு பேரையும் ஆளையே காணோம்” என்றாள் கீர்த்தனா.
“அங்க பாரு” என்றான் வெளிப்பக்கம் பார்வையை காட்டி.
“ஹோ..! ரெண்டு பேரும் வாக்கிங் போனாங்களா?” என்றவள்,
“ம்மா..! நீங்க...
“அண்ணா ரொம்ப தூரம் வந்துட்டோம்..!!” என்றாள். நடையை நிறுத்தியவன் திரும்பிப் பார்க்க,
“ஆமால்ல..!பேசிட்டே இவ்வளவு தூரம் வந்துட்டோம். சரி திரும்பப் போவோமா? உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஜாகிங் சென்று திரும்பி வந்து கொண்டிருந்த விஜய் கண்ணில் பட்டான்.
“இவர் எங்க இங்க?” என்றாள்.
“அதோ..! அந்த பார்க்கு உள்ள தான் ஜாகிங்...
‘என்னடா இது எனக்கு வந்த சோதனை? சொன்ன பொய்யை மெயின்டைன் பண்ணவும் முடியலை. புதுசா ஒரு பொய்ய சொல்லவும் முடியலை. உண்மையையும் சொல்ல முடியலை. ஒரு பக்கம் இவ அடிக்கிறா, இன்னொரு பக்கம் அவன் அடிக்கிறான். இப்படி ரவுண்டு கட்டி அடிச்சா நான் என்ன பண்ணுவேன்’ என்று புலம்ப,
“அண்ணா..! மனசுக்குள்ள புலம்புறதா நினைச்சு சத்தமா...
அத்யாயம் 14:
வேதா எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து கொண்டிருக்க, சரணுக்கு தூக்கமாய் வந்தது. கொட்டாவி விட்டுக் கொண்டு அவனும் நடந்து கொண்டிருந்தான்.
“என்னண்ணா? அமைதியா வரீங்க?” என்றாள் வேதா.
“நீதானடா வேதாம்மா... சும்மா ஒரு வாக் போகலாம்னு சொன்ன. அதான் சும்மா வரேன்” என்றான்.
“இந்த அதிகாலை காமெடிக்கு நான் இப்ப கண்டிப்பா சிரிக்கணுமா?” என்றாள் எரிச்சலுடன்.
“நான் எங்க...
“இவன் ‘சரிண்ணா’ சொல்ற டோனே சரியில்ல பார்த்துக்கோங்க” என்றாள்.
“அண்ணி உங்க கிப்ட்” என்று அகரன் கேட்க,
“அடேய்..! இனி அண்ணி வேற தனியா வாங்கித் தரணுமா? ரெண்டு பேர் கிப்ட்டும் இது தான்” என்றான் சரண்.
அவர்கள் உலகில் அவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு ஏனோ தான் மட்டும் அங்கே அதிகப்...
அத்யாயம் 13:
நினைவுகளில் இருந்து மீண்ட வேதாவிற்கு , அழுது சிவந்திருந்த கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, தலையோ அதீத பாரமாய் இருந்தது. எதையும் அவளால் கடந்து செல்லவும் முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
இன்று நடந்ததை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள். அவள் ஒன்றை நினைத்திருக்க, விதி வேறொன்றை நிகழ்த்தியிருந்தது. இதற்கும் அன்றைக்கு மாலில்...
“மன்னிச்சுடுங்க தம்பி. உங்களைப் பார்த்தாலும் எங்களுக்கு கஷ்ட்டமா தான் இருக்கு. ஆனா, இதுக்கு மேல கண்டிப்பா நடக்காது. உங்க வீட்ல எங்க பொண்ணால நிம்மதியா இருக்க முடியாது. இனி இதைப் பத்தி பேசாதிங்க. தயவு செய்து வேதாவைப் பார்க்க வராதிங்க..” என்றார் மைதிலி முடிவாய்.
“அதை நீங்க சொல்லாதிங்க..! வேதாவோட அப்பா சொல்லட்டும்” என்றான் அவன்...
“சரண் புரியாம பேசாத. அவங்களோட கடைசி ஆசைன்னு சொல்லி, உன் தங்கச்சியோட ஆசையை குழி தோண்டி புதைக்க சொல்றியா?அவளோட வாழ்நாளை நரகமாக்க சொல்றியா? வேதாவுக்கு நந்தகுமாரை பிடிச்சிருக்குன்னு என்னை விட உனக்கு நல்லாத் தெரியும். இப்ப, இப்படி ஒரு விஷயம் நடந்தா அது அந்த சின்ன பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தரும்னும் தெரியும்....
அத்யாயம் 12:
“என்ன டாக்டர் சொல்றிங்க?”
“எஸ்..! எங்களால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணிட்டோம்.பட், நோ யூஸ். அவங்க பல்ஸ் ஸ்டேபிளா இல்லை. அவங்க தன்னோட கடைசி கட்டத்துல இருக்காங்க. எப்ப என்ன வேணும்னாலும் நடக்கலாம். நீங்க பார்த்து பேசுறதுன்னா பேசிக்கோங்க.” என்று டாக்டர் கைவிரிக்க,
காதம்பரியின் நிலை அறிந்த ராமச்சந்திரன் உடைந்து போய்விட்டார். நூற்றில் ஒரு நல்வாய்ப்பாக...
“என்ன டாக்டர் சொல்றிங்க? காயம் அதிகம் இல்லாத மாதிரி இருந்தாளே..!” என்றவனின் பேச்சு அவனுக்கே அதிகமாய் பட்டிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ
“எதுன்னாலும் உடனடியா பண்ணுங்க டாக்டர். இல்ல, வேற ஸ்பெஷலிஸ்ட் யாரையாவது வர வைக்கணுமா?” என்றான் விடாமல்.
“அதெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ்ட் டாக்டர்ஸ் இங்கயே இருக்காங்க. இங்கயே பண்ணிடலாம். ஆப்ரேஷன் பார்மல சைன் பண்ணிட்டு, ஆப்ரேஷனுக்கான அமௌன்ட்ட...
அத்யாயம் 11:
டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர்விட்டிருக்க, காதம்பரி ரத்த வெள்ளத்தில் இருக்க, வேதாவோ சாலையின் ஓரத்தில் கிடந்தாள். அவள் காலில் அடிபட்டிருக்க, கண்களில் ஏதோ கூர்மையான பகுதி குத்தியதில் குருதி வழிந்து கொண்டிருந்தது. சாலையில் உருண்டதில் உடல் முழுதும் சிராய்ப்புகளும், இரத்தமுமாய் இருந்தாள் வேதா. இளஞ்சிவப்பு வண்ண புடவை ஆங்காங்கே ரத்த சிவப்பில் மாறிக்...
மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைப்பிற்கு வந்திருந்தனர். இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி, லேசான ஒப்பனையில் தேவதையாய் இறங்கி வந்தாள் வேத வர்ஷினி. மாப்பிள்ளை வீட்டின் சார்பில் வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரும் அவளைப் பார்த்துவிட்டு, அவள் அழகைப் பற்றியும் புடவையைப் பற்றியும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, காதம்பரியின் அருகில் சென்றவள்,
“எங்கம்மா இன்னும் அப்பத்தாவைக் காணோம்?”...
“ரொம்ப பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை. எனக்கு உன்னோட புத்தியும் தெரியும். உன் ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு புத்தியும் தெரியும். எனக்கும் அண்ணனுக்கும் கருத்து வேறுபாடு தானே தவிர பரம்பரை பகை இல்லை. தப்பு என் மேல தான்னு எனக்கு நல்லாவே தெரியும். ஏன் அது உனக்கும் கூட தெரியும். அப்படி இருந்தும்...
அத்யாயம் 10:
“இப்ப உங்களுக்கெல்லாம் சந்தோஷமா?இதைத் தான எதிர்பார்த்திங்க? என்னையவே அடிச்சுட்டிங்கள்ல..! இதை நான் சும்மா விட மாட்டேன்..” என்ற சந்தியா அவர்கள் அறைக்குள் சென்று கதவை பட்டென்று அடைத்துவிட்டாள்.
“அவ பேசுனது தப்பாவே இருந்தாலும் நீங்க இப்படி அடிச்சிருக்க வேண்டாம்மா..!” என்றான் மனோ, காதம்பரியைப் பார்த்து.
“அவ எங்களைப் பேசினதோட நிறுத்தியிருந்தா பரவாயில்லை மனோ. ஆனா, சரண்...