Monday, April 29, 2024

    Thuli Maiyal Kondaen

    காலை ஏழு மணியிருக்கும். மிகவும் சிரமப்பட்டு தான் கண் விழித்தாள் மயூரா.அவள் கணவன் அவளுக்கும் மேல்! எழுந்துகொள்ளும் எண்ணமே இல்லாதவன் போல் தூங்கிக்கொண்டிருந்தான். மணியை பார்த்ததும் அவசரமாக எழுந்துகொண்டவள்,தன்னுடைய பேகிலிருந்து உடையை எடுக்கும் போது,அதில் புது மொபைல் போன் இருக்க,அவசரமாய் எடுத்தாள். பாஸ்வர்ட் எல்லாம் இல்லாததால் எளிதில் நுழைய,ஸ்க்ரீனில் அவளும்,அரவிந்தும் சிரித்துக் கொண்டிருப்பது  போல போட்டோ இருக்க,அவளுக்கு அதிசயமாகத்தான்...
    மகேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு,போன் பேசிக் கொண்டிருந்தான். அழுது கொண்டிருக்கும் அம்மாவையும்,வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அப்பாவையும் சமாதானம் செய்ய அவனுக்கு நேரமில்லை.தருண் தான் பொறுப்பாய் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தான். மகேந்திரன் வெற்றிமாறனுக்கு அழைத்து விபரம் சொல்ல,கொதித்துப் போனவன்,”நிச்சயம் அவன் தான் கடத்தினான்னு தெரியுமாடா?”கேட்கவும்,மகேந்திரன் கொதித்துப் போனான். “இன்னும் உனக்கு ஊர்க்காரன்ற பாசம் போகலையாடா?”ஆத்திரத்துடன் கத்த, “டேய்,எதுக்கு கேட்கறேன்னு புரிஞ்சுக்க முயற்சி...
    அனுஷாவின் சம்மதம் கேட்டபின்,என்னவென்ன செய்யலாம் என்று குடும்பத்தினர் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,அறையிலிருந்து வெளியே வந்த மயூரா,அவர்கள் அருகில்,சுவற்றில் சாய்ந்தபடி நின்றாள். அவளை கவனித்தாலும்,யாரும் கண்டுகொள்ளாமல்,மாலை இருபெண்களின் நிச்சயதார்த்ததிற்கு செய்ய வேண்டியதை விவாதித்து கொண்டிருக்க, “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”என்றாள் கொஞ்சம் சத்தமாகவே!! பிரபாகரன் சற்று முன் தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.அதற்குள் இவள் இப்படி பேச,அவருக்கு கோபம்...
    தன் அண்ணனால் மாப்பிள்ளை என்று விழிக்கப்பட்ட அரவிந்தனை ஏனோ பார்க்கவே தோன்றவில்லை மயூராவிற்கு! அவள் எண்ணமெல்லாம் வினோதன் தான் நிறைந்திருந்தானே!! அக்காவை கடத்தி,அவளது திருமணத்தை நிறுத்தியதில் கடும் கோபத்தில் இருந்தாள்.இனி அனுஷாவின் வாழ்வு என்னாகும்? என்ற கேள்வியிலையே அவள் மனம் மூழ்கியிருந்ததால்,அருகிலிருந்தவன் பெரும் பொருட்டாகவே தெரியவில்லை.. மேலும் நாளை தனக்குத்தான் திருமணம் என்ற விஷயமே இன்னும் அவள் மூளையை...
    இன்று மாலை நடைபெறும் நிச்சயதார்த்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து,அதை பொறுப்பாய் பிரபாகரனிடம் ஒப்படைத்துவிட்ட மகேந்திரன்,தம்பியை தங்கைகளுக்கு துணைக்கு வைத்துவிட்டு,உள்ளூரில் பத்திரிகை வைக்க போனான். இவர்களது வழக்கத்தில் உள்ளூரில் இருக்கும் சொந்தங்களுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான்  சென்று பத்திரிகை கொடுப்பார்கள். அதனால் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கைக்கு வந்திருந்த மயூராவின் பத்திரிக்கையோடு,வெற்றிமாறன் சற்று முன் அச்சடித்துக்...
    வேதா,மயூவோடு வீட்டுக்கு வர,அரவிந்தும் அறையிலிருந்து வெளியே வர சரியாய் இருந்தது. BORN TO WIN என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பச்சை நிற டீஷர்ட் அவனுக்கு மிகவும் பிட்டாக இருந்தது. அதிலும் அவனது கேட் ஐ(cat eye) கண்ணாடி மிகவும் பொருத்தமாக இருக்க,முப்பத்தியொரு வயது ஆண்மகன் என்றால் யாராலும் நம்ப முடியாது.கல்லூரி மாணவன் போல் இருந்தான். அந்த டீஷர்ட்டில்...
    நேற்று மாலை பேபி அஸ்வதியுடன் கழித்த பொழுதுகளை நினைத்துக்கொண்டு தனதறையில் அமர்ந்திருந்தாள் மயூரா.அரவிந்த் வீட்டில் இல்லை.அவசர வேலையென்று கிளம்பி சென்றிருந்தான். அவன் போன பின்பு,மயூவின் மனம் நிலையில்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது.முயன்று குழந்தையை பற்றி நினைக்க,அவளால் அவளது எண்ணங்களையே வெல்ல முடியவில்லை. மன அழுத்தம் அதிகமாவது போன்ற உணர்வு!! பெண்களுக்கு இதுவொரு பெரிய பிரச்சனை!! ஹார்மோன் மாற்றங்களால் எப்போது...
    error: Content is protected !!