Friday, July 24, 2026

    Thuli Maiyal Kondaen

    மெல்ல நிதானத்திற்கு வந்த மயூரா,கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவுப்பக்கம் சென்றாள்.திறந்து தானிருந்தது.கீழே வினோதன் இருக்கிறானோ என்று அவசரமாய் மாடிப்படியிலிருந்து கீழிறங்க..”ஐயோ,ஏன் கண்ணு இவ்வளவு வேகமா ஓடியாற.மெதுவா வா கண்ணு”என்ற பெண்மணியின் குரல் கேட்க நிதானித்தாள். “நீங்க..நீங்க யாரு?”என்று கேட்டவளை வினோதமாய் பார்த்தவர் பதில் சொல்லும் முன்னர், “ஆச்சி..இந்த ஊறுகாய் டப்பா எங்க இருக்கு.எடுத்துக் கொடுங்க”என்ற பெண்ணின் குரல் கேட்க...
    காலை ஏழு மணியிருக்கும். மிகவும் சிரமப்பட்டு தான் கண் விழித்தாள் மயூரா.அவள் கணவன் அவளுக்கும் மேல்! எழுந்துகொள்ளும் எண்ணமே இல்லாதவன் போல் தூங்கிக்கொண்டிருந்தான். மணியை பார்த்ததும் அவசரமாக எழுந்துகொண்டவள்,தன்னுடைய பேகிலிருந்து உடையை எடுக்கும் போது,அதில் புது மொபைல் போன் இருக்க,அவசரமாய் எடுத்தாள். பாஸ்வர்ட் எல்லாம் இல்லாததால் எளிதில் நுழைய,ஸ்க்ரீனில் அவளும்,அரவிந்தும் சிரித்துக் கொண்டிருப்பது  போல போட்டோ இருக்க,அவளுக்கு அதிசயமாகத்தான்...
    அரவிந்த் சென்றவுடன்,”மயூ,அண்ணாவை கோபப்படுத்திட்டனா? இப்போ என்ன செய்யறது”காயத்ரி கேட்கவும்,மயூவிற்கும் கலக்கம் இருந்தாலும், “அதை விடு.நீ முதல்ல விஷயத்தை தெளிவா சொல்லு”எனவும்,காயத்ரி பயங்கரமாய் முறைத்தாள். “நான் நாளைக்கு வரைக்கும் இங்க தான் இருப்பேன்.அதனால முதல்ல நீ போய் உன் வீட்டுக்காரரை சமாதானம் பண்ணு” “ம்ப்ச்ச். கொஞ்ச நேரம் போனா,அவங்களே யோசிச்சு தெளிவாகிடுவாங்க. இப்போ போனா தேவையில்லாத பேச்சு வரும்” “நீ ஏன்...
    மகேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு,போன் பேசிக் கொண்டிருந்தான். அழுது கொண்டிருக்கும் அம்மாவையும்,வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அப்பாவையும் சமாதானம் செய்ய அவனுக்கு நேரமில்லை.தருண் தான் பொறுப்பாய் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தான். மகேந்திரன் வெற்றிமாறனுக்கு அழைத்து விபரம் சொல்ல,கொதித்துப் போனவன்,”நிச்சயம் அவன் தான் கடத்தினான்னு தெரியுமாடா?”கேட்கவும்,மகேந்திரன் கொதித்துப் போனான். “இன்னும் உனக்கு ஊர்க்காரன்ற பாசம் போகலையாடா?”ஆத்திரத்துடன் கத்த, “டேய்,எதுக்கு கேட்கறேன்னு புரிஞ்சுக்க முயற்சி...
    நேற்று மாலை பேபி அஸ்வதியுடன் கழித்த பொழுதுகளை நினைத்துக்கொண்டு தனதறையில் அமர்ந்திருந்தாள் மயூரா.அரவிந்த் வீட்டில் இல்லை.அவசர வேலையென்று கிளம்பி சென்றிருந்தான். அவன் போன பின்பு,மயூவின் மனம் நிலையில்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது.முயன்று குழந்தையை பற்றி நினைக்க,அவளால் அவளது எண்ணங்களையே வெல்ல முடியவில்லை. மன அழுத்தம் அதிகமாவது போன்ற உணர்வு!! பெண்களுக்கு இதுவொரு பெரிய பிரச்சனை!! ஹார்மோன் மாற்றங்களால் எப்போது...
    இன்று மாலை நடைபெறும் நிச்சயதார்த்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து,அதை பொறுப்பாய் பிரபாகரனிடம் ஒப்படைத்துவிட்ட மகேந்திரன்,தம்பியை தங்கைகளுக்கு துணைக்கு வைத்துவிட்டு,உள்ளூரில் பத்திரிகை வைக்க போனான். இவர்களது வழக்கத்தில் உள்ளூரில் இருக்கும் சொந்தங்களுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான்  சென்று பத்திரிகை கொடுப்பார்கள். அதனால் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கைக்கு வந்திருந்த மயூராவின் பத்திரிக்கையோடு,வெற்றிமாறன் சற்று முன் அச்சடித்துக்...
    வேதா,மயூவோடு வீட்டுக்கு வர,அரவிந்தும் அறையிலிருந்து வெளியே வர சரியாய் இருந்தது. BORN TO WIN என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பச்சை நிற டீஷர்ட் அவனுக்கு மிகவும் பிட்டாக இருந்தது. அதிலும் அவனது கேட் ஐ(cat eye) கண்ணாடி மிகவும் பொருத்தமாக இருக்க,முப்பத்தியொரு வயது ஆண்மகன் என்றால் யாராலும் நம்ப முடியாது.கல்லூரி மாணவன் போல் இருந்தான். அந்த டீஷர்ட்டில்...
    error: Content is protected !!