Friday, March 29, 2024

    Thuli Maiyal Kondaen

    இன்று மாலை நடைபெறும் நிச்சயதார்த்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து,அதை பொறுப்பாய் பிரபாகரனிடம் ஒப்படைத்துவிட்ட மகேந்திரன்,தம்பியை தங்கைகளுக்கு துணைக்கு வைத்துவிட்டு,உள்ளூரில் பத்திரிகை வைக்க போனான். இவர்களது வழக்கத்தில் உள்ளூரில் இருக்கும் சொந்தங்களுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான்  சென்று பத்திரிகை கொடுப்பார்கள். அதனால் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கைக்கு வந்திருந்த மயூராவின் பத்திரிக்கையோடு,வெற்றிமாறன் சற்று முன் அச்சடித்துக்...
    அனுஷாவின் சம்மதம் கேட்டபின்,என்னவென்ன செய்யலாம் என்று குடும்பத்தினர் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,அறையிலிருந்து வெளியே வந்த மயூரா,அவர்கள் அருகில்,சுவற்றில் சாய்ந்தபடி நின்றாள். அவளை கவனித்தாலும்,யாரும் கண்டுகொள்ளாமல்,மாலை இருபெண்களின் நிச்சயதார்த்ததிற்கு செய்ய வேண்டியதை விவாதித்து கொண்டிருக்க, “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”என்றாள் கொஞ்சம் சத்தமாகவே!! பிரபாகரன் சற்று முன் தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.அதற்குள் இவள் இப்படி பேச,அவருக்கு கோபம்...
    தன் அண்ணனால் மாப்பிள்ளை என்று விழிக்கப்பட்ட அரவிந்தனை ஏனோ பார்க்கவே தோன்றவில்லை மயூராவிற்கு! அவள் எண்ணமெல்லாம் வினோதன் தான் நிறைந்திருந்தானே!! அக்காவை கடத்தி,அவளது திருமணத்தை நிறுத்தியதில் கடும் கோபத்தில் இருந்தாள்.இனி அனுஷாவின் வாழ்வு என்னாகும்? என்ற கேள்வியிலையே அவள் மனம் மூழ்கியிருந்ததால்,அருகிலிருந்தவன் பெரும் பொருட்டாகவே தெரியவில்லை.. மேலும் நாளை தனக்குத்தான் திருமணம் என்ற விஷயமே இன்னும் அவள் மூளையை...
    மகேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு,போன் பேசிக் கொண்டிருந்தான். அழுது கொண்டிருக்கும் அம்மாவையும்,வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அப்பாவையும் சமாதானம் செய்ய அவனுக்கு நேரமில்லை.தருண் தான் பொறுப்பாய் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தான். மகேந்திரன் வெற்றிமாறனுக்கு அழைத்து விபரம் சொல்ல,கொதித்துப் போனவன்,”நிச்சயம் அவன் தான் கடத்தினான்னு தெரியுமாடா?”கேட்கவும்,மகேந்திரன் கொதித்துப் போனான். “இன்னும் உனக்கு ஊர்க்காரன்ற பாசம் போகலையாடா?”ஆத்திரத்துடன் கத்த, “டேய்,எதுக்கு கேட்கறேன்னு புரிஞ்சுக்க முயற்சி...
    மெல்ல நிதானத்திற்கு வந்த மயூரா,கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவுப்பக்கம் சென்றாள்.திறந்து தானிருந்தது.கீழே வினோதன் இருக்கிறானோ என்று அவசரமாய் மாடிப்படியிலிருந்து கீழிறங்க..”ஐயோ,ஏன் கண்ணு இவ்வளவு வேகமா ஓடியாற.மெதுவா வா கண்ணு”என்ற பெண்மணியின் குரல் கேட்க நிதானித்தாள். “நீங்க..நீங்க யாரு?”என்று கேட்டவளை வினோதமாய் பார்த்தவர் பதில் சொல்லும் முன்னர், “ஆச்சி..இந்த ஊறுகாய் டப்பா எங்க இருக்கு.எடுத்துக் கொடுங்க”என்ற பெண்ணின் குரல் கேட்க...
    அப்பாவிடம் உறுதியாக சொன்ன பிறகு,வேறெங்கும் செல்லாமல், வினோதனின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் நிலையத்திற்கு வந்தான் மகேந்திரன்.   இன்ஸ்பெக்டர் மாறன் இவனது நண்பன் தான் என்பதால்,அவனது கேபினுக்குள் நேராய் சென்றவன்,”வேலையில பிசியா மாறா”எனவும்,   “நீ வந்துட்டல்ல..உனக்காக வேலையை ஒதுக்கி வைச்சுடறேன்.என்னன்னு சொல்லு..இங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வரமாட்டியே”கேட்கவும்,   “ஒரு காரியம் ஆகணும்டா மாறா..அரிசி கடத்தல்...
      1   “ஹாய்,ஹலோ பிரண்ட்ஸ்..நான் உங்க அனுஷா..   “இன்னைக்கு நாம உங்களுக்கு பிடிச்ச விதத்தில,குறைஞ்ச செலவுல,எப்படி ப்ரைடல் மேக்அப் போடலாம்னு தான் பார்க்கப் போறோம்..   “வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி,நம்ம சேனல சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க..அப்படியே பக்கத்துல இருக்க பெல் பட்டனையும் ப்ரெஸ் பண்ணிடுங்க..   “இப்போ வீடியோகுள்ள போகலாம் வாங்க”பேசிக் கொண்டிருக்கும் போதே,அனுஷாவின் முகத்தில் கலர் ஜெல்லை ஸ்ப்ரே அடித்துவிட்டான் தருண்..அவளது தம்பி!!!    “அக்கா..இந்த...
    error: Content is protected !!