Advertisement

காலை ஏழு மணியிருக்கும்.
மிகவும் சிரமப்பட்டு தான் கண் விழித்தாள் மயூரா.அவள் கணவன் அவளுக்கும் மேல்! எழுந்துகொள்ளும் எண்ணமே இல்லாதவன் போல் தூங்கிக்கொண்டிருந்தான்.
மணியை பார்த்ததும் அவசரமாக எழுந்துகொண்டவள்,தன்னுடைய பேகிலிருந்து உடையை எடுக்கும் போது,அதில் புது மொபைல் போன் இருக்க,அவசரமாய் எடுத்தாள்.
பாஸ்வர்ட் எல்லாம் இல்லாததால் எளிதில் நுழைய,ஸ்க்ரீனில் அவளும்,அரவிந்தும் சிரித்துக் கொண்டிருப்பது  போல போட்டோ இருக்க,அவளுக்கு அதிசயமாகத்தான் தெரிந்தது.
‘நான் எப்போ சிரிச்சேன்’யோசித்தாலும்,எப்படியோ அந்த (அ)சம்பவமும் நடந்திருக்க,போனில் தன் வீட்டு ஆட்களின் நம்பர்,அரவிந்த்,வேதாவின் நம்பர் எல்லாம் பதிவு செய்யப்பட்டிருந்ததில்,நிச்சயம் இந்த வேலையை செய்தவன் அண்ணன் தான் என்று உறுதியாக நம்பினாள்.
வேறு யாருக்குமே தனக்கு போன் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியிருக்காது என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும்.இது அவளுடைய முதல் போன்!!
அவளுக்கென்று தனியாக அலைபேசி நம்பர் இருந்தாலும்,பெரும்பாலும் அந்த சிம்கார்ட் மகேனின் போனிலோ,இல்லை அனுவின் போனிலோ தான் இருக்கும்.தேவைப்பட்டால் அவர்களிருவரின் முன்னிலையில் யாருக்கும் பேசிக்கொள்ளலாம்.
அவளுக்கான கெடுபிடிகள் மிகவும் அதிகம்!!
இன்றைய நிலையில் அவளுக்கு போன் இன்றியமையாததே!! நிச்சயம் அரவிந்திடம் போன் வேண்டுமென்று கேட்கவே போவதில்லை.வீட்டாரிடம் பேசுப்போவதுமில்லை.
இப்போதும் வீட்டினருக்கு அழைக்கலாமா?வேண்டாமா?என்று பட்டிமன்றம் நடத்தி இறுதியில்,”என்னை தனியா விட்டுட்டு போனாங்கல்ல.அப்போ அவங்களே கூப்பிடட்டும்’முடிவு செய்துவிட்டு குளிக்க போனாள்.
அந்த அறையிலிருந்த இன்னொரு கதவை திறந்தால்,உள்ளே பெரிய கண்ணாடித்தடுப்பு போல எதுவோ தெரிய முதலில் அது வேறு அறையாக இருக்குமென்றே நினைத்து நுழைந்தாள்.
ஆனால் உள்ளே போனபிறகு தான் தெரிந்தது,அந்த கண்ணாடி தான் பாத்ரூம் என்பது!! வெளியிலிருந்து பார்த்தால்,உள்ளே இருப்பதெல்லாம் தெளிவாக தெரியும்.
‘அடப்பாதகா!!நேத்தே கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு ஏதோ உளறிட்டு இருந்தானே’வாய்க்கு வந்த பல கெட்ட வார்த்தைகள் போட்டு கணவனை திட்டியவள்,
‘இதுல போய் எப்படி குளிக்கறது?’அரவிந்தனை வசவு பாடிக்கொண்டே இருந்தவளுக்கு இறுதியில் தான்,’கதவை திறந்து தான,உள்ள வந்தோம்.அதை பூட்டிக்கலாம்’எண்ணமே வர,கால்மணி நேர தாமதத்திற்கு பின்,கதவை அடைத்துவிட்டு வந்து குளித்துவிட்டு வந்தாள்.
அவள் வெளியே வந்த நேரம்,அரவிந்த் உள்ளே நுழைய,அவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன்,கையிலிருந்த ரிமோட்டை எடுத்து அழுத்தவும்,கண்ணாடி தடுப்புக்கு வெளியே,இன்னொரு கண்ணாடி தடுப்பு மேலிருந்து கீழேயிறங்கியதை வியப்பாய் பார்த்தாலும்,’தேவையில்லாத வேலை’முணுமுணுத்துவிட்டு, சேலையை நன்றாக உடுத்திக்கொண்டு வெளியே வர,வேதா டீ குடித்துக் கொண்டிருந்தார்.
மருமகளை பார்த்தவுடன்,அவளுக்கும் கொடுக்க,மறந்தும் அவளிடமிருந்து,’அவங்களுக்கு’என்ற வார்த்தை வரவில்லை.அதை கவனித்தாலும் அவரும் கேட்கவில்லை.
சிறிது நேரத்தில்,அரவிந்த் வந்ததும்,அவனுக்கு டீயை சரசு கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்ல,”அர்வி,நானும் மயூராவும் வெளில போறோம்.நீயும் வரியா”கேட்க,
“இல்லம்மா.எனக்கு கிளாஸ் இருக்கு.நீங்க போயிட்டு வாங்க”என்றவன்  இன்னொரு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான்.
ஒன்றும் புரியாவிட்டாலும்,அமைதியாகவே மயூ இருக்க,”பசிக்குதா,சாப்பிடறியா,இல்ல போயிட்டு வந்து சாப்பிட்டுக்கலாமா?”எனவும்,
“போயிட்டு வந்துடலாம்”என்றாள்.
எங்கு போகிறார் என்று கேட்க தோன்றவில்லை.ஆனாலும் அந்த சமயம் எழுத்தாளர் சுஜாதா எழுதி படமாக வந்த காயத்ரி படம் நினைவில் வராமல் இல்லை.
‘எது நடந்தாலும் நடக்கட்டும்’மனநிலையிலையே அவரோடு செல்ல,அரைமணி நேர கார் பயணத்தில்,ஏதோவொரு பெரிய வீட்டிற்கு முன் கார் நிற்க,செக்யூரிட்டி வேதாவிற்கு வணக்கம் வைக்கவும்,
“காரை பார்க் பண்ண சொல்லிடு”சாவியை கொடுத்துவிட்டு,
“உள்ள போகலாம் வா”அழைத்துக்கொண்டு போனார்.
“எங்க வந்திருக்கோம் அத்தை.யாரோட வீடு இது?”
“ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட! முன்னாடியே எங்க போறோமோன்னு கேட்பேன்னு எதிர்பார்த்தேன்.இது நம்ம வீடு தான்.ஆனால் இப்போ வேறவங்க இருக்காங்க.யாரோடையும் பேசணும்னு அவசியமில்ல”
“சரிங்கத்தை”மண்டையை நன்றாக உருட்டிவிட்டு அவரை பின்தொடர்ந்தாள்.
உள்ளே இரண்டு பெண்கள் இருந்தார்கள்.எப்படியும் இருவருக்கும் 25-லிருந்து முப்பதுக்குள் இருக்கலாம் எனும்படியான தோற்றம்.
ஒரு பெண் மயூவை பார்த்து முறைத்துக்கொண்டே ஹாலில் சென்று சட்டமாய் அமர்ந்துகொண்டாள்.
இன்னொரு பெண் தயங்கியே வேதாவை பார்த்துக்கொண்டே நின்றாள்.வீட்டில் வேறு யாருமில்லை.வேலையாட்களை தவிர!!
எங்கிருந்தோ கந்தன் பரபரப்பாய் வந்தார்.அவர் இந்த வீட்டின் மேற்பார்வையாளர்.அந்த வீட்டின் கடுகு டப்பா கூட இவரை மீறி வெளியே போய்விடாது..அத்தனையும் அவரது பெரிய முதலாளியின் சொத்துக்கள் அல்லவா!! அதை பாதுகாப்பதே தன் கடமை என்று தான் இங்கிருக்கிறார்.
வேதாவை பார்த்ததும்,”வாங்கம்மா,இது தான் அரவிந்த் தம்பி சம்சாரங்களா.தம்பி போட்டோ காட்டுச்சு”அவரே பேசிக்கொண்டவர்,தன்னிடமிருந்த கொத்து சாவியை கொடுக்க,அதை வாங்கிக்கொண்டவர்,கீழிருந்த ஒரு அறையை திறந்தார்.
“இது தான் நானும்,உன் மாமனாரும் வாழ்ந்த இடம்.இனி உன்னோட குழந்தைங்களுக்கு தான் இந்த ரூம்.அவங்களோட வரவுக்காக தான் இந்த ரூமை யாரையுமே யூஸ் பண்ண விடறதில்லை”எனவும் குழந்தை என்ற வார்த்தையிலையே அவளுக்கு திகைப்பு தான்.
எல்லா பெண்களைப்போல் அவளுக்கும் குழந்தைகள் மேல் கொள்ளை ஆசையுண்டு.
’சீக்கிரம் கல்யாணம் பண்ணி,ரெண்டு வருஷத்தில ரெண்டு பிள்ளைங்க பெத்துப்பேன்’என்று தோழிகளிடம் பதின்ம வயதிலையே சொன்னவள் தான்.அதன் பொருள் பின்னாளில் பலவாறு திரிந்து,அவளை காயப்படுத்தியதெல்லாம்,நினைக்கும் போதே வலிக்க,அவரின் பேச்சை கவனமாக கேட்டுக்கொண்டே,தன் நினைப்பிலிருந்து வெளியே வர முயற்சி செய்தாள்.
இந்த வீட்டைக்கட்டி எப்படியும் நாற்பது வருடங்களிருக்கலாம்.தன் மாமனார் பழங்கால பொருள்களின் மேல் பிரியம் கொண்டவர் என்று நினைத்துக் கொண்டாள்.
மேலே மாடியிலிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று கதவை திறந்தார்.மற்ற அறைகள் எல்லாம் திறந்தே இருந்ததையும் கவனித்துக்கொண்டே வந்தாள்.
அரவிந்தின் அறையிலிருந்த கட்டிலில்,பெரிய கவர் இருக்க அதை எடுத்தவர்,”மாங்கல்யத்தை வைச்சு சாமி கும்பிட வந்தப்போ,இதை மறந்து இங்கேயே வைச்சுட்டு வந்துட்டேன்.உனக்கு தாலி கோர்த்து கட்டறதுக்கு வாங்கினது தான் இது”என்றார்.
இது பெண் வீட்டினர் செய்யும் முறை என்றாலும்,இவரும் வாங்கியிருந்தார்.
அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவரிடம்,”இது கார்ல இருந்துதும்மா’என்று குத்துவிளக்கை நீட்டினார்.
“இது நேத்து நான் கொண்டு வந்ததாச்சே”மயூ கேட்க,
“அதே தான்.இங்க வைச்சு சாமி கும்பிடத்தான் வந்திருக்கோம்”என்றவர்,சொன்னது போல பூஜையறைக்கு சென்று அவளை விளக்கேற்ற வைத்தார்.
நேற்றுக்கூட இந்த சம்பிரதாயங்களை எல்லாம் செய்யவில்லை.அங்கே அந்த வீட்டில் இருந்தாலும்,தான் கும்பிடும் தெய்வங்கள் எல்லாம் இங்கே தான் இருக்கிறது என்று ஆழ்ந்து நம்பினார்.
பூஜை முடியவும்,”அரவிந்த் தம்பியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்மா”கந்தன் கேட்க,
“அவனுக்கு எப்போ வரணும்னு தோணுதோ,அப்போ வருவான் கந்தா”என்றவர்,சாவிக்கொத்தை நீட்ட,பத்திரமாய் வாங்கி வைத்துக்கொண்டார்.
இருவரும் வெளியே வரும் சமயம்,வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து,கட்சி துண்டு போட்டு ஒருவர் வர,வேதா கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார்.
“திமிர்,உடம்பெல்லாம் திமிர்”சத்தமாகவே அவர் சொல்வதும் கேட்டது.
“அப்பா,அத்தையை இப்படி பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல”என்று ஒரு பெண் அதட்டும் குரலும் கேட்டது.
மயூவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும்,எதையும் கேட்க பிரியப்படவில்லை.தெரிந்துகொள்ளும் ஆவல் ஏதும் பெரிதாய் பிறக்கவில்லை என்பதால் அவர்களாகவே சொல்ல நினைத்தால் சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள்.
***
காலை எட்டு மணி
மாறனின் வீடு மிகவும் பரபரப்பாக இருந்தது.பெண் வீட்டிலிருந்து விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,மாப்பிள்ளையின் உறவினர்களுக்கு,மாறனின் வீட்டின் பின்பக்கம் விருந்து நடந்து கொண்டிருந்தது.
முதல் உணவு மாப்பிள்ளை பெண்ணுக்கு தான் என்பதால்,அவர்கள் உணவை முடித்துவிட்டு எழுந்து வர,மாறனின் அம்மா,அனுவிடம்”தூக்கம் வந்தா போய் தூங்கும்மா”அனுப்பி வைத்தார்.
இப்படிப்பட்ட மாமியார் கிடைப்பது வரம்!!!(யாருக்காவது கிடைச்சிருக்காங்களா)
அனுவோடு,மாறனையும் அனுப்பி வைக்க,ஹாலில் அமர்ந்து கொண்டவன்,”உன்கூட பேசணும் அனும்மா”என்றான்.
“எப்படி,நேத்து மாதிரியா?”கண் சிமிட்டி கேட்க,சிரித்தான்.
“அந்த பேச்சு நைட்டுக்கு தான்! இந்த பேச்சு வேற பேச்சு”விளக்கம் வேறு கொடுத்து,நேற்று போல ஆரம்பிக்க,இன்றும் அவனால் பேச முடியவில்லை.
அனுவிற்கு அந்த நேரம் பார்த்து போன் வர,தெரியாத நம்பர் என்றாலும்,தன் தோழிகள் எவரேனும் திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல அழைப்பார்கள் என்றெண்ணி எடுத்தாள்.
“ஹலோ,நான் ரகுவீர் பேசறேன்”குரலை கேட்டதுமே அனுவிற்கு திக்கென்றது.அவன் அவளுக்கு முன் பார்த்த மாப்பிள்ளை.!!
ஏனோ தடுமாறவோ,தயங்கவோ அனுவிற்கு தோன்றவில்லை.மாறன் மேல் அவளுக்கு உண்டாகியிருக்கும் அன்பு கூட காரணமாயிருக்கலாம்.
“சொல்லுங்க ரகுவீர்”கணவனை பார்த்துக்கொண்டே பேச, யாரென்று புரிந்தாலும் இயல்பாய் அமர்ந்திருந்தான்.
“உங்களை பார்க்க உங்க ஊர்க்கு வந்திருக்கேன்.பஸ் ஸ்டாப்ல நிற்கறேன்.வீட்டுக்கு வரணும்.வழி தெரியல.உங்க அண்ணனை வர சொல்றிங்களா.கொஞ்சம் பேசணும்.அர்ஜென்ட்”
“வர சொல்றேன் ரகுவீர்.வெயிட் பண்ணுங்க”
கணவனிடமும் சொல்ல,”இங்கேயே வர சொல்லு அனும்மா.பேசிக்கலாம்.உன் வீட்டுல யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும்.நம்ம வீட்டுல பின்னாடி விருந்து நடக்கறதினால, யாரும் இங்க அவ்வளவா வரமாட்டாங்க.பிரச்சனை வராது.நானே போய் அழைச்சுட்டு வர்றேன்”கிளம்பியும்விட்டான்.
அவனிடம் எந்த மாறுதலுமில்லை.
ரகுவீரை அனுவின் நிச்சயத்தில் ஏற்கனவே பார்த்திருந்ததினால்,அடையாளம் தெரிய,தான் யாரென்று சொல்லாமலே,”அனு கூட்டிட்டு வர சொன்னா!”எனவும் கூடவே வந்தான்.
எதுவும் பேசவில்லை.!!
தன்னைப்பார்த்து எப்படியும் சண்டையிடுவார்கள் என்று எண்ணி வர,வீட்டின் முகப்பு அனுவின் வீடு இல்லை என்று புரிய வைத்தாலும்,வாயிலிலையே எதிர்நோக்கிய அனுவின் தோற்றம்,அவனை பின்னடைய செய்தது.
கிளம்பத்தான் நினைத்தான்.ஆனால் இறுதியாய் பேச வேண்டும் என்ற உந்துதல் பிறக்க,மாறன்”பேசிட்டு இருங்க”என்றவன் அவர்கள் பேசுவது கேட்காத தூரம் அமர்ந்துகொண்டான்.
அனுவிற்கு இதனால் பயங்கர கோபம்!!
நேரே அவனிடம் சென்று,”யாரும் பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க.அங்க வந்து உட்காருங்க”மிரட்ட,அவள் பேச்சு காதல் மொழியாகவே அவன் காதுக்கு செல்ல,முகமெல்லாம் பிரகாசத்தோடு வந்து அமர்ந்தான்.
ரகுவீரிடம்,”இவர் தான் என் ஹஸ்பன்ட்”அறிமுகம் செய்ய,
“வாழ்த்துக்கள்”சிரிக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை.
“ரொம்ப லேட்டா வந்துட்டேன்னு நினைக்கறேன்.இருந்தாலும் உங்ககிட்ட ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தனும்னு நினைக்கறேன்”என்றவன் மனதிற்குள்,
‘நான் விரும்பின பொண்ணு,என்னை கெட்டவனா நினைக்கறதை என்னால ஏத்துக்க முடியாது’மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான்.
“உங்க வீட்டுல போன்ல பேசினது நான் இல்ல.என்னோட சொந்தக்கார பையனை பிடிச்சு பேச வைச்சிருக்காங்க.என்னோட அம்மாவுக்கு அவங்க அண்ணன் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை.அப்பாவுக்கு அவங்க தங்கச்சி பொண்ணை கட்டி வைக்க ஆசை!! நான் தான் சொந்தத்துக்குள்ள வேண்டாம்னு வெளில பார்க்க சொன்னேன்.இப்போ அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவும்,அவங்க ஆசைக்காக உங்கள தப்பா பேசிட்டாங்க.அதுக்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்னு தான் வந்தேன்.
போன்லயே சொல்லியிருக்கலாம்.ஆனால் நேர்ல பார்த்து விளக்கம் சொன்னா,எனக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும்னு நினைச்சேன்…”வருத்ததோடு சொல்லவும் மாறன் திடுக்கிட்டுப் பார்க்க,
நொடியில் திடப்படுத்திக்கொண்டவன்,”ஆனால் என் அத்தை பொண்ணுங்களுக்கு தான் இன்னொரு சான்ஸ் கிடைச்சிருக்கு போல!!”சிரித்தவன்,
“கிப்ட் எதுவும் கொடுக்க முடியலை.சாரி…உங்க லைப் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்”சொன்னவன்,அவர்களது பதிலையும் எதிர்பாராமல்,எழுந்து சென்றுவிட்டான்.
அனுவிற்கு அவனின் பேச்சு வருத்தமாக இருந்தாலும் ,அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது.
அதனாலையே மிகவும் இயல்பாய்,”நீங்க எதுவோ பேசணும்னு சொல்லிட்டே இருந்தீங்களே! என்ன அது”கேட்க,அப்போதும் பேச முடியாமல் போனது..
“அவர் நடந்து போறார்.நான் போய் பஸ் ஸ்டாப் விட்டுட்டு வர்றேன்”என்றவன்,ரகுவீரையும் கட்டாயப்படுத்தி தன் காரில் அழைத்துக்கொண்டு போய் விட்டுவிட்டு வந்தான்.
ரகுவீர் மனமெல்லாம் ரணமாய் இருக்க,தன்னை வீட்டை விட்டு வெளியே கூட செல்ல விடாமல், பிளாக்மெயில் செய்த,அப்பா அம்மாவை எண்ணி கோபத்துடன் போனான்.
ரகுவீரின் வாழ்வில் அனு ஜஸ்ட் பாசிங் கிலௌட்(passing cloud) தான்.அதை என்றாவது புரிந்து கொள்வான்.அவன் வாழ்க்கையும் மாறும்…!!!
(ரகுவீர் இனி இக்கதையில் வரமாட்டான்)

Advertisement