Nenjai Koithaal Vanji
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -18
அத்தியாயம் -18
கனி தன் கணவனுடனே இருக்க போகும் முடிவை எடுத்து விட்டாள், ஆனால் தன் அத்தையிடம் இன்னும் சொல்லியிருக்கவில்லை. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரியும். அவரை சமாளிக்கும் வழியும் இவளுக்கு தெரியவில்லை. ஆகவே தெளிவின்றி சுற்றிக் கொண்டிருந்தாள்.
மனைவியின் மனம் அறிந்த தர்மாவே அன்னலக்ஷ்மி பாட்டியிடம் விஷயத்தை சொல்லி விட்டான்....
அவள் தட்டில் காய் குறைவாக இருக்க, தன்னுடையதை எடுத்து அவளுக்கு வைத்தான்.
“யாரை கேட்டு வச்ச நீ? நான் ஏற்கனவே சாப்பிட்டேன், இப்ப சும்மா இன்னொரு தடவை சாப்பிடுறேன்” என சொல்லி அவனுக்கே மீண்டும் வைத்து விட்டாள்.
“ஓ, பசிச்சா பழம் ஸ்நாக்ஸ்னு ஏதாவது சாப்பிட வேண்டியதுதானே?” எனக் கேட்டான்.
“சாப்பாடு நிறைய இருக்கு, வேஸ்ட் ஆகிடும்”
“குழந்தைக்கு ஃபீட்...
மகளுக்கென வரன் பார்த்திருந்தார் நம்பி. காலை உணவின் போது அம்மா, மகள், தர்மா என மூவருக்கும் பொதுவாக விவரம் சொன்னார்.
பாட்டிக்கு சரிதான் என்றே தோன்றியது. கனி தர்மாவை பார்த்தாள்.
“பார்க்க வர சொல்லலாம்னு இருக்கேன்” என்றார் நம்பி.
“அவசர பட வேணாம் மாமா, விசாரிச்சிட்டு சொல்றேன்” என தர்மா சொல்லவும், தள்ளி போடாமல் சீக்கிரம் செய் என...
மேடையிலிருந்து கீழே இறங்கும் போது இவனை பார்த்தவர்கள் பலர் வணக்கம் வைக்க, சிலர் சிறு குழந்தைகள் பூச்சாண்டியை கண்டால் பயம் கொள்வது போல இவனை கண்டு மிரண்டு அனிச்சையாக தள்ளி நின்றனர்.
இதெல்லாம் தினசரி வாழ்வில் தர்மா எதிர்கொள்ளும் சங்கடங்கள். சாதாரண மனிதனாக தன்னை பார்ப்பதில்லை யாரும் என எண்ணியவன் இதற்கு முழுக்க முழுக்க தான்...
அன்றைய இரவெல்லாம் தர்மாவுக்கு உறக்கமே இல்லை, அடுத்த நாள் காலையில் மருத்துவமனை சென்று குழந்தைதான் என உறுதியான பிறகுதான் அப்பாடா என இருந்தது.
வருகிற வழியில்தான் மஹா வீடிருக்கும். அந்த தெரு முனையில் மஹாவும் அவளது கணவனும் நின்றிருந்தனர். அந்தப் பக்கம் பாராமல் காரை செலுத்தினாலும் மஹாவின் அழுகை அவனை அசைத்து பார்த்தது.
காரை நிறுத்தியவன் கனியிடம்,...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -8
அத்தியாயம் -8
அசந்து உறங்கிக் கொண்டிருந்த கனிஹாவின் கன்னத்தை தட்டி, அவளை எழுப்பி விட்டான் தர்மா. கண் விழித்தவள் குளித்து தயாராகி அமர்ந்திருந்த தர்மாவை பார்த்து அதிர்ந்து விட்டு நேரத்தை கண்டாள்.
நேரம் எட்டாகியிருக்க “இனிமே ரெடியாகி கீழ போக ஒம்போது மணிக்கு மேலாகிடும். எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீ எந்திரிச்சிப்பவே என்னையும்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -3
அத்தியாயம் -3
இரண்டு நாட்களாக கனிஹாவின் நேரம் நிதிலாவுடன் மிகவும் கொண்டாட்டமாக கழிந்திருந்தது.
ஏதோ வேலையாக புதுக்கோட்டை வந்திருந்த தர்மா, கனியையும் அழைத்து சென்று விடலாம் என வீட்டுக்கு வந்திருந்தான். கல்லூரி முடித்து முன்பே வீட்டுக்கு வந்திருக்க வேண்டிய அஜய் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
நேரத்தை பார்த்தவன், “என்ன அவனை இன்னும் காணோம், ஏதும்...
மகனை கவனித்து அவனுக்கு ஆடை மாற்ற விட்டவள், “டயப்பர் போடல, திரும்ப திரும்ப ஈரம் பண்ணினா போட்டு விட்ருவேன் பார்த்துக்க” என மிரட்டினாள்.
தா தா பா மா என மழலையில் பிதற்றினான் அதியன்.
“என்னடா சொல்ற?” எனக் கேட்டு மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
“ம்ம்… எந்த கவச குண்டலும் வேணாம், நான் சமத்து புள்ளைன்னு சொல்றான்”...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -1
அத்தியாயம் -1
அந்த நடு இரவில் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த வீதியில் மக்கள் விழித்துக் கொண்டனர். வெகு நாட்களாக படுக்கையில் கிடந்த தனபாக்கியம் இயற்கை எய்தி விட்டார்.
திடீர் மரணம் இல்லை, சொல்லப் போனால் இப்படி வலி வேதனையோடு அல்லாடுவதற்கு விரைவில் போய் சேர்ந்தால் நல்லதுதான் என்ற...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -6
அத்தியாயம் -6
திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. கனிஹா ஆசையோடு எல்லாம் செய்து கொண்டாள்.
அழைப்பிதழில் தொடங்கி மணமேடையின் அலங்காரம், சமையல் மெனு, பூமாலை என எல்லாம் கனியின் விருப்பத்திற்கு ஏற்பதான். வரவேற்புக்கு லெஹங்கா அணிவேன் என அவள் சொன்னதற்கு மட்டும் நம்பி மறுத்து விட்டார்.
“அவளுக்காகத்தான் மாமா இந்த கல்யாணமே, சின்ன...
“அங்க டின்னர் எப்பவோ ரெடியாகிடுச்சு. இது உனக்காக மட்டும் அவங்களே ஆசையா பண்ணினாங்க. எல்லாம் சரியா இருந்திருந்தா நாம அங்க அவங்க கூடத்தானே மாமா இருந்திருப்போம்? அஜய் நிதி எல்லாம் உன் பொறுப்புல இருந்திருப்பாங்க, சின்ன வயசுல ஹஸ்பண்ட் இல்லாம கஷ்ட பட்டவங்க இந்த வயசுல மூத்த பையன் பொறுப்புல எல்லாத்தையும் விட்டுட்டு அக்கடான்னு...
அவன் சம்மதமாக தலையசைக்க, “நீ எனக்கு மாப்ள பார்த்தா, கட்சி சார்ந்த யாரையோ இல்லைனா உனக்கு தெரிஞ்ச யாரையோதான் பார்ப்ப. கனி மாதிரி கஷ்ட பட நான் தயாரில்ல ண்ணா. எனக்கு கல்யாணமே வேணாம்” என்றாள்.
தர்மா புருவங்களை நெறிக்க, “உன்னை ஹர்ட் பண்றேன்னு நினைக்காத ண்ணா, நீ கல்யாண பேச்சை எடுக்கவும் எனக்கு தோணினதை...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -4
அத்தியாயம் -4
“என்னடா, அந்த பையனை பற்றி விசாரித்து விட்டாயா?” என தான் சொன்ன வரன் பற்றி தர்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டார் நம்பி.
தர்மா விசாரித்து விட்டான்தான், குறை சொல்ல ஏதுமில்லை, ஆனால் கனி இப்போதிருக்கும் மன நிலையில் உடனே திருமணம் பற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என நினைத்தான். ஆகவே,...
தோழிகளுடன் வெளியே செல்லக் கூட கட்டுப்பாடுகள் உண்டு, அப்பாவிடமும் அத்தையிடமும் பொய் சொல்லவும் கனிக்கு வராது. இருவரும் அவர்களின் அடக்குமுறைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டுமென்றால் தர்மாவின் உதவியைத்தான் நாடுவாள்.
அவனும் சில எல்லைகளுக்கு உட்பட்டு அவளை சுதந்திரமாக இருக்க விடுவான். இல்லையென்றால் அவனே சென்னைக்கு நேரில் வந்து அவளை வெளியில் அழைத்து சென்று வேண்டியது செய்து...
“ஏன் மாமா இப்படி பண்ற? அவன் ரொட்டீன் ஏன் மாத்துற?” என கடிந்து கொண்டாள் கனி.
ஒரு நாள்தானே என தர்மா சமாதானமாக சொன்னான். தாமரையோ அதியனுக்கும் படிக்கும் வயது வந்து விட்டது, பகலில் உறங்காமல் பழக்க படுத்துவது நல்லதுதான் என்றார்.
“வீட்ல இருக்கிற வரை தூங்கட்டுமே அத்தை, சட்டுன்னு பழக்கத்தை மாத்த முடியாதில்லத்தை” என்றாள் கனி.
“ஸ்கூல்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -7
அத்தியாயம் -7
தர்மா, கனிஹா இருவரின் திருமணமும் வெகு பிரமாதமாக நடந்திருந்தது. அன்று மாலையே வரவேற்பு. தொழிற் துறையினர், அரசியல் கட்சியினர் என வந்தவர்களை கண்டு மிரண்டு விட்டாள் கனி.
“எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திருக்க கெஸ்ட், சாதாரணமா இரு” என சொல்லி அவளை இயல்பாக்கினான் தர்மா.
தன் ஆசை மாமனை கல்யாணம் கட்டிக் கொண்டோம்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -9
அத்தியாயம் -9
அத்தையை சமாதானம் செய்து, நாளை நடக்கவிருக்கும் விருந்துக்கு அழைத்து செல்லவென புதுக்கோட்டை வீட்டுக்கு வந்திருந்தாள் கனிஹா.
பேரன் வரவில்லையா என விசாரித்தார் அன்னலக்ஷ்மி பாட்டி. தர்மாதான் கனியை காரில் அழைத்து வந்தான், வாசலிலேயே இவளை இறக்கி விட்டு கிளம்பும் போது சொல் என கூறி சென்றிருந்தான்.
பாட்டியை வருந்த செய்ய மனமில்லாமல்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -13
அத்தியாயம் -13
காலையில் கண் விழித்ததும் எழுந்து கொண்ட தர்மா அறையின் பால்கனிக்கு போய் நின்றான். சூரியன் தன் பணியை எப்போதோ ஆரம்பித்திருக்க, அவனது மனதில் எந்த பரபரப்பும் இல்லை.
சரியும் தவறுமாக தான் ஓடி வந்த பாதை தன்னை இப்படி நிறுத்தும் என அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை.
தனக்கென எதுவும் நிலைக்காது...
“உன் வீட்டுக்குள்ள வந்தா வேடிக்கை பார்க்கிறேன், ரோட்ல நிக்க உன் பெர்மிஸன் தேவையில்லை” என தர்மாவும் காட்டமாக சொன்னான்.
எங்கே அவர்களுக்குள் சண்டையாகி விட போகிறதோ என இருவருக்கும் இடையில் குழந்தையுடன் வந்து நின்றாள் மஹா. ரியா இப்போது அம்மாவின் தோளில் சோர்ந்து போய் படுத்திருந்தாள்.
குழந்தையை அப்படி பார்க்க பார்க்க தர்மாவுக்கு வேதனையானது.
“என்னாச்சு மஹா, ஏதும்...
தன் கடுமையை தூர வைத்து விட்டு நிதானமாக அவனை கையாள ஆரம்பித்தார் நம்பி. பதப் படுத்தும் தொழிற்சாலைக்கு தன்னுடன் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.
அப்பா எனும் உறவின்றி வளர்ந்த தர்மாவுக்கு நம்பியை பிடிக்க ஆரம்பித்து விட்டது. மனைவியின் இறப்புக்கு பின் மகளை கூட தள்ளி நிறுத்திவிட்ட நம்பிக்கும் தர்மா நெருக்கமானவாகிப் போனான்.
மாமன் இருக்கும் தைரியம் என்பதை...