Thursday, November 12, 2026

    Kaathalin Thaagam

    “எத்தனை முறை வார்த்தைகளால் குத்தி கீறினார்களோ? இனியும் அவளை கஷ்ட படுத்த கூடாது. ஆனாலும் எப்படி அவள் தாலியை கழட்டலாம்? அப்படின்னா அந்த நொடி அவ மனசுல நான் இல்லை தான? ஒரு நிமிசம் நான் தான் முக்கியம்னு நினச்சிருந்தா அப்படி செஞ்சிருப்பாளா? சே சே நம்மளாலே முடிவெடுக்க முடியாத வயசு. அவ எப்படி...
    ஹாஸ்பிட்டலுக்கு முதல் ஆளாய் கிளம்பி இருந்த வளர், முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.   “ஏட்டி சீக்கிரம் வா. சும்மா சும்மா வம்பு பண்ணாத. ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டல்ல? அப்புறம் என்ன அசையாம உக்காந்துருக்க?”, என்று கேட்டாள் பூங்காவனம்.   “நான் உன் கூட வர மாட்டேன் போ. அண்ணனை கூட்டிட்டு போக சொல்லு”   “அவன் தான் வேலை இருக்குன்னு சொல்லுறான்ல?...
    அத்தியாயம் 14 எட்டு திசை இருந்தும் நீ போகும் பாதையில் உன்னுடனே பயணிக்க துடிக்கிறது என் பாதங்கள்!!! அந்த ஞாயிற்று கிழமை காலை எழும் போதே பரபரப்புடன் எழுந்தாள்.குளித்து முடித்து கீழே   வரும் போது மித்ரன் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருந்தார்கள். அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களிடம் பேசி கொண்டிருந்தாள். மல்லிகாவும்    வாசுதேவனும் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காலை...
    தலைப்பு : காதலின் தாகம் கதாநாயகன்: இளஞ்செழியன் கதாநாயகி : மதுமிதா   அத்தியாயம் 1   உன் முகம் கண்டு ஒவ்வொரு நொடியும் மலர்கிறது என்னுள் ஒரு மாய புன்னகை!!!!!   பூஞ்சோலை போன்று பூத்து குலுங்கும் அழகான கிராமம். சுற்றிலும் பசுமையை தத்தெடுத்த ஓங்கி உயர்ந்த மரங்கள் செழித்த அழகான ஊர் பொன்னகரம்.   அந்த ஊருக்குள் பிரவேசித்தது அந்த வெள்ளை மாருதி. அதில் அமர்ந்திருந்த மூன்று பேரின் மனங்களும்...
    அத்தியாயம் 6   முகவரியை தொலைத்து விட்ட முகிலினமாய் உன் வாசனையை தேடுகிறது என் உயிர்!!!!   வீட்டுக்கு வந்ததும் வளரை கட்டி கொண்டு கண்ணீர் வடித்தார்கள் தங்கராசுவும் பூங்காவனமும்.   "உன் அண்ணனுக்கு எப்படி பட்ட பொண்ணை கட்டி வைக்கணும்னு இனி நீயே முடிவு பண்ணு ஆத்தா. அண்ணன் தங்கச்சி விசயத்துல இனி நாங்க குறுக்க வர மாட்டோம்”, என்று பூங்காவனம் சொன்னதும் தங்கராசும் "பூவு சொன்னது...
     “அப்பாவே சொல்லிட்டார். நான் போறேன்”, என்று சிட்டாக பறந்து விட்டாள் வளர்மதி.   “நீங்களே காட்டுக்கு போய்ட்டு வந்துருக்கீங்க. செத்த உக்காருங்க. நான் வேலையை பாத்துக்குறேன்”, என்று சொன்னாள் பூங்காவனம்.   “சரித்தா” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். அடுத்த தெருவுக்கு சென்று கொண்டிருந்த வளர்மதி கவிதா வீட்டுக்கு எதிர் வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிவதை கண்டு...
    அத்தியாயம் 8   கனவுகள் பல கண்டு கற்பனையில் திளைத்த என் காதலின் தாகங்கள் அனைத்தும் எப்போது தீருமோ?!!!   வளர் கொடுத்த காகிதத்தில் அவள் பெரியதாக ஒன்றும் எழுதி விட வில்லை.   செழியனும் மதுவும் சிறு வயதிலேயே விரும்பியதாகவும், இப்போது செழியன் மது ஞாபகத்திலே இருப்பதாகவும், அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தாள்.   ஆனால் அவர்கள் எதனால் பிரிந்தார்கள்...
    அத்தியாயம் 12 என்னவனின் கை கோர்த்து நான் கடக்கும் ஒவ்வொரு அடியும் என் வாழ்வில் வெற்றி படியே!!! அடுத்த நொடி அவர் "மது", என்று அலறிய சத்தத்தில் மல்லிகாவும், பாட்டியும் அங்கு ஓடி வந்தார்கள். வாசுதேவனின் சத்தத்தில் முதலில் கண் விழித்தது செழியன் தான். முதலில் எங்கே இருக்கிறோம் என்று யோசித்தவன் வாசுதேவனை கண்டு திகைத்து எழுந்து நின்றான். "டேய், நீ செழியன் தான? என்...
    அத்தியாயம் 13 என் வானவில்லே நீ தான் என்று அறிந்த பின் தான் உணர்கிறேன் அழகான வர்ண ஜாலங்களை!!! அவனோ “ஒரு வார்த்தை வான்னு சொல்றாளா. எப்படி முழிச்சிட்டு இருக்கா பாரு”, என்று நினைத்து கொண்டிருந்தான். “என்ன மது, யாரு வந்திருக்கா?”, என்று கேட்டு கொண்டே அங்கு வந்த மல்லிகா செழியனை கண்டு திகைத்தாள். செழியனை இப்போது அவள் பார்த்ததில்லை. சிறு வயதில் பார்த்தது தான். ஆனால்...
    அத்தியாயம் 15 நித்திரையில் என் சித்தம் கவர்ந்தவனே, என் காதலின் தாகம் தீர்க்கும் தருணம் எப்போது?!!!!! “தூங்கிட்டாளா?”, என்று பார்ப்பதற்காக திரும்பி படுத்தவன் அவளை பார்த்து திகைத்து விழித்து அவசரமாக எழுந்து அமர்ந்தான். அவன் அசைவை உணர்ந்து கண் விழித்தவள் அவன் அதிர்ச்சியான முகத்தை கண்டு திகைத்தாள். அவன் பார்வையோ அவள் கழுத்தில் கிடந்த தாலியில் நிலைத்து இருந்தது. காலையில்...
    அத்தியாயம் 4   காரிருளில் வெண்பனியென பளிச்சென்று புன்னகை பூக்கும் நிலவில் உன் திருமுகம்!!!!!!   “என்னோட லைப்ல அவனை தவிர வேற யாரும் இல்லை. அதே மாதிரி அவன் லைப்ல நான் மட்டும் தான் இருக்கணும்", என்று உறுதியுடன் முடிவெடுத்த பின்னர் தான் மதுவால் நிம்மதியாக இருக்க முடிந்தது.   நேரம் போகாமல் மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தாள் மது. வாசலில் அமர்ந்திருந்த மல்லிகா அருகில்...
    அத்தியாயம் 9   காலையில் மலர்ந்து மணம் பரப்பி மாலையில் மடியும் பூவை போலவா என் பள்ளி பருவ காதல்?!!!   அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு, விட்டால் போதும் என்று நினைத்து அறைக்குள் சென்று மறைந்தான் செழியன். சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளும் செழியனை நினைத்து தனக்குள் சிரித்து கொண்டாள் வளர்மதி.   அறைக்குள் சென்றவன் அந்த டைரியை...
    அவன் அழுகை கூடி கொண்டே போக "செழியன் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்களேன். துரை அண்ணா போனது வருத்தம் தான். நானும் இப்படி நடக்கும்னு எதிர்பாக்கலை. துரை அண்ணா நம்மளை விட்டு எங்கயும் போகலை. நம்ம கூடவே தான் இருக்காங்க. எப்பவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க. அவங்க குடும்பத்தை நீங்க பாத்துக்கோங்க....
    "மாத்திரை போட்டு பாட்டி படுத்துட்டா எந்திரிக்க மாட்டாங்க” "இது தப்புனு தோணுது மது” "அப்ப என் ஆசையை நிறைவேத்த மாட்டிங்களா? அந்த கீதா சொன்னா போவீங்க? எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்களா?” "ஏய், எங்க இருந்து எங்க போற? அவளை எல்லாம் எதுக்கு இழுக்குற?” "நீங்க வரலைன்னா நான் கண்டிப்பா உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு தான் நினைப்பேன்” "சரி சரி முகத்தை...
    அத்தியாயம் 11 காதல் தாகம் தீர்க்க வந்த என் காதல் கண்ணனை கண்டேன் கற்பனை கனவில்!!! மது உள்ளே சென்ற போது வீட்டில் அனைவரும் இருந்தார்கள். தங்கராசு "யாரு பூவு இது?”, என்று கேட்டார். "நம்ம வாசு அண்ணன் மக" "அப்படியா பாப்பா?” "ஹ்ம்ம் ஆமா”, என்றாள் மது. "அம்மா அப்பா நல்லா இருக்காங்களா? “ "நல்லா இருக்காங்க. நான் கிளம்புறேன்” "இரு மா காயத்தை கழுவி எண்ணெய் போட்டு...
      சமாளித்து கொண்டு “யாருக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.   “அவர் பொண்ணு மருந்தை குடிச்சிட்டாளாம் மது. நீ சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் போ”, என்றார் வாசுதேவன்.   “சரிப்பா”, என்றவள் அங்கு தொங்கி கிடந்த சாவியை எடுத்து கொண்டு தங்கராசுவை பார்த்தவள் “நீங்க பின்னாடி வாங்க. நான் போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே போனாள்.   அங்கே தாயம்மா இன்னும் வந்திருக்க...
    அத்தியாயம் 10 என்னை சுற்றிலும் பல மாற்றங்கள், எனக்குள்ளே பல தேடல்கள் அனைத்தும் தந்தவனே தாகம் தீர்க்க வந்து விடு!!! காத்திருந்து காத்திருந்து பார்த்து கொண்டிருந்த மது, செழியன் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றாள். அறியாத ஊரில், யாரையும் தெரியாத நிலையில் அவனிடம் பேசுவதை விரும்பினாள். அவனை காண வில்லை என்றதும் மனது முழுவதும் சோகமாக இருந்தது. அதே மன நிலையில் தான்...
    வாசுதேவன் கோதையிடம் விசயத்தை சொன்னதும் "உன்அப்பா இருந்த வரைக்கும் உங்களை எல்லாம் பாக்க விடலை. இனியும் உங்களை பிரிஞ்சு இருக்க முடியாம அங்க வந்துரலாமான்னு கூட யோசிச்சேன் பா. இப்ப இங்கயே என் மருமகளும் பேத்தியும் இருப்பாங்கன்னா அதை விட சந்தோசம் வேற என்ன வேணும்? நான் நல்லா பாத்துக்குவேன் ராசா", என்றாள் பாட்டி.   அன்று...
    error: Content is protected !!