Advertisement

அத்தியாயம் 11

காதல் தாகம் தீர்க்க

வந்த என் காதல்

கண்ணனை கண்டேன்

கற்பனை கனவில்!!!

மது உள்ளே சென்ற போது வீட்டில் அனைவரும் இருந்தார்கள். தங்கராசு “யாரு பூவு இது?”, என்று கேட்டார்.

“நம்ம வாசு அண்ணன் மக”

“அப்படியா பாப்பா?”

“ஹ்ம்ம் ஆமா”, என்றாள் மது.

“அம்மா அப்பா நல்லா இருக்காங்களா? “

“நல்லா இருக்காங்க. நான் கிளம்புறேன்”

“இரு மா காயத்தை கழுவி எண்ணெய் போட்டு விடுறேன்”, என்று சொல்லி எண்ணெய் எடுத்து வந்து போட்டு விட்டாள் பூங்காவனம்.

அப்போது தான் உள்ளே வந்த செழியன் அதிர்ந்து நின்றான். அவனை கண்டு அவள் முகம் மலர்ந்தது.

“இவளை அவாய்ட் பண்ணனும்னு நினைச்சு பாக்காம இருந்தா இப்ப வீட்டுக்கே வந்துட்டா”, என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் போதே அவள் வெண்ணிற கால்கள் அவன் கண்ணில் விழுந்து மயக்கத்தை தந்தது. இதனால் தானே அவளை தவிர்த்தான்.

அப்போது ஓடி வந்த வளர் அவன் கையை பற்றி கொண்டாள். அந்த தொடுகையில் தான் தன்னை நிலை படுத்தி கொண்டான்.

சட்டென்று வளரை கூட்டி கொண்டு உள்ளே சென்று விட்டான். அவன் பாரா முகத்தால் மனதுக்குள் அடி வாங்கினாள் மது. அவள் கண்கள் கலங்கியது. யாருக்கும் தெரியாமல் அதை மறைத்தவள் கிளம்புவதற்காக எழுந்தாள்.

“இரு மா ஏதாவது சாப்பிட்டுட்டு போ”, என்று சொல்லி அவளுக்கு சேவு அதிரசம் என்று எடுத்து கொடுத்த பூங்காவனம் அவளுடைய படிப்பை பற்றி விசாரித்தாள்.

“நம்ம செழியன் கிட்ட நிறைய புத்தகம் இருக்கும் மா.  நீ வேணுங்குறதை போய் வாங்கிக்கோ. அதோ அந்த ரூம்ல தான் இருக்கான்”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

சந்தோசத்துடன் உள்ளே சென்றாள் மது. அவளுக்கு தெரியும் அவனுடைய புத்தகம் அவளுக்கு உதவாது என்று. அவன் தமிழ் மீடியம், அவளோ இங்கிலிஷ் மீடியம். ஆனாலும்  அவனை காண உள்ளே சென்றாள்.

வளரை பக்கத்தில் வைத்து கொண்டு தரையில் அமர்ந்திருந்த செழியனின் பார்வை எங்கோ வெறித்தது.

அவன் அருகில் சென்ற மது, வளர் அருகில் சென்று அமர்ந்தாள். தன் அண்ணனையும் அவளையும் மாறி மாறி பார்த்தாள் வளர்.

“எதுக்கு நீங்க என்னை பாக்க வரலை. நான் கோயில்ல வெயிட் பண்ணேன் தெரியுமா?”, என்று பேச்சை ஆரம்பித்தாள் மது.

“அது.. அது வந்து வேலை இருந்துச்சு”, என்று எங்கோ பார்த்து கொண்டு பதில் சொன்னான் செழியன்.

“எதுக்கு என் முகத்தை பார்த்து கூட பதில் சொல்ல மாட்டுக்கீங்க? என் மேல ஏதாவது கோபமா?”

“அப்படி எல்லாம் இல்லை மது.  நான் எதுக்கு உன் மேல கோப படணும்?”

“ஹ்ம்ம் அதை தான் நானும் கேக்குறேன். நான் என்ன செஞ்சேன்னு தான் தெரியலை. இப்ப கூட நீங்க சரியா பேசலை. உங்க வீட்டுக்கு வந்தது கோபமா? நானா வரலை. வெளிய கீழே விழுந்துட்டேன். உங்க அம்மா தான் கூட்டிட்டு வந்தாங்க”

“ஏய், நீ எங்க வீட்டுக்கு வரதுல எனக்கு என்ன கோபம்? அன்னைக்கு நானே உன்னை கூட்டிட்டு வந்தேனே?”

“அப்புறம் என்ன தான் உங்க பிரச்சனை?”

“எனக்கு சொல்ல தெரியலை மது. ஆனா இதெல்லாம் தப்பு. நாம பேசிக்கிறது நல்லது இல்லை. சும்மா சாதாரணமா பேசினா தப்பு இல்லை. ஆனா…”

“நான் உங்க கிட்ட எதுவும் தப்பா பேசலையே”

“உனக்கு என்னால புரிய வைக்க முடியலை மது. ப்ளீஸ் இனி என்கிட்ட பேசாத”, என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டான்.

ஏங்கி ஏங்கி அழுதாள் மது. அப்படி அழுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“ஐயோ! அம்மா, அப்பா பாத்தா என்ன நினைப்பாங்க?”, என்று நினைத்து கொண்டு “மது அழாத மா. வளர் பாப்பா நீ போய் அண்ணனுக்கு ஒரு பேனா வாங்கிட்டு வரியா?”, என்று கேட்டான்.

“சரிண்ணே”, என்று சொல்லி விட்டு ஓடி போனாள் வளர்.

அவள் போனதும் மது அருகில் நெருங்கி அமர்ந்தவன் “மது மா  அழாத.  இப்ப எதுக்கு இப்படி அழுற? அம்மா அப்பா பாத்தா என்ன நினைப்பாங்க?”, என்று கேட்டான்.

“சரி நான் வீட்ல போய் அழுதுக்குறேன்”, என்று எழ பார்த்தவளின் கையை பற்றி கொண்டவன் “இப்ப எதுக்கு அழுற?”, என்று கேட்டான்.

“நான் ஒரு தப்பும் செய்யலையே? அப்புறம் ஏன் பேசாம இருக்கணும்? எனக்கு அழுகையா வருது?அப்படியே தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சிரலாம்ல?”

“மன்னிப்பு கேக்குற அளவுக்கு நீ ஒரு தப்பும் பண்ணலை மது”

“அப்ப ஏன் என்கிட்ட பேசலை?”

“தப்பு என் மேல தான் மது. எனக்கு தான் உன்னை பாத்தா தப்பு தப்பா யோசிக்க தோணுது”

“புரியலை”

“எப்படி புரிய வைக்கன்னு தெரியலை. ஏற்கனவே உன்னை பிடிக்கும். அன்னைக்கு நீ கட்டி புடிச்சு முத்தம் கொடுத்தது வேற ஞாபகம் வந்து ரொம்ப ஒரு மாதிரி ஆகுது. அன்னைக்கு என்னை கட்டி  புடிச்சி….”, என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் உதட்டில் விரலை வைத்தவள் அவனை இன்னும் நெருங்கி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

அதிர்ச்சியாக ஆச்சரியமாக  அவன் விழித்து கொண்டிருக்கும் போதே “ஐ லவ் யூ”, என்று சொன்னவள் அவன் உதட்டில் தன் உதடுகளை பதித்தாள்.

தன்னிடம் இருந்து விலக பார்த்தவளை, வாசலை ஒரு பார்வை பார்த்து விட்டு இறுக்கி அணைத்தவன் அவள் முகம் எல்லாம் முத்தம் பதித்து இறுதியாக அவள் உதடுகளை சிறை செய்தான்.

யாரோ வரும் அரவம் கேட்டு அவளிடம் இருந்து தள்ளி நின்றவன் அவனுடைய புத்தக அலமாரி அருகில் அழைத்து சென்றான். புத்தகம் எடுக்கும் சாக்கில் அவளை உரசி கொண்டே இருந்தவனை அவளுக்கும் ரொம்ப பிடித்தது.

“நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா மது?”, என்று கேட்டான் செழியன்.

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அன்னைக்கு உங்களுக்காக எப்படி அழுதேன் தெரியுமா? இப்ப நீங்க பேசலைனு ரொம்ப கஷ்டமா போச்சு?”

“எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மது. அன்னைக்கே உன்னை கட்டி பிடிக்கணும்னு தோணுச்சு. அது உனக்கு பிடிக்காதுன்னு நினைச்சு தான் விலகி போனேன்”

“இப்ப என்ன தோணுது?”

“முத்தம் கொடுத்துட்டே இருக்கணும் போல தோணுது”

“கொடுக்க வேண்டியது தான?”, என்று சொல்லும் போது அவள் குரல் உள்ளே போயிருந்தது.

அவளுக்கு தமிழ் சம்பந்தமான புத்தகத்தை எடுத்து கொண்டிருக்கும் போது வளர் வந்து பேனாவை கொடுத்து விட்டு ஓடி விட்டாள்.

புத்தகம் கொடுத்த பிறகும் அவளை அனுப்ப மனதில்லாமல் விழித்து கொண்டிருந்தவனை தவிக்க விடாமல் அவன் நெஞ்சத்தில் ஒட்டி கொண்டாள் மது.

“இனி இப்படி எல்லாம் என் கூட தனியா இருக்காத மது”

“என்னோட செழியன் கூட இருக்க எனக்கு என்ன பயம்?”

“இப்ப நான் பழைய செழியனா இல்லை”

“நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு பிடிக்கும்.  சரி நாளைக்கு கோயிலுக்கு வாங்க. நாளான்னைக்கு எனக்கு ஸ்கூல் ஆரம்பிச்சிரும்”

“ஹ்ம்ம் சரி போய்ட்டு வா”, என்று சொல்லி விடை கொடுத்தான்.

அன்று இரவு முழுவதும் இருவரும் தூங்க வில்லை. புதிதாக அவர்களுக்குள் அறிமுகமான உணர்வுகள் அவர்களை தூங்க விட வில்லை.

இது அனைத்தும் இந்த வயதில் உடலில் ஏற்படும் பருவ மாற்றம் என்று இருவருக்கும் புரிய வில்லை.

அடுத்த நாள் அவளுக்கு முன்பாக வந்து காத்திருந்தான் செழியன். அவனை தேடி வந்தவள் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள்.

சுற்றி முற்றி பார்த்த செழியனும் அவளை இறுக்கி அணைத்து முத்தங்களை பதித்தான்.

சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவர்கள் பிரியும் போது “இனி எப்ப பாப்போம்?”, என்று சோகமாக கேட்டாள் மது.

“தெரியலை மது. நானும் காலேஜ்ல அட்மிசன் போட போகணும். எப்ப ப்ரீனு தெரியலை”

“உங்களுக்கு கொஞ்சம் கூட என்னை பாக்கணும்னு ஆசையே இல்லை போங்க”

“ஏய் இல்லை டா, எப்படி பாக்கன்னு தான் யோசிக்கிறேன். சரி ஒண்ணு பண்ணலாம். நான் ப்ரீயா இருந்தா உங்க வீட்டு கிட்ட வந்து விசில் அடிப்பேன். நீ உடனே சைக்கிள் எடுத்துட்டு வா”

“ஹ்ம்ம் இது நல்ல ஐடியா. எப்படி விசில் அடிப்பீங்க? அடிச்சு காட்டுங்க”

“ஹ்ம்ம் சரி”, என்று சொன்னவன் இரண்டு விரலை வாய்க்குள் வைத்து அடித்து காண்பித்தான்.

“எனக்கும் சொல்லி தாங்களேன்”, என்று கேட்டவளின் அருகில் வந்தவன் அவள் வாய்க்குள் தன் விரலை வைத்தான். அவள் இதழின் ஈரமும் அந்த இதமும் அவனை என்னவோ செய்ய விசில் அடிக்க கற்று கொடுப்பதை மறந்து அவள் இதழ்களில் தொலைந்தான்.

அதன் பின் வாழ்க்கை சாதாரணமாக தான் சென்றது. மது ஸ்கூல்க்கு போய் வர ஆரம்பித்தாள். செழியன் பக்கத்து ஊரில் கல்லூரியில் சேர்ந்தான். வாரத்தில் ஒரு முறையாவது அவளை பார்த்து விடுவான்.

அவன் விசில் சத்தத்துக்காக தவம் இருப்பாள் மது. அதில் முதல் இரண்டு தேர்வுகளில் அவள் மதிப்பெண் குறைந்திருந்தாள்.

புது ஸ்கூல் அதனால தான் என்று மல்லிகா வாசுதேவனை சமாளித்து கொண்டு மதுவை எதுவும் சொல்ல வில்லை. ஆனால்  விசயம் அறிந்த செழியன் “நீ சரியா படிக்கலைன்னா நான் உன்னை பாக்க வரவே மாட்டேன். நீ டாக்டர் ஆகணும் தான?”, என்று மிரட்டி படிக்க வைத்தான்.

அவனுக்காக படித்தாள் மது. இப்படியே இரண்டு மாதம் சென்ற போது ஊரில் திருவிழா வந்தது.

மது எப்படியும் கோயிலுக்கு வருவாள் என்று காத்திருந்தான். பாட்டியின் அறிவுரை படி பட்டு பாவாடை தாவணியில் தேவதை போல வந்தாள் மது. அந்த வயதுக்குரிய அவளுடைய அழகும் மலர்ச்சியும் அவனை கொள்ளை கொண்டது.

அவளை பார்த்த படியே இருட்டில் மறைந்து நின்றான். மதுவின் கண்களோ அவனை தான் தேடி கொண்டிருந்தது. அவள் கண்களில் தேடலை கண்டவன் இருளில் இருந்து வெளிச்த்துக்கு வந்து தரிசனம் கொடுத்தான்.

அவனை கண்டு அவள் முகம் மலர்ந்தது. கண்களால் “நல்லா இருக்கா?”, என்று கேட்டாள்.

“ரொம்ப அழகா இருக்கு”, என்று பதில் சொன்னவன் அவளையே பார்த்த படியே அவள் பின்னே அலைந்தான்.

சாமி கும்பிட கூட்டமாக நிற்கும் போது அவள் பின்னே நின்றான் செழியன். அவனை தேடி கொண்டிருந்தவள் பின்னால் அவன் நிற்பதை அறிந்து வெட்க புன்னகை பூத்தாள்.

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் போது அவளுடன் படிக்கும் சங்கீதா மதுவை பிடித்து கொண்டாள். “ரெண்டு பேரும் போய் சுத்தி பாத்துட்டு வாங்க”, என்று மல்லிகா சொன்னதும் சந்தோசத்துடன் சென்றாள் மது. அவள் சென்ற போது செழியனும் அவள் பின்னே சென்றான்.

இதை கவனித்த சங்கீதா அவளை கிண்டல் செய்து வெட்க பட வைத்தாள். அந்த வெட்கத்தில் சித்தம் தொலைத்தான் செழியன். அன்று இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. கண்களால் மட்டுமே பேச்சு வார்த்தை நடந்தது இருவருக்கும்.

அதன் பின் வாழ்க்கை அதன் போக்கில் சென்றது. பள்ளியிலும் கல்லூரியிலும் நண்பர்களால் அதிக விஷயங்களை இருவருமே கற்று கொண்டார்கள்.

அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் இருவர் வாழ்க்கையிலும் அந்த விபரீதம் நடந்தது. றெக்கை கட்டி கொண்டு பறந்த போது றெக்கையை வெட்டி விட்ட வலியை இருவருமே அனுபவித்தார்கள்.

அறியாத வயதில் செய்த தவறா?  விதி செய்த சதியா?

செழியனுக்கு செமஸ்டர் பரிசை நடப்பதால் இரண்டு வாரமாக மதுவை பார்க்காமல் இருந்தான். அவன் படிப்பில் கவனம் செலுத்தினான். ஆனால் மதுவோ அவன் நினைவில் இருந்தாள்.

இப்படி கவலையில் இருக்கும் போது ஒரு சந்தோசமாக வாசுதேவன் ஊருக்கு வருகிறேன் என்று தகவல் கொடுத்திருந்தார். “டேடி வாரார்”, என்று குதித்து கொண்டு இருந்தாள் மது. வாசுதேவன் வந்த பிறகும் ஒரு வாரம் வரைக்கும் மது செழியனை பார்க்கவே இல்லை.

அந்த கவலையில் இருந்த போது தான் ஒரு ஞாயிற்று கிழமை விசில் சத்தம் கேட்டு மாடியில் இருந்து எட்டி பார்த்தாள் மது.

செழியன் நின்றதை கண்டு அவள் சந்தோஷத்தில் சிரித்தாள். ஆனால் “இப்ப வெளிய போனா அப்பா ஏதாவது சொல்லுவாங்களே”, என்று நினைத்து கொண்டு கீழே வந்தாள்.

“இப்ப எங்க போற?”, என்று கேட்டாள் மல்லிகா.

“சைக்கிள் ஓட்ட”, என்றாள் மது.

“இன்னைக்கு வேண்டாம். ஒழுங்கா வீட்டில இரு”,

“முடியாது, நான் போவேன்”

“எல்லாத்துக்கும் அடம். பாத்தீங்களா?”

“விடு மல்லி. சைக்கிள் ஓட்ட தான போறா. இன்னைக்கு லீவ் தான?”, என்று வாசுதேவன் சொன்னதும் “தேங்க்ஸ் டேடி”, என்று சொல்லி விட்டு ஓடியே விட்டாள்.

அவள் சென்ற பிறகு பாட்டியும் மல்லிகாவும்  வாசுதேவனிடம் மதுவின் பிடிவாதத்தை பற்றி குறை கூறினார்கள்.

எல்லாவற்றையும் கேட்ட அவர் “அவளை அவ விருப்ப படி விடுங்க “, என்று சொல்லி விட்டார். மல்லிகா ஒரு முறைப்புடன் சென்று விட்டாள்.

கோயிலுக்கு சென்ற மது, செழியனின் அணைப்பில் இருந்தாள். இத்தனை நாள் பிரிவு அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

“இப்ப எதுக்கு மா அழுற?”, என்று கேட்டான் செழியன்.

“நீங்க என்னை பாக்க வரவே இல்லை”

“சொல்லிட்டு தான போனேன்?”

“உங்களுக்கு என் பீலிங்ஸ் புரியவே இல்லை”

“சரி இப்ப சொல்லு புரிஞ்சிக்கிறேன்”

“எனக்கு உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு”

“அதுக்கெல்லாம் நாள் இருக்கு மது”

“ஹ்ம்ம் காலேஜ் எப்படி போகுது? அந்த கீதா உங்களை லவ் பண்றேன்னு சொன்னான்னு சொன்னீங்க? என்ன ஆச்சு?”

“என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஆள் வேற அழகா இருக்கா. அதனால தான்”

“ஏய் மது அழாத மா. நான் விளையாட்டுக்கு சொன்னேன். நான் தான் அவ சொன்னப்பவே முடியாதுன்னு சொல்லிட்டேன்னு  சொன்னேன்ல?”

….

“ப்ளீஸ் மது அழாத டா. நீ எனக்கு இருக்கும் போது நான் ஏன் வேற பொண்ணை பத்தி யோசிக்க போறேன்”

“நீங்க இப்படி மாறுவீங்கன்னு என் பிரண்ட்ஸ் சொன்னாங்க. அது மாதிரி ஆயிட்டு”

“ஏய் அப்படி எல்லாம் இல்லை மா”, என்று எவ்வளவு சமாதான படுத்தினாலும் ஐம்பது சதவீதம் தான் சமாதானமானாள். உள்ளுக்குள் அந்த கீதா விசயம் புகைந்து கொண்டு தான் இருந்தது,

தன்னை விட்டு சென்று விடுவானோ என்று பயந்து கொண்டே தான் இருந்தாள்.

“சரி மது வீட்டுக்கு போகலாமா? நேரம் ஆகிட்டு”

“அதுக்குள்ளயா?”

“நேரம் ஆச்சு மா”

“நாம சரியாவே பேசலை”

“என்ன பண்றது. பேச முடியாத படி நிலைமை இருக்கு”

“நைட் எங்க வீட்டுக்கு வாறீங்களா?”

“என்னது வீட்டுக்கா? எதுக்கு?”

“எனக்கு ரொம்ப நேரம் பேசணும் போல இருக்கு”

“காமெடி பண்ணாத. உங்க வீட்ல மாட்டுனா என்ன செய்றது?”

“மாட்ட மாட்டோம். நீங்க வாங்க. ப்ளீஸ் நான் நிறைய விசயம் பேசணும். ஸ்கூல்ல சதீஸ்ன்னு ஒரு பையன் ரொம்ப டார்ச்சல் பண்றான். அதை பத்தி எல்லாம் பேசணும். நான் உங்களை தவிர வேற யார் கிட்ட சொல்லுவேன்”

“மது அது சரி தான். ஆனா வீட்டுக்கு வரது எல்லாம் தப்பு. உன் அம்மா அப்பா பாத்தா ரெண்டு பேரும் செத்தோம்”

“டேடியும் அம்மாவும்  இன்னைக்கு நைட் சென்னைக்கு போறாங்க. அதான் கூப்பிடுறேன்”

“சென்னைக்கு எதுக்கு?”

“அது ஒரு பங்க்சன்னு போறாங்க. அது எதுக்கு உங்களுக்கு? நீங்க வாங்க ப்ளீஸ்”

“உங்க பாட்டி இருப்பாங்களே?”

Advertisement