Advertisement

அத்தியாயம் 15
நித்திரையில் என் சித்தம்
கவர்ந்தவனே, என்
காதலின் தாகம் தீர்க்கும்
தருணம் எப்போது?!!!!!
“தூங்கிட்டாளா?”, என்று பார்ப்பதற்காக திரும்பி படுத்தவன் அவளை பார்த்து திகைத்து விழித்து அவசரமாக எழுந்து அமர்ந்தான்.
அவன் அசைவை உணர்ந்து கண் விழித்தவள் அவன் அதிர்ச்சியான முகத்தை கண்டு திகைத்தாள்.
அவன் பார்வையோ அவள் கழுத்தில் கிடந்த தாலியில் நிலைத்து இருந்தது. காலையில் கட்டிய புது தாலி அவள் உடைக்கு வெளியே கிடந்தது. ஆனால் அவன் முன்பு கட்டிய பழைய தாலி அவள் படுத்திருந்ததால் வெளியே வந்திருந்தது. அதை பார்த்து தான் அதிர்ச்சியானான் செழியன்.
அவன் பார்வை புரியாமல் “என்ன ஆச்சு ஏதும் வேணுமா?”, என்று கேட்டாள் மது.
அவனோ பதில் பேசாமல் சிலையாக இருந்தான்.
“உங்களை தான் கேக்குறேன், எதாவது வேணுமா?”
“என்னை நீ மறக்கலையா மது?”
“மறக்குறதா? உங்களையா?”, என்று கேட்டவள் விரக்தியாக சிரித்தாள்.
“என்ன மது சிரிக்கிற?”
“சிரிக்கிற மாதிரியான கேள்வியை தான நீங்க கேட்டீங்க?”
“அப்ப பழைய காதல் அப்படியே தான் இருக்கா மது? நான் வேற நினைச்சேன்”
“உங்க கூட வாழ்ந்ததுனால அந்த குற்ற உணர்ச்சில உங்களை கல்யாணம் பண்ணதா நினைச்சிருப்பீங்க?”
“ஹ்ம்ம்”
“ஏன் மது அன்னைக்கு அப்படி செஞ்ச? தாலியை கழட்டினா நான் செத்ததுக்கு சமம்னு சொன்னேன்ல மது?”
“முழு மனசோட செஞ்சிருப்பேன்னு நினைக்கிறீங்களா?”
“இல்லை. ஆனாலும்…. நான் அன்னைக்கு அவ்வளவு தூரம் வேண்டாம்னு சொன்னேனே மது?”
“அன்னைக்கு நடந்ததுக்கு நான் தான் முழுக்க முழுக்க காரணம். உங்களை கட்டாய படுத்தி தாலி கட்ட வச்சது நான் தான். அது எல்லாமே உங்க மேல உள்ள அன்பால. நீங்க என் கூடவே இருப்பீங்கன்னு நம்பிக்கைல செஞ்சேன். அது தப்புன்னு இப்ப புரியுது. அந்த வயசுல அதை தப்புனு நான் உணரவே இல்லை. உங்களுக்கும் மெச்சுரிட்டி இல்லை. பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் உடலும் மனமும் கல்யாணத்துக்கு வளரணும்னு தான் கவர்ன்மென்ட் கூட  வயசு பிக்ஸ் பண்ணிருக்கு. அதுக்கு முன்னாலே நம்ம தான் அவசர பாத்துட்டோம். அதுக்கு தான் இத்தனை வருஷம் நிம்மதி இழந்து
தவச்சிருக்கோம். செஞ்ச தப்புக்கு தண்டனை. ஆனா அன்னைக்கு அப்பா அம்மா வந்த பிறகு நான் வேற என்ன தான் செஞ்சிருக்க முடியும்? நீங்களே சொல்லுஙஙளேன். நான் என்ன செஞ்சிருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க? டேடி அப்படி சொல்றாங்க. எனக்கு வேற யோசிக்க முடியல செழியன். அந்த நிமிசம் நீங்க தான் வேணும்னு சொல்லிருந்தா என்னை கூட்டிட்டு போய்ருப்பீங்களா? உங்க நிலைமை உங்க குடும்ப நிலைமை எல்லாமே எனக்கு தெரியும் செழியன். உங்களுக்கு வலிக்கும்னு  தெரிஞ்சு தான் அப்படி செஞ்சேன் பண்ணேன். செத்து போன மாதிரி நீங்க போனப்ப எனக்கு கஷ்டமா இருந்தது. ஆனா என்னால எதுவுமே செய்ய முடியலை. உங்களுக்கு கஷ்டமா இருந்துருக்கும். இப்பவும் என் மேல கோபம் இருக்கும். ஆனா என்னை வெறுத்துறாதீங்க செழியன். நீங்க தான் எனக்கு எல்லாமே”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.
அடுத்த நொடி அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் கைகளை பற்றி கொண்டான். அதற்காகவே  காத்திருந்தவள் போல அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவளை இறுக்கி அணைத்தவன் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
இருவருமே எதற்கென்று தெரியாமலே இத்தனை வருட வருத்தம் தீருமாறு அழுதார்கள்.
சிறிது நேரம் அவளை அழ  விட்டவன் “மது மா அழாத டா. எனக்கு கஷ்டமா இருக்கு”, என்று சொல்லி கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“நீங்க என்னை வெறுத்துடீங்கள்ல?”
“உன்னை எப்படி மது நான் வெறுப்பேன்”
“அப்ப எதுக்கு என்கிட்ட பேசலை. எனக்கு எவ்வளவு கஷ்டமா  இருந்துச்சு தெரியுமா”
“கோபம் இருந்தது. ஆனா வெறுப்பு இல்லை டா. அந்த தாலியை பாத்ததும் அதுவும் ஓடிட்டு”
“அது தான் உங்களை எனக்கு ஞாபக படுத்திட்டே இருக்கும் தெரியுமா? அம்மாக்கு தெரியாம இத்தனை வருசம் என் கழுத்துல கிடக்கு. அது இருக்க போய் தான் நீங்க என் கூடவே இருக்குற மாதிரி இருக்கும்”
“சாரி மது என்னால ரொம்ப கஷ்ட பட்டிருப்பல்ல. உன் வாழ்க்கையையே கெடுத்துட்டேன். என்னால நீ தான் அத்தை மாமா கிட்ட அசிங்க பட்டிருப்ப. அடிச்சாங்களா மது?”
“இல்லை, அழுதுட்டே இருப்பேன். செத்துரலாம்னு இருக்கும். அம்மா கொஞ்ச நாள் குத்தி காமிச்சிட்டே இருந்தாங்க. அப்புறம் அவங்க ஒண்ணும் சொல்லலை. அப்புறம் உங்க மேல மட்டும் தப்பு இல்லை. எல்லாமே என்னால தான். உங்களை தப்பு செய்ய தூண்டுனதும் நான் தான். கட்டாய படுத்தி வர வச்சு… அன்னைக்கு உங்களை ரொம்ப நோகடிச்சிட்டேன்ல? என்னால தான் அப்பா கிட்ட எல்லாம் நீங்க அடி வாங்கினீங்க?  சாரி செழியன்”
“என் பொண்டாட்டி சாரி எல்லாம் கேக்க கூடாது, நம்ம பண்ண தப்பு பெருசு மது. அதுக்கு மாமா அடிச்சது மட்டும் இல்லை, கொன்னா  கூட தப்பு இல்லை மா. அதெல்லாம் மறந்துட்டேன்”
“அப்புறம் ஏன் இத்தனை நாள் என்கிட்ட பேசலையாம்? என்னை பாக்க கூட வரது இல்லை”, என்று சிணுங்களாக சொன்னாள்.
அவள் சிணுங்களில் தன்னை தொலைத்தவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான். அதில் அவன் மடியில் வந்து விழுந்தாள்.
அவளை இறுக்கி அணைத்து அவள் முகமெல்லாம் முத்தத்தை பதித்தவன்  “நாம லவ் மட்டும் பண்ணலை மது. சேந்து வாழ்ந்துருக்கோம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்துருக்கோம். அந்த தருணம் அழகானது. அதை என்னால எப்படி மறக்க முடியும். மறக்கிறது என்ன? அடிக்கடி அது நினைவு வந்துரும்”
….
“அப்ப எல்லாம் உன்னை ரொம்ப தேடும் மது. மனசும் உடம்பும் உனக்காக தவிக்கும். உன்னை நேர்ல பாத்த   உடனே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா. வாழ்க்கையிலே அப்படி நான் சந்தோசமா இருந்ததே இல்லை டி. உன்னை பாக்க அப்படி துடிச்சேன். நீ எங்க இருக்கன்னு  கூட எனக்கு தெரியாது. அவ்வளவு பெரிய சென்னைல நான் எப்படி தேடுவேன். கடைசி வர உன்னை பாக்க முடியாது, உன்னோட நினைப்புல வாழனும் தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன். உன்னை பாத்ததும் என் கண்ணையே  என்னால நம்ப முடியலை தெரியுமா”, என்றான்.
“வளருக்கு தெரியுமா செழியன்?”
“ஹ்ம்ம் ஒரு தடவை என்னை அறியாமலே சொல்லிருக்கேன் போல? அவ தான் அன்னைக்கு ஹாஸ்ப்பிட்டலுக்கு உன்னை பாக்க பிளான் பண்ணி கூட்டிட்டு வந்தா”
“வளர் ரொம்ப க்யூட்”
“ஹ்ம்ம் ஆமா நிறைய பண்ணுவா. உன் போட்டோவெல்லாம்  சுட்டுட்டு வருவா”
“அவளுக்கு இருக்குற ஆசை கூட உங்களுக்கு இல்லை போங்க”
“என்னோட ஆசையோட அளவை பத்து வருசத்துக்கு முன்னாடி பாத்தது நினைவு இல்லையாடி”,  என்று கேட்டவனின் உதடுகள் அவள் கழுத்தில் ஊர்வலம் போனது. அவன் தொடுகையில் சிலிர்த்தது அவள் தேகம்.
“இப்படி எல்லாம் உன்னை நெருங்கி இருக்கணும்னு தோணும் டி. ஆனா நீ என்ன மன நிலைல  இருக்கன்னு தெரியாது, அதனால தான் விலகியே இருந்தேன்”, என்று சொல்லி கொண்டிருந்தவனை அவளும் இறுக்கி அணைத்து கொண்டாள்.
அவள் மேனியில் பதிந்த அவனுடைய  கை எல்லை மீற ஆரம்பித்த போது “அத்தை பதினொரு மணிக்கு தான் நல்ல நேரம்னு சொன்னாங்க”, என்று முனங்களாக  சொன்னாள் மது.
“ஏன் மது, நம்ம முதலிரவு அன்னைக்கு இப்படி நல்ல நேரமா பாத்தோம்”, என்று சொன்ன செழியனின் வாயை விரலால் மூடினாள்  மது.
அவள் கையை விலக்கி விட்டு “அன்னைக்கு வேற மாதிரி இருந்த. ஆனா இப்ப எல்லாமே வேற மாதிரி இருக்க்..”, என்று சொன்னவனின் உதடுகள் அவள் உதடுகளால் சிறை பட்டது.
அதில் அவன் வேகமும் கூடியது. மொத்தமாக அவளை ஆக்கிரமித்து விட்டு தான் விலகினான். களைப்புடன் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான் செழியன்.
“நீங்க மட்டும் என்னவாம்? பெரிய மீசை எல்லாம் வச்சு, அழகா கம்பீரமா மாறிட்டிங்க. சரியான முரடு ”, என்றாள் மது.
“ஹ்ம்ம் முரடன் தான். ஆனா அன்னைக்கு வலிக்குனு சொன்ன அளவுக்கு கூட இன்னைக்கு நீ சொல்லலையே. டீலிங்  சரி இல்லையோ”,என்று கேட்டு சிரித்தான் இளஞ்செழியன்.
அவனை பார்த்து முறைத்தவள் “இன்னும் அதிகமா டீல் பண்ணா தாங்காது பாஸ். அப்புறம்  என்னை மறுபடியும் பாத்த அப்புறம் நான் தான்னு கண்டு பிடிச்சிடீங்களா?”, என்று கேட்டாள்.
“அது எப்படி மது கண்டு பிடிக்காம இருப்பேன். உருவம் மாறலாம். ஆனா உன் முகம் எப்படி மறக்கும். அப்ப கொழு கொழுனு அழகா  இருப்ப. இப்ப அப்படியே சிலிமா அழகா இருக்க. என்னால உனக்கு நிறைய மன கஷ்டம், அப்படி தான மா?”
“அப்படி எல்லாம் இல்லை பா. பழசை எல்லாம் மறந்துறலாமே. வாழ்க்கைல எதுக்கும் அவசர பட கூடாதுன்னு ரெண்டு பேருக்கும்   புரிஞ்சிருக்கு. நம்ம குழந்தைகளை எப்படி வளக்கணும்னு ஒரு தெளிவும் வந்துருக்கு. அது போதுமே”
“ஹ்ம்ம் மித்ரன் என்கிட்ட வந்து பேசினான்.  நல்ல பையன். உன் மேல அவனுக்கு ரொம்ப அன்பு மது”
“நினைச்சேன். எனக்கு கூட பிறந்தவன் மாதிரி தான் மிட்டு. ஆனா உங்க கிட்ட பேசினது தான் எப்படினு தெரியலை. அப்பா தான் சொல்லிருப்பாங்க போல”
“என்னை உங்க அம்மா அப்பாக்கு பிடிக்குமா மது? அவங்களை பாக்கும் போது எனக்கு சங்கடமா இருக்கு”
“விடுங்க. அதெல்லாம் அவங்க மறந்துருவாங்க. உங்களை இப்ப எல்லாம் பெருமையா தான் சொல்றாங்க தெரியுமா?”
“அவங்களை விடு. அவங்க பொண்ணு என்ன நினைக்கிறாங்க?”
“அவங்க பொண்ணு அப்படியே பூரிச்சி போய் இருக்கா”
“அது தான் எனக்கு வேணும். உன் சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம் மது”
“கேக்கணும்னு நினைச்சேன். துரை அண்ணா குடும்பம் எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க மது. அவன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். இன்னைக்கு வந்தாங்க. நான் அறிமுக படுத்தி வைக்க மறந்துட்டேன். அவங்க அம்மாக்கு ஒரு நிலம் வாங்கி கொடுத்து குத்தகை பணம் வர மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா கல்யாணத்துக்கு என்னால பெருசா எல்லாம் செய்ய முடியலை. எனக்கே லேட்டா தான் வேலை கிடைச்சது. ஆனா நல்ல மாப்பிள்ளையா கிடைச்சாங்க. அதனால ஈஸியா முடிஞ்சிருச்சு. கடைசி தங்கச்சி கல்யாணத்துக்கு மட்டும் அஞ்சு பவுன்  போட்டேன்”
“ஹ்ம்ம் உங்களாலயும் அவ்வளவு தான முடியும்?”

Advertisement