Advertisement

“மாத்திரை போட்டு பாட்டி படுத்துட்டா எந்திரிக்க மாட்டாங்க”

“இது தப்புனு தோணுது மது”

“அப்ப என் ஆசையை நிறைவேத்த மாட்டிங்களா? அந்த கீதா சொன்னா போவீங்க? எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்களா?”

“ஏய், எங்க இருந்து எங்க போற? அவளை எல்லாம் எதுக்கு இழுக்குற?”

“நீங்க வரலைன்னா நான் கண்டிப்பா உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு தான் நினைப்பேன்”

“சரி சரி முகத்தை தூக்காத. நான் வரேன்”

“உங்க வீட்டில என்ன சொல்லுவீங்க?”

“ஹாஸ்டல்ல தங்க போறேன்னு சொல்லிக்கிறேன். எத்தனை மணிக்கு வரணும்”

“ஒன்பது மணிக்கு வாங்க”

“பத்து மணிக்கு மேல வரேன். அப்ப தான் ஊருல எல்லாரும் தூங்கிருப்பாங்க”

“ஹ்ம்ம் சரி, நான் வெயிட் பண்ணுவேன்.”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

தப்பு என்று தெரிந்தும் மதுவுக்காக அவள் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான் செழியன்.

“மது பத்திரமா இருந்துகோ. பாட்டி பேச்சை கேளு. நாங்க நாளைக்கு நைட் வந்துருவோம். பாட்டி கிட்ட அடம் பண்ணாத. வெளிய எங்கயும் போகாத. எக்ஸாம்க்கு ஒழுங்கா படி”, என்று கிளம்பும் போது அவளுக்கு அறிவுரை கூறினாள் மல்லிகா.

“சும்மா சும்மா அவளை அரட்டாத. அதெல்லாம் ஒழுங்கா தான் இருப்பா. மது சாப்பிட்டு தூங்கு சரியா குட்டி?”, என்றார் வாசுதேவன்.

 “ஓகே டேடி”, என்று சிரித்து கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்த மது மனதெல்லாம் எதிர்பார்ப்புடன் அவனுக்காக காத்திருந்தாள்.

 பத்து மணி போல் வீட்டுக்கு வந்த செழியனுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. இதயமெல்லாம் பட படவென்று வந்தது. சாதாரணமாக அந்த தெருவுக்குள் வருவது போல வந்தவன் மது வீட்டை நோட்டம் விட்டான்.

“இதெல்லாம் தேவையா? ஏன் இவ இப்படி பண்றா? அந்த கீதா விஷயத்தை இவ கிட்ட சொன்னது தப்போ?”, என்று பலவாறாக யோசித்த படியே மதுவுக்காக காத்திருந்தான்.

அப்போது அவள் வீட்டு கதவு திறக்க பட அங்கிருந்து அவனை வரும் படி கை அசைத்தாள். அந்த வீட்டுக்கு பின்னாலும் வாசல் உண்டு என்று அவனுக்கு தெரியும்.

யாராவது வந்தால் கூட பின் வாசல் வழியாக சென்று விடலாம் என்று நம்பி உள்ளே சென்றான்.

“சீக்கிரம் வாங்க செழியன்”, என்று சொல்லி அவன் கையை பிடித்து உள்ளே இழுத்தவள் கதவை மூடி விட்டாள்.

பயத்துடன் உள்ளே சென்றவன் சுற்றி பார்வையை ஓட்டினான். “வாங்க என்னோட ரூம்க்கு போகலாம்”, என்று சொல்லி அவனை அழைத்து சென்றாள். அதுவரை கலக்கத்துடன் இருந்த செழியனும் அவளுடைய அறைக்குள் வந்ததும் நிம்மதியாக மூச்சு விட்டான்.

“இதெல்லாம் தேவையா மது? எனக்கு இன்னும் பயமா இருக்கு. நீ சொன்னதுனால தான் வந்தேன். யாராவது பாத்தா ரெண்டு பேரையும் பத்தி என்ன நினைப்பாங்க? நான் போகட்டா?”

“நாம பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? எனக்கு உங்க கூட இருக்கணும்னு தோணுச்சு. அது தப்பா? ஆனா நீங்க ரொம்ப மாறிட்டிங்க தெரியுமா? இப்ப எல்லாம் என்னை பாக்கலை, என்கிட்ட பேசலைன்னு உங்களுக்கு கவலையே இல்லை. காலேஜ் போன அப்புறம் என் செழியன் காணாம போய்ட்டாங்க”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“அதெல்லாம் இல்லை மா. நாம பழக ஆரம்பிச்சு எத்தனை மாசம் ஆச்சு?  இன்னும் என்னை புரிஞ்சிக்கலையா? எனக்கும் உன்கூட பேசாதது கவலை தான்”

 “பொய், உங்களுக்கு அங்க நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. இதுல அந்த கீதா வேற? எனக்கு நீங்க என்னை விட்டு போயிருவீங்களோனு பயமா இருக்கு”

“ஏய் என்ன இது? நீ இப்படி எல்லாம் ஏன் பேசுற?”

“நீங்க அப்படி தான் நடந்துக்குறீங்க? கிட்ட தட்ட ஒரு மாசமா பேசலை. ஆனா அந்த கவலையே இல்லை. இதுல காலைல அந்த கீதா அழகா இருக்கானு என்கிட்டயே சொல்றீங்க? என் பிரண்ட்ஸ் சொன்னது சரியா போச்சு”

“யாரோ நல்லா குழப்பி விட்டிருக்காங்க”, என்று எண்ணி கொண்டு “உன் பிரண்ட்ஸ் என்ன சொன்னாங்க?”, என்று கேட்டான்.

“நீங்க என்னை விட்டு போயிருவீங்களாம். காலேஜ் போய்ட்டா பசங்க மாறிருவாங்களாம். அது உண்மை தான?”

“ஏய் லூசு, எனக்கு நீ தான் முக்கியம்னு நான் எப்படி உனக்கு நிரூபிக்கன்னு சொல்லு நான் செய்றேன்”

“நிஜமா செய்யணும்”

“கண்டிப்பா செய்றேன். எனக்கு என் மது தான் முக்கியம். உன் சந்தோசம் தான் முக்கியம். என்ன செய்யணும்னு சொல்லு”

“பேச்சு மாற கூடாது”

“மாற மாட்டேன் சொல்லு.”

“இருங்க வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றவள் திரும்பி வரும் போது கையில் எதையோ மறைத்த படி எடுத்து வந்தாள்.

“என்ன மது கையில?”

“நீங்க உண்மையிலே என்னை லவ் பண்றதா இருந்தா இதை நீங்க எனக்கு கட்டணும்”,, என்று சொல்லி அவள் காண்பித்தது மஞ்சள் கோர்த்த தாலிகயிறு.

அதை பார்த்து அதிர்ந்த செழியன் “மது என்ன இது? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?”, என்று கேட்டான்.

“பாத்தீங்களா? பயப்படுறீங்க? அப்ப நீங்க உண்மையிலே என்னை விரும்பலை”

“உன் பிரண்ட்ஸ் உன்னை நல்லா குழப்பி விட்டிருக்காங்க மது மா. இது தப்பு. நாம இன்னும் மேஜர் ஆகலை. சட்ட படியும் தப்பு, தர்ம படியும் தப்பு”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்காக தான் நீங்க இருக்கீங்கன்னு எனக்கு உறுதி வேணும். எனக்கு இப்ப பயமா இருக்கு. என்னால படிக்க கூட முடியலை தெரியுமா? தினமும் அழுகையா வருது. கல்யாணம் பண்ணா நான் உங்க கூட வரேன்னா சொல்ல போறேன்? அலைபாயுதே மாதிரி நீங்க உங்க வீட்ல இருங்க. நான் இங்க இருக்கேன். நான் தாலியை மறைச்சு போட்டுக்குறேன்”

“மது உனக்கு யாரு இந்த கேவலமான ஐடியா கொடுத்தது? அந்த படத்துல அவங்க பெரியவங்க. நாம சின்ன பசங்க”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. இதை கட்டுங்க. அப்ப தான் நம்புவேன்”

“சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத மது. நீ ஸ்கூல் முடிச்சு, அப்புறம் டாக்டருக்கு படிக்கணும், பிறகு ஒரு ரெண்டு வருஷமாவது வேலை செய்யணும். அதுக்குள்ள நானும் நல்ல நிலைமைக்கு வந்துருவேன். அப்ப உங்க அப்பா கிட்ட வந்து உன்னை பொண்ணு கேப்பேன். அதுக்கப்புறம் நம்ம கல்யாணம் நடக்கும்”

“அது நடக்கட்டும். ஆனா இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சா போதும். எனக்கு மனசு கஷ்டமாவே இருக்கு. இதை கட்டுனா சரியா போயிரும். நான் இதை யாருக்கும் காட்ட மாட்டேன். ஒளிச்சு வச்சுக்குவேன்”

“அது முடியாது மது. என்னைக்காவது உங்க  அம்மா பாத்தா பிரச்சனை. தூங்கும் போது விலகலாம். என்ன வேணும்னாலும் நடக்கலாம்”

“இப்ப நீங்க என்ன தான் சொல்ல வறீங்க? கட்ட முடியுமா, முடியாதா?”

“அது தப்பு மது”

“சரி தப்பாவே இருக்கட்டும்”

“சரி இப்ப நான் கட்டினா அதை நான் செத்த அப்றம் தான் கழட்டனும். அப்பறம் உங்க அம்மா சொன்னாங்கன்னு கழட்டி வைக்க உன்னால முடியுமா? அதை நீ கழட்டினா நான் செத்ததுக்கு சமம்”

“அதை நான் பத்திரமா பாத்துக்குறேன். என்னால உங்க நினைப்போட போராட முடியலை”

….

“உங்களுக்கு என்னை பிடிக்கலை. உங்களுக்கு வேற பொண்ணை  தான் பிடிச்சிருக்கு. அதான் என்னை கழட்டி விட பாக்குறீங்க? சரி பேச ஒண்ணும் இல்லை. நீங்க வீட்டுக்கு போங்க. என் முடிவை நானே பாத்துக்குறேன்”

“என்னது உன் முடிவா? உன் முடிவு என்ன?”

“எனக்கு வாழவே பிடிக்கலை. நான் சாக போறேன். நீங்க இங்க இருந்தா உங்களுக்கு தான் பிரச்சனை. அதான் உங்களை போக சொல்றேன்”

“மது என்ன வார்த்தை சொல்ற? நீ செத்தா நான் மட்டும் உயிரோட இருப்பேனா? நீ சாகும் போது நான் இங்க இருந்தா எனக்கு ஆபத்துன்னு எவ்வளவு அறிவோட யோசிக்கிற? அப்புறம் ஏன்  இந்த தாலி விசயத்துல மட்டும் சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குற?”

“அதை விடுங்க, நீங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டேன்ல? போங்க”

தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான் செழியன். அவளை அப்படியே விட்டு போகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் அவனுக்கு யோசனையாக இருந்தது.

“சொல்லி புரிய வைக்கவும் முடியலை. இவளை என்ன செய்றது? சரி ஒரு காசி கயிறு மாதிரி கட்டிறலாமா? இப்போதைக்கு இவளை சமாளிக்கணும்”, என்று நினைத்து “பேச வாங்கன்னு கூப்பிட்டு தாலியை கட்ட சொல்ற. சரி சரி முறைக்காத. கொடு கட்டுறேன்”, என்று சொல்லி கையை நீட்டினான்.

நீட்டிய அவன் கையை பற்றி கொண்டவள் அவனை கீழே உள்ள சாமி அறைக்கு அழைத்து சென்றாள்.

“இதுல எல்லாம் விவரமா இருக்க. மது எனக்கு ஒரு டவுட். நீ சின்ன பிள்ளையா பெரிய பிள்ளையா?”, என்று கேட்டான் செழியன்.

“உங்களை விட ரெண்டு வயசு கம்மி. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க”

“மது நானே சின்ன பையன் மது”

“ப்ச், மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. இந்தாங்க கட்டுங்க”

“இது கல்யாணம் மது”

“தெரியும், என்னைக்கு நீங்க இந்த உலகத்துல இல்லை அப்படிங்குறதை என்னால தாங்க முடியலையோ அப்பவே நீங்க தான் எனக்கு எல்லாம்னு புரிஞ்சிருச்சு. நீங்க என்னோட ஹஸ்பண்ட் தான். உங்களுக்கு தான் நான் அப்படி இல்லை”

“பொண்டாட்டின்னு நினைக்காம தான் கட்டி புடிச்சு முத்தம் கொடுத்தேனா?”

“அப்ப கட்ட வேண்டியது தான?”

“சரி சரி கட்டுறேன். கடவுளே கடைசி வரைக்கும் எந்த காரணத்துக்காகவும் எங்க ரெண்டு பேருக்குள்ள பிரிவுன்னு ஒண்ணு வராம நாங்க சந்தோசமா இருக்கணும்”, என்று சொல்லி கடவுளை வணங்கி விட்டு அவளுக்கு அந்த மஞ்சள் கயிறை அணிவித்தான்.

முகம் மலர்ந்து சிரித்தாள் மது. செய்தது தப்பு என்று தோன்றினாலும் அவள் முகத்தில் இருந்த புன்னகை அவன் பயத்தை விரட்டியது.

“அந்த குங்குமம் எடுத்து என் நெத்தில வைங்க”

“ஏய் லூசா டி நீ? அப்படி வச்சா மாட்டிக்குவ”

“இன்னைக்கு மட்டும் தான ப்ளீஸ்”

சிரித்து கொண்டே அதையும் செய்தான். பின் அவளுடைய அறைக்கு அழைத்து சென்று விட்டாள். அவளுடைய கட்டிலில் அமர்ந்தவன் “ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற மது. இது தப்பு”, என்றான்.

அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் “டிரை பண்றேன்”, என்று  சொல்லி ஒரு கொட்டை பரிசாக வாங்கி கொண்டாள்.

கழுத்தில் தாலியும் ,நெற்றியில் குங்குமமும் அவனுக்கே உரிமையானவளாக அவனுக்கு காட்டியது.

தன்னுடைய தோளில் சாய்ந்திருந்தவளின் தோள்களை சுற்றி கையை போட்டு விட்டு “லைப்ல நிறைய பொறுப்பு இருக்கு மது”, என்று பேசி கொண்டிருந்தான்.

அவனை அறியாமலே ஆறுதலாக அவன் இதழ்கள் அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்தது. அவன் சாதாரணமாக தான் கொடுத்தான். ஆனால் அவளோ மேலும் அவன் மீது சாய்ந்தாள்.

வெகு அருகாமையில் தெரிந்த அவள் மலர்ந்த முகத்தை பார்த்தவன் அவள் முகத்தில் உதடுகளால் கோலம் வரைந்தான்.

அவனுடைய முத்தத்தில் மேலும் அவனுடன் ஒண்டினாள் மது. அவள் நெருக்கத்தை கூட்ட கூட்ட அவன் தான் தவித்து போனான்.

அவளை விட்டு விலகவும் முடியாமல் அவள் அறிமுக படுத்திய உணர்வுகளை தாங்கவும் முடியாமல் அவள் மீதே சிறிது எல்லை மீறினான்.

அவள் முகத்தை தாண்டி அவன் உதடுகள் பயணித்ததில்லை இது வரை. இன்றோ அவள் கழுத்தில் முகம் புதைத்திருந்தவனின் உதடுகள் அவளை அறிய ஆரம்பித்தது.

கைகளோ இடையை தாண்டி இடம் பெயர்ந்தது. விலக மனமில்லாமல் விலக பார்த்தவனை அவளும் விலக விட வில்லை.

கடைசியில் அனைத்துமே முடிந்தே விட்டது. தாம்பத்தியம் என்ன என்று முழுதாக தெரியும் முன்பே அது நடந்து முடிந்திருந்தது.

பள்ளி படிக்கும் வரை எதையும் அறியாமல் இருந்த செழியனும் கல்லூரியில் சேர்ந்தவுடன் சில விசயங்களை நண்பர்கள் மூலம் கற்று கொள்ள நேர்ந்தது. அதனுடைய விளைவு மதுவின் பெண்மையை களவாடி  விட்டது.

தவறு என்று தெரிந்தும் அவனால் அவனை அடக்கி வைக்க முடியவில்லை. எல்லாம் முடிந்த பின் உறுத்தியது.

வலியில் சிணுங்களுடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவளை ஆதரவாக அனைத்து கொண்டிருந்தவன் “சாரி மது”, என்றான்.

அவளோ எதுவுமே சொல்ல வில்லை. உடம்பெல்லாம் வலித்தாலும் அவன் அவளை விட்டு செல்ல மாட்டான் என்ற நிம்மதி இருந்தது. நினைத்ததை நடத்தி காட்டிய பெருமையுடன் இருந்தாள்.

அவள் அறியவில்லை. வாழ்க்கை இது மட்டும் இல்லை என்று. இப்போதே செழியன் அங்கிருந்து கிளம்பி இருந்தால்  நிலைமை   வேறு மாதிரி ஆகி இருக்குமோ என்னவோ? உடல் அசதியில் இருவருமே உறங்கி விட்டார்கள்.

ஒரு கல்யாணத்துக்கு போன மல்லிகாவும் வாசுதேவனும் அங்கே கல்யாணம் நின்று விட்டது என்பதை அறிந்து பயணத்தை பாதி வழியிலே திரும்பியதன் விளைவு விடிவதுக்கு முன்பே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

கதவை தட்டியதும் இரவு சீக்கிரமே தூங்கி இருந்த பாட்டி வந்து கதவை திறந்தாள்.

“என்ன பா, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டிங்க?”

“அது ஒன்னும் இல்லை மா. நம்ம கதிரேசன் மகனுக்கு நிச்சயம்  பண்ண பொண்ணு ஓடி போயிருச்சாம். கல்யாணம் நின்னு போச்சு”, என்றார் வாசுதேவன்.

“ஐயையோ என்ன பா இது?”

“ஹ்ம்ம் ஆமா மா. என்ன செய்ய? விதி அப்படி இருக்கு. அவங்க வீட்ல இருந்து போன் பண்ணி சொன்ன உடனே திரும்பிட்டோம்”

“ஏன் பா, ஓரெட்டு போய் பாத்துட்டு வந்துருக்கலாம்ல?”

“நான் அவன் கிட்ட கேட்டேன் மா. கல்யாணம் நின்னதுல எல்லாரும் கவலைல இருக்கோம். இப்ப யாரையும் பாக்கலை. எல்லாரும் துக்கம் விசாரிக்க வர மாதிரி இருக்கு. கல்யாணம் மறுபடி நடக்கும் போது வாங்கன்னு சொல்லிட்டான். அவன் சொன்னதும் சரின்னு தோணுச்சு அதான்”

“சரிப்பா. கொஞ்ச நேரம் போய் தூங்குங்க”

“மது ஏதும் பிரச்சனை பண்ணாளா அத்தை?”, என்று கேட்டாள் மல்லிகா.

“இல்லை மா. சாப்பிட்டு தூங்கிட்டா. நீங்க மேல போங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பாட்டி.

“சரி நீங்க உங்க பொண்ணை போய் எழுப்பிராதீங்க”, என்று மல்லிகா சொன்னதும் “அவ முகத்தை பாத்துட்டு வந்துருவேன் மல்லி”, என்று சொல்லி விட்டு அவள் அறையை திறந்தவர் இருட்டில் மங்கலாக தெரிந்த இரண்டு உருவத்தில் பதட்டத்துடன் விளக்கை போட்டார்.

தாகம் தணியும்……

Advertisement