Wednesday, May 8, 2024

    Chathriya Vendhan

    சத்ரிய வேந்தன் - 5 – மற்போர் கிழக்கு முகம் சிவக்க தொடங்கும் முன்பு, அரண்மனை எங்கும் சூழ்ந்த இருட்டினில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அழகாய் சுடர்விட, அரண்மனையே பொன்னிறத்தில் பேரழகாக ஜொலித்தது. அரண்மனையின் பின்புறத்தில் சில மாளிகைகளைக் கடந்து இருக்கும் குதிரை இலாயத்திலிருந்து, செறிந்த பிடரி மயிரினை உடைய நான்கு வலிமையான குதிரைகளை, அழைத்துக் கொண்டு...
    சத்ரிய வேந்தன் - 04 – பெண் மயில் விருந்தினர் மாளிகையில் அனைத்து விருந்தினர்களுக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலவகை இனிப்பு வகைகள், நவதானிய உணவு வகைகள், பலவகையான பழ வகைகள் என்று அறுசுவையாக விருந்து படைக்கப்பட்டிருந்தது. "என்ன அண்ணா யாரையோ தேடுகிறீர்கள் போல..." என்ற சமுத்திராவின் குரலில், அவள் புறம் தீட்சண்யர் தமது பார்வையை...
    சத்ரிய வேந்தன் - 03 தாமரைக்குளம் மருத கோட்டையின் நடுவினில் கம்பீரமாய் வீற்றிருந்தது மருத தேசத்தின் அரண்மனை. அரண்மனையின் முன்வாயிலில் இருந்து பார்ப்பவருக்கே அதன் பிரமாண்டம் வாயை பிளக்க வைப்பதாக இருக்கும். பலவகை மாட மாளிகைகள், பிரமாண்டமாய் வீற்றிருக்கும் அரசவை அரண்மனை, ஆங்காங்கே அமைந்திருந்த தோட்டங்கள் என பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பினில் ஆழ்த்திவிடும். மருத தேசத்து அரச...
    சத்ரிய வேந்தன் - 02 வைகாசி திருவிழா விடியலில் மலர்ந்த மலர்களைப் போல ஒளி வீசும் மக்களின் முகங்கள்... தெளிந்த நீரோடையினைப் போல நல்லுள்ளம் கொண்ட அமைச்சர்கள்... கொலுசொலியின் கீதம் போல சலசலத்தபடி ஓடும் வற்றாத ஜீவ நதிகள்... பச்சை பட்டாடை உடுத்தியதைப்போல நிறைந்திருந்த வயல்வெளிகளும், தோட்டங்களும்... இதுவன்றோ நற்சான்று... மருத தேசத்தின் வளத்திற்கும், வீரேந்திர மருதர் ஆட்சியின் சிறப்புக்கும்... மருத தேசத்தின் கிழக்கு வாயிலிலும், வடக்கு வாயிலிலும் இருந்த கோட்டைக்கதவுகள் திசைக்கு மூன்றாக, மொத்தம் ஆறு இடங்களில் திறந்து வைக்கப் பட்டிருந்தது. ஆறு கோட்டைக்கதவுகளும் விண்ணை முட்டும் உயரத்துடனும், ஒரே நேரத்தில் அந்த வாயிலின் வழியாக முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய ஏதுவான அகலத்துடனும் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அதிலும்...
    சத்ரிய வேந்தன் - 01 விஜயபுரி வீரன் உனது வாள் பேசும் மொழி... உனது விழி வழி கசியும் தீர்க்கம்... உனது மௌனத்தில் மறைந்திருக்கும் மேன்மை... புது வரலாறு படைக்கும் வீரனே!!! ஏகாந்தமான மாலை மங்கிய வேளையில், விஜயபுரி நகரத்து கோட்டை, தீஞ்ஜுவாலைகளால் சுடர் விட்டுக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் துணையுடன் இருளை விரட்டத் தொடங்கியிருந்தது. பௌர்ணமியை நெருங்கிய நிலவின் வெண்ணிற ஒளியும்,...
    error: Content is protected !!