நீயென் நாயகி
நீயென் நாயகி -20
அத்தியாயம் -20
வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப் பட்டிருக்கவும், அழைப்பு மணியை அழுத்தப் போனார் வாசுகி.
“வேணாம் அத்தை, அம்மா தூங்குறாங்களோ என்னவோ, பின் பக்கமா போலாம் வாங்க” என அத்தையை அழைத்துச் சென்றான் சித்தார்த்.
அகல்யா தன் மருமகளிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் விஷ்வாவின் அப்பா தன்னிடம் ஒதுங்கி...
“ஹையோ அப்பா சொன்னாரா? அவரோட முடியாது, தப்பி தவறி கூட அம்மாகிட்ட சொல்லிடாதீங்க, என்னால சமாளிக்க முடியாது, உங்க பையன்கிட்டேயே ஏதாவது கேட்டு வைப்பாங்க”
“கேட்டா அவனே பதில் சொல்லிக்குவான், உனக்கென்னடி கவலை?”
“நல்லா சொல்வாரு பதிலு! ‘என் பொண்டாட்டிய எங்க வேணா கூட்டிட்டு போவேன், உங்களுக்கென்ன’ன்னு முகத்துல அடிச்ச மாதிரி பேசுவார், அம்மா அதுக்கு ரியாக்ட்...
“என் தலைல நல்ல எழுத்து எழுதி இல்லை, இல்லைனா இங்க வந்து மாட்டுவேனா? வாய் இருக்குன்னு என்ன வேணா பேச வேண்டியது, அப்புறம் அதெல்லாம் விஷயமான்னு நடந்துக்க வேண்டியது” என சத்தமாக புலம்பியவள் வேறு ஆடை கையில் எடுத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.
“நான் ரெடி!” என குறும்பாக சொல்ல, “கண்ண நோண்டிடுவேன்!” என சொல்லிக்...
“உன் விஷயத்துல நான் மாற மாட்டேன் வேதா. உனக்கு சொன்னா புரியாது, நாலு நாள் முன்னாடி நான் இருந்த நிலைக்கும் இன்னிக்கு இருக்க நிலைக்கும் எவ்ளோ வித்தியாசம் தெரியுமா? வெறும் பிஸிகல் இண்டிமேசி மட்டும் இதுக்கு காரணம் இல்லை. எனக்கு தெரியும் நான் எவ்ளோ முரட்டு தனமா உன்கிட்ட நடந்துகிட்டேன்னு, அதும் ஃபர்ஸ்ட் டைம்…...
நீயென் நாயகி -18
அத்தியாயம் -18
விஷ்வா கண் விழிக்கும் போது தலைக்கு குளித்து விட்டு துவட்டிக் கொண்டிருந்தாள் வேதா.
எதேச்சையாக திரும்பியவள் அவன் விழித்திருப்பதையும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவன் மீது பார்வையை வைத்துக் கொண்டே ஹேர் டிரையர் உபயோகிக்க ஆரம்பித்தாள்.
தன்னிடம் வரச் சொல்லி அவன் சைகை செய்ய, வர முடியாது எனும் படி வீம்பாக...
சில நிமிடங்களில் எழுந்தமர்ந்து கொண்டவன், “புழுக்கமா இருக்கு, நான் நடந்திட்டு வர்றேன்” என்றான்.
அந்த குளிர் இரவில் மின் விசிறி கூட வேதாவுக்கு தேவையாக இருக்கவில்லை, அவனுக்கும் வியர்த்திருப்பது போல தெரியவில்லை. மனப் புழுக்கம்தான் அவனை இப்படி உணர வைக்கிறதோ என நினைத்துக் கொண்டவள், “ஏசி போட்டுக்கலாம், பகல்லேயே ரொம்ப நேரம் நடந்தாச்சு, இந்த நேரம்லாம்...
நீயென் நாயகி -17
அத்தியாயம் -17
தன்னிலை மறந்து நடந்து சென்று கொண்டிருந்தான் விஷ்வா. அவன் பின்னாலேயே அதி வேகமாக ஓடி வந்த வேதா அவன் மீது முட்டி மோதி நிற்க, அவனும் நின்றான்.
அவளுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், “ரிலாக்ஸ் ரிலாக்ஸ்…” என்றான்.
“கூப்பிட கூப்பிட காதுல வாங்கிக்காம நீங்க பாட்டுக்கும் போறீங்க?”...
“உடம்பு முடியாத என்னை விட்டுட்டு போவீங்களா? போங்க போங்க…” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவன் அமைதியாக நேராக படுத்திருந்தான். பத்து நிமிடங்களுக்கு பின் அவளே அவன் மார்பில் தலை வைத்து படுத்து, “இந்த நேரம் நான் உங்களோட இருக்கிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். நீங்க முன்னாடி நடந்துகிட்ட விதம் எதையும் இப்ப குத்தி...
நீயென் நாயகி -16
அத்தியாயம் -16
நிதான மனநிலையில் இல்லாத விஷ்வா தானே காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டதில் வேதாவுக்கு பயம். அவளது தொடர்ச்சியான கைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லவில்லை அவன்.
ஃபேக்டரிக்குதான் சென்று கொண்டிருக்க கூடும் என நினைத்தவள் சற்று நேரம் பொறுத்து பார்த்து விட்டு, வினீத்திற்கு அழைத்து பேசினாள். விஷ்வா அங்கு செல்லாததை...
நேரம் பனிரெண்டு ஆகியிருக்க, அவள் படுத்துக் கொண்டாள். பழச் சாறு வரவழைத்து அவளுக்கு கொடுத்தான். சோர்வாக உணர்ந்தவளும் பருகி விட்டு படுக்க போக, அவளை பிடித்துக்கொண்டான்.
“நீ அவன் முன்னாடி அப்படி சைலன்ட்டா நின்னது என்னை கோவ படுத்துறது இயல்புதானே வேதா?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு நான் பதில் சொல்லணுமா?” என அவள் அழுத்தமாக கேட்க, “என்னை...
“ஏன்னா… ஏன்… சொல்லுங்க ஸார், நான்தான் மேரேஜ்க்கு வந்திருந்தேனே, அன்னிக்கு அவ எப்படி இருந்தான்னு எங்களுக்குத்தான் தெரியும். அன்னிக்கு வேதா பாவம், இன்னிக்கு ரூபன் பாவம்” என்றாள் ஒருத்தி.
இவளுக்கெல்லாம் என்ன நான் பதில் தருவது என அலட்சியமும் கோவமுமாக பார்த்தான் விஷ்வா.
என்ன பேசுகிறாள் இவள் என அப்போதுதான் கவனித்த வேதாவுக்கு தலை அதீதமாக கிறு...
நீயென் நாயகி -12
அத்தியாயம் -12
அந்த மாலை வேளையில் ரெஸார்ட்டில் இருந்த வேதாவின் நண்பர்கள் எல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தனர். வேதா அவளது நெருங்கிய தோழி ஸ்வப்னாவுடன் தனியாக நின்றிருந்தாள்.
காலையில் இங்கு வந்ததிலிருந்து வேதாவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். நிறைய விளையாட்டுக்கள், கலாட்டாக்கள் என நேரம் ஓடியதே தெரிந்திருக்கவில்லை.
இப்போது சற்று முன்புதான் ஸ்வப்னாவுக்கு ஒரு விஷயம் தெரிய வர...
அப்பாவை கண்டதும் அவர் தோளில் சாய்ந்து கொண்ட வேதா, அழுது தீர்த்தாள். சற்று நேரம் அவளை அழ விட்டே சமாதானம் செய்தார் சந்திரன்.
சித்தார்த் முன்னர் விஷ்வாவை காயம் செய்து விட்டதையும் இப்போது செய்த வேலையையும் சொன்னவள், “சித்து பக்கம் பேசுறேன், அவரை முக்கியமா நினைக்கலைன்னு அவருக்கு கோவம்ப்பா. அவர் கார்லேருந்து இறங்கியிருந்தா கண்டிப்பா சண்டை...
“நான் குடிச்சிட்டுத்தான் எடுத்திட்டு வந்தேன்” என அவள் சொல்லவும், அவன் பருகினான்.
“நீங்க இருங்க, சாப்பிடும் போது கூப்பிடுறேன்” என சொல்லி அகல போனாள்.
“நீ எதுக்காக என் கூட வந்திருக்கேன்னு எனக்கு தெரிஞ்சா போதும், அடுத்தவங்க கருத்துக்கு இம்பார்டன்ஸ் கொடுக்காத” என்றான்.
“உங்களுக்கு என்ன தெரியும்?”
“எனக்கும் தெரியாது, தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன், ஆனா அந்த பொடியன்...
நீயென் நாயகி -8
அத்தியாயம் -8
விருந்து முடிவதற்குள் ‘உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்’என வேதாவின் கையை பிடித்துக்கொண்டு வீம்பாக நின்றான் விஷ்வா.
எப்படி சமாளிப்பது என தெரியாமல் கலங்கி போய் விட்டார் சந்திரன்.
கணவனின் பிடிக்குள் இருந்த தன் கையை விடுவித்துக் கொண்ட வேதா, தன் பிடிக்குள் அவனது கையை கொண்டு வந்து பார்வையால் அவனை அடக்கினாள்.
அவன் ஏதோ...
“நீயும்தானே மா விஷ்வாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க ஆசை பட்ட?” என கடுப்பாக கேட்டாள் வேதா.
“ஆமாம், அப்போ அந்த பையன் மனசுல இப்படி பழி உணர்ச்சி இருக்கும்னு எனக்கு தெரியாதே. நல்ல வசதி, பார்க்க நல்லாருக்கான், உன்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிறான்னு ஆசை பட்டேன்” என வாசுகி சொல்லிக் கொண்டிருக்க, சந்திரன்...
சண்முகநாதன் குடும்பத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு அங்கே யாருக்கும் துணிவில்லை.
விஷ்வா அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. “வாங்க” என பொதுவாக அழைத்தவன் ‘என்ன?’ என வேதாவிடம் பார்வையால் கேட்டான்.
“மாமாகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன் மாப்ள, நாளான்னிக்கு வீட்ல விருந்து, வேதாவும் நீங்களும் வந்திடுங்க” என மரியாதையாக அழைப்பு விடுத்தார் சந்திரன்.
பேரன் மறுத்து ஏதும் சொல்லி விடுவானோ என நினைத்த...
வாயிலை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள், நின்று திரும்பி பார்த்தாள். புறங்கையால் கண்களை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
அரவம் உணர்ந்து கண்களை திறந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், “இன்னும் போகலையா நீ?” எனக் கேட்டான்.
“நீங்க தூங்குங்க அப்புறம் போறேன்”
“எப்படி… நீ என்னையவே குறு குறுன்னு பார்த்திட்டு இருப்ப, நான் தூங்கவா?”
“ஆமாம் இவர் பெரிய ஆணழகன்,...
நீயென் நாயகி -6
அத்தியாயம் -6
விஷ்வாவின் தோளில் காயத்தை கண்ட வேதா, “என்னங்க இது?” என அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ம்ம்… சும்மா டைம் பாஸ் ஆக நானே இப்படி கிழிச்சுகிட்டேன், சூச்சர் போட்டுகிட்டு கொஞ்சம் வலியோட இருக்கணும்னு ஒரு வேண்டுதல் வேற இருந்துச்சு” என்றான் விஷ்வா.
நேற்று இரவில் ஆதியும் சித்துவும் பிடிபட்ட பிறகு அங்கு சென்ற விஷ்வா,...
“உங்கப்பாவோட அந்த துணிக் கடைய தீ வச்சு ஒன்னும் கொளுத்தலையே நான்? மிஞ்சி போனா கடை கைமாறி போயிருக்கும், உன் சொந்தபந்தம் செய்ய நினைச்சதும் நான் செய்வேன்னு சொன்னதும் ஒன்னு இல்லை”
“தப்புதாங்க, அவங்க எங்க இப்போ? சாப்பாடு ஏதும் கொடுத்தீங்களா இல்லையா?”
“எனக்கு அவனுங்க எவ்ளோ பெரிய தீங்கு செய்ய இருந்தாங்கனு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்,...