நிதான மனநிலையில் இல்லாத விஷ்வா தானே காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டதில் வேதாவுக்கு பயம். அவளதுதொடர்ச்சியான கைப்பேசி அழைப்புக்கும் பதில் சொல்லவில்லை அவன்.
ஃபேக்டரிக்குதான் சென்று கொண்டிருக்க கூடும் என நினைத்தவள் சற்று நேரம் பொறுத்து பார்த்து விட்டு, வினீத்திற்கு அழைத்து பேசினாள். விஷ்வா அங்கு செல்லாததை தெரிந்து கொண்டாள்.
நட்சத்திர விடுதி, மால் கட்டும் பணி நடக்குமிடம் என எங்கேயும் அவன் சென்றிருக்கவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டாள்.
விஷ்வா காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை, இவளுக்கும் சாப்பிட தோன்றவில்லை.
‘எனக்கு தனிமை வேண்டும், சில நாட்களில் நானே வருவேன்’ என குறுஞ்செய்தி அவனிடமிருந்து வரவும்தான் அவளுக்கு சற்றே நிம்மதியானது.
விஷ்வா எங்கே என தாத்தா கேட்டால் எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டேதான் சாப்பிட சென்றாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர், “ஏம்மா உங்களுக்குள்ள வேற என்ன சண்டை?” என விசாரித்தார்.
“என்ன தாத்தா?” என அவள் எதையும் வெளிக் காட்டாமல் கேட்டாள்.
விஷ்வா காலை உணவுக்கு முன்பே கார் எடுத்துக் கொண்டு சென்றது, அவன் பின்னாலேயே வேதா ஓடி வந்தது என எல்லாம் தாத்தாவுக்கு தெரிந்திருந்தது. வேலையாட்கள் யாராவது சொல்லியிருப்பார்கள் என புரிந்து கொண்டாள்.
வேதா பதில் தராமல் போகவும், கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டைதான் என முடிவு கட்டிய தாத்தா, “நீ அவனை புரிஞ்சு நடந்து உன் வசத்துல வச்சுப்பேன்னு நினைச்சேன், இப்படி முட்டிக்கிட்டு நிக்கிறீங்களே, என்னமோ போம்மா!” என ஆற்றாமையாக சொல்லி சென்றார்.
விஷ்வா இந்த ஊரில் இருக்க வாய்ப்பில்லை என்பது மதியத்திற்கு மேலேதான் அவளுக்கு புரிந்தது.
வினீத்திற்கு அழைத்து எங்கே சென்றிருக்கிறான் என விசாரித்து பார்த்தாள். அவன் சொல்லத் தயங்குவது புரியவுமே, வற்புறுத்தி அவனுக்கு சங்கடம் தர விருப்பமில்லாமல் விட்டு விட்டாள்.
தன்னை தேடிக் கொண்டு மாலையே வீட்டுக்கு வருவானோ என மனதின் ஓரம் அவளுக்கு நப்பாசை இருந்தது. அதற்கு வாய்ப்புகள் குறைவு என அறிவு எடுத்துச் சொல்லியும் வாசலை அடிக்கடி பார்த்தாள்.
அவனை தொடர்பு கொள்ளக் கூட முடியாமல் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டான்.
‘இப்படி நீங்கள் தனியாக இருப்பது பயத்தை கொடுக்கிறது, வீட்டுக்கு வாருங்கள், அல்லது உங்கள் இருப்பிடத்தையாவது தெரிய படுத்துங்கள்’ என அவனது அலுவல் மெயில் ஐடி, சொந்த மெயில் ஐடி இரண்டுக்கும் மெயில் செய்திருந்தாள்.
வேதாவை கோயிலுக்கு அழைத்து செல்ல விஷ்வாவின் சித்தி வந்து விட்டார். ‘விஷ்வாவுக்கு முக்கிய அலுவல் இருப்பதால்அவரால்வரஇயலாது’ என சின்னமாமியிடம்சமாளிப்பாக சொல்லி விட்டு அவள் மட்டுமேஅவருடன் சென்றாள். பூஜை முழுதும் கணவனை நினைத்து அவனுக்காக மட்டுமே மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள்.
பூஜை முடிந்து இரவு தாமதமாக அவள் வீடு திரும்பிய போதும், உறங்கச் செல்லாமல் விழித்துக் கொண்டிருந்தார் தாத்தா. “அவன் வீட்டை விட்டு போற அளவுக்கு என்ன நடந்தது உங்களுக்குள்ள?” என கவலையாக கேட்டார்.
சட்டென முகத்தில் வெளிச்சம் பரவ, “அப்போ அவர் எங்கேன்னு உங்களுக்கு தெரியுமா தாத்தா?” எனக் கேட்டாள் வேதா.
குழப்பத்தோடு அவர் ஆம் என சொல்ல, அவரின் கையை பிடித்துக்கொண்டவள், “எனக்கு அவர்கிட்ட போகணும், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க தாத்தா” என்றாள்.
“ரெண்டு பேரும் வளர்ந்த பசங்க மாதிரி நடக்க மாட்டிங்களா?” என அதிருப்தியாக கேட்டார்.
“சரி நீங்க ஹெல்ப் பண்ண வேணாம், அவர் இருக்கிற இடத்தை மட்டும் சொல்லுங்க, நானே போயிப்பேன்” என பிடிவாதமாக சொன்னாள்.
“அவன்கிட்ட போய் என்ன பண்ண போற? இன்னும் பெரிய சண்டையா போட்டுக்க போறீங்களா?”
“எங்க விஷயம் உங்களுக்கு எதுக்கு தாத்தா? நீங்க ஹெல்ப் பண்ணாட்டா போங்க, நான் சின்ன அத்தைகிட்ட பேசுறேன், மாமா ஹெல்ப் பண்ணுவாங்க” என விஷ்வாவின் சித்தப்பாவை குறிப்பிட்டு பேசினாள்.
அது தாத்தாவை கோவப் படுத்தும் என அவளுக்கு நன்றாகவே தெரியும்.
“அவங்க நெருங்கின சொந்தம்னாலும் நம்ம வீட்டு விஷயமெல்லாம் அவங்களுக்கு தெரியணும்னு இல்லை” என கடினத் தொனியில் சொன்னார்.
“அப்ப நீங்களே நான் கேட்கிறதை செஞ்சு கொடுங்க” என அழுத்தமாக சொன்னாள்.
பெருமூச்சு விட்டவர், “போய் தூங்கு, விடிய காலைல கிளம்பலாம்” என்றார்.
“எது நீங்களுமா?”
“அப்புறம் தனியா அனுப்ப சொல்றியா? அவன் கொடைக்கானல் பங்களால இருக்கான்”
“அவ்ளோ தூரமா!” என திகைத்தாலும், “பரவாயில்லை தாத்தா, என்னை மட்டும் அனுப்பி வைங்க, நான் சொல்றதை கேளுங்க, அவர் கூட சண்டை போடல்லாம் போகல நான், சில விஷயங்கள் எங்களுக்குள்ள மட்டும்தான், ப்ளீஸ்… ப்ளீஸ் தாத்தா” என கெஞ்சினாள்.
தாத்தாவும் அவள் விருப்பத்துக்கு இசைந்து விட்டார்.
கொண்டைஊசிவளைவுகளில்மேற்கொண்டகார்பயணம்வேதாவைமிகுந்தசிரமத்திற்குஉள்ளாக்கியிருந்தது. இயற்கைக்குநடுவில்அமைந்திருந்த அந்த விருந்தினர் பங்களாவை அவள் வந்தடைந்த போது சுய நினைவு இருந்தாலும் ஓரடி எப்படி எடுத்து வைப்பேனோ என பயப்படுத்தியது அவளின் உடல்நிலை.
புதியகார்உள்ளேநுழையவுமேவீட்டைபராமரிக்கும்ஆட்கள்யாரெனகேட்டுவந்துவிட்டனர். டிரைவர்முன்பேபழக்கம் என்பதால் வேதாவை யாரோ என பார்த்தார்கள்.
நம் முதலாளியின் மனைவி என வேதாவை டிரைவர் அறிமுகம் செய்யவும் பவ்யமாக அவளை வரவேற்றனர்.
வேதாவுக்கு முடியவில்லை என தெரிந்து அவளை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து சென்றாள் சமையல் செய்யும் பெண். அவளின் கவனிப்பில் அரை மணி நேரத்தில் தெளிவாகி விட்ட வேதா, இன்னும் கணவன் தன்னை வந்து காணவில்லையே என கவலையாக விழிகளை சுழற்றினாள்.
நேற்று மாலையே இங்கு வந்து விட்டான் விஷ்வா. யாரிடமும் பெரிதாக பேசவில்லை, நடு இரவு வரை அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது, மூன்று மணி அளவில் மருத்துவரை அழைத்து வரச் செய்து உறக்கத்துக்காக ஏதோ ஊசி போட்டுக் கொண்டதாக செய்தி பகிர படவுமே இன்னும் கவலை கொண்டாள் வேதா.
இப்போதே நேரம் பத்தை தாண்டியிருக்க, இன்னும் அவன் எழுந்து கொள்ளவில்லை என்றால் பயம் வரும்தானே?
விஷ்வாவின் அறை எங்கே என கேட்டுக் கொண்டு சென்றாள் வேதா.
விஷ்வா உறக்கத்தில் இருந்தாலும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை என்பதை வேதாவால் உணர முடிந்தது. ஒரு நாளில் ஒரு மனிதனுக்குள் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா என்பது போலத்தான் தென்பட்டான். அவனருகில் அமர்ந்து அவனது கையை பிடித்து வாஞ்சையாக வருடி விட்டாள்.
சின்ன வயதிலிருந்து தாயன்பு கிடைக்காமல் எப்படி வேதனை பட்டிருப்பான் என்பதையும் இப்போதைய அவனது மன நிலை என்னவாக இருக்கும் என்பதையும் நினைக்க நினைக்க அவளுக்கு அழுகையாக வந்தது.
அவனை நேரில் பார்த்து விட்டதில் பயணக் களைப்பு கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. இந்நேரம் வரை அவன் சாப்பிடாமல் இருக்கிறானே என கவலையுற்றவள் அவனை அசைத்து எழுப்ப பார்த்தாள். அவன் எழாமல் போகவும் அந்த வீட்டு உதவியாளரிடமிருந்து மருத்துவரின் கைப்பேசி எண்ணை கேட்டு பெற்று அழைத்து பேசினாள்.
விடியற்காலையில் போடப் பட்ட ஊசி மருந்துக்கு இன்னும் வீரியம் இருக்கும், பயப்பட தேவையில்லை, நன்றாக தூங்கி எழட்டும் என மருத்துவர் சொல்லவும் பயத்தை விட்டாள்.
ரெஃப்ரெஷ் ஆகி வந்தவள் மதிய உணவு என்ன செய்ய வேண்டும் என சொல்லி விட்டு மீண்டும் விஷ்வாவிடம் வந்து விட்டாள்.
மனைவியின் மென்மையான ஸ்பரிசத்தையும் அவளின் பிரத்யேக வாசத்தையும் உணர்ந்து கொண்டேதான் கண் விழித்தான் விஷ்வா. வேதாதான் தன்னை தேடிக் கொண்டு இத்தனை தூரம் வந்திருக்கிறாள் என புரியவும் அவள் மீது வாஞ்சை பிறந்தது.
அவனது மனம் இன்னும் கனமாகவே இருந்தது, நிகழ் காலத்தில் பயணிக்கவும் அவன் தயாராக இல்லை. அயர்வோடு அவளுடன் ஒன்றிப் படுத்து கண்களை மூடிக் கொண்டான். சில நிமிடங்களுக்கு பின் விழித்த வேதா, அவனது சிகையை வருடி விட ஆரம்பித்தாள்.
அவனது உடல் அசைவை வைத்தே அவனும் விழித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள், “இப்படியா என்னை பயமுறுத்துவீங்க? வர வேற இடமும் கிடைக்கல உங்களுக்கு? மலை மேல ஏறி வந்து உட்கார்ந்திட்டீங்க, நல்ல படியா வந்து சேருவேனான்னு பயந்து போயிட்டேன்” என்றாள்.
“எதுக்கு வந்த?” என சோர்ந்த குரலில் கேட்டான்.
“என்னால அங்க இருக்க முடியலை” என்றாள்.
“தனிமை வேணும்னு வந்திருக்கேன் வேதா”
“நானும் உங்களை தொந்தரவு செய்ற எண்ணத்தோட வரலை”
“நான் கொஞ்ச நாள் இங்க இருந்திட்டு வர்றேன், நீ நைட் கிளம்புற”
“ஹையோ என்னால முடியாது, டிராவல் பண்ற நிலைல இல்லை நான்”
அவளிடமிருந்து விலகியவன், “அப்ப நீ இரு, நான் எங்கேயாவது போறேன்” என்றான்.