“உங்கப்பாவோட அந்த துணிக் கடைய தீ வச்சு ஒன்னும் கொளுத்தலையே நான்? மிஞ்சி போனா கடை கைமாறி போயிருக்கும், உன் சொந்தபந்தம் செய்ய நினைச்சதும் நான் செய்வேன்னு சொன்னதும் ஒன்னு இல்லை”

“தப்புதாங்க, அவங்க எங்க இப்போ? சாப்பாடு ஏதும் கொடுத்தீங்களா இல்லையா?”

“எனக்கு அவனுங்க எவ்ளோ பெரிய தீங்கு செய்ய இருந்தாங்கனு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடான்னா அவனுங்க தின்னானுங்களான்னு விசாரிச்சிட்டு இருக்க… ஹ்ம்ம்… என்ன செய்யலாம் உன்னை?” மேசையில் விரல்களால் தட்டிக் கொண்டே கேட்டான்.

அவள் அவனிடம் வாதிட முடியாமல் அயர்ந்து போய் விட்டாள். கண்களை இறுக மூடிக் கொண்டவளுக்கு அண்ணனும் நண்பனும் கதறிக் கொண்டிருப்பது போலிருந்தது.

கண்கள் கசிய அவனை பார்த்தாள். நிர்தாட்சண்யத்தோடு மறுப்பாக தலையாட்டினான் அவன்.

வினித் வரவும் அவன் முன்னிலையில் அழ விருப்பமில்லாமல் ஓய்வறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் திரும்ப வரும் போது, மருத்துவர் ஒருவர் விஷ்வாவின் இடுப்பில் ஊசி போட்டுக் கொண்டிருந்தார்.

“டேக் கேர்” என சொல்லி மருத்துவர் புறப்பட, வினித்’தும் அவருடன் வெளியேறி விட்டான்.

“என்னாச்சு எதுக்காக இன்ஜெக்ஷன்?” எனக் கேட்டுக் கொண்டே அவன் முன் வந்து நின்றாள்.

அழுத தடமும் முகம் கழுவிய ஈரமுமாக இருந்தவளை ஏற இறங்க பார்த்தவன், “நான் சில சமயம் ரொம்ப வயலண்ட் ஆகிடுவேன், எவ்ளோன்னா கண்ணு முன்னாடி நிக்கிறவங்களை கடிச்சி திங்கிற அளவுக்கு. அப்போலாம் ஏதும் அசம்பாவிதம் ஆகிட கூடாதுன்னு இப்படி இன்ஜெக்ஷன் போட்டுக்குவேன்” என்றான்.

‘சரியாக உறங்காமல் தலைவலியாக இருக்கும், அதற்கு ஊசி போட்டுக் கொண்டு பேச்சை பார்’ என மனதில் நினைத்தவள் பின் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

“வீட்டுக்கு போலாம் வேதா” என அவன் சொல்ல, மனச் சோர்வுடனேயே அங்கிருந்து புறப்பட்டாள்.

அவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருக்கையில் ‘போலீஸில் புகார் கொடுப்பதா, வேண்டாமா?’ என அவனுக்கு அழைத்துக் கேட்டார் மேனேஜர்.

என்ன பேச்சு நடக்கிறது என அவளுக்கு தெரிய, காரோட்டிக் கொண்டிருந்தவனின் கையை பற்றி பாவமாக அவனை பார்த்தாள்.

“சொல்லு, என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்டவனை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போலத்தான் அவளுக்கு இருந்தது.

“நீங்க என் லைஃப்ல விளையாடினீங்க, முழு மனசோட நான் இங்க வரலை” என்றாள்.

“எனக்கு தெரிஞ்ச விஷயம்தானே வேதா?”

“ம்… உங்களுக்கு நாந்தான் ஒரே மனைவிங்கிற கொள்கை உடையவர் ஆச்சே நீங்க. நம்ம ரிலேஷன்ஷிப்ப சரி பண்ண நீங்க நிறைய மெனெக்கெட வேண்டியிருக்கும்”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

“ஆதி, சித்து ரெண்டு பேரோட தப்பையும் மன்னிச்சு அவங்கள விட்ருங்க, உங்க பழைய தவறுகளை நானும் மன்னிச்சுடுறேன்” என்றாள்.

காரின் வேகத்தை குறைத்துக் கொண்டே, “என்ன என்ன… திரும்ப சொல்லு” என்றான்.

அவள் மீண்டும் சொல்ல, சத்தமாக சிரித்தான். அவள் முறைக்க, மரத்தின் நிழலில் காரை நிறுத்தியவன் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டே, “என் தாத்தாவுக்கு கொள்ளு பேரன் பேத்தியெல்லாம் பார்க்க ஆசை, ரெடியா நீ?” என கிண்டலாக கேட்டான்.

“ம்…” என்றவளுக்கு அவனது பார்வை குத்துவது போலிருந்தது. உடனே வெளிப்பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“என் வாழ்க்கையை ரெண்டு தடியனுங்க தீர்மானம் செய்வாங்களா வேதா?” எனக் கேட்டான்.

“நம்ம வாழ்க்கைய ஸ்மூத்தா கொண்டு போக நான் இறங்கி வர்றேன்னு சொன்னேன், நான் சொல்றது இது, வேற யாரும் நமக்கு இடைல வரலை” என்றாள்.

“அப்ப என்கிட்ட முறைச்சுகிட்டு முட்டி மோதி சண்டை போட போறதில்லையா நீ?”

“ரொம்ப ஆசைதான் உங்களுக்கு. பழசைதான் விடுறேன்னு சொன்னேன். இனி நீங்க நடந்துக்கிறதுதான் என் நடத்தையையும் தீர்மானிக்கும்” என்றாள்.

சில நிமிடங்கள் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். அவன் கண்களை திறந்த போது காரின் முன் பக்க கண்ணாடியில் மஞ்சள் நிற மலர்கள் கொட்டிக் கிடந்தன. சரக்கொன்றை மரத்திற்கு அடியில் கார் நின்றிருக்க, அடித்த காற்றுக்கு காருக்கு மலர் அர்ச்சனை நடந்திருந்தது.

“ஏதாவது சொல்லுங்க விஷ்வா” என சலிப்பாக சொன்னாள்.

“திடீர்னு இந்த கார் மேல மரத்துக்கு என்ன லவ் வேதா?” வேண்டுமென்றே வெறுப்பேற்றினான் அவன்.

“தெரியலை, அகம்பாவிகளுக்குத்தான் இப்படிலாம் அமையுதுனு பார்த்தா அவங்க காருக்கும் அமையுது, இதுக்கு வந்த நேரத்தை பாரேன்னுதான் நினைக்க தோணுது” என்றாள்.

“அப்படியா?”

“பீ சீரியஸ் விஷ்வா, எனக்கு அவங்க ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம். இடைல நமக்குள்ள நடந்த கசப்பான விரும்பத்தகாத எல்லாத்தையும் அவங்களுக்காக மறந்திடுறேன்”

“பேச்சு மாற மாட்டியே?”

“நான் என்ன நீங்களா? ஏமாத்தறதுலாம் எனக்கு தெரியாது”

“பழசை விடுறேன்னு சொல்லிட்டு இப்ப குத்தி காட்டி பேசுற?”

“அது அவங்கள வெளிய விட்ட பிறகு” என்றாள்.

உடனே வினித்’துக்கு அழைத்தவன் ஆதியையும் சித்துவையும் பத்திரமாக அவர்களின் வீட்டில் விட சொன்னான்.

அப்பாடா என வேதா மூச்சு விட, “அடிபட்ட காயத்துக்கு மருந்து போட்டு, சாப்பிட ஏதாவது கொடுத்து நல்ல படியா கவனிச்சு அனுப்பி விடு. அவனுங்க செஞ்சது வீடியோவா இருக்குல்ல… எதுக்கும் ஒரு தடவை அதை காட்டி, எப்பவும் அது நம்மகிட்ட பத்திரமா இருக்கும்னு சொல்லியே அனுப்பி வை” என்றான்.

அவன் பேசி முடித்த அடுத்த நொடி, “அடிச்சீங்களா அவங்கள?” என கோவமாக கேட்டாள் வேதா.

கேலியாக சிரித்தவன், “பின்ன ஏசி ரூம்ல பாடி மசாஜ் பண்ணி விடுவேன்னு நினைச்சியா? அங்க டூட்டில இருந்த செக்யூரிடிங்க கைல ஒப்படைச்சாச்சு, ஏதாவது ஆகியிருந்தா நம்ம உயிர் போயிருக்குமேன்னு வச்சு செஞ்சிட்டாங்க, அவங்க கோவத்துல நியாயம் இருக்கா இல்லையா?” எனக் கேட்டான்.

“அவங்க எங்க, நானே ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுத்து வீட்ல விட்டுட்டு வர்றேன்” என்றாள்.

காரை எடுத்துக் கொண்டே, “அதுக்கெல்லாம் உனக்கு பெர்மிஸன் கிடையாது வேதா” என்றான்.

“விஷ்வா…”

“என் கூட நல்லா வாழ இப்போதான் இறங்கி வந்திருக்க, திரும்ப ஏன் ஏறி நிக்கணும்னு நினைக்கிற? நீயும் இப்போ என் பிராப்பர்ட்டி, அவனுங்க உன்னையும் ஏதும் செய்ய மாட்டானுங்கன்னு என்ன நிச்சயம்?”

“நீங்க சொல்றது சரியில்லைனு உங்களுக்கே தெரியும். அப்புறம் அதென்ன பிராப்பர்ட்டி? நான் உயிருள்ள மனுஷி”

“நீயும் வேணும்னா என்னை உன் பிராப்பர்ட்டினு சொல்லிக்க, ஐ டோண்ட் மைண்ட்!” என்பவனை என்ன சொல்ல என்றே அவளுக்கு தெரியவில்லை.

ஃபேக்டரிக்கு செல்லாத தாத்தா வீட்டிலேயேதான் இருந்தார். இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவதை பார்த்தவர் எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை. அவர்களே சொல்லட்டும் என இருந்தார் போலும்.

விஷ்வா அவனது அறைக்கு சென்று விட, வேதாதான் விவரம் சொன்னாள்.

சிரித்த தாத்தா, “என்ன பண்ணி உங்களுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்றதுன்னு நான் கவலைல இருந்தா… உன் அண்ணனும் சித்தார்த்தும் அதை இவ்ளோ ஈஸியாக்கிட்டாங்களே!” என்றார்.

வேதா தாத்தாவை முறைக்க, அவளின் தலையை அழுத்திக் கொடுத்தவர், “அவன் லேட்டா சாப்பிட்டதால பசிச்சிருக்காது, நீ போய் சாப்பிடு, டயர்டா இருக்க, சாப்பிட்டதும் போய் தூங்கு” என்றார்.

“எனக்கும் பசியில்லை தாத்தா” என சொல்லி அவளும் அறைக்கு சென்றாள்.

அறையின் கதவு திறந்தே இருந்ததால் சட்டென உள்ளே வந்து விட்டாள்.  அவன் ஆடை மாற்றிக் கொண்டிருந்தான்.

“ஸாரி” என சொல்லி திரும்ப போனவள், அவனது இடப் பக்க தோளில் தெரிந்த பெரிய கட்டை கவனித்து விட்டு அப்படியே நின்று விட்டாள்.