Monday, June 17, 2024

    கட்டி முத்தமிடு

    அத்தியாயம் 9 நிஷா வேலவன் சூப்பர்மார்கெட்டில் பணிக்குச் சேர்ந்து அன்றோடு சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஜனாவை 'சார்' என்று அழைப்பதை அடியோடு விட்டுவிட்டாள் நிஷா. இந்த ஒரு மாத காலத்தில் ஜனா, நீ, வா, போ... என்று கூட அழைத்துப் பழக கற்றுக்கொண்டாள் நிஷா. செல்வலட்சுமி ஏதோ விவரம் கேட்பதற்காக ஜனாவை அழைக்க, தனது கைபேசியில் கஸ்டமருடன் பேசிக்கொண்டு...
    அத்தியாயம் 21 அன்று இரவு வழக்கம்போல வீடு கிளம்புகையில் ஜனா, ப்ரதீபா மற்றும் செல்வலட்சுமி சைக்கிள் ஸ்டான்ட் பக்கமாக வந்தார்கள். நிஷாவின் சைக்கிள் ஜனாவின் பைக்கின் மீது இருப்பதைப் பார்த்த ப்ரதீபா, "ஏய் இங்க பாரேன்... கல்யாணம் பேசியாச்சுங்கிற தைரியத்துல தன்னோட சைக்கிளை ஜனா அண்ணாவின் பைக் மேல சாய்ச்சி வச்சிருக்கா... ஸ்டான்ட் இருக்கிற சைக்கிளை ஜனா...
    அடுத்தநிமிடமே, "தாங்க்ஸ்…" என்று அதிவேகமாக ஒரு நன்றியைக் கூறி பேட்டரி வண்டியைக் கிளப்பிக்கொண்டு அருணுடன் மறைந்துவிட்டான் ஜனா. நிஷாவும் டெய்லர் கடை நோக்கி சைக்கிளை பெடல் செய்தாள். டெலிவரி கொடுத்துக்கொண்டிருந்தபோது ஜனாவின் பேட்டரி வண்டியின் சார்ஜ் தீர்ந்துவிட்டது. "அட சார்ஜ் தீர்ந்திருச்சே…" என்று அருணிடம் கடுப்பான ஜனா, "எனக்கு மட்டும் ஏன்டா எல்லாம் தப்பாவே நடக்குது?" என்று அருணிடம்...
    அத்தியாயம் 7 நிஷாவை நந்தினி பேக்கரியில் பார்த்தப்பிறகு குமார் அண்ணனிற்கு மனமே கனத்துவிட்டது. குமார் அண்ணன் அன்று முதல் வேலையாக நிஷாவைப் பார்க்க நந்தினி பேக்கரிக்குத் தான் சென்றார். "என்னமா நிஷா? நீ எதுக்கு இங்க வேலை பார்க்கிற?" என்று குமார் அண்ணன் கேட்டுக்கொண்டிருந்தபோது ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் நந்தினி பேக்கரிக்குள் நுழைந்தனர். அவர்கள் குமார் அண்ணனைப் பார்த்து திருதிருவென...
    அத்தியாயம் 12 3 மணி நேரம் கழித்து தான் வருவேன் என்று சொன்ன ப்ரதீபா தான் சொன்னபடியே 3 மணி நேரம் கழித்து தான் கடைக்குள் வந்தாள். முகத்தை கழுவிக்கொண்டு தலையை பிண்ணிக்கொண்டு வந்த ப்ரதீபாவைப் பார்க்கும்போது ஜனாவிற்கு சிரிப்பாக இருந்தது. "பவுடர் பூசி கோபத்தை மறைச்சிருக்கியா ப்ரதீபா?" என்று கேட்டு அவளிடம் ஒரு இடியும் குத்தும்...
    அத்தியாயம் 5 மதியத்திற்குப் பிறகு சூப்பர்மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து கஸ்டமர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ப்ரதீபா பில் போட, தரையில் அமர்ந்தபடி ஷாம்பு பாடில்களுக்கு ரேட் ஸ்டிக்கரை sticker gun கொண்டு ஒட்டிக் கொண்டிருந்தாள் செல்வலட்சுமி. சரியாக மாலை 6 மணிக்கு வேலவன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் நுழைந்தார்கள். கிருஷ்ணமூர்த்தியின் மகனின் கையில் நீளமான...
    அத்தியாயம் 15 இத்தனை நாளும் கண்களில் காதலோடு சுற்றித்திரிந்த நிஷாவிடம் நிறைய மாற்றங்கள். ஜனாவிற்கு திருமணத்தின் மீது இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டப்பிறகு காதல் ஞானிபோல் நடந்துகொண்டாள் நிஷா. வீட்டில் இருந்து லெமன் ரைஸ் செய்து கொண்டு வந்த நிஷா அதை ப்ரதீபாவிடம் பிடிவாதமாகக் கொடுத்து, "இதை ஜனாகிட்ட நீ தான் கொடுக்கணும்." என்றாள். "நீயே கொடு… அப்புறம் நாங்க...
    "எனக்கு தெரியும் ஜனா அண்ணே. தினமும் சொல்லுவியா? இது என்ன மெட்ராஸ்ஸா? ரெண்டு பக்கம் கால் போட்டு ஜாலியா ஒரு பையன்கூட பைக்ல போறதுக்கு? நம்ம ஊர்ல எல்லாரும் 'ஆ'ன்னு பார்ப்பாங்கன்னு எனக்கும் தெரியும்..." என்று சலித்துக் கொண்டு அவனது பைக்கில் ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்தாள் ப்ரதீபா. ப்ரதீபாவும் இரவு முழுவதும் சரியாகத்...
    அத்தியாயம் 8 "ப்ரதீபா, வாட்ஸ் ஆப் ஆர்டர் பில்லுக்கு சரக்கெடுக்கறேன்... ஏதாவது டவுட் வந்தா கேட்கறேன்..." என்றபடியே கையில் இருந்த பில்லிற்கு சாமான்களை எடுத்துக்கொண்டிருந்தாள் நிஷா. "சரி நிஷா." – ப்ரதீபா. அப்போது ஒரு உப்பு பாக்கெட்டை கையில் எடுத்தபோது, "ஆஹ்..." என்று பலமாகக் கத்திவிட்டாள் நிஷா. "என்ன ஆச்சு?" என்று கேட்டு கம்ப்யூட்டரில் இருந்து எழுந்து வந்தாள் ப்ரதீபா. "நேத்து...
    error: Content is protected !!