Sunday, April 28, 2024

    O Crazy Minnal

                          மின்னல்-8   "ஸ்ஸ்ஸ்" என்ற குக்கர் விசில் சத்தத்தில் பதறியடித்துக்கொண்டு படுக்கையறையில் இருந்து அடுக்களைக்கு ஓடினான் நரேந்திரன்.   "ச்சே!!! பக்கத்து வீட்டுலயா...நம்மதான் குக்கரே வைக்கலேயே...ஏன்டா நரேன் இப்படியா பல்பு வாங்குவே...எதிர்கட்சி காரன் பாத்தா என்ன நினைப்பான்...???" யாருமில்லாத தைரியத்தில் தன்பாட்டுக்கு பேசிக்(?) கொண்டிருந்தான் அவன்.   அவன் தனியாக இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் அலறியது அவனது கைபேசி. "இதுவாது...
    மின்னல்-20 மனம்கவரும் மாலை நேரமது! மஞ்சள் வானில் கலப்படமாய் சிவப்பு ரேகைகள் சில படர்ந்து அதை சிவப்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் தங்கமாய் தகதகத்துக் கொண்டிருந்தது அந்த வானம்..!! கீழோ ஆர்பரிக்கும் ஆழியும் அதன் அழகிய நிறமும்..!! கால் நனைக்கும் அலைகளின் நுனியில் துள்ளி விளையாடும் சிறு பிள்ளைகள்..! தயங்கி தயங்கி கால் பதிக்கும் பூக்குவியல்கள் என அந்த இடத்தில் எல்லாமே...
                             மின்னல்-9   "அப்போ நீ அவள அடிச்சிட்ட...?" என்று ஒற்றை புறுவத்தை உயர்த்திய ஹாட்பாக்ஸை....ச்சே ஹெச்.ஓ.டீயை பார்த்து நின்றவளின் முகத்தில் துளியும் குற்ற உணர்வு இல்லை.   எப்படியிருக்கும் அவளை பொருத்தமட்டில் அவள் செய்தது சரியல்லவா...எது வந்தாலும் பார்த்துவிடலாம் என்றிருக்க அதில் லாரி லாரியாக மண்ணள்ளி கொட்டியிருந்தாள்  புவன்.   "இந்த ஹெச்.ஓ.டீ. ஹாட்பாக்ஸ்ஸ எப்படி சமாளிக்கப் போறோம்...???" என்று அவள்...
    மின்னல்-39 “ரேவ்ஸ்…. ரேவ்ஸ்ஸ்!!!!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல். “நோ வே!!” என்றாள் அழுத்தம் திருத்தமாக. வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!! “ என்று அவரிடம் முறையிட்டாள். அவரும் “ரேவதி…” என்று ஆரம்பிக்க ரேவதியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. “ரொம்பத்தான்!” என்று அலுத்துக் கொண்டவளாக “இப்போ எதுக்கு இப்படி பண்ற நீ???” என்று வினவினாள்...
      மின்னல்-15   “அஷ்மீ!!!!” என்றவள் தொண்டை தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தாள். “என்ன இஞ்சி?” “இன்னும் எவ்வளவு நேரம்?” “கொஞ்சம் டைமாகும்டா…”என்றவள் மறுபடியும் அந்த லாப்டாப்பிற்குள் ஆழ்ந்துவிட… அதில் கடுப்பாகிப் போனவள்…   “சரி அப்போ நான் ரேவ்ஸ் பார்க்கப் போறேன்” என்றாள். பின்னே அவளும் எவ்வளவு நேரம்தான் சமாளிப்பாள். ரெஸ்டாரன்டிலிருந்து  கிளம்பியவர்கள்… வீட்டகனுள் நுழையும் முன்னரே அஷ்மிக்கு அழைப்பு வந்திருந்தது… ஒரு நல்லுள்ளம்...
    மின்னல்-32 அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல??’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியை பிடித்துவிட்டாள்! என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியை கேட்டிருந்தாள். அவர் பதிலுக்காக அவள் அவர் முகம் பார்த்து நிற்க அவரோ அவரது வழக்கமான முகமூடியை அணிந்துக் கொண்டார்… மௌனமாகிவிட்டார்! ஆனால்...
    மின்னல்-37 எல்லாம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருக்கிறது என்று எண்ணும்பொழுதே அது அப்படி இல்லை என்பதுபோல் அமைந்தது அந்த அலறல் சத்தம்! விருந்தாளியாய்…தோழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தவள் இன்று அந்த வீட்டின் அங்கத்தினராய்…அவர்களில் ஒருத்தியாய்  அடியெடுத்து வைத்தாள். ஆனால் அவர்கள் வீட்டினுள் நுழைந்த மறுகணம் பேச்சியின் “அய்யா!!!” என்ற அலறல் சத்தம் கேட்க ஒரு நொடி அதிர்ந்து பின் அனைவரும்...
    மின்னல்-23 வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ...?? பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ...?? மையிருட்டு கரையும் வேளை…! அந்த காருக்குள் அமுதமாய் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..!! இனிமையான அதிகாலை வேளை அது! மென்மையான தென்றல் காற்று மனம் தீண்டிச் செல்ல காரை சீரான வேகத்தில் இயக்கியவன் கண்ணாடி வழியாக பின் இருக்கையை நோட்டம் விட்டான். ரேவதி...
                               மின்னல்-10   "ஓய்!!! நில்லு! மரியாதையா நின்னுரு" என்று கத்திக் கொண்டே விரட்டினாள்  குறிஞ்சி.   "அய்யோ!! அஷ்மீ!!! ஆன்ட்டீ!!!" என்று எல்லோரையும் இழுத்து நடுவில் விட்டவன் கடைசியில் ஜிதேனிற்கு பின் வந்து நின்றிருந்தான்   அன்றைய நாளே அவளை வைத்து செய்திருந்த காரணத்தினால் கடுப்பிலிருந்தவள்...அவனை கண்டவுடன் முதலில் அதிர்ந்து பின் அது மனதில் பதிய...அவனை கொலைவெறிப் பார்வை பார்த்தாள்.   அவனால் ஆன...
    மின்னல்-25 ஏற்கனவே  பல குழப்பங்கள் அவளை சூழ்ந்திருக்க…கீழே இறங்கலாமா…இல்லை வேணாமா…?? என்ற சிந்தனையில் இருந்தவள் பின் விமலா அழைத்து பேசியதும்…அதன்பின் கார்த்திகாவின் நட்பூறிய வார்த்தைகளும் திடம் தர பழைய நிலைக்கு திரும்பியிருந்தாள்…. அதனால்தானோ என்னவோ தன்னை கடந்துச் சென்ற பெண்மணியை கண்டு வாய் நிறைய புன்னகைத்தாள். ஆனால் அந்த பெண்மணியோ ஒன்றும் சொல்லாமல் வெறித்துவிட்டுச் செல்ல ஒரு மாதிரி...
    மின்னல்-35 அமைதியான தெரு…ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள்…தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மனதிற்கு குளுமை தரக்கூடிய அந்த இடத்தினால் சற்றும் கவரப்படாதவளாக தன் வீட்டபால்கனியில்  அமர்ந்து ஏங்கோ தூரத்தில் கடந்துச் செல்லும்  முகில் கூட்டங்களையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்…அஷ்மிதா! காலை வகுப்புகளை முடித்துக்...
    மின்னல்-22 அதிகாலை நாலரை மணி…அப்படிதான் அவளது கை கடிகாரம் சொல்லியது! ஆனால் அவள்தான் அதை நம்பமாட்டாமல் அந்த சாலையையே விழிவிரித்து பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் என்று ப்ரம்ம முஹூர்த்ததில் எல்லாம் விழித்திருக்கிறாள்..?! அதெல்லாம் என்றாவது நடக்கும் அதிசய சம்பவங்கள்தான்! உடலை உரசிச் செல்லும் காலைநேர பனிகாற்றும் வெளிச்சம் பரவியிராத…இருள் கவ்விய வானமும் கூட அவள் ரசனைக்குறியதாகத்தான் இருந்தது! காரணம்...
                              மின்னல்-11   சூரிய கிரணங்கள் சுள்ளென்று என் முகத்தில் விழும்வரை நான் எழுவதாக இல்லை என்ற சபதத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள் குறிஞ்சி. இரவு முழுக்க பேசிப் பேசியே அஷ்மியை கொன்றவள் இப்பொழுதுதான்  களைத்துப் போய் உறங்குகின்றாள். ஆனால் அது அந்த ஆதவனுக்குத் தெரியாதில்லையா...அவளை தன் கைகளால் ஸ்பரிசிக்க அவளும் சுளீரென்று முகத்தில் படிந்த சூரிய ஒளியால் புருவத்தை சுளித்தவாறு...திரும்பி...
    மின்னல்-33 கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது! இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்து கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும்  ஒரு கட்டிருந்தது! அதை கண்டவனின் மனமோ இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருந்தது! ஆனால் எல்லாம் அவளின் பிள்ளை முகத்தை காணும்வரைதான்…. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்…நரேந்திரன்! அந்த முகத்தினில்...
    மின்னல்-19   அந்த வெள்ளை நிற போர்டில் அவன் அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறையையும் தெளவாக மைன்ட் மேப் போல் வரைந்திருந்தான். ரேவதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய “இந்திரன்னா இந்திரன்தான்!!! செம!!” என்றவள் எக்கி நின்று அவன் தோளில கைபோட முயற்ச்சித்தவாறு பாராட்டுதலாக கூற முதலிலேயே குறிஞ்சி ஊருக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை அவனைப் பொருத்தமட்டில் அவளது பாதுகாப்பே...
    மின்னல்-17   வரும்பொழுது இருந்த வேகம் இப்பொழுது கிளம்பும்பொழுது துளியளவும் இல்லை குறிஞ்சிக்கு . உற்சாகம் வடிந்தவளாக தன் சைக்கிளை ஓட்டாமல் தள்ளிக் கொண்டு நடந்தவள் அங்கிருந்த ஒரு பூங்காவினுள் நுழைந்துவிட்டாள். அங்கு ஆட்கள் அதிகமில்லாத இடமாக பார்த்து ஒரு கல்பெஞ்சின் பக்கத்திலேயே வண்டியை நிறுத்தியவள் அமர்ந்துக் கொண்டாள். தொடையில் தன் முழங்கையை ஊன்றி தலையை இரு கைகளாலும் தாங்கியபடி...
    மின்னல்-26 ரேவதி காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தவளுக்கோ சற்று நேரம் ஒன்றும் புரிபடாமல் போக பின் உற்று கவனிக்கலானாள். ரேவதி காட்டியது  வாசல் திண்ணையில் இருந்து கொஞ்ச தூரத்தில் வந்துக் கொண்டிருந்த பெரியவர்களை! எங்கோ வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிறார்கள் போலும்…என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்க பட்டென அது அறுபட்டது அவர்கள் நெருங்கவும்! அவர்களது உறுவம்…முக அமைப்பு…!!...
    மின்னல்-34 ஏழாம் நாள்..? அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு அவ்வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது. பரபரப்பின் காரணமே அந்த வீட்டின் மூத்த இளவரசி சாந்தமதியின் வருகை… நீண்ட காலங்களுக்கு பின் அவர் வருவது மட்டுமின்றி  அந்த குடும்பத்தின் மூத்த பேரனும்… சாந்தமதி சுந்தரேஸ்வரன் தம்பதியின் முதல் பிள்ளையுமான சுசீந்திரனின் கல்யாண பேச்சும் ஒரு காரணம். சொந்தத்தில் திருமணம் ஒன்று அதிகாலை முகூர்த்ததில்...
    மின்னல்-24 கரைந்த மை மறுபடியும் பூசிக் கொண்டது! கருமையை பூசிக் கொண்ட வானத்தில் வெண்பனியாய் நிலா…! அந்த காலத்து வீடு கீழே தணிந்து நிற்கும் உத்தரம்..! அதை தாங்கி நிற்பதுபோல அகலமான தூண்கள் என பழமையை போற்றினாலும் ஆங்காங்கே அவர்களது வசதிக்கேற்ப மாற்றியிருந்தனர். உத்தரத்தையே வெறித்துக் கொண்டு படுத்து கிடந்தவளுக்கு ஒரு துளி தூக்கம்கூட அவள் கண்ணோரம் கசிய தயாராய்...
    மின்னல்-36 எட்டாம் நாள்..? “லூசாடீ  நீ???” “ஓய் என்ன டீ போடற??” “நீ பண்ற காரியத்துக்கு நாலு போடாம விட்டேனேன்னு நினைச்சுக்கோ!!” என்று அதே மெத்தையில் தனக்கெதிரே அமர்ந்துக் கொண்டு தன்னை திட்ட வார்த்தைகளை தேடி…கிடைக்காமல்..தவித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட குறிஞ்சிக்கோ உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது! அதை அப்படியே தலை கவிழ்த்து மறைத்தவளின் மனதை படித்ததுபோல் ரேவதி… “சிரிக்கிரியா??” என்றாள் சந்தேகமாய். நொடி பொழுதில் முகபாவத்தை...
    error: Content is protected !!