Thursday, March 28, 2024

    O Crazy Minnal

    மின்னல்-35 அமைதியான தெரு…ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள்…தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மனதிற்கு குளுமை தரக்கூடிய அந்த இடத்தினால் சற்றும் கவரப்படாதவளாக தன் வீட்டபால்கனியில்  அமர்ந்து ஏங்கோ தூரத்தில் கடந்துச் செல்லும்  முகில் கூட்டங்களையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்…அஷ்மிதா! காலை வகுப்புகளை முடித்துக்...
    மின்னல்-34 ஏழாம் நாள்..? அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு அவ்வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது. பரபரப்பின் காரணமே அந்த வீட்டின் மூத்த இளவரசி சாந்தமதியின் வருகை… நீண்ட காலங்களுக்கு பின் அவர் வருவது மட்டுமின்றி  அந்த குடும்பத்தின் மூத்த பேரனும்… சாந்தமதி சுந்தரேஸ்வரன் தம்பதியின் முதல் பிள்ளையுமான சுசீந்திரனின் கல்யாண பேச்சும் ஒரு காரணம். சொந்தத்தில் திருமணம் ஒன்று அதிகாலை முகூர்த்ததில்...
    மின்னல்-33 கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது! இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்து கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும்  ஒரு கட்டிருந்தது! அதை கண்டவனின் மனமோ இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருந்தது! ஆனால் எல்லாம் அவளின் பிள்ளை முகத்தை காணும்வரைதான்…. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்…நரேந்திரன்! அந்த முகத்தினில்...
    மின்னல்-32 அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல??’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியை பிடித்துவிட்டாள்! என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியை கேட்டிருந்தாள். அவர் பதிலுக்காக அவள் அவர் முகம் பார்த்து நிற்க அவரோ அவரது வழக்கமான முகமூடியை அணிந்துக் கொண்டார்… மௌனமாகிவிட்டார்! ஆனால்...
    மின்னல்-31 வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ஏதோ நெருடலாகவே இருந்தது! ஆனால் தேவேந்திரன் முக்கியம் என்று தன்னிடம் கொடுத்திருக்கும் வேலைகளை விட்டுவிடவும் மனமில்லாமல் போகவே அவன் கிளம்பியிருந்தான். ஆனால் ஏனோ நேரம் கடந்ததே தவிர அவனது பதற்றம் குறையாமல் கூடியது! கூடவே இலவசமாக பய உணர்வும்! ஏதோ ஒன்று தவறாக நடக்கவிருக்கிறது என்று அவன் மனம் அடித்துக் கூற மனதில் அதற்குமேலும்...
    மின்னல்-30 “இங்க பாரு!...” என்று  அவள் முகம் பார்க்க முயன்றுக் கொண்டிருந்தான் நரேந்திரன். ரேவதியிடம் அவளையும் அழைத்து வருவதாக கூறியவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று..! “தாத்தாவ பார்த்துட்டு வரேன்” என்று துள்ளலாய் ஓடியவளின் புன்னகை பூசிய முகத்தை எதிர்ப்பார்த்து அவன் வர அவளோ கலங்கிய விழிகளை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில்! அவன் பார்க்க வந்த அந்த துறுதுறு விழிகளில் கண்ணீர்...
    மின்னல்-29 ஏற்கனவே உண்ட மயக்கத்தில் இருந்தவள் மனதுக்குள் முடிந்த அளவு ரேவதியையும் நரேந்திரனையும் தாளித்துக் கொண்டிருந்தாள்! எப்பொழுதும் அவள் உண்பதைவிட கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட  நடக்க முடியாமல் அவள் நடந்து வந்து படியேறுவதற்காக முதல் படியில் காலை வைக்க அவள் கையை பிடித்து யாரோ  இழுத்திருந்தனர். அவள் சற்று தடுமாற அவளை பிடித்து நிறுத்தியவனைக் கண்டவள் ருத்ரதேவியாய் உருமாறி...
    மின்னல்-28 பெரிய அளவிலான அறை அது! அந்த அறையில்… துளிக்கூட வெளிச்சம் இல்லாமல்…இருண்டு கிடந்தது! இருளவன் தனது கைகளுக்குள் அடக்கியிருந்தான் அந்த அறையை..!! இன்னும் சற்று நேரத்தில் விமலா வந்துவிடுவார்  கருக்கல்ல லைட்ட அமத்திட்டு என்னல பண்ணுதே!?” என்ற அங்கலாய்ப்புடன். நல்ல வேளை கதவை அடைத்திருந்தான்…உறங்கிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொள்வார் இப்போதைக்கு யார் முகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாதே! இறுக...
    மின்னல்-27 அவனையும் எப்படியாவது அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து வந்தவள்…அவனது அனல்பறக்கும் வார்த்தைகளில்  அசைவற்று நின்றுவிட்டாள். அவளுடன் வந்த கார்த்திகாவும்! தன் அண்ணனா இப்படி கத்தியது? என்று நம்ப முடியாமல் அவனை வெறித்துக் கொண்டிருக்க அவனோ எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்திருந்தான். குறிஞ்சிக்கோ உள்ளே கோப அலைகள் கரைத்தாண்ட தயாராய் இருக்க…எங்கே இன்னும் ஒரு நிமிடம் அங்கு நின்றாள்கூட தான்...
    மின்னல்-26 ரேவதி காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தவளுக்கோ சற்று நேரம் ஒன்றும் புரிபடாமல் போக பின் உற்று கவனிக்கலானாள். ரேவதி காட்டியது  வாசல் திண்ணையில் இருந்து கொஞ்ச தூரத்தில் வந்துக் கொண்டிருந்த பெரியவர்களை! எங்கோ வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிறார்கள் போலும்…என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்க பட்டென அது அறுபட்டது அவர்கள் நெருங்கவும்! அவர்களது உறுவம்…முக அமைப்பு…!!...
    மின்னல்-25 ஏற்கனவே  பல குழப்பங்கள் அவளை சூழ்ந்திருக்க…கீழே இறங்கலாமா…இல்லை வேணாமா…?? என்ற சிந்தனையில் இருந்தவள் பின் விமலா அழைத்து பேசியதும்…அதன்பின் கார்த்திகாவின் நட்பூறிய வார்த்தைகளும் திடம் தர பழைய நிலைக்கு திரும்பியிருந்தாள்…. அதனால்தானோ என்னவோ தன்னை கடந்துச் சென்ற பெண்மணியை கண்டு வாய் நிறைய புன்னகைத்தாள். ஆனால் அந்த பெண்மணியோ ஒன்றும் சொல்லாமல் வெறித்துவிட்டுச் செல்ல ஒரு மாதிரி...
    மின்னல்-24 கரைந்த மை மறுபடியும் பூசிக் கொண்டது! கருமையை பூசிக் கொண்ட வானத்தில் வெண்பனியாய் நிலா…! அந்த காலத்து வீடு கீழே தணிந்து நிற்கும் உத்தரம்..! அதை தாங்கி நிற்பதுபோல அகலமான தூண்கள் என பழமையை போற்றினாலும் ஆங்காங்கே அவர்களது வசதிக்கேற்ப மாற்றியிருந்தனர். உத்தரத்தையே வெறித்துக் கொண்டு படுத்து கிடந்தவளுக்கு ஒரு துளி தூக்கம்கூட அவள் கண்ணோரம் கசிய தயாராய்...
    மின்னல்-23 வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ...?? பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ...?? மையிருட்டு கரையும் வேளை…! அந்த காருக்குள் அமுதமாய் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..!! இனிமையான அதிகாலை வேளை அது! மென்மையான தென்றல் காற்று மனம் தீண்டிச் செல்ல காரை சீரான வேகத்தில் இயக்கியவன் கண்ணாடி வழியாக பின் இருக்கையை நோட்டம் விட்டான். ரேவதி...
    மின்னல்-22 அதிகாலை நாலரை மணி…அப்படிதான் அவளது கை கடிகாரம் சொல்லியது! ஆனால் அவள்தான் அதை நம்பமாட்டாமல் அந்த சாலையையே விழிவிரித்து பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் என்று ப்ரம்ம முஹூர்த்ததில் எல்லாம் விழித்திருக்கிறாள்..?! அதெல்லாம் என்றாவது நடக்கும் அதிசய சம்பவங்கள்தான்! உடலை உரசிச் செல்லும் காலைநேர பனிகாற்றும் வெளிச்சம் பரவியிராத…இருள் கவ்விய வானமும் கூட அவள் ரசனைக்குறியதாகத்தான் இருந்தது! காரணம்...
    மின்னல்-21 கருமேகங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் நிலவுப் பெண்..!! நிசப்தமான இரவு வேளையில் அமைதியை குலைக்கும் வண்ணம் சீறிக் கொண்டிருந்தது அந்த ஸ்லீப்பர் பஸ்!! என்னதான் தன் வேகத்தை சாலையில் காட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு எந்தவித அசௌகரியத்தையும் கொடுக்காத வண்ணம் சீராக சென்றுக் கொண்டிருந்தது அந்த பேருந்து! ஸ்லீப்பர்  பஸ் என்பதால் வலது பக்கமிருந்த இரண்டு...
    மின்னல்-20 மனம்கவரும் மாலை நேரமது! மஞ்சள் வானில் கலப்படமாய் சிவப்பு ரேகைகள் சில படர்ந்து அதை சிவப்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் தங்கமாய் தகதகத்துக் கொண்டிருந்தது அந்த வானம்..!! கீழோ ஆர்பரிக்கும் ஆழியும் அதன் அழகிய நிறமும்..!! கால் நனைக்கும் அலைகளின் நுனியில் துள்ளி விளையாடும் சிறு பிள்ளைகள்..! தயங்கி தயங்கி கால் பதிக்கும் பூக்குவியல்கள் என அந்த இடத்தில் எல்லாமே...
    மின்னல்-19   அந்த வெள்ளை நிற போர்டில் அவன் அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறையையும் தெளவாக மைன்ட் மேப் போல் வரைந்திருந்தான். ரேவதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய “இந்திரன்னா இந்திரன்தான்!!! செம!!” என்றவள் எக்கி நின்று அவன் தோளில கைபோட முயற்ச்சித்தவாறு பாராட்டுதலாக கூற முதலிலேயே குறிஞ்சி ஊருக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை அவனைப் பொருத்தமட்டில் அவளது பாதுகாப்பே...
    மின்னல்-18   இரவு வெகு நேரம் சென்று உறங்கியதலோ…இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டதாலோ என்னவோ… நிம்மதியான… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்…குறிஞ்சி!   கதிரவன் சோம்பலாக எழுந்துக் கொண்டிருந்தான்… இலைகளின் மீது இன்னும் பனித்துளி உறங்கிக் கொண்டுதானிருந்தது! இதம் தரும் காலைநேர கதிரொளி இன்னும் அவளறை பக்கம் வரவில்லை போலும் குளிரில் சற்று குறுகி...
    மின்னல்-17   வரும்பொழுது இருந்த வேகம் இப்பொழுது கிளம்பும்பொழுது துளியளவும் இல்லை குறிஞ்சிக்கு . உற்சாகம் வடிந்தவளாக தன் சைக்கிளை ஓட்டாமல் தள்ளிக் கொண்டு நடந்தவள் அங்கிருந்த ஒரு பூங்காவினுள் நுழைந்துவிட்டாள். அங்கு ஆட்கள் அதிகமில்லாத இடமாக பார்த்து ஒரு கல்பெஞ்சின் பக்கத்திலேயே வண்டியை நிறுத்தியவள் அமர்ந்துக் கொண்டாள். தொடையில் தன் முழங்கையை ஊன்றி தலையை இரு கைகளாலும் தாங்கியபடி...
      மின்னல்-15   “அஷ்மீ!!!!” என்றவள் தொண்டை தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தாள். “என்ன இஞ்சி?” “இன்னும் எவ்வளவு நேரம்?” “கொஞ்சம் டைமாகும்டா…”என்றவள் மறுபடியும் அந்த லாப்டாப்பிற்குள் ஆழ்ந்துவிட… அதில் கடுப்பாகிப் போனவள்…   “சரி அப்போ நான் ரேவ்ஸ் பார்க்கப் போறேன்” என்றாள். பின்னே அவளும் எவ்வளவு நேரம்தான் சமாளிப்பாள். ரெஸ்டாரன்டிலிருந்து  கிளம்பியவர்கள்… வீட்டகனுள் நுழையும் முன்னரே அஷ்மிக்கு அழைப்பு வந்திருந்தது… ஒரு நல்லுள்ளம்...
    error: Content is protected !!