Advertisement

மின்னல்-34
ஏழாம் நாள்..?
அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு அவ்வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.
பரபரப்பின் காரணமே அந்த வீட்டின் மூத்த இளவரசி சாந்தமதியின் வருகை… நீண்ட காலங்களுக்கு பின் அவர் வருவது மட்டுமின்றி  அந்த குடும்பத்தின் மூத்த பேரனும்… சாந்தமதி சுந்தரேஸ்வரன் தம்பதியின் முதல் பிள்ளையுமான சுசீந்திரனின் கல்யாண பேச்சும் ஒரு காரணம்.
சொந்தத்தில் திருமணம் ஒன்று அதிகாலை முகூர்த்ததில் இருக்க  வசுமதியும் வளர்மதியும் அங்கு சென்றிருந்தனர்.
கோமதியும் செல்வியும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்க விமலாவோ கார்த்திகாவை பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்தார்.
அங்கு அனைவரின் ஓட்டத்தையும்…அவர்கள்  பரபரப்பதையும்… அவசரகதியிலும் மாமா சாப்பிட்டாரா?…அத்தை மாத்திரை எடுத்தாச்சா? என்பது போன்ற கேள்விகளிலும் ஒளிந்துக் கிடக்கும் அன்பையும்…அனுசரணையையும்… ரசித்தவண்ணம் அவன் உலாவிக் கொண்டிருந்தான்.
அதுதான் கூட்டு குடும்பத்தின் அழகியல்!
ஆயிரம் பூசல்கள்…உள்ளுக்குள் நடந்தாலும்…ஒருவருக்கு ஒன்றென்றால்…மற்றவரின் கை தாமாகவே நீண்டு விடும்…கண்கள் கலங்கிவிடும்..!
இது யார் சொல்லியும் வருவதில்லை! நாம் பார்த்து வளர்ந்த  ஒன்று!
உறவுகள் உணர்வுப்பூர்வமாய் இல்லாவிடில்…என்ன இழுத்துக் கட்டியும் ஒரு கட்டத்தில் குடும்பம் உடைந்துவிடும்!
நேற்று ரேவதி கூறத்தான் அவனுக்கேத் தெரிந்தது செல்வி ஆச்சியைப் பற்றி.
அவர் அமைதிக்குபின் இப்படி ஒரு காரணம் இருக்கக்கூடும் என்று அவன் நினைத்துகூட பார்த்ததில்லையே!
அவனுக்கு அதிர்ச்சியாய் அமைந்தது என்னவென்றால்…இப்படியெல்லாம் கூடவா இருப்பார்கள்??? என்று. குற்ற உணர்ச்சியாலா இத்தனை வருடம் அவர் தன்னைத் தானே குறுக்கி கொண்டிருந்தார்?…அதுவும் அவன் வேற்றாளாய் இருந்து பார்த்தால்…அவருக்கும் ஜிதேந்திரன் வீட்டைவிட்டுச் சென்றதிற்கும் எந்தவித தொடர்புமில்லை!
அவனுக்குத் தெரியாத ஒன்று…அவருக்கு ஜிதேந்திரன் வீட்டை விட்டுச் சென்றதைவிட அதன்பின்னான கோமதியின் மௌனமும்…ஒதுக்கமுமே அவரின் குற்ற உணர்விற்கான காரணமென்று!  
அவர் கல்யாணமுடித்து வந்த நாட்களில் தன் தங்கையாய் பார்த்துக் கொண்ட ஒருவரை…தனித்தீவொன்றில் தள்ளியதைபோல எழுந்த குற்ற உணர்வொன்று அவரை தனக்குள்ளே சுருங்க வைத்தது.
அவனுக்கு ஆச்சர்யமென்னவென்றால்…இதையெல்லாம் அவன் யாழியால் நடந்தது என்பதுதான்!
எப்படி அவர் அவளிடம் மனம் திறந்தார்?? அத்தனை காலம் இருந்தவர்களை விட்டு நேற்று அறிமுகமான ஒருத்தியிடம்…? என்றவன் சிந்தனை நீண்டுக் கொண்டே போக அதை தடுப்பதைபோல் அமைந்தது அந்த கணீர் குரல்!
தேவேந்திரனின் குரல்!
“நரேந்திரா!” என்றழைத்துக் கொண்டே அவனிடம் வந்தவர் அவனை அவருடன் தோப்புக்கு அழைக்க அவனுக்கானால் மறுக்கவும் முடியாமல்… உடன் செல்லவும் முடியாத நிலை.
யாழியிடம் மதியம் தயாராய் இரு என்று அவன் சொல்லி வந்திருக்க இங்கோ இதை எதையும் அறியாத இவர் அவனை அழைத்துக் கொண்டிருந்தார்.
மறுக்கமுடியாமல்போக… விரைவாய் வந்துவிடலாம் என்று முடிவெடுத்தவனாக கிளம்பினான் நரேந்திரன்.
“ரெண்டு நிமிஷம் தாத்தா…துணி மாத்திட்டு வாரேன்..” என்றவனிடம் தான் வெளியே இருப்பதாக சொல்லிவிட்டு அவர் சென்றார்.
உடை மாற்றியவன் பர்சையும்…ஃபோனையும் பாக்கெட்டிற்குள் திணித்தவனாக வெளியேற யார்மீதோ  மோதி பர்சை கீழே தவர விட்டிருந்தான்.
ஒரு ‘சாரி’யுடன் கீழே குனிந்து பர்சை எடுத்தவன் நிமிர ஒரு ஏளன சிரிப்பொன்றை அவனிடம் உதிர்த்துவிட்டு சென்றான் அவன்..ராகவேந்திரன்!
அவன் சிரிப்பின் காரணம் விளங்காமல் குழம்பியவனுக்கு தேவேந்திரன் காத்திருப்பது உரைக்க.. அங்கிருந்து வெளியேறிவனின் புறுவங்கள் இரண்டும் முடிச்சிட்டது.
************************************************************************************************************
மேலே… அவர்கள் அறைவாசலில் நடை பயின்றுக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
இன்னும் லேசாக அந்த வலி இருந்தாலும் நேற்றைய அளவு இல்லை. ரேவதியும்  இவள் எழும் முன்னே பேச்சியுடன் வெளியே சென்றிருந்தாள்.
நேரம் போகாமல் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி!
தன்னெதிரே படியேறி வந்துக் கொண்டிருப்பவனை பார்த்தவளுக்கோ இவனிடம் பேசலாமா..இல்லை வேண்டாமா??? என்ற சந்தேகம்.
‘என்ன இருந்தாலும் அண்ணன் யாழி…ஒருவாட்டி மன்னிச்சிரலாம்…’ என்றுத் தோன்ற மறு புறமோ ‘அதெப்படி?? அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் தப்பு தப்புதான்’ என்று தன்மானம் பிடித்திழுக்க புன்னகைக்கவும் தோணாமல்…முகத்தை திருப்பவும் மனமில்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டுக் கொண்டவனாக…
“ஹே! என்ன மேடம் இப்போ எப்படியிருக்கீங்க???” என்றபடி சிரித்தமுகமாய் வரும் ராகவேந்திரனைக் கண்டு அவள் வாய் பிளக்காத குறையாக நின்றுக் கொண்டிருந்தாள்.
‘என்னடா இது??’ என்றெண்ணியவள் அவனிடம் புன்னகையை பூசியவளாய்
“ஓ…நல்லா இருக்கேனே! என்ன விசாரிப்பெல்லாம் பலமா இருக்கு???” என்றாள்
முகம் சுருங்கிவிட”நான் அன்னைக்கு அப்படி நடந்திருக்க கூடாது….ஐம் சாரி குறிஞ்சி…” என்றவனைக் கண்டவள்
“ஓய்! என்ன??? ம்ம்? அதெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்(பச்சை பொய்தான் இருந்தும்) ஆமா சார் ரொம்ப பிஸியோ? ஆள பாக்கவே முடியலயே…” என்று பேச்சின் திசையை மாற்ற முயன்றாள்.
“ஹா..ஹா…அதெல்லாம் இல்ல… கொஞ்சம் வெளி வேலை இருந்துச்சு…”என்றவன் பின் யோசனையாய் அவளை நோக்கி
“இன்னைக்கு மேடமோட ப்ளான்ஸ் என்ன??” என்று வினவினான்.
“ப்ளான்ஸ் ஆ? நீ வேற…நானே கடுப்புல இருக்கேன்!” என்றாள் சலிப்பாக…அவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று! அவனுக்கும் அதுதானே வேண்டும்…
“ஹா..ஹா…வெளில போய்ட்டு வரலாம்ல??”
“எங்க? ரேவதி வெளில போயிருக்கா…வரதுக்கு நேரமாகுமாம்…இந்த நரேனையும் காலைல இருந்து காணும்…”
“ஏன் நாங்கல்லாம் ஆளா தெரியலையோ???” என்றவனின் குரலில் அவள் நிமிர நொடிப் பொழுதில் முகத்தில் சிரிப்பை பூசிக்கொண்டான் அவன்.
“ஓய்! அப்போ நீ ஃப்ரீயா??”
“ம்ம்ம்…சீக்கிரம் போய் கிளம்புங்க மேடம்!” என்றவனிடம்
“ டூ மினிட்ஸ்! இதோ வந்திர்ரேன்!” என்று அறையினுள் ஓடிவிட்டாள்.
‘வா…’ என்றெண்ணியவனின் கண்களிலோ வஞ்சம் தீர்க்க காத்திருப்பவனின் வெறி!!
******************************************************************************************************************
“என்ன கார்த்திமா?? இதெல்லாம் முன்னாடியே சொல்லிருக்கலாம்ல??” என்றவனின் குரலில் இருந்ததென்ன…??? கோபமா?? இல்லை ஆற்றாமையா???
“இல்ல மாமா…குறிஞ்சி அக்காதான்….” என்றவள் மென்றுவிழுங்க அவனோ
“சொல்லக்கூடாதுனு சொன்னாளா???” என்றான் கூர்மையாய்!
சிறியவளுக்கோ என்னவென்று புரியாவிட்டாலும்..தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற அளவு புரிந்தது!
‘நரேன் மாமாட்ட சொல்லாம விட்டது தப்போ??’ என்று அவள் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க அவனோ  அவளை வகுப்பிற்கு செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
காலையில் தேவேந்திரனுடன் கிளம்பியவனுக்குள் ஏனோ ராகவேந்திரனின் அந்த ஏளன  சிரிப்பு நெருஞ்சி முள்ளாய்!
இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள்! ஏன் பள்ளிக் காலங்களிலெல்லாம் ஒட்டிக் கொண்டு திரிந்தவர்கள்தான்…ஆனால் வளர வளர அவர்கள் இடையேயான இடைவெளியும் அதிகமானது!
இவன் இருக்கும் இடத்தில் அவன் இருக்கமாட்டான்…இவனே சென்று பேசினாலும்…தேவைக்குமேல் பதில் வராது…முதலில் ஒன்றுமே தோன்றாத விஷயங்கள் எல்லாம்  இப்பொழுது அவன் முன் விகாரமாய் வளர்ந்து நின்றது!
ஏன் ஏன் என்று யோசித்தவனுக்கு அப்பொழுதுதான் ஒன்று உரைத்தது!
முதல் நாள் தான் வரும்வரை யாழியுடன் அமர்ந்து நன்றாக பேசிக் கொண்டிருந்தவன் அவன் வந்தவுடன் எழுந்துச் சென்றது!
அன்று…ஆத்தங்கரையில் இருந்து அவளை அழைத்து வந்த அன்று…எல்லோரும் ஹாலில் நின்றிருந்த பொழுதும்கூட அவன் அங்கு இல்லை! ஏதோ தவறாகபட…தனக்கான பதில் கார்த்திகாவிடம் இருக்குமென்று நம்பியவன் அவள் பள்ளிக்கு வந்திருந்தான்.
முதலில் மழுப்பியவள் பின் முதலில் இருந்து எல்லாவற்றையும்  உரைக்க…அப்பொழுதுதான் அவனுக்கு ப்ரச்சனையின் தீவிரம் புரிந்தது!
அவனுக்குத் தெரிந்த ராகவேந்திரன் மற்றவர்களிடம் எரிந்து விழுபவனல்ல! அவன் மென்மையானவன்…அப்படிப்பட்டவனா… என்றெண்ணம் இருக்க ரேவதிக்கு அழைத்தான்.
“ரேவதி எங்க இருக்க?”
“வெளில வந்துருக்கேன் இந்திரா…”
“யாழி உன்கூட இருக்காளா???”
“இல்லையே…ஏன்???” என்றவளின் கேள்விக்கு “சரி நான் அப்புறம் கூப்பிடறேன்” என்று வைத்தவன் வண்டியை வீட்டை நோக்கி இயக்கினான்.
வண்டியை நிறுத்தியவனின் கால்களோ நேராய் அவள் அறை நோக்கிச் செல்ல அங்கோ வெற்று அறையே காட்சியளித்தது.
கீழே இறங்கியவனின் பார்வை அலைபாய தூரத்தில் ஏதோ வேலை ஏவிக் கொண்டிருந்த விமலா பட அவரிடம் விரைந்தான்.
“அத்தை யாழிய பாத்தீங்களா???”
“இங்கதான் எங்கயாவது இருப்பா…” என்றவர் பார்வையைக்கூட இவன்புறம் திருப்பினாரில்லை! வேலை மும்முரத்தில் அரைகுறையாக உரைத்தார்.
அவரிடம் கேட்டு பயணில்லை என்பதை உணர்ந்தவன் வெளியேறவும் அவனைக் கடந்துச் சென்ற மருது அவனது முகத்தை பார்த்து என்ன வேண்டுமென கேட்டான்.
“யாழிய பாத்தீங்களாண்ணே???”
“அந்த புள்ள ராகவன் தம்பிக்கூடல வெளிய போச்சு!” என்றவரின் வார்த்தையில் அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை!
“எங்க போனாங்க???” என்று அவரை பிடித்து உலுக்காத குறையாக கேட்க அவரோ
“தோப்ப பாத்து போயிட்டிருந்தாங்க…சரியா தெரில” என்ற மருதுவுக்கோ எதிரில் வந்த ராகவேந்திரன் தன்னைக் கண்டதும் முகத்தை திருப்பிச் சென்றதே மனதில் ஆடியது.
எந்த தோப்பு என்று கேட்கும் அளவுக்கூட அவனுக்கு பொறுமையில்லாமல் போக ஒரு கையில் வண்டியை எடுத்தவன் முகேஷை அழைத்தான்.
“சொல்லு மாப்ள???”
“எங்க இருக்க?”
“தோப்புல..”
“ராகவ் வந்தானா அங்க?”
“இல்லையே மாப்ள…எதாவது ப்ரச்சனையா???” என்று வினவினான் அவனது குரலை கண்டு கொண்டவனாக..
“ஒன்னுமில்ல…நான் அப்புறம் கூப்பிடறேன்” என்று வைத்தவனின் எண்ணவலைகளோ தாறுமாறாய் ஓடின…
######################
சூரியன் தனது முழு உக்கிரத்தையும் காட்டிக் கொண்டிருந்தது.
சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவ்வளவாக ஆட்கள் நடமாட்டமில்லாமல் இருந்தது அந்த இடம்.
தன்னைச் சுற்றி நெடுநெடுவென நீண்டு நின்ற பனை மரங்களையே அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
“என்ன அப்படி பாக்கற??” என்ற ராகவின் கேள்விக்கு  பார்வையை அகற்றாமல் பதிலளித்தாள்.
“இல்ல…நான் நினைச்சதவிட பெருசா இருக்கு…ஆனா நிழல்தான் அதிகம் கிடைக்க மாட்டேக்குதில்ல??”
“ம்ம்…நிழல் இல்லதான்…ஆனா இந்த மரம் இருக்கற நிலத்துல நலத்தடி நீர் நல்லாருக்கும்னு சொல்லுவாங்க…”
“ஓ…”
“ம்ம் ஆமா…நீ பதனி குடிக்கிரீயா??? நல்லா இருக்கும்…”
“ஓ!! குடிக்கலாமே…ஆனா இங்க எப்படி???” என்றவளின் கேள்வியில்
“ம்ம்ம்…” என்று தேடுவதைபோல் பாவனை செய்தவன்
“அங்க இருக்காங்க பாரு! வா!!” என்றவாறு தான் பேசி வைத்த இடத்தில் நின்றிருந்தவரிடம் சென்றான்.
“அண்ணே ரெண்டு பதனி…” என்றவன் அவரிடம் கண்ணசைக்க அதை புரிந்தவராக அவரும் அவளிடம் ஒன்றை நீட்டினார்.
அதை வாங்கியவளோ “நீ…” என்றவாறு அவன் பக்கம் நீட்ட அவனோ “ நீ குடி குறிஞ்சி…எனக்கும் வருது!” என்றான்
அவனை ஒரு பார்வை பார்த்தவள் சரியென்பதுபோல் தலையசைத்துவிட்டு அவர் கொடுத்ததை ஒரே மடக்கில் குடித்திருந்தாள்.
அவனது திட்டங்கள் ஒவ்வொன்றும் எந்தவித சிக்கல்களுமின்றி நிறைவேற…அவள் குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகவேந்திரன்.
குடித்து சில நிமிடங்களுக்கெல்லாம்…தலை சுற்றுவதுபோலிருக்க அவள் அங்கிருந்த மரத்தடியில் கிடந்த கல்லின்மேல் அமர்ந்துவிட்டாள் தலையைபிடித்தவளாக.
கண்ணசைத்து அவரை போகும்படி பணித்தவன் அவள் எதிரே வந்தமர்ந்தான்.
“இத்தன வருஷம் அவன்னா…இப்ப நேத்து வந்த நீ….நீயும் சேர்ந்துகிட்டல???” என்றவன் வார்த்தை ஒவ்வொன்றையும் கடித்து துப்பினான்.
தலை சுற்றலைவிட இவனது பேச்சு இன்னும் அவளை அதிர வைத்தது.
“என்ன குடுத்த ?” என்றவளின் கேள்வியில் பக்கென சிரித்தவன்…
“கள்ளு! அதுவாது தெரியுமா???இல்ல…ஹ்ம்…”
“எனக்கும் உனக்கும்….என்ன ப்ரச்சனை???” என்றவளின் குரல் உளரலாய்…
“ம்ம்ம்  நீ வெறும் குறிஞ்சி யாழ்-லா வந்திருந்தா…ஒன்னுமில்ல…ஆனா நீ…நரேந்திரனோட யாழி-யால வந்த!!!” என்றவன் அவளது  ஃபோனிற்காய் தேடினான்.
அவளது ஃபோன் கிடைத்துவிட அதில்  பாஸ்வேர்டிற்கு பதில் அவளது விரலை பதித்தவன் அது திறந்துக் கொள்ளவும் அதை எடுத்துக் கொண்டு சற்று தொலைவாய் சென்றான்.
############
தொலைதூரத்தில்… மரத்தடியில்… யாழியைப் போலவே இருக்க வண்டியை நிறுத்தியவனோ  அவளிடம் விரைந்தான்.
கண்கள் செருக…தலையை மரத்தில் சாய்த்தவாறு அமர்ந்திருந்தவளின் நிலை கண்டவனுக்கோ ராகவேந்திரனின் மேல் கண்மண் தெரியாத அளவு கோபம்  வந்தது.
“இஞ்சிமா!! என்ன பாருடா!!! இங்க பாருடா” என்று அவள் கன்னத்தில் தட்டியவாறு அவன் அவளை எழுப்ப முயற்சிக்க…
“ ஹீரோ  என்ட்ரியா???… ஹும்!” என்ற அலட்சிய குரலொன்று அவனை கலைத்தது!
அந்த குரலுக்கானவனை கண்டுக் கொண்டவனாக  நரேந்திரன் எழ அவனைத் தடுப்பதுபோல  அவன் கையை பற்றியிருந்தாள் அவள்!
அவன் கேள்வியாய் அவளைப் பார்க்க அவனை  வேண்டாம் என்பதாக தலையசைத்தாள். அவன் கைபற்றி எழ முயற்சித்தவளை அவன் தூக்கிவிட்டு அனைத்தவாறு பிடித்துக் கொள்ள
“அடேங்கப்பா!  அவ கண்ணசைவுக்கே கட்டுப்படுறீயாக்கும்??? “ என்றவனின் ஏளன குரலில்
“உன்ன!!!” என்றவன் ஓரெட்டு எடுத்து வைக்க ராகவேந்திரனோ நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
“என்ன…என்ன செய்வ??? சொல்லு என்ன செய்வ???” என்று வந்தான்.
அவனது சட்டையை பிடித்திருந்தவனோ வெறுத்தவனாக தலையிலடிக்கொண்டான்.
“இவள வச்சு நான் உன்ன அவமானப்படுத்தல……” என்றவன் சொல்லிக் கொண்டேபோக  இதற்குமேல் தாங்காது என்பதுபோல கத்தியிருந்தான் நரேந்திரன்.
“அறிவு கெட்டவனே!! அவ உன் தங்கச்சிடா!!!” என்று அவன் கத்திவிட அவன் உரைத்ததின் அர்த்தம் விளங்கவே சற்று நேரம் பிடித்தது மற்றவனுக்கு.
நொடி தாமதிக்காமல் அவளை தாங்கியவனாக வண்டிக்கு அழைத்துச் சென்றவன் அருவிக்கரைக்குச் சென்றிருந்தான்.
ஏன்..எதனால்??? என்று குழம்பியவனுக்கு எல்லாம் தன்னால்தான் என்றவுடன் ஏனோ மனம் வலித்தது!
உயிர் நண்பன் இன்று எதிரியாய் நிற்கிறான்..
விரும்பியவளோ சுயநினைவற்று கிடக்கிறாள்..
தான் எதில் தவறினோம்?? என்று விளங்காமல்போக வண்டியை நிறுத்தியவன் அவளை இரு கைகளிலும் ஏந்தியவாறு அழைத்துச் சென்றான்.
அந்த இடம் அவ்வளவாக யாரும் வராத பகுதி! அதனால் யார் கவனத்திலும் விழப் போவதில்லை!  
அவளை அழைத்துச் சென்றவன் சடசடவென கொட்டிய அருவியின் அடியில் அவள் தோள்களை பிடித்தவாறு தள்ளி நிறுத்தினான்.
அவள் தெளியும்வரை!
‘ஏன்டா உனக்கு மட்டும் இப்படியெல்லாம்???’ என்றவன் உள்ளம் புலம்பிக் கொண்டிருந்தது.
அவள் சற்று தெளியவும்  பாறை ஒன்றில் அமர வைத்தவன் காய்ந்திக்கொண்டிருந்தான்.
“எவன் என்ன குடுத்தாலும் குடிச்சிருவியா???”
“குடுத்தது என் அண்ணா”
“மண்ணாங்கட்டி! என்ன குடுக்கறானுகூடவா யோசிக்கமாட்டே???” என்றவன் அவள் அமைதியாகிவிட தன் செயலை வெறுத்தவனாக…
“ஐம் சாரி இஞ்சி!..” என அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக அவளை கை தாங்களாக அழைத்துச் சென்றான்.
அவர்கள் நேரத்திற்கு அந்நேரத்தில் வீட்டில் எல்லோரும் வேலையாக இருக்க  யார் கவனத்தையும் கவராத வண்ணம் அவளை அவள் அறைக்கு அழைத்துச் சென்றான்.
“நீ கொஞ்சம் தூங்கு இஞ்சிமா…தூங்கி எழுந்தா கொஞ்சம் தெளியும்…” என்றவன் திரும்ப அவன் கைபற்றி தடுத்தவள்
“அவன்கூட சண்டை போட போறீயா???” என்றவளின் கண்களை படித்தவன்போல
“இல்ல…” என்றுவிட்டு அவன் அகன்றான்.
#################
அந்த பெரிய அளவிலான ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த அமரேந்திரனின் கவனத்தை கலைத்தது அந்த குரல்!
“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா????”
மின்னுவாள்…..

Advertisement