Advertisement

                     மின்னல்-7

 

வாழ்க்கையில் ஒரு சிலரைப் பார்த்தவுடனே பிடித்துவிடும்…சிலரிடம் முதல் சந்திப்பிலேயே ஒருவித ஒதுக்கம் தோன்றிவிடுமென்றால்…சிலரிடம் நெருக்கம்…!

 

அப்படித்தான் லீலாமதிக்கும் நரேந்திரனை கண்டவுடன்…!

 

ஏதோ நெருங்கிய உறவினனைக் கண்ட உணர்வு…! இவன் பாதுகாப்பானவன் என்ற உணர்வும்கூட இல்லையெனில் அவனை அடுக்களை வரை அனுமதித்திருப்பாரா…இல்லை வார்த்தைக்கு  வார்த்தை அவனுடன் சேர்ந்து கிண்டலடித்திருப்பாரா என்பது சந்தேகமே…!

 

அவர்களது குடும்பம் அவர்களுக்கு ஒரு குட்டி சொர்க்கமென்றே சொல்லலாம்….இன்பக்கூடு அது…!

 

என்னதான் “ஃப்ரெண்ட்லியான குடும்பம்” என்றாலும் அவர்களது இன்பக்கூட்டுக்குள் ஒரு அந்நியனை அனுமதிப்பது சந்தேகமே…ஏன் அஷ்மிதா அவனை வீட்டிற்கு அழைத்ததே அதிசயம்தான்…கலகலப்பான மக்கள்தான்…ஆனால் குடும்பென்றால் எதையும் செய்யக்கூடியவர்கள்…அப்படியொரு பாசப்பிணைப்பு…!

 

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழும் மக்கள்…!

 

ஜிதேந்திரன்-லீலாமதி…புவியின் ஸ்டைலில் சொல்வதென்றால்

சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் சூர்யா-ஜோதிகா…(முதல் பாதியில் மக்களே) கலகலப்பான அப்பா அம்மா…இல்ல அப்பூ அம்மூ…!

 

தோழனாய்…! இன்னொரு அன்னையாய்…

ஜித்தேந்திரன்…! என்றால்

 

சிநேகிதியாய்…! சில சமயம் அதட்டலாய்…பல சமயம் இன்னொரு தந்தையாய்…

லீலாமதி…!

 

ஒருத்தரைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியாதது என்று எதுவுமில்லை அந்த கூட்டில்…!

 

நட்பாய் ஒரு குடும்பம்…!

 

வெளியே வெயில் தாழ்ந்திருக்க…இதமான ஒரு மாலைப் பொழுதிற்கு தயாராகிக்  கொண்டிருந்தது…

 

காட்டமான மிளகு ரசத்தின் பலனால் உண்ட மயக்கம் சற்று தெளிந்தாற்போல் இருக்க…

 

கடிகாரத்தைப் பார்த்தவன் அதுவோ மணி மூன்றாக சில நிமிடங்கள் இருப்பதாக கூறியது.

 

ஒரு பக்கம் கிளம்பனுமா என்றிருந்தாலும் மறுநொடியே வீட்டில் அவன் பாதியில் விட்டு வந்த வேலைகளெல்லாம் அவன் கண்முன் நர்த்தனமாட ‘வேற வழியே இல்ல…ஊற வச்ச துணிய தொவைக்கலனா நம்ம பொழப்பு நாறிடும் நாறி’ என்றெண்ணியவன்  லீலாவிடம்…

 

“சரி ஆன்ட்டீ அப்போ நான் கிளம்பறேன்” என்றான்.

 

“ஏன்பா இன்னும் கொஞ்ச நேரம் இரேன் காபி சாப்ட்டு கிளம்பலாம்”.

 

“இல்ல ஆன்ட்டீ நிறைய வேலை இருக்கு வீட்டுல…இன்னொரு நாள் காபி என்ன டிபன்ல இருந்து டின்னர் வரை இங்கதான்!!!”. என்றுவிட்டு கிளம்பினான்.

 

“ஏன்மா உனக்கு உண்மையிலேயே அவன் மேல கோவமில்லையா…?” அவனை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த லீலாவிடம்  அஷ்மிதா கேட்ட  முதல் கேள்வி…!

 

ஏனெனில் அவளுக்குமே முதலில் கோபம்தான்…அஷ்மிதா பொதுவாகவே எல்லார் பக்கத்து நியாயத்தையும் யோசிப்பவள்…அப்படியிருக்கையில் இது சின்ன விபத்து என்பதால் விட்டுவிட்டாள். ஆனால் லீலாமதி…அதான் கேட்டுவிட்டாள்.

 

“நல்ல பையன்டா…இவன் வேணும்னே நம்ம யாழிய ஹர்ட் பண்ணிருக்க மாட்டான்…அவன் கண்ணுல பாத்தியா…? தப்பில்ல ஆனா உண்மையான வருத்தம் இருந்தது…” என்றவரை அவள் ஆச்சர்யமாக நோக்க அவரோ

 

“சரி சரி அவ எப்போ வருவா…? ஏதாவது சொன்னாளா…?” என்று கேட்டார்.

 

“இல்லம்மா அப்போ கூப்டதுதான்…கொஞ்சம் டைம் ஆகும்போல அவளே கூப்பிடறேன்னு சொல்லியிருக்கா”.

 

“ஓ…அப்போ சரிடா நாம கடைக்கு போய்ட்டு வரலாமா…?”

 

“இதோ கிளம்பறேன்மா!!” என்றுவிட்டு  கிளம்பச் சென்றாள்.

 

                           ***********

 

“அடி ஆத்தாடீ!!! இளமனசொன்னு இரக்க கட்டி பறக்குது சரிதானா…” என்று தனக்கு தெரிந்த அந்த இரு வரிகளை மட்டும் மனதுக்குள் ரிபீட் மோடில் போட்டவாறு அந்த பெரிய காரிடாரிலிருந்த கூட்ட நெரிசலுக்குள் குதிக்கலாமா இல்லை வேணாமா…? என்ற யோசனையில் இருந்தவளை

 

‘சரியே இல்ல’ என்பது போல் தடுத்து நிறுத்தியது அந்த லெக்சரரின் குரல்…!

 

செவனேனென்னு போய்க் கொண்டிருந்தவளிடம்…படபடப்பாக

 

“Kurinji!!! Call that blue shirt…quick quick!!” என்று பதற அவளோ

 

‘எவன்டா அந்த ப்ளூ ஷர்ட்’ என்று எட்டிப் பார்த்தால்…அந்த கூட்டத்தில் சற்று தள்ளி சென்றுக் கொண்டிருந்தான்…இங்கு இவரோ “ஓடு ஓடு!!!” என்று விரட்ட

 

‘இரும்மா போறேன்!!!’ என்று அந்த கூட்டத்தில் நுழைந்து பலரை இடித்து…பலரிடம் இடி வாங்கிய படி “எக்ஸ்க்யூஸ் மீ!!!….ப்ளூ ஷர்ட்!!!”

என்று அவள் கத்த அவனோ விடுவிடுவென நடந்துக் கொண்டிருந்தான்.

‘டேய் ப்ளூ ஷர்ட்!!! நின்னு தொலையேண்டா!!!’ என்று இடித்துப் பிடித்துக் கொண்டு ஓட நடுவில் ஒரு கரம் அவளைத் தடுத்தது.

 

‘எவன்டா அவன் நேரம் காலம் தெரியாம…’ என்றுப் பார்த்தவள் அந்த கையின் சொந்தக்காரி புவனா என்றதும் “எரும!!! பெரிய பேய் படத்துல வர பேய்னு நினைப்பு கைய ஊடாலதான் விடுவீங்களோ…?  ப்ச் இப்போ பாரு மிஸ் பண்ணிட்டேன்”.

 

“மேடம் பெரிய ‘நானும் ரௌடிதான்’ நயன்தாரா டேய் ரெட் டீஷர்ட் மாதிரி ப்ளூ ஷர்ட் ப்ளூ ஷர்ட்னு ஏலம் விடுற…அவனும் கடவுள் விட்ட வழிங்கற ரேஞ்சுக்கு போய்ட்டிருக்கான்…” இவள் பேசிக்கொண்டேப்போக  குறிஞ்சி பார்வையாலேயே அந்த ப்ளூ ஷர்ட்டை தேடியவள் அவன் க்ளாசிற்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு நகர…புவனாவும்

 

“இரு நானும் வரேன்!!!” என்று அவள் பின் ஓடியவள் அறை வாசலிலேயே நின்றுவிட்டாள். இவள் கேள்வியாக நோக்க பான்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோனைக் காட்டி  உள்ளிருந்தவரையும் காட்ட அதைப் புரிந்தவளாக

 

“எக்ஸ்க்யூஸ் மீ சர்!!!” என்று உள்ளே நுழைந்தாள் குறிஞ்சி.

 

“எஸ்!!! என்ன வேணும்…?”

 

“சாரி டூ டிஸ்டர்ப் யூ சர் அஞ்சலி மேம் ஒரு ஸ்டூடென்ட்ட கூப்டாங்க!”

 

“ஓ…யாரு?” என்று வினவியவரிடம் அவள் என்னவென்று சொல்வாள்

 

“அந்த ப்ளூ ஷர்ட் சர்” என்றுவிட அவளை ஒரு முறை ஏற இறங்க பார்த்தவரோ அங்கேத் திரும்பி

 

“சஞ்சய்!!!” என்றழைத்து இவளை கை காட்ட அவனிடம் “அஞ்சலி மேம் கூப்டாங்க”. என்று கூறியவள் முதல் வேலையாக புவனாவை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை காலி செய்தாள்.

 

                                   **********

 

“அம்மூ!!! அஷ்மீ!!! கதவ தொறங்க சீக்கிரம்” என்று குரல் கொடுக்க கதவைத் திறந்த அஷ்மியோ “எப்படி போச்சு இன்னைக்கு…?” என்றாள் ஆர்வமாக.

 

“தாறுமாறா  போச்சு!!!”என்று அங்கிருந்த சோஃபாவில்  ‘தொப்’ என்று அமர்ந்தவள் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் ஒப்பித்தாள்.

 

கேட்டுக் கொண்டிருந்த அஷ்மிக்கோ தலை சுற்றல் ஒன்றுதான் பாக்கி.

 

அடுத்தகட்டமாக அடுக்களையை நோக்கி படையெடுத்தவள்…பூனை பாதம் வைத்தபடி தனக்காக காபி போட்டுக்கொண்டிருக்கும் லீலாவை பின்னிருந்து அனைத்து கொள்ள…

 

“ஹே!!! வாண்டு இப்போ ஒரு நிமிஷம் எல்லாத்தையும் கொட்டிருப்பேன்”.

என்று பதற.

 

திடீரென அங்குமிங்கும் பார்த்தவள் “யாராவது வந்தாங்களாமா…?” என்று சரியாக யூகித்தாள்…உள்ளுணர்வில்…!

 

“ஆமாடா நரேன் வந்திருந்தான்”.

 

“நரேனா…? யாரது…?”

 

“அஷ்மியோட ஃப்ரெண்ட்!”.

அவருக்கென்னவோ அவன் நெருங்கிய உறவினன்போல் தோன்றவிட அப்படி சொல்லியிருந்தார். குறிஞ்சி யாரது…? என்று கேட்ட பின்பே நினைவு வந்தவராக விளக்கினார்.

 

“ஓ…” என்றவாரே ஃப்ரிட்ஜை திறக்க அவளை ‘வா வா பக்கம் வா’ என்றழைத்தது அந்த ஸ்வீட் பாக்ஸ்!!!

 

அதைப் பார்த்துவிட்டு “என்னமா ஸ்வீட்லாம்…?” என்க

 

“அதுவா…மொத தடவை வரான்ல அதான் ஸ்வீட் பாக்ஸ்”.

 

“என்னது???!” என்று அதிர்ந்தவளுக்கு முதல் முறை ஸ்வரா இனிப்பு வாங்கி வந்ததும் அதை புவன் அங்கேயே பிரித்து மேய்ந்ததுமே நினைவிலாட…அஷ்மியிடம் வந்தவளோ ஒரு சந்தேகப் பார்வையுடனே

 

“அஷ்மி!!! அந்த நரேன்கிட்ட நீ ஏதாவது சண்டை போட்டியா…?” என்று வினவ இந்த திடீர் கேள்வியில் அதிர்ந்த அஷ்மி ‘இவ எதுக்கு இப்படி கேக்குறா…ஒரு வேலை தெரிஞ்சிருச்சோ…?’ என்றெண்ணியவாரே

 

“இல்லையே ஏன்…?”

 

“இல்ல ஸ்வீட் பாக்ஸ்லாம் வந்துருக்கே…ஒரு வேலை நீ சண்டை போட்டு…உனக்கு ஆப்பு வைக்கறதா நினைச்சு பேதி மருந்து ஏதாவது  கலந்திருந்தா…அதான் ஒரு முன்னெச்சரிக்கைக்கு….”

 

“அம்மா இஞ்சியாரே!!! முன்னெச்சரிக்கை முனுசாமியே!!! அப்படியேதுமில்லை தாங்கள் சுவைத்துப் பார்க்கலாம்”. என்றாள் நாடக பானியில்.

 

அவளும் விட்டுக்கொடுக்காமல் “அப்படியென்றா சொல்கிறீர்கள்…சரி பாப்போம்”. என்றாவாறு வாயில் வைக்க அதுவோ தொண்டைக்குழிக்குள் வழுக்கிச் சென்றது.

 

“அடடே என்ன ருசி என்ன ருசி!!!” என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்க

 

“இளவரசியின் ஆனந்ததிற்கு காரணம் என்னவோ…?” என்றவாரே என்ட்ரீ கொடுத்தார் நம்ம சூர்யா…இல்ல ஜிதேந்திரன்…!

 

“வாருங்கள் தந்தையாரே!!! நீங்களும் இதை சுவைத்துப் பாருங்கள்…சகோதரி! தாயாரை அழைத்து வருகிறீர்களா…?”

 

” வாருங்கள்!!! குடும்பமாக கும்மியடிக்கலாம்!!!” என்று கத்த

 

“நான் வரலபா இந்த ஆட்டத்துக்கு!!” என்று பின்வாங்கிய லீலாவைப் பார்த்தவள்.

 

“அப்டியெல்லாம் சொல்லப்பிடாது லீல்!!!” என்று பிடித்து இழுத்து…ஜிதேந்திரனிடம் திரும்பி “ஹ்ம்ம்…என்ன பார்க்கிறீர்கள் கிளப்புங்கள்…” என்க  அந்த இடமே அதகளமாகியது.

 

                             ***********

 

“குட்நைட் மக்களே!!!” என்ற இரவு வணக்கத்துடன் இரு மகள்களும் உறங்கச் சென்றுவிட…

 

‘சொல்லலாமா….வேண்டாமா…?’ என்று ஆழ்ந்த சிந்தனையில் சிக்கெடுத்துக் கொண்டிருந்த லீலாவைப்  கவனித்தவர்.

 

“என்ன யோசனைலாம் பலமாயிருக்கு…?” என்ற ஜித்தேந்திரனைப் பார்த்தவர் ‘சரி சொல்லிருவோம்’ என்று முடிவெடுத்தவராக ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட…அவரிடமோ மௌனம்…!

 

“ஜித்தேன்…” என்றவரால் சத்தியமாக அந்த முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லைதான்…

Advertisement