Nenjai Koithaal Vanji
மகளுக்கென வரன் பார்த்திருந்தார் நம்பி. காலை உணவின் போது அம்மா, மகள், தர்மா என மூவருக்கும் பொதுவாக விவரம் சொன்னார்.
பாட்டிக்கு சரிதான் என்றே தோன்றியது. கனி தர்மாவை பார்த்தாள்.
“பார்க்க வர சொல்லலாம்னு இருக்கேன்” என்றார் நம்பி.
“அவசர பட வேணாம் மாமா, விசாரிச்சிட்டு சொல்றேன்” என தர்மா சொல்லவும், தள்ளி போடாமல் சீக்கிரம் செய் என...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -3
அத்தியாயம் -3
இரண்டு நாட்களாக கனிஹாவின் நேரம் நிதிலாவுடன் மிகவும் கொண்டாட்டமாக கழிந்திருந்தது.
ஏதோ வேலையாக புதுக்கோட்டை வந்திருந்த தர்மா, கனியையும் அழைத்து சென்று விடலாம் என வீட்டுக்கு வந்திருந்தான். கல்லூரி முடித்து முன்பே வீட்டுக்கு வந்திருக்க வேண்டிய அஜய் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
நேரத்தை பார்த்தவன், “என்ன அவனை இன்னும் காணோம், ஏதும்...
தோழிகளுடன் வெளியே செல்லக் கூட கட்டுப்பாடுகள் உண்டு, அப்பாவிடமும் அத்தையிடமும் பொய் சொல்லவும் கனிக்கு வராது. இருவரும் அவர்களின் அடக்குமுறைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டுமென்றால் தர்மாவின் உதவியைத்தான் நாடுவாள்.
அவனும் சில எல்லைகளுக்கு உட்பட்டு அவளை சுதந்திரமாக இருக்க விடுவான். இல்லையென்றால் அவனே சென்னைக்கு நேரில் வந்து அவளை வெளியில் அழைத்து சென்று வேண்டியது செய்து...
தன் கடுமையை தூர வைத்து விட்டு நிதானமாக அவனை கையாள ஆரம்பித்தார் நம்பி. பதப் படுத்தும் தொழிற்சாலைக்கு தன்னுடன் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.
அப்பா எனும் உறவின்றி வளர்ந்த தர்மாவுக்கு நம்பியை பிடிக்க ஆரம்பித்து விட்டது. மனைவியின் இறப்புக்கு பின் மகளை கூட தள்ளி நிறுத்திவிட்ட நம்பிக்கும் தர்மா நெருக்கமானவாகிப் போனான்.
மாமன் இருக்கும் தைரியம் என்பதை...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -2
அத்தியாயம் -2
“தம்பியண்ணா கொஞ்சம் வேகமா டிரைவ் பண்ணக்கூடாதா?” சலித்துக் கொண்டாள் கனிஹா.
“அண்ணனுக்கு தெரிஞ்சா திட்டி குமிச்சிடுவார், கார் ரேஸ் கணக்கா பறக்க ரோடு நல்லாருக்க வேணாமா?” எனக் கேட்டான் ஆசைத் தம்பி.
“ஏதாவது சொல்லுங்க” எனும் போதே அவளுக்கு தர்மா அழைத்தான்.
வீட்டில் இறங்கி விட்டு உடனே ஆசைத்தம்பியை அனுப்பி வைத்து விட...
தான் அழுதும் சமாதானம் செய்யவில்லை என்பதில் ரோஷம் கொண்டவள் பாதி வழியிலேயே காரை நிறுத்த சொன்னாள்.
“நான் அத்தை வீட்டுக்கு போறேன், ஸ்டாப் பண்ணுங்க” என அவள் சொன்னதை கேட்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை அவன்.
கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்த படி இருந்தாள். பிரயாணம் முழுக்க அப்படித்தான். வீடு வரவும் லக்கேஜ்களை இறக்கினான் தர்மா.
மகளை...
அங்கிருந்தவர்களின் கண்களில் பயம் குறைந்து ஒருவித திருப்தி படர்ந்தது.
குறுகிய காலத்துக்குள் தர்மாவும் அவனுக்கென அங்கே ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
பொது இடத்தில் நேருக்கு நேர் ஒருவன் தன்னுடன் மோதுவதே தன் மீதான மதிப்பை குறைத்து விடும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர் நாதன். ஆகவே, “சின்ன பசங்களோட என்னடா வெட்டி பேச்சு, கிளம்புங்க” என...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -1
அத்தியாயம் -1
அந்த நடு இரவில் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த வீதியில் மக்கள் விழித்துக் கொண்டனர். வெகு நாட்களாக படுக்கையில் கிடந்த தனபாக்கியம் இயற்கை எய்தி விட்டார்.
திடீர் மரணம் இல்லை, சொல்லப் போனால் இப்படி வலி வேதனையோடு அல்லாடுவதற்கு விரைவில் போய் சேர்ந்தால் நல்லதுதான் என்ற...