Nee Ninaivaa Unarvaa
அத்யாயம் 15:
ஆராவின் வார்த்தையையும் மீறி மறுநாள் அவளைத் தயார் செய்வதற்காகவே ஒரு பெண்ணை வரவழைத்திருந்தான் சத்ய ஜெயதேவ். அந்த பெண்ணிடம் மாட்டிக் கொண்டு ஆரா படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
“மேம் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கும்” என்று அந்த பெண் சொல்ல,
ஏற்கனவே மித்ரா அவள் பிளௌவுசை சொதப்பியிருந்ததில் எரிச்சலில் இருந்தவள் அந்த...
நீ கிளம்பு யுவன். நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என்றான் தேவ்.
“ஓகே சார்” என்றபடி கிளம்பினான் யுவன்.
நாளைக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட், அன்ட் மேக்கப் மேனை வர சொல்லியிருக்கேன். உனக்கு ஓகே வா?” என்றான்.
“ஹெலோ மிஸ்டர் சத்யா! ஏதோ நீங்க சொன்னிங்கன்னு தான் பார்ட்டிக்கு வர ஓகே சொன்னேன். அதுக்காக ஹீரோயின் ரேஞ்ச்க்கு எல்லாம் என்னால...
“அது தெரியலை மித்ரா. ஆனா, இங்க வந்தப்ப இருந்த வெறுமையோ வெறுப்போ இல்லை எனக்கு. அது ஏன்னு சொல்லத் தெரியலை எனக்கு. இங்க நான் நானா இருக்கேன். என்ன வேலை ஒன்னும் செய்யாம சும்மாவே இருந்து பொழுது போக்குறது தான் கஷ்ட்டமா இருந்தது. இங்க எல்லாம் செட் பண்ணிட்டா,இனி அதுவும் இருக்காது.” என்றாள் ஆரா.
மித்ரா...
அத்யாயம் 14:
“நான் மித்ராவை மேல கூட்டிட்டு போகட்டுமா? அந்த வொர்க் ஸ்பேஸ் செட் பண்ற விஷயமா கொஞ்சம் பேசணும்” என்றாள் ஆரா தயக்கத்துடன்.
“நீ என்ன ஸ்கூல் ஸ்டூடண்ட்டா ஆரா? ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு இருக்க?” என்றாள் மித்ரா.
“அப்படி இல்லை மித்ரா. அது அவரோட பிரைவேட் ஸ்பேஸ். மத்தவங்க பிரைவேட் ஸ்பேஸ்குள்ள போறதுக்கு...
“தேவ் ரொம்ப அருமையா சமைப்பான். அவங்கப்பா உயிரோட இருந்த வரைக்கும் வாரத்துல ஒரு நாள் அவன் தான் எங்க எல்லாருக்கும் சமைச்சுக் குடுப்பான். எப்போ அவர் எங்களை விட்டு போய், குடும்ப பொறுப்பெல்லாம் அவன் தலையில விழுந்ததோ, அன்னைக்கு ஓட ஆரம்பிச்சவன் தான். இப்போ வரைக்கும் ஓடிட்டு இருக்கான். அவன் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு...
புரண்டு கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்தவன்,
“கதையில இன்னும் ஒன்னே ஒன்னு பாக்கி இருக்கு” என்றான் ஆழ்ந்த குரலில்.
“என்ன?” என்றாள் எரிச்சல் கலந்த குரலில்.
“அது” என்று நிறுத்தியவன், அவள் இடையில் கையிட்டு, தன்னோடு இழுத்து அணைத்தவன்,
“என் லவ்வர் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், இப்படி இழுத்து அணைச்சுகிட்டா அப்படியே அவ டென்ஷன் எல்லாம் மறந்து, என்னையே முட்டைக் கண்ணை...
அத்யாயம் 13:
அறைக்குள் சென்ற ஆராவிற்கு உணர்வுகள் அடங்க மறுத்தது. கால்களை இறுகக் கட்டி, அதில் முகம் புதைத்திருந்தவளுக்கு, சற்று முன் நடந்த நிகழ்வுகள் கண் முன் வர, உடல் நடக்கம் கொண்டது.
‘என்னாச்சு எனக்கு? எதுக்கு இப்படி அவன் முத்தம் குடுக்கும் போது உருகிப் போய் நின்னேன்? ஆகாது ஆகாதுன்னு சொல்லி அவனையே கட்டிப் பிடிச்சு,...
அவளை அழைத்த சிவகாமி,
“டின்னர் மேலயே குடுத்துவிட சொன்னான் ஆரா. குடுத்து விடுறேன்” என்றார்.
“நானே வந்து எடுத்துக்கிறேன் ஆன்ட்டி” என்றாள் வேகமாய்.
“பரவாயில்லைம்மா..! சர்வெண்ட் கொண்டு வராங்க” என்று தகவலை பகிர்ந்து விட்டு வைத்து விட்டார்.
டின்னரும் வர, அவனை அழைக்க அறைக்குள் சென்றாள். அவனோ கைகளை கொண்டு கண்களை மூடியவாறு படுத்திருக்க,
“சாப்பிட வாங்க சத்யா” என்றாள் அவன்...
அத்யாயம் 12:
தேவ் மீண்டும் சென்னை வர நேரம் இரவை நெருங்கியிருந்தது. உடலும் உள்ளமும் உடனே ஆராவின் தரிசனத்திற்கு ஏங்க, மனதை அடக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கிப் போய் வந்தான் தேவ்.
“யார்கிட்டயும் எதுவும் சொல்லாம எங்க போன தேவ்?” என்றான் யாதவன்.
“முக்கியமான வேலையா வெளிய போயிருந்தேன். எனி பிராப்ளம்?” என்றான் கேள்வியாய்.
“எனக்கென்ன பிராப்ளம்? அடுத்த...
“அப்பத்தான் ஒரு நாள், அந்த பையன் இறந்துட்டதா இவளுக்கு தகவல் தெரிஞ்சிருக்கு. ரெண்டு நாள் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்தா. நாங்களும் என்ன ஏதுன்னு கேட்டுக்கலை.
அன்னைக்கு ரொம்ப நேரமா அவளைக் காணாம ஆராவைத் தேடி போனா காயத்ரி. அங்க அவ இருந்த கோலம் இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது மாப்பிள்ளை.” என்றவர் ஒரு நிமிடம்...
“சொல்ல முடியாத சூழ்நிலைப்பா. பிளீஸ்ப்பா எனக்கு இப்போ மேரேஜ் வேண்டவே வேண்டாம். இதை அவங்க முன்னாடி சொல்லக் கூடாதுன்னு தான் உங்ககிட்ட இப்பவே சொல்றேன்” என்றாள்.
“சரி பையன் என்ன பண்றான்?” என்றார்.
இதற்காகத் தானே ஆரா பயந்தது. என்னவென்று சொல்வாள் அவரிடம் பதிலை. பேசத் தயங்கி நின்றவளைப் பார்த்தவருக்கு ஏதோ புலப்பட துவங்கியது.
“நீ சொன்ன அந்த...
அத்யாயம் 11:
திருச்சியில் இருந்த அந்த புகழ் பெற்ற செவன் ஸ்டார் ஹோட்டலின் அறையில் இருந்தான் சத்ய தேவ். அவனின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்த ரவிக்குமாருக்கு எதுவும் புரியவில்லை. தேவ் காலையில் திடுதிப்பென்று போன் செய்து தன்னை இந்த ஹோட்டலுக்கு வருமாறு சொல்லவும், பதட்டத்துடன் தான் கிளம்பி வந்திருந்தார்.
‘ஏன் அமைதியா இருக்கார்? நேத்து தான சென்னையில...
“கொஞ்சம் நிறுத்துறியா?” என்று கத்தியவன்,
“நானும் பொறுமையா இருக்கணும்னு தான் ஒவ்வொரு முறையும் ட்ரை பண்றேன். ஆனா, அதை ஒவ்வொரு முறையும் பிரேக் பண்ண வைக்கிறதே உன்னோட பேச்சு தான். இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ரியாக்ட் பண்ற? இந்த இண்டஸ்ட்ரில சின்ன விஷயம் கூட கவனிக்கப்படும். எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. பிடிக்குதோ...
“நோ..! அது சரியா வராது. நான் நடந்த எல்லாத்தையும் அப்பாகிட்ட சொல்லி இந்த சம்பந்தத்தை நிறுத்த ட்ரை பண்றேன்” என்றாள் ஆரா.
“அதுக்கு மேல உன்னோட விருப்பம். ஆனா, உன்னோட பாட்டி அவ்வளவு சீக்கிரம் நீ சொல்றதை ஏத்துப்பாங்கன்னு மட்டும் நினைக்காத” என்றாள் மித்ரா.
அதே நேரம் அங்கே ஓடிக் கொண்டிருந்த டிவியில் பிளாஷ் நியூஸ் போய்...
அத்யாயம் 10:
நினைவு:
ஜெய் சென்று ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தது. ஆராவால் அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனும் அதற்கு பிறகு அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அவனின் நினைவில் ஆரா தான் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போனாள். அவள் இப்படி இருப்பதைப் பார்த்த வீட்டினருக்கும் ஒன்றும் புரியவில்லை. எவ்வளவு முயன்றும் அவர்களால் அவள் வாயிலிருந்து ஒன்றையும்...
அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவன் போனுக்காக காத்திருந்தாள். அவனிடமிருந்து எந்த காலும் வரவில்லை. இப்போது இவள் டயல் செய்ய ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவேயில்லை.
மறுநாள் கல்லூரி விடுமுறையாய் இருக்க, கிளம்ப வேண்டிய அவசியமின்றி அப்படியே பித்துப் பிடித்தவளைப் போல் இருந்தாள்.
அறைக்குள் வந்து அவளைப் பார்த்த காயத்ரிக்கு தான் அதிர்ச்சியாய் இருந்தது.
“ஆரா...
“நாளைக்கு நீ சொன்ன டெம்பில் ரொம்ப ரஷ்ஷா இருக்கும். என்னால அங்க மாஸ்க் இல்லாம வர முடியாது. உனக்கு என்னைத் தான பார்க்கணும். இங்கயே பாரு.ஆனா அதுக்கப்பறம் எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம். கோபப் படக்கூடாது” என்று அவன் மாஸ்க்கை கழட்ட போக,
“என்ன பண்றிங்க ஜெய் அண்ணா?” என்ற மித்ராவின் குரலில் அவளை...
அத்யாயம் 9:
நினைவு:
அன்று கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போதும் ஜெய் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனுடன் பேச வேண்டும் என்பதற்காகவே பின்னால் ஏறியிருந்தாள். அவன் வீம்புடன் முன்னால் சென்று நின்று கொண்டான். கணேஷ் இவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
ஆராவால் அவனின் பாராமுகத்தை தாங்கவே முடியவில்லை. பேருந்து என்றும் பார்க்காமல் அழுது விட்டாள்....
“என்கிட்ட பாக்கெட் மணி சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. அப்பறம் நீங்க வாங்கித் தந்த செயின், ரிங் எல்லாம் வித்துட்டு சின்னதா ஏதாவது ஸ்டார்ட் பண்ணுங்க. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கலாம்.” என்றாள். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்.
“அடியே டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்..நீ சொல்றபடி பண்ணா ஊறுகா பிஸ்னஸ் தான்...
அத்யாயம் 8:
நினைவு:
தயக்கத்துடன் நின்றிருந்த மகளை யோசனையுடன் பார்த்தார் ரவிக் குமார். அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக இருக்க,
“என்னாச்சு ஆராம்மா? அப்பாகிட்ட எதுவும் கேட்கணுமா?” என்றார் யோசனையுடன்.
“அப்பா அது வந்து” என்று மென்று முழுங்கினாள்.
“என்னன்னு சொல்லுமா ஆரா” என்றார் அவரும்.
“அது வந்துப்பா, என் கூடப் படிக்கிற ஒரு பொண்ணுக்கு ஒரு பையனைப் பிடிச்சிருக்காம்....