Nee Ninaivaa Unarvaa
பார்ட்டிக்கு வந்திருந்த செலிபிரிட்டிஸ் அனைவரையும் பார்த்த ஆராவிற்கு மயக்கம் வராத குறை தான். தங்கள் திருமணத்தில் அனைவரையும் பார்த்திருந்தாலும், இப்போது அனைவரும் வித்யாசமாய் தெரிந்தனர் அவளுக்கு.
அவர்கள் அனைவரையும் பார்ட்டி உடையில் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.
“இதையெல்லாம் வியர் பண்ணி, நார்மலா எப்படி நடக்குறாங்க?” என்று ஒரு பக்கம் ஆராய்ச்சி செய்தாலும், பலரின் உடைகளையும், அதன் டிசைன்களையும் கண்கள்...
பல நாட்கள் கழித்து வீடு வந்த இளைய மகனைப் பார்த்த சிவகாமியின் மனம் வெம்பிப் போனது. யுவன் கையில் இருந்த விருதுகளைப் பார்த்த சிவகாமிக்கு மனமே ஆறவில்லை.
“என்னாச்சு தேவ்? ரொம்ப அசதியா தெரியறப்பா? பெத்தவ ஒருத்தி இருக்கான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றார் கலங்கிய கண்களுடன். அவருக்கு அந்த வீடு தான் எல்லாமே. அதிகம்...
இதுவே அவர்களின் வாடிக்கை ஆனது. தினமும் காலையும் மாலையும் அவனை ஆராவின் விழிகள் பார்வையால் தொடருவதும், அவன் பார்த்தும் பார்க்காததும் போல் இருக்க, இருவரும் அவர்கள் அறியாமல் பெயரில்லாத ஒரு உணர்வை மனதிற்குள் வளர்த்துக் கொண்டனர். அந்த கண்ணாமூச்சி ஆட்டம் கூட சுவாரஸ்யமாய் இருந்தது. ஏனோ அவன் அருகில் வந்தாலே அவளுக்கு படபடத்துப் போகும்....
“உன்னால தாங்க முடியாது. அதுவும் மித்ராவை அப்படி நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட. இதோ இப்ப பீல் பண்ற மாதிரி பண்ணுவ. அதான் உனக்குத் தெரியாம போய் வார்ன் பண்ணிட்டு வந்தேன். ஆனா ஏற்கனவே உன் கண்ணுல சிக்கியிருப்பான்னு எனக்குத் தெரியாம போச்சு. அப்பறம் மேடம் என்ன சொன்னிங்க? கேள்வி கேட்க மாட்டிங்க? ஆனா...
அத்யாயம் 22:
தேவ் கோபமாக செல்லவும் ஆரா என்ன செய்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, சிவகாமிக்கும் அதே நிலைதான்.
“இவன் பண்ண அந்த கேடுகெட்ட வேலைக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆரா. இவனுக்கு வர வர ஏன் தான் புத்தி இப்படி போகுதோன்னு தெரியலை. ஆனா, கண்டிப்பா இன்னொரு முறை இப்படி நடந்துக்க மாட்டான்மா” என்றார்...
“இல்லையே..! நான் பார்க்கும் சும்மா வெள்ளை வெளேர்ன்னு வெள்ளைப் பன்னி மாதிரி இருந்தான்” என்றாள் அவள்.
அவள் சொன்ன விதத்தில் ஆரா பட்டென்று சிரித்துவிட்டாள்.
“கொழுப்பை பார்த்தியா ஆரா இவளுக்கு. உவமைக்கு கூட நல்ல வார்த்தை வருதான்னு பாரு. வெள்ளைப் பன்னியாம்? அவன் காதுல மட்டும் விழுந்துச்சு உனக்கு சங்குதாண்டி” என்றாள் சிரிப்புடன்.
சிரித்துக் கொண்டிருந்த ஆரா அவனைத்...
நீ கிளம்பு யுவன். நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என்றான் தேவ்.
“ஓகே சார்” என்றபடி கிளம்பினான் யுவன்.
நாளைக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட், அன்ட் மேக்கப் மேனை வர சொல்லியிருக்கேன். உனக்கு ஓகே வா?” என்றான்.
“ஹெலோ மிஸ்டர் சத்யா! ஏதோ நீங்க சொன்னிங்கன்னு தான் பார்ட்டிக்கு வர ஓகே சொன்னேன். அதுக்காக ஹீரோயின் ரேஞ்ச்க்கு எல்லாம் என்னால...
“என்னை ரொம்ப தெரிஞ்சவர் போல பேசுறிங்க?” என்றாள் சன்ன சிரிப்புடன்.
“இப்ப என்னடி பிரச்சனை உனக்கு?”
“நீங்கதான் பிரச்சனை. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல்.
“அது பார்ட்டில டிரக் டேப்லட் கலந்த ஜூசை உனக்குக் குடுக்க பார்த்திருக்கா. அதை சிசிடிவி புட்டேஜ்ல பார்த்துட்டு, வார்ன் பண்றதுக்காக போனேன்” என்றான் பாதி உண்மையுடன்.
“மித்ரா எதுக்கு அப்படி பண்ணனும்?”...
“அதான் என்னைப் பார்க்க வந்துட்டு, எங்க அக்காவை பார்த்த உடனே பிளாட் ஆன மாதிரி ஆக்ட் குடுத்து, உங்க காதல் கிளியை கவர்ந்துட்டு போனிங்களா?” என்றாள் சிரிப்புடன்.
“ஆதிரா” என்று காயத்ரி அதட்டிக் கொண்டே வர,
“அடுத்து பெர்பார்ம் பண்ண வந்துட்டாங்க மாமா. உங்களை நான் வளைச்சுப் போடா ட்ரை பண்ற ரேஞ்சுக்கு இப்போ அட்வைஸ் பண்ணி...
அவள் கால்மாட்டில் அமர்ந்து அவளின் இரு பாதங்களையும் பிடித்து அதில் தலை வைத்து மன்னிப்புக் கேட்பவன் போல் குனிய, கண்கள் மூடியிருந்தாலும் உறங்காமல் இருந்தவள், அவன் செயலில் விதிர்விதிர்த்து,
“என்ன பண்றிங்க சத்யா?” என்று சட்டென்று கால்களை இழுத்துக் கொள்ள முற்பட, அவனின் பிடியில் இருந்து அவளால் பாதத்தை சற்றும் அசைக்கக் கூட முடியவில்லை. அவனின்...
“தேவ் ரொம்ப அருமையா சமைப்பான். அவங்கப்பா உயிரோட இருந்த வரைக்கும் வாரத்துல ஒரு நாள் அவன் தான் எங்க எல்லாருக்கும் சமைச்சுக் குடுப்பான். எப்போ அவர் எங்களை விட்டு போய், குடும்ப பொறுப்பெல்லாம் அவன் தலையில விழுந்ததோ, அன்னைக்கு ஓட ஆரம்பிச்சவன் தான். இப்போ வரைக்கும் ஓடிட்டு இருக்கான். அவன் மட்டும் இல்லைன்னா இன்னைக்கு...
“ஆரா”
“ம்ம்”
“லவ் பண்ணலாமா?” என்றான்.
“பசிக்குது ஜெய்” என்றாள்.
“எனக்கும் தான் பசிக்குது”
“எனக்கு சாப்பிடனும் ஜெய்” என்றாள்.
“எனக்கும் தான் சாப்பிடனும்” என்றவனை முறைத்தவள், அவனிடமிருந்து விலக முற்பட,
“ஐ லவ் யு டி என் அரைவேக்காட்டுக்காரி” என்றான் அவன் நெற்றியில் முட்டி.
“இப்பவாவது சொல்லத் தோணுச்சே” என்றாள்.
“இனி எப்பவும் சொல்லிட்டே இருக்கேன்,போதுமா?” என்றான்.
அவன் முன் செயினை நீட்டியவள்,
“இன்னும் இதை நீங்க போட்டு...
“அது தெரியலை மித்ரா. ஆனா, இங்க வந்தப்ப இருந்த வெறுமையோ வெறுப்போ இல்லை எனக்கு. அது ஏன்னு சொல்லத் தெரியலை எனக்கு. இங்க நான் நானா இருக்கேன். என்ன வேலை ஒன்னும் செய்யாம சும்மாவே இருந்து பொழுது போக்குறது தான் கஷ்ட்டமா இருந்தது. இங்க எல்லாம் செட் பண்ணிட்டா,இனி அதுவும் இருக்காது.” என்றாள் ஆரா.
மித்ரா...
தன் வீட்டிற்கு வந்த மகளையும் மருமகனையும் பார்த்த ரவிக் குமாருக்கும், காயத்ரிக்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அதிலும் ஆராவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தவர்களுக்கு மனம் நிறைந்து போனது. சுலோச்சனாவோ தன் பேத்தியை நீவி நீவிப் பார்க்க, அதைப் பார்த்த தேவ்விற்கு கூட சிரிப்பு வந்தது.
“உங்க பாட்டி என்ன உன்னை இந்த தடவு தடவுறாங்க?...
“என்ன திடீர்ன்னு? உங்களுக்கு தான் ஸ்டேட்டஸ் முக்கியமே. நானெல்லாம் உங்க அளவுக்கு ஸ்டேட்டஸ் கிடையாது.” என்றான் கணேஷ்.
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். கண்டிப்பா எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம். நான் இப்படித்தான். இப்படித்தான் இருப்பேன். எனக்கு ஒளிச்சு மறைச்சு நடிச்சு இந்த பிலா பிலா வேலையெல்லாம் தெரியாது. ஸ்ட்ரெயிட்டா பாய்ண்ட் தான். ஸ்டேட்டஸ்...
“என்னாச்சு?” என்றாள்.
“இன்னும் என்ன ஆகணும்? அதான் பிளான் பண்ணி அண்ணன் தம்பிக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுட்ட இல்ல. இப்ப உனக்கு சந்தோஷமா?” என்றாள் சாரு.
“என்ன உளர்றிங்க?” என்று அவளை முறைத்த ஆரா,
“சத்யா கதவை திறங்க” என்று வெளியே இருந்து அழைக்க,
“இப்போ சொல்லப் போறியா இல்லையா யாதவ்? உனக்கு எப்படி தெரியும்?” என்றான் மீண்டும்.
“அ..அது..! ஷூட்டிங் ஸ்பாட்ல...
அத்யாயம் 15:
ஆராவின் வார்த்தையையும் மீறி மறுநாள் அவளைத் தயார் செய்வதற்காகவே ஒரு பெண்ணை வரவழைத்திருந்தான் சத்ய ஜெயதேவ். அந்த பெண்ணிடம் மாட்டிக் கொண்டு ஆரா படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
“மேம் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கும்” என்று அந்த பெண் சொல்ல,
ஏற்கனவே மித்ரா அவள் பிளௌவுசை சொதப்பியிருந்ததில் எரிச்சலில் இருந்தவள் அந்த...
அத்யாயம் 20:
தன் அணைப்பில் கலைந்த ஓவியமாய் உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்கத் தெவிட்டவில்லை தேவ்விற்கு. மனதில் இருந்த வெறுமை எல்லாம் நீங்கியிருந்தது அவளால். அத்தனை குழப்பங்களுக்கும், சஞ்சலங்களுக்கும் அவளையே தீர்வாகக் கொடுத்திருந்தாள் அவனுக்கு. அவனின் ஆறு வருட தவிர்ப்பிற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருந்தாள். இருந்தாலும் போதவே இல்லை அவனுக்கு. அவனுக்கு எப்போதும் தெளியாத போதையே...
அவளின் வார்த்தைகளில் அவளை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், அவள் சொன்ன விஷயத்தையும் விட்டுவிடவில்லை.
“சைக்கிள் கேப்ல என் பொண்டாட்டியை மெண்டல்னு சொல்ற?” என்றவன் சிரிக்க,
“நான் எங்க சைக்கிள் கேப்பில் சொன்னேன். டேரக்ட்டாவே தான் சொல்றேன். உங்க பொண்டாட்டி மாதிரி ஒரு சிறந்த மெண்டலை இந்த உலகத்துலையே பார்க்க முடியாது. என்ன கொஞ்சம் அழகான மெண்டல். அதான்...
போலீஸ் வரவும், மித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரித்து இறுதியில் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தியிருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையும் அதையே உறுதிப்படுத்தியிருந்தது.
மறுநாள் இறுதி சடங்கு முழுமைக்கும் ஆரா கூடவே இருந்தாள். ஆதிராவும், கணேஷும் அவள் கூடவே இருந்தனர். கடைசி வரைக்கும் மித்ரா எதனால் தற்கொலை செய்து கொண்டாள் என்று யாருக்கும் தெரியாமலேயே...