“கொஞ்சம் நிறுத்துறியா?” என்று கத்தியவன்,

“நானும் பொறுமையா இருக்கணும்னு தான் ஒவ்வொரு முறையும் ட்ரை பண்றேன். ஆனா, அதை ஒவ்வொரு முறையும் பிரேக் பண்ண வைக்கிறதே உன்னோட பேச்சு தான். இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ரியாக்ட் பண்ற? இந்த இண்டஸ்ட்ரில சின்ன விஷயம் கூட கவனிக்கப்படும். எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. பிடிக்குதோ பிடிக்கலையோ, அந்த இமேஜை நான் மெயின்டெயின் பண்ணித்தான் ஆகணும். நானும் யாரோ ஒருத்தியை பொண்டாட்டியா நடிக்க கூப்பிடலை. தாலி கட்டுன சொந்த பொண்டாட்டியை தான் பார்ட்டிக்கு கூப்பிடுறேன்.நீ நடந்துக்கிறதைப் பார்த்தா, அதையெல்லாம் ஒரே நாள்ல காலி பண்ணி விட்ருவ போல ஆரண்யா. பார்டியும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம். நீ ப்ரியா இரு” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

 அவனின் பேச்சில் தணிந்தவள்,

“சாரி..! உன் இமேஜ் என்னால கெடாது. நீ சொன்ன மாதிரியே எல்லாம் பர்பெக்ட்டா வரும்.நீ பார்ட்டிய கேன்சல் பண்ணனும்னு நான் நினைக்கலை.ஓரளவுக்கு உன்னோட ப்ரோபஷன் பத்தின நாலேஜ் எனக்கும் இருக்கு. என்னால அதுக்குள்ள வர முடியலைன்னு தான் சொன்னேன்.” என்றாள் அவனைத் தயக்கத்துடன் பார்த்தபடி.

அப்போதும் அவன் முகம் கடுகடுக்க,

“நிஜமா, இது என்னோட இயல்பே கிடையாது. நான் இப்படி பேசுறவளும் கிடையாது. என்னன்னு தெரியலை உன்கிட்ட தான் இப்படி பேச வருது. நானும் எதையாவது பேசி வச்சிடுறேன்” என்றாள் அமைதியான குரலில்.

“லிசன் ஆரண்யா..! நடந்த எதையும் உன்னால மாத்த முடியாது. ஏன் என்னாலையும் மாத்த முடியாது. ஒன்னாதான் ட்ராவல் பண்ண போறோம். உன்னால வொயிப்பா தான் நடந்துக்க முடியாது. அட்லீஸ்ட் ஒரு நல்ல ப்ரண்டாவாவது நடந்துக்கலாம் இல்லையா? எத்தனை நாளைக்குத் தான் இப்படி எலியும் பூனையுமாவே இருக்கிறதா உத்தேசம்?” என்றான்.

“ட்ரை பண்றேன் மிஸ்டர் சத்யா” என்றாள்.

“இந்த மிஸ்டர் சத்யாவை விடவே மாட்டியா” என்றான் சலிப்புடன்.

“வேற எப்படி கூப்பிடுறது?” என்றாள்.

“இந்த மிஸ்டர் மட்டும் வேண்டாம்” என்றான்.

“ஓகே சத்யா” என்றாள் இயல்பாய். அவளின் அந்த இயல்பு தானே அவனைக் கவர்ந்த விஷயம்.

“இன்னைக்கு நமக்கு செக்கேன்ட் நைட். ஆனா ஏதோ பல நாள் ஆன மாதிரி இருக்கு” என்றான். அவள் அவனை முறைக்க,

அதற்குள் சிவகாமி அவர்களை சாப்பிட அழைத்தார்.

“நீ போ ஆரண்யா. நான் வரேன்” என்றான் தேவ்.

அவளும் “ஓகே” என்றபடி செல்ல, அவள் சென்றதை உறுதிப் படுத்தியவன், அவள் மேக் புக்கைத் திறந்து ஒவ்வொரு போல்டராய் ஆராய்ச்சி செய்தான். தேடிக் களைத்து தான் மிச்சம். அவன் தேடிய எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே அடங்கியிருந்தது.

“இவளோட கல்யாண போட்டோ எதுவுமே இல்லையே?.ஏன் நார்மல் போட்டோ கூட இல்லையே?” என்று யோசித்தவனுக்கு,

“கல்யாணம் யாரு கூட நடந்திருக்கும்? அவன் எப்படி இறந்திருப்பான்? இவளுக்கு ஏன் என்னைத் தெரியலை. இல்லை நடிக்கிறாளா? நான் என் போட்டோ அனுப்பினேனே? இவ பார்த்தாளா பார்க்கலையா? அப்போ எனக்கு பதில் அனுப்பினது யாரு?” என்று யோசித்தவனுக்கு தலையே வெடிப்பதைப் போல் இருந்தது.

“யார்கிட்ட கேட்டா எல்லா விஷயமும் தெரியும்?” என்று யோசித்தவனுக்கு, சட்டென்று யோசனை பிறக்க, அப்போது தான் தெளிந்தான் ஆராவின் ஜெய்யாக  வாழ்ந்த சத்ய ஜெயதேவ்