ஆராவின் வார்த்தையையும் மீறி மறுநாள் அவளைத் தயார் செய்வதற்காகவே ஒரு பெண்ணை வரவழைத்திருந்தான் சத்ய ஜெயதேவ். அந்த பெண்ணிடம் மாட்டிக் கொண்டு ஆரா படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
“மேம் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கும்” என்று அந்த பெண் சொல்ல,
ஏற்கனவே மித்ரா அவள் பிளௌவுசை சொதப்பியிருந்ததில் எரிச்சலில் இருந்தவள் அந்த பெண்ணிடம் எறிந்து விழுந்தாள்.
“நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. இல்லையா கிளம்புங்க” என்று கத்தியிருந்தாள்.
“சாரி மேம்” என்ற அந்த பெண் வெளியே வந்து தேவ்விடம் விஷயத்தை சொல்ல, அவன் யோசனையுடன் உள்ளே சென்றான்.
“மித்ரா நான் என்ன பண்ண சொன்னேன்? நீ என்ன பண்ணி வச்சிருக்க? எதுக்கு பேக் நெக் இவ்ளோ டீப்பா இருக்கு. நான் இப்படி வியர் பண்ண மாட்டேன்னு தெரியும் தானே உனக்கு?” என்று போனில் கத்திக் கொண்டிருந்தாள்.
“ஆரா ரிலாக்ஸ்” என்ற தேவ்வின் குரலில் போனை பட்டென்று வைத்திருந்தாள்.
“என்னாச்சு? ஏன் இவ்ளோ டென்ஷன்?” என்றான்.
“இல்ல ஒண்ணுமில்லை. ஸ்டிச்சிங்ல சின்ன இஷ்யு” என்றாள் மித்ரா மேல் இருந்த கோபத்தை மறைத்தபடி.
“இதுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமா? பார்ட்டி வியர்ஸ் இப்படித்தான் இருக்கும். சோ நீ வொர்ரி பண்ண வேண்டிய அவசியம் இல்லை” என்றான் பொறுமையாக.
“வொர்ரி பண்ணனுமா? பண்ணக் கூடாதான்னு நான் தான் டிசைட் பண்ணனும். நீங்க இல்லை.” என்றாள் பட்டென்று.
அவளையே ஆழ்ந்து ஒரு நிமிடம் பார்த்தவன், அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் நிறுத்தினான்.பதட்டத்தில் தெரிந்த அவள் முகத்தை வருடியவன்,
“ஓகே,உனக்கு என்ன தோணுதோ அதையே நீ பண்ணு. பட் ரிலாக்ஸா இரு ஓகே. இப்போ டென்ஷன் ஆனா, அதே மைன்ட் செட் தான் இருக்கும். அப்பறம் எல்லாம் சரியாவே இருந்தாலும் அது தப்பா தான் தெரியும்.” என்றான் பொறுமையாக.
“ம்ம்” என்று அவள் தலையை மெதுவாக ஆட்ட,
“தட்ஸ் மை கேர்ள்”என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“டிசைனர் மேடம் அவுட்பிட்டே இப்படி சொதப்பியிருக்கே. என்னோடது சரியா இருக்குமா?” என்றான் சிரிப்புடன்.
“அதெல்லாம் சரியா இருக்கும். உங்களுக்கு புல்லா நான் தான் பண்ணேன்” என்றாள் மூக்கு விடைக்க.
“ரைட், இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும். அப்போ நான் போய் ரெடியாகவா? உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே?” என்றான் மீண்டும்.
“இல்லை” என்றாள்.
“ஓகே” என்றவன் சென்று விட, அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரா.
‘இவனுக்குள்ள ஏதோ மேஜிக் பவர் இருக்கு. இவன் பக்கத்துல வந்த உடனே டென்ஷன் எல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடிப் போயிருச்சே’ என்று யோசித்தவள், வேறு வழியின்றி அதையே அணிந்து தயாரானாள்.
அடுத்த ஒருமணி நேரத்தில் தயாராகி நின்றவளைப் பார்த்து வாய் பிளந்து நின்றான் தேவ்.
கருப்பு நிற விஸ்கோஸ் ஜார்ஜெட் புடவையில் கற்கள் பதித்து, மினிமல் லேஸ் வொர்க் பார்டரும், ஆங்காங்கே செய்திருந்த சில வேலைபாடுகளும், டிசைனர் ப்ளவுசும் அவள் வெளீர் நிறத்தை பளிச்சென்று காட்ட, பின்புறம் ஜாக்கெட் மறைக்காத பகுதிகளை, விரித்து விடப்பட்டிருந்த கூந்தல் மறைத்திருந்தது. அந்த புடவைக்கேற்ற சிம்பிள் அண்ட் எலகன்ட் ஆன ஆக்ஸ்சரீசை அணிந்திருந்தாள். அது அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தது.
அவன் பார்வையில் அவளுக்கு சங்கோஜம் வர,
“என்ன?” என்றாள் திணறியபடி.
“அப்சலூட்லி வோவ்” என்றவனுக்கு அவளிலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.
இன்னைக்கு என் ஜோலியை முடிக்காம விட மாட்ட போல இருக்கே’ என்று உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தவனை அப்போது தான் நன்றாக நிமிர்ந்து பார்த்தாள் ஆரா.
அவள் டிசைன் செய்த ஆடையில், ஆளை மயக்கும் அழகுடன் நின்றிருந்தான் சத்ய தேவ். அவனையே அவள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்க,
“எப்படி இருக்கேன்? நல்லா இருக்கேனா?” என்று கையை ஆட்டி கேட்க,
“ரொம்ப மேன்லியா ஸ்டைலிஷா இருக்கீங்க மிஸ்டர் சத்யா” என்றாள் சிறு புன்னகையுடன்.
“அவ்வளவு தானா?” என்றான் பெருமூச்சுடன்.
“வேற என்ன?” என்றாள் புரியாமல்.
அவளைப் பின்னின்று அணைத்து கண்ணாடி பக்கம் திருப்பியவன்,
“எப்படி உனக்கு மேட்சா இருக்கேனா?” என்றான் அவள் தோள்வளைவில் முகம் பதித்து. கண்ணாடியில் இருவரின் பிம்பத்தையும் பார்த்தவளுக்கு, அவன் பார்வையில் இருந்து மீளவே முடியவில்லை.
அவனுக்கோ அவளுக்குள் மூழ்கி, அவன் காணாத அவள் உலகை அவளுள் கரைந்து காண வேண்டும் என்று உணர்வுகள் கொதிக்க, அதன் கொதிநிலையை தாங்க இயலாது அவன் அணைப்பின் இறுக்கம் கூட, ஆராவிற்கோ தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் எல்லாமே காலி ஆகிப் போனதைப் போன்ற உணர்வு.
“சத்யா மூவ்” என்றாள் உள்ளே போன குரலில்.
“ஐ கான்ட் கண்ட்ரோல் மை செல்ப் ஆரா. ஐ வான்ன அ டீப் கிஸ் வித் யு” என்றான் கரகரக்கும் குரலில்.
“நோ”
“ஆரா பிளீஸ்டி” என்ற குரலில் அவள் மயங்கி நிற்க, ஒரு இதழ் யுத்தத்தை நடத்தி முடித்திருந்தான் தேவ்.
“நாம் ஏன் பார்ட்டியை கேன்சல் பண்ணிட்டு இங்க நம்ம மட்டும் பார்ட்டி பண்ண கூடாது” என்று காதோரத்தில் உஷ்ண மூச்சுடன் கேட்ட அவன் குரலில் தெளிந்தவள், அவனை முறைத்தபடி சட்டென்று விலகினாள்.
“ஆனா ஒன்னு, உன்னோட மத்த சேரீஸ் மாதிரி இந்த சேரி ஓரவஞ்சனை எல்லாம் பண்ணலை. என் பீலிங்க்ஸ் உனக்கு புரியலைன்னாலும், உன் சேரிக்காவது புரிஞ்சிருக்கு” என்று அவளை மார்க்கமாய் பார்க்க,
“சத்யா பிளீஸ். நீங்க இப்படியெல்லாம் பேசிட்டு இருந்திங்கன்னா நான் கண்டிப்பா வர மாட்டேன்” என்றாள் முகத்தை தீவிரமாய் வைத்து கொண்டு.
“நீதான் ரொமான்ட்டிக்கா பேசுறதும் இல்லை, பார்க்குறதும் இல்லை. அட்லீஸ் என்னையாவது விடலாம்ல” என்றான்.
“ஹோ தாராளமா?” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க,
“ஓவரா பன்றடி நீ. என் லவ்வர் எல்லாம் இப்படி பண்ண மாட்டா” என்றான்.
“அவளையே கட்டியிருக்க வேண்டியது தான?” என்றாள் நக்கலாய்.
‘அவளைத்தான் கட்டியிருக்கேன்’ என்று மனதிற்குள் நினைத்தவன் சிரித்துக் கொள்ள, அந்த சிரிப்பு அவனை மேலும் கவர்ச்சியாய் காட்டியது.
‘இவனை இப்படியே பார்த்துட்டு இருந்தா, இவனுக்கு மேல என்னோட நிலைமை மோசமாகிடும்’ என்று எண்ணியவள்,
“போகலாமா?” என்றாள்.
“போகனுமா?” என்றான்.
“உங்க விருப்பம். கேன்சல் பண்ணிட்டா இன்னமும் நல்லது எனக்கு” என்றவளை முறைத்தவன், அவளை தோளோடு அணைத்தபடி அழைத்துக் கொண்டு செல்ல, கீழே வந்த இருவரையும் பார்த்த சிவகாமிக்கு மனம் நிறைந்த சந்தோசம்.
ஆராவைப் பார்த்த சாருவிற்கு அவள் மீதிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.
‘செம்மையா இருக்காளே’ என்று மனதில் நினைத்தவள் வேகமாய் திரும்பி யாதவைப் பார்க்க, அவனோ அப்படி ஜொள் வடித்துக் கொண்டிருந்தான்.
“அப்பட்டமா தெரியுது, துடைச்சுக்கோ யாதவ். மவனே இப்போ தேவ் பார்க்கணும்” என்று முனுமுனுத்தாள் சாரு நிவேதா.