Nee Ninaivaa Unarvaa
“உன்னால தாங்க முடியாது. அதுவும் மித்ராவை அப்படி நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட. இதோ இப்ப பீல் பண்ற மாதிரி பண்ணுவ. அதான் உனக்குத் தெரியாம போய் வார்ன் பண்ணிட்டு வந்தேன். ஆனா ஏற்கனவே உன் கண்ணுல சிக்கியிருப்பான்னு எனக்குத் தெரியாம போச்சு. அப்பறம் மேடம் என்ன சொன்னிங்க? கேள்வி கேட்க மாட்டிங்க? ஆனா...
“நான் ஏதோ நீ சைட் அடிக்கிறன்னு நினைச்சேன்டி. ஆனா, இவ்வளவு சீரியஸா இருப்பேன்னு நினைக்கலை ஆரா” என்றாள் கவலையுடன். அவர்கள் பேசிக் கொள்வதும் ஆரா கண்களில் இருந்து கண்ணீர் வருவதும், அதை அவள் யாரும் அறியாமல் துடைத்தபடி பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தவனின் கண்கள் யோசனையில் சுருங்கியது.
யோசனையுடன் அவர்கள் அருகில் சென்று டிக்கெட்டை நீட்ட,
“எப்போதும் மித்ரா...
அத்யாயம் 2 :
நினைவு:
“ஆரா.. ஆரா” என்று வீட்டிற்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தனர் மித்ராவும், கணேஷும்.
“இதோ வந்துட்டேன்” என்றவளின் வாயில் தோசையை திணித்துக் கொண்டிருந்தார் சுலோச்சனா. ஆராவின் பாட்டி.
“பாட்டி போதும்” என்று அவள் மறுக்க, அவர் விடாமல் ஊட்டிக் கொண்டிருந்தார்.
“அவ தான் போதும்னு சொல்றால்ல. விடுங்கம்மா” என்று ரவிக் குமார் சொல்ல,
“இந்த ரெண்டு தோசை...
அத்யாயம் 25:
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
படப்பிடிப்பிற்காக மூன்று மூன்று மாதங்கள் வெளிநாடு சென்றிருந்த தேவ் அன்று தான் ஊர் திரும்பியிருந்தான். ஆராவிடம் இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லியிருந்தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வீடு வந்து சேர்ந்திருந்தான்.
அதிகாலை நான்கு மணி அளவில் வந்தவன், பக்கத்து அறையில் ரெப்ரஷ் செய்து கொண்டு சத்தமில்லாமல் தங்கள்...
அத்யாயம் 18:
கதை சொல்வதற்காக ஒரு இயக்குனர் அவர் உதவியாளருடன் வந்திருக்க, அவர்களுடன் அலுவல் அறைக்குள் புகுந்த தேவ் இன்னமும் வெளியே வந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடந்திருந்தது. ஆராவிற்கு தான் பொழுதே போகாமல் எரிச்சலாய் இருந்தது. பகல் முழுவதும் தூங்கி எழுந்தவள், குளித்து முடித்து பிரஷ்ஷாக கீழே வர, அதிசயமாய் சாரு ஹாலில்...
“என்கிட்ட பாக்கெட் மணி சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. அப்பறம் நீங்க வாங்கித் தந்த செயின், ரிங் எல்லாம் வித்துட்டு சின்னதா ஏதாவது ஸ்டார்ட் பண்ணுங்க. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கலாம்.” என்றாள். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்.
“அடியே டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்..நீ சொல்றபடி பண்ணா ஊறுகா பிஸ்னஸ் தான்...
அத்யாயம் 4:
நினைவு:
அன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர் ஆராவும், மித்ராவும்.
“இந்த கணேஷ் பய ரெண்டு நாளா ஆளே சரியில்லாம தெரியறான் மித்ரா. என்ன பிரச்சனையா இருக்கும்?” என்றாள் ஆரா.
“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்?” என்றாள் மித்ரா வெடுக்கென்று.
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி பட்டுன்னு பதில் சொல்ற மித்ரா? ஏன் அவனோட...
அவர்கள் கிளம்பி சென்றதும் அவளுக்கு என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாள் ஆரண்யா.
நாள் முழுவதும் கடையில் வேலை செய்து பழக்கப்பட்டவளுக்கு இப்படி சும்மாவே இருப்பது எரிச்சலைக் கிளப்பியது. செய்வதற்கு வேலையும் இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் அந்த வீட்டில் ஆள் இருக்க, நொந்து போனாள்.
‘எப்படித்தான் சும்மாவே இருக்காங்களோ’...
“என்ன திடீர்ன்னு? உங்களுக்கு தான் ஸ்டேட்டஸ் முக்கியமே. நானெல்லாம் உங்க அளவுக்கு ஸ்டேட்டஸ் கிடையாது.” என்றான் கணேஷ்.
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். கண்டிப்பா எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம். நான் இப்படித்தான். இப்படித்தான் இருப்பேன். எனக்கு ஒளிச்சு மறைச்சு நடிச்சு இந்த பிலா பிலா வேலையெல்லாம் தெரியாது. ஸ்ட்ரெயிட்டா பாய்ண்ட் தான். ஸ்டேட்டஸ்...
அவளை அழைத்த சிவகாமி,
“டின்னர் மேலயே குடுத்துவிட சொன்னான் ஆரா. குடுத்து விடுறேன்” என்றார்.
“நானே வந்து எடுத்துக்கிறேன் ஆன்ட்டி” என்றாள் வேகமாய்.
“பரவாயில்லைம்மா..! சர்வெண்ட் கொண்டு வராங்க” என்று தகவலை பகிர்ந்து விட்டு வைத்து விட்டார்.
டின்னரும் வர, அவனை அழைக்க அறைக்குள் சென்றாள். அவனோ கைகளை கொண்டு கண்களை மூடியவாறு படுத்திருக்க,
“சாப்பிட வாங்க சத்யா” என்றாள் அவன்...
பல நாட்கள் கழித்து வீடு வந்த இளைய மகனைப் பார்த்த சிவகாமியின் மனம் வெம்பிப் போனது. யுவன் கையில் இருந்த விருதுகளைப் பார்த்த சிவகாமிக்கு மனமே ஆறவில்லை.
“என்னாச்சு தேவ்? ரொம்ப அசதியா தெரியறப்பா? பெத்தவ ஒருத்தி இருக்கான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றார் கலங்கிய கண்களுடன். அவருக்கு அந்த வீடு தான் எல்லாமே. அதிகம்...
“சொல்ல முடியாத சூழ்நிலைப்பா. பிளீஸ்ப்பா எனக்கு இப்போ மேரேஜ் வேண்டவே வேண்டாம். இதை அவங்க முன்னாடி சொல்லக் கூடாதுன்னு தான் உங்ககிட்ட இப்பவே சொல்றேன்” என்றாள்.
“சரி பையன் என்ன பண்றான்?” என்றார்.
இதற்காகத் தானே ஆரா பயந்தது. என்னவென்று சொல்வாள் அவரிடம் பதிலை. பேசத் தயங்கி நின்றவளைப் பார்த்தவருக்கு ஏதோ புலப்பட துவங்கியது.
“நீ சொன்ன அந்த...
“நீ இந்த சீட்ல உட்காரும்மா! நாங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவோம்” என்றவர் அடுத்த ஸ்டாப்பில் மனைவியுடன் சேர்ந்து இறங்கி விட, ஆராவும் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் மித்ரா அமரப் போக, அவளைப் பார்வையால் தடுத்த ஜெய் பட்டென்று ஆராவின் அருகில் அமர்ந்தான். தனக்கு அருகில் தோள்களை உரசிக் கொண்டு அமர்ந்தவனைக் கண்டு அவளுக்கு காய்ச்சலே...
அத்யாயம் 7:
நினைவு:
பேருந்தில் சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவை உலுக்கினாள் மித்ரா.
“என்னாச்சுடி?” என்றாள்.
“என்ன இவ்வளவு சாதரணமா கேட்குற? என்னடி நடக்குது? ஜெய் அண்ணா அவர் பேசாம வந்தாரு, மோதிரம் போட்டாரு, கூடவே செயினையும் போட்டு விட்டுட்டு போறாரு. நீயும் அமைதியா இருக்க?” என்றாள் இன்னமும் அதிர்ச்சி விலகாத குரலில்.
“இப்ப என்ன பிரச்சனை மித்ரா உனக்கு? அவங்க...
அத்யாயம் 16:
“என்ன சொன்ன? திருப்பி சொல்லு?” என்றான் தேவ் ஆர்வமுடன்.
“ஹஹா..ஏமாந்தியா? இப்படித்தான நீ என்கிட்டே சொன்ன, அதான் நானும் சொல்லிப் பார்த்தேன்” என்று உளற,
“இப்ப கூட எப்படி தெளிவா இருக்கா பாரு” என்று முணுமுணுத்தவன் காரை ஸ்டார்ட் செய்ய, அவளோ புலம்பிக் கொண்டே வந்தாள்.
“ஹேய் நான் பறக்குறேன். நாம பிளைட்ல போறோமா?” என்று கத்த,
“கத்தாதடி”...
“என்னாச்சு?” என்றாள்.
“இன்னும் என்ன ஆகணும்? அதான் பிளான் பண்ணி அண்ணன் தம்பிக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுட்ட இல்ல. இப்ப உனக்கு சந்தோஷமா?” என்றாள் சாரு.
“என்ன உளர்றிங்க?” என்று அவளை முறைத்த ஆரா,
“சத்யா கதவை திறங்க” என்று வெளியே இருந்து அழைக்க,
“இப்போ சொல்லப் போறியா இல்லையா யாதவ்? உனக்கு எப்படி தெரியும்?” என்றான் மீண்டும்.
“அ..அது..! ஷூட்டிங் ஸ்பாட்ல...
“நான் வர மாட்டேனே” என்று அவள் தலையை ஆட்ட,
“போய் குளிடி. கொஞ்சமாவது மப்பு தெளியுதான்னு பார்ப்போம்” என்றான்.
“மாட்டேன் மாட்டேன், குளிக்க மாட்டேன்” என்று மெத்தையில் குதிக்க,
“விழுந்துராதடி” என்றவன் அவளைப் பிடித்து இழுக்க, அவன் மேலேயே சரிந்தாள்.
அவள் ஆட்டத்தில் அவள் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த மறை பிரதேசங்கள் எல்லாம் அவன் கண்ணுக்கு விருந்தாக, அவனுக்குத்தான்...
நீ கிளம்பு யுவன். நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என்றான் தேவ்.
“ஓகே சார்” என்றபடி கிளம்பினான் யுவன்.
நாளைக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட், அன்ட் மேக்கப் மேனை வர சொல்லியிருக்கேன். உனக்கு ஓகே வா?” என்றான்.
“ஹெலோ மிஸ்டர் சத்யா! ஏதோ நீங்க சொன்னிங்கன்னு தான் பார்ட்டிக்கு வர ஓகே சொன்னேன். அதுக்காக ஹீரோயின் ரேஞ்ச்க்கு எல்லாம் என்னால...
அத்யாயம் 21:
சுவற்றை வெறித்த படி அமர்ந்திருந்த ஆரண்யாவின் மனம் ஒரு நிலையில் இல்லை. மித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை அவ்வப்போது அவள் உணர்ந்திருந்தாலும், அது இப்படியாக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. உயிர் தோழியாய் நினைத்தவள் இப்படி உடனிருந்த துரோகியாய் இருந்திருப்பாள் வேறு யாராவது கூறியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டாள் ஆரண்யா.
மீண்டும் மீண்டும்...
அத்யாயம் 13:
அறைக்குள் சென்ற ஆராவிற்கு உணர்வுகள் அடங்க மறுத்தது. கால்களை இறுகக் கட்டி, அதில் முகம் புதைத்திருந்தவளுக்கு, சற்று முன் நடந்த நிகழ்வுகள் கண் முன் வர, உடல் நடக்கம் கொண்டது.
‘என்னாச்சு எனக்கு? எதுக்கு இப்படி அவன் முத்தம் குடுக்கும் போது உருகிப் போய் நின்னேன்? ஆகாது ஆகாதுன்னு சொல்லி அவனையே கட்டிப் பிடிச்சு,...