“அவன் அவளை காதலித்தது முதல், சூழ்நிலையால் பிரிந்தது முதல், சூழ்ச்சியால் பிரிந்தது வரை , விதி வசத்தால் மீண்டும் இணைந்தது, அவர்கள் காதல் வாழ்க்கையில் விளையாடிய மித்ரா யாதவ் பங்கு முதற்கொண்டு ஒன்று விடாமல் படமாய் எடுத்திருந்தான் தேவ். படத்தில் நாயகன் கண்டக்டர் இல்லை. நாயகன் தன் அடையாளத்தை மறைத்து காதல் செய்பவனாக காட்டியிருந்தான். படத்தை பார்த்துக் கொண்டிருந்தவள், சில இடங்களில் சிரித்தாள், சில இடங்களில் அழுதாள், சில இடங்களில் நெக்குருகி நின்றாள். மொத்தத்தில் தங்கள் கதையை படமாய் பார்த்ததில் மனம் கனமாகி இருந்தது அவளுக்கு.
நாயகனாக அவனே நடித்திருக்க, ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தூள் கிளப்பியிருந்தவனைப் பார்த்து முறைத்தாள்.
ஒரு வழியாக படம் முடிய, கலங்கியிருந்த கண்களை அவன் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.
“தேவ் சார் படம் சூப்பரா வந்திருக்கு. ரொம்ப இயல்பா இருக்கு. கண்டிப்பா படம் சக்சஸ் தான்” என்று ஒவ்வொருத்தரும் பாராட்ட, அதையெல்லாம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்த ஆரா எதுவுமே பேசவில்லை.
படத்தைப் பார்த்த யாதவ் கூட தம்பியிடம் வந்து பாராட்டி தள்ளியிருந்தான்.
“ஒருத்தியை லவ் பண்ணி ஏமாத்திட்டு வந்துட்டேன்னு அன்னைக்கு ஒரு கதை சொன்னியே, அந்த கதை தான் இது” என்றான் தேவ்.
யாதவ் அதிர்ச்சியாய் ஆராவைப் பார்க்க,
“நான் செத்துட்டதா ஒரு பொண்ணுகிட்ட நீ சொன்னதா சொன்னியே அந்த பொண்ணு ஆரா தான்” என்றான் தேவ்.
“நிஜமாவே சாரி தேவ். நான் இப்படி மோசமானவன்னு படம் போட்டு காட்டிக் கூட எனக்கு தெரியலை பாரேன். நானெல்லாம் என்ன மாதிரி ஜென்மம்னு எனக்கே தெரியலை” என்றபடி சென்று விட்டான் யாதவ். அந்த அளவிற்கு அண்ணன் கேரக்டரை வெறுப்புடன் காட்டியிருந்தான் தேவ்.
“ஹேய் கணேஷ், படம் எப்படி?” என்றான் தேவ்.
“அவன் எப்போ வந்தான்?” என்றாள் ஆரா.
கணேஷும் ஆதிராவும் நமக்கு முன்னமே வந்துட்டாங்க. நான்தான் வர சொன்னேன்” என்றான்.
“தேங்க்ஸ் ஜெய் அண்ணா” என்றவன் தேவ்வைக் கட்டிக் கொண்டான். அந்த அளவிற்கு அவனை ஒரு நல்ல நண்பனாக காட்டியிருந்தான்.
“நான் பண்ணதை எல்லாம் மறந்து என்னை இப்படி போட்ரேட் பன்றதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் ஜெய் அண்ணா” என்றான்.
“நான் உண்மையை அப்படியே எடுத்திருக்கேன் கணேஷ். இதில் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் எதுவுமே இல்லை” என்றான் தேவ்.
“மாமா நான் கூட உங்க காதலை ரொம்ப அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டேன். பட், படம் பார்த்த பிறகு தான் தெரியுது உங்க பீலிங்க்ஸ் எல்லாம். இவளுக்கு இப்படி எல்லாம் உருகி உருகி லவ் பண்ணவெல்லாம் தெரியுமா? நிஜமா என்னால இன்னும் நம்ப முடியலை மாமா” என்றாள் ஆதிரா.
“உன் அக்கா ஒரு காதல் பிசாசு” என்றான் தேவ் சிரிப்புடன்.
“படம் கண்டிப்பா மாசிவ் ஹிட் தான் மாமா” என்றாள்.
“தேங்க்ஸ் ஆதிரா” என்றவன்,
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் எல்லாரையும் அனுப்பிட்டு வரேன்” என்றபடி சென்று விட்டான். ஆரா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“தாலியை நீ காட்றியா இல்லை நான் கட்டவா? நான் வேணும்னா எங்கப்பாவை உங்க வீட்ல பையனைப் பார்க்க வர சொல்றேன்” என்றாள்.
கணேஷ் அவளை முறைக்க,
“பின்ன என்னடா! என்னை கட்டிக்க எவ்வளவு பெரிய இடத்து பசங்க எல்லாம் போட்டி போடுறாங்க. என்னமோ வழிய கேட்டதால ஓவரா பிகு பண்ற. போ, உனக்கு என் அருமை தெரியலைன்னு நினைச்சுட்டு போறேன். உனக்கெல்லாம் அந்த மித்ரா மாதிரி ஆளுங்க தான் செட்டாகும்” என்றாள்.
கணேஷ் முகம் ஒரு நிமிடம் கசங்க,
“ஆதிரா” என்று அதட்டினாள் ஆரா.
“என்னை எதுக்கு அதட்டுற. ஓவரா பண்றானே உன் பிரண்ட். அவனை அதட்ட வேண்டியது தானே” என்றாள்.
“நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருங்க. நானும் தேவ்வும் அப்பாகிட்ட பேசிட்டோம். உங்க கல்யாணத்தை வீட்லயே பேசி முடிச்சு வைப்பாங்க” என்றாள் ஆரா.
“நிஜமாவாடி” என்றாள் ஆதிரா.
“சத்தியமா” என்றாள்.
“என்கூட பிறந்ததுக்கு இன்னைக்குத்தான் உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்க” என்றாள் ஆதிரா.
“அப்பறம் என்ன? மத்தது எல்லாம் தன்னால நடக்கும். கோ வித் பிளோ” என்றாள் ஆரா.
வீட்டிற்கு திரும்பி வரும் வரை ஆரா எதுவும் பேசவில்லை. தேவ் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே வர, அவள் முகத்தில் என்ன இருந்தது என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
சட்டென்று காரில் இருந்து இறங்கிச் சென்றவளை, புரியாமல் பின் தொடர்ந்து சென்றான் தேவ்.
விடுவிடுவென்று அறைக்குள் சென்றவளை தடுத்து நிறுத்தியது தேவ்வின் குரல்.
“ஆரா என்னாச்சு? ஏன் எதுவும் பேசலை” என்றான். அவன் அவளிடமிருந்து நிறைய எதிர்பார்த்திருந்தான். அது எதுவும் நடக்காமல் போன ஏமாற்றம் அவன் முகத்தில்.
“எல்லாரும் ஏதாவது ஒன்னு சொன்னாங்க. நீ ஒண்ணுமே சொல்லலையே?” என்றான்.
அவனை நோக்கி இரு கைகளையும் விரித்தவள்,
“ஜெய் என்னை இறுக்கி கட்டிக்கோங்களேன் பிளீஸ்” என்றவளை நொடியும் தாமதிக்காமல் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“எனக்கு இந்த இறுக்கமெல்லாம் பத்தவே பத்தாது” என்றவளை மேலும் தனக்குள் புதைத்துக் கொள்ள,
“ஜெய், இந்த காதல் எனக்கு இன்னும் பத்தவே இல்லை. மூச்சே முட்ட மாட்டேங்குது” என்றவளை,
“நீ ரொம்ப உணர்ச்சிவசப்படுற ஆரா” என்றான் தேவ்.
“எஸ், உங்ககிட்ட மட்டும்” என்றாள்.
“எஸ், என்கிட்டே மட்டும்” என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்,
“படம் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே?” என்றான் அவள் முகம் முழுவதும் முத்தமிட்ட படி.
“வார்த்தையால சொல்ல முடியாது ஜெய். ஆனா ஏதோ கடந்து வந்த பாதையை பார்த்த மாதிரி இருக்கு” என்றாள்.
“நானும் உன்னை நேர்ல பார்க்கலை. பட் வீடியோல பார்த்தேன். நீ பிரைஸ் வாங்கினது ஒரு பேமஸ் டிசைனர் கையாள தான. அவங்க தான் அந்த கம்பட்டிஷனோட ஜட்ஜ். அவங்க அப்போ என்னோட படத்துக்கு டிசைனரா வொர்க் பண்ணாங்க. ஒருநாள் யதார்த்தமா அவங்க தான் அந்த வீடியோவை காமிச்சாங்க. “அவங்க எல்லாரும் பண்ண டிசைன்சை பாருங்க சார்ன்னு” தான் காமிச்சாங்க. ஆனா நான் பார்த்தது என்னவோ உன்னைத்தான். என்னவோ தெரியலை, திரும்ப திரும்ப பார்க்கனும்னு தோணிட்டே இருந்தது. வீடியோலையே எத்தனை நாள் பார்க்குறதுன்னு தான் நேர்ல வந்தேன். அன்னைக்கு வந்து உன்னைப் பார்த்து விழுந்தவன் தான், இன்னும் அப்படியே இருக்கேன்டி” என்றான்.
“நீங்க ஏன் முன்னாடியே சொல்லலை” என்றாள் கோபமாய்.
“அன்னைக்கு கோவில்ல வச்சு உனக்கு என்னை வெளிபடுத்தி சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சிருந்தேன். அதுக்குள்ள தான் என்னென்னவோ நடந்திடுச்சு” என்றான்.
“இப்படி சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் வெயிட் பண்ணேன். ஆக்சுவலி இதை ஒரு லவ் பெயிலியர் படமாதான் எடுத்திருந்தேன். பட் லாஸ்ட் டைம்ல தான் மாத்தினேன். அன்ட் மித்ரா போர்ஷன் ஆல்சோ” என்றான்.
“எல்லாம் சரித்தான், ஆனா நிஜத்தை விட படத்தில ரொமான்ஸ் ஓவரா இருக்கே. அதும் லவ் பண்ற பீரியட்ல. ஆனா, நிஜத்துல அப்படி ஒன்னும் நடக்கலையே” என்றாள் அவனை முறைத்தபடி.
“நம்ம நிஜ கதைல ரொமான்ஸ் பத்தலைன்னு பீல் பண்றியா? இல்லை படத்துல தூக்கலா இருக்கேன்னு பீல் பண்றியா?” என்றான் சிரிப்புடன்.
“ரெண்டுத்துக்கும் தான் ஜெய். இனி இப்படி ரொமான்ஸ் சீன்ஸ் எல்லாம் குறைச்சுக்கோங்க. பார்க்குற எனக்கு கடுப்பாகுது” என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்தபடி.
“சரிங்க மேடம்” என்றவன்,
“இவ்வளவு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கேன், ரியாக்ஷன் கம்மியா இருக்கே. எனக்கு கிப்ட் எதுவும் இல்லையா?” என்றான் அவள் முகத்தை உயர்த்தி.
“கிப்ட் கண்டிப்பா வேணுமா?” என்றாள்.
“குடுத்தா வேணாம்னு சொல்லுவேனா?” என்றான்.
ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்றவள்,
“கையைக் காட்டுங்க” என்றாள்.
“என்னடி?” என்றான்.
“உங்க ஜூனியர் வர போறான் ஜெய். வி ஆர் பிரக்னன்ட்” என்றவள், அந்த இரு இளஞ்சிவப்பு கோடுகள் இருந்த அட்டையை அவன் கையில் கொடுத்தாள்.
“இது பெஸ்ட் கிப்ட் ஆரா”என்றவன் அதிகம் உணர்ச்சிவசப்பட,
“ஜெய் ரிலாக்ஸ்” என்றாள்.
“இப்போ எப்படி இருக்கு தெரியுமா?”
“எப்படி இருக்கு?” என்றாள்.
“உன்னை அப்படி தூக்கி வச்சிக்கணும்,கீழவே இறக்கக் கூடாது.அப்படியே எனக்குள்ளையே வச்சுக்கணும். அப்படி இப்படின்னு என்னென்னவோ தோணுது ஆரா” என்றான்.
“வச்சிக்கோங்க, யார் வேணாம்னு சொன்னா” என்றவளை தனக்குள் புதைத்துக் கொண்டவன்,
“தேங்க்ஸ்டி, நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு” என்றான்.
“எனக்கு நீங்க தான் வேணும் ஜெய். உங்க காதல் மட்டும் போதும்.வேற எதுவுமே வேண்டாம்” என்றவளை ஆதியிலிருந்து அந்தம் வரை முத்தமிட்டு கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
அத்தனை நிறைவு அவள் முகத்தில். அத்தனை காதல் அவன் முகத்தில். அத்தனை அன்பு இருவரிடத்தில்.
நேசிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, பின் துஞ்சிக்கப்பட்டு, காதலால் ஒன்றுகூடி, காதலைக் கொண்டாடி, அந்த காதலோடு இணைந்திருந்தனர் சத்ய ஜெயதேவும் ஆரண்யாவும். நினைவும் உணர்வும் கலந்துவிட்ட தருணம் அது.
அவனின்றி நகர மறுத்த நாட்கள் அவனாலேயே வண்ணமயமாகி இருந்தது.