Nee Ninaivaa Unarvaa
அவர்கள் கிளம்பி சென்றதும் அவளுக்கு என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாள் ஆரண்யா.
நாள் முழுவதும் கடையில் வேலை செய்து பழக்கப்பட்டவளுக்கு இப்படி சும்மாவே இருப்பது எரிச்சலைக் கிளப்பியது. செய்வதற்கு வேலையும் இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் அந்த வீட்டில் ஆள் இருக்க, நொந்து போனாள்.
‘எப்படித்தான் சும்மாவே இருக்காங்களோ’...
“ஆரா..!” என்று மட்டும் அனுப்பியிருந்தான்.
“சொல்லுங்க”
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?எனக்கு இப்பவே உன்னை என்கூட கூட்டிட்டு வரணும் போல இருக்கு” என்று அவன் அனுப்பியிருக்க, அதைப் படித்தவளுக்கு கால்கள் தரையில் இல்லை. ஏதோ சில்லென்ற உணர்வு அவளைத் தாக்க, சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.
“என்ன பதிலைக் காணோம். உங்க அப்பா அம்மாகிட்ட வந்து பேசட்டுமா?”
“இல்ல, நான் அப்பாகிட்ட பர்ஸ்ட்...
அத்யாயம் 7:
நினைவு:
பேருந்தில் சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவை உலுக்கினாள் மித்ரா.
“என்னாச்சுடி?” என்றாள்.
“என்ன இவ்வளவு சாதரணமா கேட்குற? என்னடி நடக்குது? ஜெய் அண்ணா அவர் பேசாம வந்தாரு, மோதிரம் போட்டாரு, கூடவே செயினையும் போட்டு விட்டுட்டு போறாரு. நீயும் அமைதியா இருக்க?” என்றாள் இன்னமும் அதிர்ச்சி விலகாத குரலில்.
“இப்ப என்ன பிரச்சனை மித்ரா உனக்கு? அவங்க...
“நீ இந்த சீட்ல உட்காரும்மா! நாங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவோம்” என்றவர் அடுத்த ஸ்டாப்பில் மனைவியுடன் சேர்ந்து இறங்கி விட, ஆராவும் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் மித்ரா அமரப் போக, அவளைப் பார்வையால் தடுத்த ஜெய் பட்டென்று ஆராவின் அருகில் அமர்ந்தான். தனக்கு அருகில் தோள்களை உரசிக் கொண்டு அமர்ந்தவனைக் கண்டு அவளுக்கு காய்ச்சலே...
அத்யாயம் 6:
நினைவு:
“மழை வர்ற மாதிரி இருக்கு மித்ரா” என்று ஆரா சொல்லி முடித்த நிமிடம் தூறல் போடத் தொடங்கியிருந்தது.
“என்னடி இன்னைக்கு திடீர்ன்னு மழை வருது? அவசரத்துக்கு குடை கூட கொண்டு வரலை?” என்றாள் மித்ரா.
“குடை இல்லாட்டி என்ன மித்ரா? ஜாலியா நனைஞ்சுட்டே போவோம்” என்றாள் ஆரா குதூகலத்துடன்.
“இப்படி ஓரமா வந்து நில்லு ஆரா. பஸ்...
சாப்பிட்டு முடித்த சத்ய தேவ் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்டார் காயத்ரி.
“எனக்கு வேண்டாம்” என்று அவள் அதை எடுக்கப் போக,
“பூவை வேண்டாம்னு சொல்லக் கூடாது ஆரா” என்ற பாட்டியின் குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.
இதையெல்லாம் பார்க்க...
சாப்பிட்டு முடித்த சத்ய தேவ் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்டார் காயத்ரி.
“எனக்கு வேண்டாம்” என்று அவள் அதை எடுக்கப் போக,
“பூவை வேண்டாம்னு சொல்லக் கூடாது ஆரா” என்ற பாட்டியின் குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.
இதையெல்லாம் பார்க்க...
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஆரண்யாவிற்கு நடந்து எல்லாம் கனவு மாதிரி தோன்றியது. கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே கிடந்து அல்லாடிக் கொண்டிருந்தது அவள் மனம். அவ்வளவு எளிதில் இந்த வாழ்க்கையுடன் பொருந்திப் போக முடியும் என்று தோன்றவில்லை அவளுக்கு. நெருஞ்சி முள்ளாய் ஜெய்யின் நினைவு அவளைக் குத்திக் கொண்டிருந்தது.
“என்னடா ஆரா ஒரு...
அத்யாயம் 5:
நினைவு:
“ஹேப்பி பர்த்டே ஆராம்மா” என்ற காயத்ரியின் குரலில் கண் விழித்தாள் ஆரண்யா.
“குட் மார்னிங்ம்மா” என்று புன்னகையுடன் கூறியவளை ரசித்த காயத்ரி,
“குளிச்சிட்டு இந்த சுடியை போட்டுட்டு வாடா. கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்” என்றார்.
“ஓகேம்மா” என்றவள் குளிக்க செல்ல,
“வாவ்..! இந்த கலர் ரொம்ப அழகா இருக்கும்மா. இந்த சுடியை நான் வச்சுக்கிறேன். நீங்க அவளுக்கு வேற...
நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அங்கிருந்தனர். சிலர் அவளை உண்மையான அன்புடன் வரவேற்க, சிலரோ இவளுக்கு வந்த வாழ்வா? என்ற ரீதியில் வரவேற்றனர்.
“நல்ல வேலை செஞ்ச சிவகாமி. ஒரு பையனுக்காவது நம்ம சாதி சனத்துல பொண்ணெடுத்தது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். என்ன இருந்தாலும் ஊரும் உறவும் விட்டுப் போயிடக் கூடாது பாரு.” என்று பேச பெரிய...
“ஆரா..!ஆரா!” என்ற காயத்ரியின் அழைப்பில் மீண்டாள் ஆரா.
“ம்மா” என்றாள்.
“என்னாச்சு ஆரா? டயர்டா இருக்காடா?” என்றார் காயத்ரி.
“அங்க மாப்பிள்ளை வர்றவங்களை ரிசீவ் பண்ணிட்டு இருக்கார். நீ என்னடான்னா இங்க தூங்கிட்டு இருக்க?” என்றார்.
“இல்லம்மா..! கொஞ்சம் அசதியா இருந்தது. அவர்தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொன்னார்” என்று பழியைத் தூக்கி அவன் மேல் போட்டாள்.
“சரி சரி..!வீட்டுக்கு...
அத்யாயம் 4:
நினைவு:
அன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர் ஆராவும், மித்ராவும்.
“இந்த கணேஷ் பய ரெண்டு நாளா ஆளே சரியில்லாம தெரியறான் மித்ரா. என்ன பிரச்சனையா இருக்கும்?” என்றாள் ஆரா.
“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்?” என்றாள் மித்ரா வெடுக்கென்று.
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி பட்டுன்னு பதில் சொல்ற மித்ரா? ஏன் அவனோட...
தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், சத்ய தேவிற்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை ரிங் அடித்து ஓய, மூன்றாவது முறையில் தான் எடுத்திருந்தான்.
“எஸ், தேவ் ஹியர்” என்றான் கம்பீரமான குரலில். அவளுக்கோ வார்த்தைகள் வராமல் தந்தியடிக்க, பேசாமல் அமைதியாக இருந்தாள். இரண்டு மூன்று ஹலோக்களை சொன்னவன் பொறுமையிழந்து போனை வைக்கப் போக, அந்த நிமிடம் ஞாபகம்...
“நான் ஏதோ நீ சைட் அடிக்கிறன்னு நினைச்சேன்டி. ஆனா, இவ்வளவு சீரியஸா இருப்பேன்னு நினைக்கலை ஆரா” என்றாள் கவலையுடன். அவர்கள் பேசிக் கொள்வதும் ஆரா கண்களில் இருந்து கண்ணீர் வருவதும், அதை அவள் யாரும் அறியாமல் துடைத்தபடி பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தவனின் கண்கள் யோசனையில் சுருங்கியது.
யோசனையுடன் அவர்கள் அருகில் சென்று டிக்கெட்டை நீட்ட,
“எப்போதும் மித்ரா...
அத்யாயம் 3:
நினைவு:
“என்ன ஆரா? இன்னைக்கு இவ்வளவு அமைதியா வர்ற? முகம் வேற சரியில்லை?” என்றாள் மித்ரா.
”அதெல்லாம் ஒன்னுமில்லடி. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள் ஆரா அமைதியாக.
“நீ பொய் சொல்றன்னு உன் முகமே காட்டிக் குடுக்குது ஆரா” என்றான் கணேஷ்.
எப்படி சொல்லுவாள்? தான் காதலில் விழுந்த கதையை? சொன்னால் நண்பர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்...
இதுவே அவர்களின் வாடிக்கை ஆனது. தினமும் காலையும் மாலையும் அவனை ஆராவின் விழிகள் பார்வையால் தொடருவதும், அவன் பார்த்தும் பார்க்காததும் போல் இருக்க, இருவரும் அவர்கள் அறியாமல் பெயரில்லாத ஒரு உணர்வை மனதிற்குள் வளர்த்துக் கொண்டனர். அந்த கண்ணாமூச்சி ஆட்டம் கூட சுவாரஸ்யமாய் இருந்தது. ஏனோ அவன் அருகில் வந்தாலே அவளுக்கு படபடத்துப் போகும்....
“இல்லையே..! நான் பார்க்கும் சும்மா வெள்ளை வெளேர்ன்னு வெள்ளைப் பன்னி மாதிரி இருந்தான்” என்றாள் அவள்.
அவள் சொன்ன விதத்தில் ஆரா பட்டென்று சிரித்துவிட்டாள்.
“கொழுப்பை பார்த்தியா ஆரா இவளுக்கு. உவமைக்கு கூட நல்ல வார்த்தை வருதான்னு பாரு. வெள்ளைப் பன்னியாம்? அவன் காதுல மட்டும் விழுந்துச்சு உனக்கு சங்குதாண்டி” என்றாள் சிரிப்புடன்.
சிரித்துக் கொண்டிருந்த ஆரா அவனைத்...
அத்யாயம் 2 :
நினைவு:
“ஆரா.. ஆரா” என்று வீட்டிற்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தனர் மித்ராவும், கணேஷும்.
“இதோ வந்துட்டேன்” என்றவளின் வாயில் தோசையை திணித்துக் கொண்டிருந்தார் சுலோச்சனா. ஆராவின் பாட்டி.
“பாட்டி போதும்” என்று அவள் மறுக்க, அவர் விடாமல் ஊட்டிக் கொண்டிருந்தார்.
“அவ தான் போதும்னு சொல்றால்ல. விடுங்கம்மா” என்று ரவிக் குமார் சொல்ல,
“இந்த ரெண்டு தோசை...
ரவிக்குமாரின் முன் வந்தவர் “எதுக்கு கூப்பிட்டிங்க?” என்றார்.
“அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்களாம் காயத்ரி. ஆதிரா ரெடி ஆகியாச்சா?” என்றார் பதட்டமாய்.
“இப்ப ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” என்றார் காயத்ரி கவலையாய்.
“இல்ல, அவங்க கேட்டதும் ஒரு வேகத்துல சரின்னு சொல்லிட்டேன். இப்ப இதெல்லாம் சரியா வருமான்னு யோசனையா இருக்கு. என்ன தான் இருந்தாலும் சினிமாகாரங்களை...
பல நாட்கள் கழித்து வீடு வந்த இளைய மகனைப் பார்த்த சிவகாமியின் மனம் வெம்பிப் போனது. யுவன் கையில் இருந்த விருதுகளைப் பார்த்த சிவகாமிக்கு மனமே ஆறவில்லை.
“என்னாச்சு தேவ்? ரொம்ப அசதியா தெரியறப்பா? பெத்தவ ஒருத்தி இருக்கான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றார் கலங்கிய கண்களுடன். அவருக்கு அந்த வீடு தான் எல்லாமே. அதிகம்...