Monday, July 14, 2025

    Malaril Nilavin Kairaegai

                                 17 சேரில் அவன் அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கி நின்று வலப்பக்க மீசையை முறுக்கியவள், அவன் கன்னத்தில் இரு பக்கமும் விரல்களால் பிடித்து  “இந்த முகம் எப்போவும் ஒரு இறுக்கத்தில் இருக்கும், சிரிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன், சிரிக்கிற மாதிரிக் கற்பனை பண்ணி பார்த்தேன்”. “ஒரு நாள் உண்மையிலேயே சிரிச்சப்போ அது எப்போவும் இந்த முகத்துல...
    16 “நிலவு காத்திருக்கிறது இண்பனுக்காக” என்று மனதில் எண்ணியவள், அவனுக்கு எந்தத் தகவலும் அனுப்பாமல் இருந்தாள், இதழில் உறைந்த புன்னகையோடு அமர்ந்திருக்க  அழைத்துவிட்டான். அவள் கைகள் மெல்ல நடுங்கியது அடித்து ஓயும் நேரம் அழைப்பை எடுத்தவள், அமைதியாக இருக்க “கொற்றவை” என்றான் காற்றாக. அந்தக் குரலில் விழிகள் மூடி லயித்திருக்க அவனின் குரல் செவி வழி உள்நுழைந்து உடலில்...
    15 காலையிலே வீட்டில் வந்து நின்ற மருமகனை பார்த்துப் பதட்டம் வந்தது ராதாவிற்கு. கணவர் எதுவும் பிரச்சனை செய்த்திருப்பாரோ, வேறு ஏதும் பிரச்சனையோ என்று. “என்ன அத்த அப்படி  பாக்குறீங்க” என்ற வெங்கடேசன் அங்கிருந்த சேரில் அமர, ராதா மருமகனுக்கு காபி எடுத்து வர அடுப்படி சென்றார். அனைவரும் அங்கு ஹாலில்  கூட  ராதா காபியோடு வந்தார், “நீங்களும் வாங்க...
     14 காலை அவனுடன் வண்டியில் ஏற, நேரே அவனின் துறையூர் நர்சரி  வந்து நிறுத்தினான், அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அதுவரை. அங்கு வந்தும் அவள் அப்படியே நிற்க, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான், என்ன ஆயிற்று இவனுக்கென்று அவள் அவனையே பார்த்திருக்க அவள் அருகில் நெருங்கி நின்றான். மூச்சடைத்தது அவளுக்கு, தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய பொருளை...
                                    13 பள்ளியில் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது, சேர்மேனுக்கு  மிகுந்த திருப்தி வெகுவாகப் பாராட்டித் தன் மழிச்சியை வெளிப்படுத்தினார். அவர் தன்னையே பாராட்டுவதை போல அத்தனை சந்தோஷமாக நின்றிருந்தாள் கொற்றவை,  நிச்சயம் நிறைய பேரிடம் சொல்லுவார் என்பது அவரின் பேச்சிலே தெரிந்தது. அவனிடம் விடை பெற்று அவர் சென்றுவிட இருவர் மட்டும் அங்கே, “தேங்க்ஸ்” என்றவனை அவள் ஆச்சர்யமாகப்...
      12 மாலை வீட்டிற்கு வரும்போது ஒரு வித இனிமையான மனநிலை கொற்றவைக்கு,  அவள் வண்டியில் பறந்துகொண்டு இருப்பதை போல மனமும் உடலும் லேசாக இருந்தது. கடத்தி செல்லத் தோணுவதாகச் சொன்னவன் அப்படி ஒன்றும் செய்யவில்லை, ஆனாலும் அவள் மனம் மிக மிகச் சந்தோஷமாக இருந்தது. அவன் அழைத்துச் சென்றது அவனின் நர்சரிக்கு, துறையூர் செல்லும் ரோட்டில் வேறொரு...
    11 தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு யாரேனும் கஸ்டமராக இருப்பார்கள்  என்று எண்ணி அதை எடுத்தவன் “ஹலோ” என்க “மிஸ்டர் இன்பநிலவன்” என்றது ஒரு பெண் குரல். கொஞ்சம் பழகிய குரல்போல ஆனால் தெரியவில்லை “எஸ்” என்க. “நான் **** ஸ்கூல் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி சார் பி.எ கொற்றவை பேசுறேன்” என்க ஒரு நிமிடம் அவனிற்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயம் அவள்...
      10 தன்னுடய துணிகள் சிலவற்றை இரண்டு பாகில் வைத்தவள், சில பொருட்களை ஒரு சிறிய கட்டைப்பையில் வைத்து எடுத்துக் கொண்டாள். அறையிலிருந்து வெளியில் வந்தவளை பார்த்த அருண் ஒரு நிமிடம் தடுமாறினான், போகச் சொல்லிவிட்டான் ஆனால் அவளைத் தனியே விட மனம் இல்லை. “அம்மாடி எங்க போற” என்று அவள் அருகில் ஓடி வந்து தடுத்தார் ராதா. “தப்பு தான்...
      9 “ரெண்டாம் தாரம்” இதற்க்கு என்ன எதிர் வினையாற்றுவது என்றுகூட தெரியவில்லை அவளுக்கு. “இது சரியா வராதுங்க” என்று அவள் முடிக்க. “கொஞ்சம் யோசிங்களேன்” என்றான் அந்தத் தம்பதியருடன் வந்திருந்தவன். “என் பெரு கிஷோர், என் அண்ணன் கார்த்திக்கு தான் உங்கள பாக்க வந்திருக்கோம்” என்க. “இங்க பாருங்க என் அக்கா தான் சொல்லிட்டாங்கல்ல, ப்ளீஸ் நீங்கக் கிளம்புங்க” என்றான்...
    “ஏதோ ஆசைப்பட்டுட்டாங்க,  உங்க தங்கச்சி இங்க நல்லாதான் இருக்கா, நீங்கப் பழசை மறந்துட்டு ஏத்துக்கோங்க” என்ற அவளின் மாமியாரை பார்த்தவன். “காதலிச்சது தப்புனு நாச்சொல்லல, அவளுக்கு இவரைத் தான் பிடிச்சிருக்கு அப்படினா என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும்”. “எங்க கிட்ட சொல்ல இருந்த பயம்,  குடும்பம் வேண்டாம்னு போகும்போது இல்லல, முடிஞ்ச வரைக்கும் பேசிப் பார்த்திருக்கலாம்,...
      8 இன்பநிலவனின் குடும்பம் மிகச் சாதாரணமான விவசாய குடும்பம், அவனின் பாட்டி, தாய் தந்தை, சித்தி சித்தப்பா அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தனர். இரண்டு அறைகள் மட்டும் உடைய ஓட்டு வீடு, குடும்ப சொத்தாக இருந்த பத்து ஏக்கரில் விவசாயம் பார்த்து,  இருப்பதை கொண்டு நிறைவாய் தான் வாழ்ந்தனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு...
                                   7 “மாமா” என்ற அழைப்பை உணர்ந்தாலும் திரும்பிப் பாராமல் அமர்ந்திருந்தான் அருண்,  வருவது அவன் அக்கா ஆராதனாவின் சீமந்த புத்ரி சக்தி. வயது பதினைந்து தான், ஆனால் இருபத்தி ஐந்து வயதின் கணவகளும், விவரமும், அலைபேசி என்னும் தேவை இல்லாத ஆணி நிறைய முட்டாள் தனமான போதனைகளை அவளில் கடத்தி இருந்தது. அவளைக் கவனிக்க சொல்லிப் பலமுறை...
                                 6 கொற்றவையை இன்று நேற்று அல்ல உண்மையில் அவளை அவளுடைய பதினான்கு வயதில் இருந்தே தெரியும் அவனுக்கு. அவள் அக்கா ஆராதனாவை மனந்திருக்கும் வெங்கடேசனின் உறவு இன்பநிலவன், கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொந்தமாக வரும். அவர்களின் திருமணத்தில் பார்த்திருக்கிறான், அவன் இங்கு இருந்த வரை குடும்ப விசேஷங்களில் பார்த்திருக்கிறான் அவ்வளவே, இங்கே ஒரு கடை தொடங்க எண்ணி...
                             5 கண் விழித்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை, குட்டி பல முறை கேட்டு விட்டான் “என்ன நடந்தது” என்று, உடல் நிலை சரி இல்லாமல் மயங்கிவிட்டாள் என்று சமாளித்துவிட்டார் ராதா. இரவு நெருங்கும் நேரம் வந்தார்கள் அப்பாவும் இளைய மகளும், ஹாலில் அவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டதும் அத்தனை நேரம் இருந்த அமைதி பறந்து விட வெளியில்...
                                4 “அப்பாடா… இந்த ஒரு நாள் காலைல எழாம கால் ஆட்டித் தூங்குற சுகமே தனி தான், என்ன சில்லுனு எ.சி இருந்தா நல்லா  இருக்கும்” என்றவள் சிந்தனை ஓட “தங்கம் தரையிலே தவிடு பானையிலே, கட்டிலுக்கே வக்கில்லாம கழுதை தரைல கிடக்குற உனக்குக் குளு குளு ஒண்ணுதான் கேடு” என்றது மனச்சாட்சி. “ஏய் இன்னைக்கு எல்லார்க்கும்...
            3 ஸ்கூல் காம்பௌண்ட் உள்ளே நிழலில் வண்டியை நிறுத்தியவள் வணக்கம் வைத்த அனைவருக்கும் புன்னகையோடு பதில் கூறிக் கொண்டே சேர்மன் அறைக்கு விரைந்தாள்.  இவள் சென்றவுடனே அலுவலகக அறையிலிருந்து பைலோடு வந்துவிட்டார் அதன் ஹெட்,  அவரிடம் அதை வாங்கி விவரங்களைக் கேட்டுக் கொண்டவள், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் ஹெட்டை  அழைத்து அந்த விவரங்களையும் வாங்கி கொண்டாள். தன்னுடைய டேபிளின்...
         1 இரு வீடுகளுக்கு இடையில் இருந்த வேப்ப மரத்தின் காற்று அந்தப் பழைய மர ஜன்னலின் வழி நுழைந்து மே மாதத்தின் இறுக்கத்தை குறைக்க பார்த்தது, காலை ஏழரை மணிக்கே வெயில் பல்லைக் காண்பித்துக்கொண்டிருந்தது. தலை முடியைப் பின்னல் இட்டுக் கொண்டிருந்தவள், மரத்தின் அந்தப் பக்கம் இருந்து கேட்ட குரலில் ஜன்னலின் வழி எட்டிப் பார்த்தாள். “அகம்பாவம்...
    error: Content is protected !!