Alar Nee Agilam Nee
அகிலம் – 6
ஞாயிற்றுக்கிழமை..
கதிரவன் தனது ஊர்வலத்தை அன்றும் சரியாகத் துவங்க பூமிவாசிகள் கதிரவனின் நினைப்பை மறக்கும் நாள் அன்று..
ஆனால் அன்று ஏனோ அதையெல்லாம் உடைத்தெரிந்திருந்திருந்தனர் ஆதியின் பெற்றோர்கள்..
இருவருக்கும் கவியின் வாழ்க்கையை நினைத்து பயங்கள்..
எல்லாவற்றிற்கும் சிகரமாய் அன்று விஸ்வநாதனின் தங்கை அகிலாவின் குடும்பத்தின் வருகை..
நடந்தவைகளை அறிந்துதான் வருகிறார்கள் அவர்கள்..
முன்தினம் இரவு அவர்களுக்கு அழைத்து நடந்ததை சொல்லியிருந்தாள்...
அகிலம் – 5
காலேஜின் அருமை பெருமை காணொளிகள் ஒளிபரப்பாகும் அந்த டிவியில் இன்று அந்தப் பேராசிரியர் ரத்தினத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்..
ஒரு இறுகிய மனநிலையில் அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க ரத்தினத்தின் மனைவி சந்திராவிற்கும் மகள் நிஷாவிற்கும் அதிர்ச்சியும் அருவருப்பும்..
தனது இருண்ட பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கூனிக்குருகினார் ரத்தினம்..
சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளியைக்காண...
அகிலம் – 4
வண்ணவண்ண கனவுகள் மனதில் சிறகுவிரித்தாட வாழ்க்கையின் அடுத்த அடிக்கான எதிர்ப்பார்ப்புகள் அனைவர் மனதிலும்..
வழக்கம் போலவே பேச்சும் சிரிப்பும் அவ்விடத்தில் நிரம்பி வழிந்தபோதிலும் யூஜியில் அதுதான் கடைசி வர்க்கிங் டே என்பதால் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவித சோகம் அந்த சிரிப்பிலும் பேச்சிலும் அப்பட்டமாய்..
கவிநயாவும் நித்யாவும் தங்களது ஆஸ்தான இடமான கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க...
அகிலம் – 3
லெமன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்..
பழுப்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து பெயின்ட்டடிக்கப்பட்டிருந்தது அந்த ஐந்து மாடிக் கட்டிடம்..
எப்பொழுதும் போல் அந்தக் கலர் கோம்போ மனதிற்குள் ஒரு குளுமையைப் பரப்ப பார்க்கிங்கை நோக்கி காரைச் செலுத்தினான் ஆதி..
காலை முதலே தனது சின்ட்ரெல்லாவைப் பார்க்க விழிகள் ஏங்க தனது ஆபிஸிற்குச் செல்வதற்கு முன்பாக அவளை தரிசிக்க வந்துவிட்டான்...
அகிலம் – 2
மலையோரம் மழைவாசத்துடன் ஓடும் நதியில் ஆனந்தமாய் நீராடியபடி அவள்..
வானமகன் மேகமாய் குடைப்பிடிக்க லேசாய் நனையத் துவங்கியது பூமி.. மிகமிஞ்சிய மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் அவள்..
மழையும் பூமியும் சாரலாய் காதல் கொண்டிருக்க நதியானது பொறாமையுடன் சுழலுருவாக்கியது அவள் தன்மேல் கொண்ட காதலறியாமல்..
சுழலும் சுகமென சுகமாய் அதில் அவள் சிக்கிக்கொள்ள.. கொஞ்சம் கொஞ்சமாய் அவளைத்...
அகிலம் – 1
கருமேகங்கள் தோட்டத்தை முழுவதுமாக மூடியிருக்க மழைக்காய் மயிலொன்று தோகைவிரித்துக் காத்திருக்க அன்று பூத்த மலராய் இயற்கையின் வண்ணக்கோலங்களை இரசித்தவாறு அந்த பார்ம் ஹவ்ஸையொட்டிய கீற்றுக்கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.. ஆரண்யா..
இயற்கையில் கலாரசிகை.. நிலத்தில் காய்ந்துகிடக்கும் சருகு முதல் வானில் பூத்துக்கிடக்கும் நிலவுவரை அனைத்துமே அவளுக்கு பிடித்தவொன்று..
கோவையின் மிகப்பெரிய கட்டுமான கம்பனியான...