Advertisement

அகிலம் – 6
ஞாயிற்றுக்கிழமை..
கதிரவன் தனது ஊர்வலத்தை அன்றும் சரியாகத் துவங்க பூமிவாசிகள் கதிரவனின் நினைப்பை மறக்கும் நாள் அன்று..
ஆனால் அன்று ஏனோ அதையெல்லாம் உடைத்தெரிந்திருந்திருந்தனர் ஆதியின் பெற்றோர்கள்..
இருவருக்கும் கவியின் வாழ்க்கையை நினைத்து பயங்கள்..
எல்லாவற்றிற்கும் சிகரமாய் அன்று விஸ்வநாதனின் தங்கை அகிலாவின் குடும்பத்தின் வருகை..
நடந்தவைகளை அறிந்துதான் வருகிறார்கள் அவர்கள்..
முன்தினம் இரவு அவர்களுக்கு அழைத்து நடந்ததை சொல்லியிருந்தாள் கவிநயா..
அது தெரிந்தது முதல் பெற்றோர்கள் இருவருக்குள்ளும் வெளியே சொல்லமுடியாத பயபந்து..
எங்கே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிடுமோ என்று..
அகிலாவின் குடும்பம் வரும்வரை ஒருவிதமான பதற்றநிலையிலே இருந்தனர் இருவரும்..
“எப்போ சம்மந்தி கல்யாணத்தை வெச்சுக்கலாம்..??”, வந்ததும் வராததுமாக கேட்ட அகிலாவின் கணவர் மணிகண்டனைக் கண்டபிறகுதான் இருவருக்கும் உயிர்வந்தது..
மீனாட்சியின் கண்கள் கலங்கக்கண்ட அகிலா, “எதுக்கண்ணி இப்போ கண்கலங்கறீங்க..??”, என்று கேட்டார்..
“மனசுல இருக்க பாரமெல்லாம் இப்பத்தான் கரைஞ்சுபோனமாதிரி இருக்கு..”, கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னவரரைக் கண்டு ஒரு இரக்கப்பார்வை தோன்றியது அகிலாவிற்கு..
“கவியின் காலேஜில் நடந்ததைப்பற்றிப் பேசக்கூடாதென்ற முடிவுடன்தான் வந்தோம்.. ஆனால் நீங்கள் கலங்குவதைப்பார்த்து என்னால் அதைப்பற்றிப் பேசாமல் இருக்கமுடியவில்லை..”, என்ற அகிலா, ”அண்ணி.. நீங்கள் ஒன்றை மட்டும் மனசில நிறுத்திக்கோங்க.. கவி எந்தத்தப்பும் செய்யல.. தப்பு செஞ்சவனைத்தட்டிக் கேட்டிருக்கா.. தண்டனை கொடுத்திருக்கா.. இதுல நீங்க பெருமைதான் படனும்.. கண்ணெல்லாம் கலங்கக்கூடாது..”, அழுத்தமாக..
“அது புரியாமல் இல்லை அண்ணி எனக்கு.. ஆனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் கவியைப் பற்றி என்ன பேசுகிறார்கள் தெரியுமா..?? என்னால் காதுகொடுத்துக் கேட்கவே முடியல..”
“கேட்க முடிவில்லை என்றால் எதற்கு கேட்கனும் அத்தை..?? நம்மை சுற்றி இருப்பவர்கள் பேசுகிறார்கள் என்றால் பேசிவிட்டுப்போகட்டும்.. இன்று கவியைப் பற்றி தவறாக பேசுபவர்கள் நாளை நல்லவிதமாக பேசலாம்.. அல்லது அவளை மறந்துகூட போய்விடலாம்.. சுற்றம் பேசுகிறார்கள் என்பதற்காக அனைவரிடமும் சென்று கவி நல்லவள் அவள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ப்ரூவ் எல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது.. கவியின் மீது தவறு இல்லை என்று நீங்கள் ப்ரூவ் செய்தாலும் அதில் என்ன குறைகூற முடியும் என்றுதான் தேடுவார்கள் அவர்கள்.. உங்களுக்கு உங்கள் மகளின் மீது நம்பிக்கை உண்டென்றால் மற்றவர்களை விட்டுத்தள்ளுங்கள்..”, என்றான் பெரியவர்களின் நால்வரின் பேச்சைக் கேட்டவாறு வீட்டிற்குள் நுழைந்த மித்ரன்..
மித்ரன்..
மணிகண்டன் அகிலாவின் ஒரே புதல்வன்..
மணிகண்டன் லெமன்வுட் கன்ஸ்ட்ரக்ஷனின் இந்நாள் மேனேஜிங் டைரெக்டர்என்றால் மித்ரன் எதிர்கால மேனேஜிங் டைரெக்டர்..
இவரருக்கும் துணையாய் குடும்பத்தலைவி அகிலா..
மித்ரனின் பேச்சைக் கேட்ட ஆதிக்கும் கவிக்கும் கைதட்டும் வேகம்..
பெரியவர்கள் இருப்பதால் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்..
“இதைதான் மித்ரா நான் உன் அத்தைக்கிட்ட சொன்னேன்..”, என்ற விஸ்வநாதன், “அகிலா சொன்னது போல் இனி இந்த வீட்டில் இந்த விஷயம் பற்றி டிஸ்கஸ் செய்யக்கூடாது..”, கட்டளையாக..
இறுக்கமான மௌனங்கள் அங்கே இசைந்தது பின்னிசையாக..
“என்ன அத்தை.. வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்கேன்.. ஒரு காப்பித்தண்ணி கூட குடுக்கமாட்டீர்களா..??”, பின்னிசையை நிறுத்த கொஞ்சம் கேலியாய் வினவினான் மித்ரன்..
அப்பொழுதுதான் நியாபகம் வந்தவராக அனைவருக்கும் பலகாரம் எடுத்துவரச் சென்றார் மீனாட்சி கூடவே அகிலாவும் கவியும்..
பெண்களின் தலை மறைந்த அடுத்த நொடி மித்ரன் ஆதியை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்..
“டேய் மித்ரா விடுடா.. நியாயப்படி நீ என் தங்கச்சியை இழுத்துட்டுப் போகனும் என்னையில்லை..”, மித்ரனிடமிருந்து தப்பிக்க..
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் மாப்பிள்ளை சார்.. இவ்ளோ நாள் நீங்க எஸ்ஸானமாதிரி இப்பவும் எஸ்ஸாக ட்ரை பண்ணாதே.. யூ ஆர் புல்லி ட்ராப்ட்..”, ஆதிக்கு நிகராய் மொழிந்த மித்ரன், “ஆரண்யாவின் காரை ஏன்டா பஞ்சர் பண்ண..??”, கண்களில் குறும்பு மின்ன..
பதில் சொல்லத்தெரியாமல் திருதிருவென முழித்தவனைப் பார்த்து சிரிப்பு பொங்கியது மித்ரனுக்கு..
“கேட்கறேன்ல பதில் சொல்லு..”, கறாராக மொழிந்தவன், “அவளை உனக்குப் பிடிச்சிருக்கா..??”, என்று கேட்டான்..
தன்னிடம் மித்ரன் டைரெக்ட்டாக கேள்வி கேட்டதில் சிறிது வெட்கம் எட்டிப்பார்க்க தலையைக்கோதியபடி ஆமாடா ஐ ஆம் இன் லவ் வித் ஹர் என்றான் ஆதி..
ஆதியின் வெட்கம் கண்டு, “மச்சான்.. இப்போ என்னடா பண்ணே..??”, கலவரமாக..
“என்ன பண்ணேன்..??”, புரியாமல்..
“வெட்கப்பட்ட..”, நகைப்புடன்..
டேய் என்றபடி மித்ரனின் தோளில் அடித்தவனுக்கு மேலும் வெட்கம் பொங்கியது..
இப்பொழுது இரண்டடி பின்னேறிய மித்ரன், “நீ என்ன வேண்டும் என்றாலும் செய் மச்சான்.. ஆனால் என் மூஞ்சிக்கு க்ளோஸ் அப்ல வந்து மட்டும் வெட்கப்படாதே.. எனக்கு பயமா இருக்கு..”, என்றுவிட்டு ஆதி தன்னைத் துரத்துவதற்கு முன் ஓடத் துவங்கினான்..
இருவரும் சிறுபிள்ளைகள் போல் துரத்திக்கொண்டு விளையாடுவதைக் கண்டு தலையில் அடித்துக்கொண்ட கவி முறைத்துக்கொண்டு இருவரின் நடுவே சென்று நின்றுகொண்டாள்..
“மந்தீஸ் என்னை விட்டுட்டு என்ன ரகசியம் பேசறீங்க..??”, கேள்வியாக..
ஆதி சொல்லாதே என்று சைகை செய்ய அதைக் கண்டும் காணாதவனாக, “எல்லாம் உன் வருங்கால அண்ணியைப்பற்றித்தான்..”, உடைத்தான் மித்ரன் கவிக்குத் தெரியாதென்ற நினைப்பில்..
“அண்ணியைப் பற்றியா..??”, கண்களைச் சுருக்கி யோசித்தவள், “ஆரு அண்ணி ஓகே சொல்லியாச்சா..??”, குதூகலமாக..
அதெல்லாம் ஒன்றும் இல்லை என்ற ஆதியை சட்டைசெய்யாமல், “உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா..??”, கேள்வி எழுப்பினான் மித்ரன்..
“இந்நேரம் உன் ஆபீஸுக்கே தெரிஞ்சிருக்கும்.. நான் எல்லாம் எம்மாத்திரம்..”, என்றாள் கவி கண்களைச் சிமிட்டியபடி..
“அத்தை மாமாவுக்கு..??”
“ஊருக்கே தெரியும்போது அவங்களுக்குத் தெரியாதா..??..”, என்றவளை அதிர்வுடன் பார்த்தான் ஆதி..
அவ்வளவு வெளிப்படையாக நடந்துகொள்கிறேன் நான் என்பதுபோல்..
“என்ன பாக்கற..?? அத்தைக்கு மாமாக்கு மட்டும் இல்லை மச்சான்.. எங்க அம்மா அப்பாக்குக்கூடத் தெரியும்..”, என்ற மித்ரன், “ஆனால் தெரியவேண்டிய ஆளுக்கு மட்டும் தெரியல..”, என்றான்..
“நீ அண்ணிக்கிட்ட இன்னுமா சொல்லல..??”, இது கவி..
“இல்லை கவி.. சொல்லலை.. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கல..”
“ஆதி.. உன்னோட வெல் விஷ்ஷரா ஒரு அட்வைஸ் சொல்றேன்.. உன் மனசில இருக்கறதை சீக்கிரம் ஆரண்யாவிடம் சொல்வது தான் நல்லது.. ஏன்னா அவ வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு பண்றாங்க..”, இதுமித்ரன்..
“சீக்கிரம் சொல்லிடறேன் மித்ரா..”, குரலில் தீவிரத்துடன்..
மருதமலை மாமணியே முருகைய்யா..
தேவரின் குலம்காக்கும் வேலைய்யா ஐயா..
பின்னணியில் சீர்காழியின் குரல் ஒலிக்க பூஜைத் துவங்கியிருந்தது மருதமலையில்..
முருகனின் சன்னதியில் முதன்மையாக ஆரு கடவுளைப் பார்த்து நின்றிருக்க அவள் பின்னால் முருகனுக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு ஆருவைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஆதி..
ஆபிஸில் இருந்து நேராக வந்ததன் அறிகுறியாக சோர்வாக இருந்தது ஆருவின் முகம்..
அதைத் துடைத்தெரிவது போன்று ஒரு புன்னகை.. இதழுக்கிடையில்..
எப்பொழுதும்போல் அதில் லயித்துக்கொண்டது ஆதியின் மனம்..
ஜபம்போல் சின்ட்ரெல்லா மந்திரம் வேறு..
“நின்னுட்டே இருக்காதீங்க.. பின்னாடி இருக்கவங்க சாமி கும்பிட வேண்டாமா..??”, ஐயரின் குரலில் வெளிவந்தவன் ஆருவுடன் கற்பகிரகத்தைவிட்டு வெளியே வந்தான் ஒரு மௌனத்துடனேயே..
“ஆதி.. அங்கிருக்கின்ற ஸ்டெப்ஸ்ல உட்காரலாமா..??”
சரியென்ற தலையசைப்பு மட்டும் பதிலாய் அவனிடம்..
இருவரும் படிகளில் சிறு இடைவெளிவிட்டு அமர ஆருவின் முகத்தையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி..
“ஆதி.. என்ன விஷயம்.. மீண்டும் ஏதாவது புது ப்ராஜெக்ட்டா..??”, தன்னிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று வரச்சொல்லிவிட்டு இப்பொழுது பேசாமல் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருப்பது சிறு சங்கடத்தை ஏற்படுத்தஇருவருக்கும் இடையில் இருக்கும் மௌனத்தை உடைத்தபடி கேட்டாள் ஆரு..
“புது ப்ராஜெக்ட் எல்லாம் இல்லை ஆரு.. இது கொஞ்சம் பெர்சனல்..”, அவளது கண்களைப் பார்த்துக்கொண்டே..
“பெர்சனலா..?? என்ன விஷயம் ஆதி.. மறுபடியும் கவிக்கு ஏதாவது பிரச்சனையா..??”, பதற்றத்துடன்..
“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆரு.. ஷி இஸ் பைன்..”, என்றவன் ஒருநொடி அமைதிக்குப்பிறகு, “என்னைப் பற்றி என்ன நினைக்கற ஆரு..??”, என்று கேட்டான்..
“உங்களைப்பற்றி..??”
“என்னைப்பற்றித் தான் ஆரு.. உனக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் இல்லையா.. அதாவது என் கேரக்ட்டர் என் குடும்பப்பின்னனி நான் செய்யும் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் வரை எல்லாம் உனக்குத் தெரியும் ரைட்..??”
“ஹ்ம் தெரியும் ஆதி.. என்ன திடீரென்று இதெல்லாம் கேட்கிறீர்கள்..?? என்னாச்சு உங்களுக்கு..”, குழப்பமாக..
ஆதியின் மனதில் உள்ளது பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லை அவள்..
அறிந்துகொள்ளவில்லை என்பதைவிட அறிந்தகொள்ளமுயலவில்லை..
அவளைப் பொறுத்தவரை ஆதி ஒரு சிறிந்த நண்பன்..
அவ்வளவே..
இன்று தன்னிடம் அவன் வித்தியாசமாக நடந்துகொள்வதுபோல் தோன்றியது..
அவன் பார்வை பேச்சு என அனைத்தும் வித்யாசமாக..
அதன் அர்த்தம் புரிவதுபோலவும் புரியாததுபோலவும்..
அதனை ஏற்றுக்கொள் என ஒருமுறை மனது துடிக்க மறுமுறை வேண்டாம் என்பதுபோல் ஒரு மறுப்பு..
அது ஏன் என்று புரியவில்லை அவளுக்கு..
அவனிடம் அந்த வார்த்தைகளைக் கேட்க விரும்பவில்லை அவள்..
ஆதியின் மனதில் அந்த வார்த்தைகள் குடிகொண்டிருக்கும்பொழுது அதை எப்படி அழித்துவிட முடியும்..??
ஒரு கட்டத்தில் அது வெளிவரத்தானே வேண்டும்..
அதுவும் இன்றே என்றால் அதை மாற்றவா முடியும்..??
“எனக்கு ஒன்றும் ஆகவில்லை ஆரு.. நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்..”, அழுத்தமாக ஊடுருவும் பார்வையுடன்..
“உங்களைப்பற்றி நினைக்க என்ன..?? யூ ஆர் அ வெரி குட் பிரென்ட் ஆப் மைன்..”
“அதைக் கொஞ்சம் திருத்தவேண்டும் என்று நினைக்கிறேன்..”
“எதை..??”
“அ வெரி குட் பிரென்ட் ஆப் மைன்னை..”
“புரியவில்லை..”
“நீ சொன்ன அ வெரி குட் பிரென்ட் ஆப் மைன்னை யூ ஆர் மைன்னாக திருத்த நினைக்கிறேன்..”
வெளியேறிவிட்டவைகளை ஜீரணிக்க முயன்றாள் ஆதியின் அந்தம்..
ஆனால் அவளே அறியாமல் அது கண்ணீராய் வெளிப்பட்டது..
அதைக்கண்டு பதறித்தான் போனது ஆதியின் உள்ளம்..
“ஆரு..”
“சாரி ஆதி.. என்னால் நீங்க சொன்னதை டைஜெஸ்ட் பண்ணிக்க முடியல..”
கசங்கித்தான் போனது ஆதியின் முகம்..
அதைக்கண்டு அவளும் கசங்கித்தான் போனாள்..
“ஐ டின்ட் மெண்ட் டூ ஹர்ட் யூ ஆதி.. எனக்கு உங்களை பிடிக்கும்.. அதை இல்லையென்று மறுக்கவில்லை நான்.. ஆனால் நீங்கள் சொல்வதை என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை..”
இவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது.. ஆனால் ஏனோ குழப்பிக்கொள்கிறாள் என்றுணர்ந்த ஆதி, “நான் உன்னை போர்ஸ் பண்ணலை ஆரு.. டேக் யுவர் டைம்.. எதுவாக இருந்தாலும் யோசிச்சு சொல்லு..”, அவளது ஒற்றை விரலைப் பிடித்தபடி..
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த துறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

உன்னை கண்ட நான் ஒலி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காட்ரில் உந்தன் குரல் மட்டும் கேடிருன்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்..

-அகிலமாவாயோ நீ..??

Advertisement