Advertisement

அகிலம் – 11
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு..
வழக்கத்திற்கு மாறாக அன்று வெகு அமைதியாக இருந்தது ஆரு ஆதியின் வீடு..
மீனாட்சியும் விஸ்வநாதனும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்க நோட்டும் பேனாவுமாக தீவிர யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் ஆரண்யா..
அதை கலைப்பதுபோல், “அம்மா.. சட்னிக்கு எவ்ளோ உப்பு போடணும்..??”, என்று கிச்சனில் இருந்து வெளிவந்தது ஒரு குரல்..
“முதல் தடவை உப்பு சேர்க்கும்பொழுது உனக்கு தெரிஞ்ச அளவுல கொஞ்சமா போட்டு அரச்சு டேஸ்ட் பண்ணி பாருடா.. கம்மியா இருந்தா கொஞ்சம் சேர்த்துப்போட்டு திரும்பவும் ஒருதடவை அரை.. நல்லா இருந்தா தாளிச்சு கொட்டு.. அவ்ளோதான்.. சிம்பிள்..”, என்றாள் ஆரு நோட்டிலிருந்து கண்களை எடுக்காமல்..
“அப்போ உப்பு அதிகமா போயிருச்சுன்னா என்னம்மா பண்ண..??”, சந்தேகமாய் மீண்டும் கேள்வி எழுந்தது..
“உப்பு அதிகமா போயிருச்சுன்னா நெக்ஸ்ட் டைம் செய்யும்பொழுது சரியா செஞ்சுக்கலாம் கண்ணா.. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.. வி ஆல் கேன் அட்ஜெஸ்ட்.. பட்.. எப்போ சமைச்சாலும் பெஸ்ட்டா சமைக்கனும்ங்கரதைவிட.. சமைக்கப்போற சாப்பாடு மத்தவங்களுக்காக சமைக்கறோம்.. அவங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கனும்னு மனசுல நினைச்சுட்டு செய்.. கண்டிப்பா நீ சமைக்கறது பெஸ்ட்டா வரும்..”, குரல் கொடுத்தாள் நல்ல ஆசானாக தாயாக..
“சரிங்கம்மா.. உங்களுக்காக ஸ்பெஷலா சமைக்கறேன்.. சோ பெஸ்ட்டாத் தான் இருக்கும்..”, என்று உள்ளிருந்து பதில் வர நோட்டில் கிறுக்கத் துவங்கினாள் ஆரு..
தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தவளை கலைப்பதுபோல், “ஆரண்யா..?? ஆரண்யா..?? எங்கே இருக்க..??”, என்று பக்கத்துக்கு வீட்டு பெண்மணி அவள் பெயரை ஏலமிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைய எரிச்சல் மேலிட்டது ஆருவிற்கு..
அவருக்கு அடுத்தவரின் கிட்சன் வரை பர்மிஷன் இல்லாமல் நுழைவது வழக்கம்..
அது ஆருவிற்கு என்றும் பிடிக்காத ஒன்று..
அவர் டைனிங்கிற்குள் நுழையும் முன்னே அவசரமாக ஹாலுக்கு விரைந்தவள், “பரிமளாக்கா.. நான் இங்கதான் இருக்கேன்..”, என்றபடி அவரை நிறுத்தியிருந்தாள் ஆரு..
“உங்க வீட்டு கிட்சென் வாசம் தூக்குச்சா.. நீ அங்கிருக்கயோன்னு நினச்சுட்டேன்..”, வாயெல்லாம் பல்லாக..
“நான் இல்லக்கா அது.. பிள்ளை சமைக்குது..”
“இப்போவே அவளுக்குக் கத்துக்கொடுக்கற.. நல்ல விஷயம் ஆரு..”, என்று பாராட்டியவர், “இன்னைக்கு அவ சமைச்சதை டேஸ்ட் பண்ணாம போகமாட்டேன்..”, அழிசாட்டியமாய்..
அதே நேரம் சமையல் அறையில் இருந்து ஒரு ஸ்பூனுடன் வெளிப்பட்டான் பதிமூன்று வயது சிறுவன்..
அவனைப் பார்த்து, “நீ என்ன உன் இரட்டைக்குவால் பிடிக்கறையா..??”, என்று பரமளா கேலி செய்ய தாய் மகன் இருவருக்கும் அது சுத்தமாக பிடிக்கவில்லை..
“நான் எதுக்கு அவளுக்கு வால் பிடிக்கணும்..??”, கொஞ்சம் கோபமாகவே கேட்டான் அவன் பதிலுக்கு தாயின் முறைப்பை சட்டை செய்யாது..
“வால் பிடிச்சாத்தானே உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சுகொடுப்பா அவ..”, என்று அவர் மீண்டும் கேலியாகச் சொல்ல, “எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை ஆன்ட்டி.. எனக்கு வேணும்கறதை நானே சமைச்சுப்பேன்..”, என்று ரோஷமாகச் சொன்னவன்.. நீங்க இப்போ இவங்களை வெளியே அனுப்பியே ஆகனும் என்ற பாவனையில் அங்கே நின்றிருந்தான் தீவிரமாக இருவரையும் பார்த்தபடி..
“என்ன ஆரண்யா சொல்றான் இவன்..?? இவனே சமைச்சுப்பானா..?? கேட்டரிங் கீட்டரிங் படிக்கற ஐடியாவா இவனுக்கு..??”, ஆச்சரியமாக பாவனை செய்து.. ஆனால் அதில் ஏளனமே அதிகமாய் பரிமளம்கேட்டார்..
“கேட்டரிங் படிக்கனும்னு எண்ணம் இருக்க பசங்கதான் சமையல் கத்துக்கணும்னு அவசியம் இல்லையேக்கா.. தனியா இயங்கணும்னு நினைக்கற ஒவ்வொரு மனுஷனும் சமையல் கத்துக்கலாமே.. அன்ட் ஆல்சோ கேட்டரிங் ஒன்னும் மோசமான பீல்ட் இல்லை.. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒன் ஆப் தி பெஸ்ட் பீல்ட் கேட்டரிங்.. அடுத்தவங்களுக்கு மனசார சமைச்சுப் போடறதுங்கறது ரொம்பப் பெரிய விஷயம்.. அவ்ளோ சீக்கிரம் அந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காதுங்கறது என் கணிப்பு.. சப்போஸ் என் பையன் அந்த பீல்ட் சூஸ் பண்ணனும்னு ப்யூச்சர்ல சொன்னான்னா.. கண்டிப்பா அவனை அதுக்குப் படிக்கவைப்பேன்.. சும்மா.. எனக்குத் தான் எல்லாம் தெரியும் நான் சொல்றதுதான் பெஸ்ட் அப்படீங்கற மாதிரி பேசாதீங்கக்கா எப்போதும்..”, என்று ஆரு சொல்லி முடிக்க அவளுக்குப் பரிசாக கைத்தட்டுக்கள்..
மகளிடமிருந்தும் கணவனிடமிருந்தும்..
தந்தையுடன் அன்று பேட்மிட்டன் கோச்சிங் சென்று வந்திருந்தவள் அன்னையின் பேச்சைக் கேட்டு சிலிர்த்துத்தான் போயிருந்தாள்..
தந்தையும் மகளும் தாயைப் பெருமையாக பார்த்து நிற்க மெதுவாக இடத்தை காலி செயந்திருந்தார் பரிமளம் மூக்கறுபட்ட கோபத்திலும் சிறு அவமானத்திலும்..
“வி ஆர் ப்ரவுட் ஆப் யூ மா..”, என்று முன்னால் பெண்பிள்ளை ஆதர்ஷா கட்டிக்கொள்ள, “யூ ஆர் ஆல்வேஸ் டிபரென்ட் அம்மா..”, என்றபடி பின்னால் கட்டிக்கொண்டான் ஆண்பிள்ளை அரண்யன்..
மூவரையும் ஒருசேர தனது போனில் படமாய் எடுத்துக்கொண்டவனது விழிகள் எப்பொழுதும் போலவே ஆருவின் கண்களுக்குள் சரண்புகுந்தது..
ஆருவின் கன்னங்களிள்மலர்கள் மொட்டவிழ்க்க.. இவள் அவனைச் செல்லமாக முறைக்க.. சிரிப்பு வந்துவிட்டது ஆதிக்கு..
தந்தையின் சிரிப்பில் தாயை விட்டுப் பிரிந்த இரட்டையர்கள் ஆதர்ஷாவும் அரண்யனும் என்னவென்று தாயைப்போல் கண்களால் கேள்விகேட்க.. ஆதி மூவரையும் ஒன்றாக கட்டிக்கொண்டான்..
ஐ ஆம் தி ப்லஸ்ட் ஒன் இன் தி வேர்ல்ட் என்பதாக..
ஆரு ஆதியின் வாழ்க்கையில் உருடோண்டிய இத்தனை வருடங்கள் நிறையவே கற்றுத்தந்திருந்தன இருவருக்கும்..
கடந்துபோன வருடங்களில் இருவரும் காதலையும் நேசத்தையும் மட்டும் வளர்க்கவில்லை.. சமூக அக்கறையையும் பொறுப்பும் சேர்ந்தே வளர்த்திருந்தனர்.. தங்களுக்குள்ளும் பிள்ளைகளுக்குள்ளும்..
ப்ளாசம் என்ற பெயரில் ட்ரஸ்ட் ஒன்றைத் தொடங்கி.. அதன் மூலம் பலசமூகப்பணியில்ஈடுபட்டிருகின்றனர் குடும்பத்தினர் அனைவரும்..
குழந்தை வர்ஷைவைப் போல் கவியைப் போல் தன்னைப் போல் இனி யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாதுஎன்ற எண்ணம் விதைந்திருந்தது.. அதன் வெளிப்பாடுதான் இந்த அறக்கட்டளை..
ஒவ்வொரு பள்ளிப்படியையும்ஏறினாள் அவள்.. நிழலாய் கவி.. தூணாய் அவள் குடும்பம்..
ஆண் குழந்தை ,பெண் குழந்தை என பாகுபாடில்லாமல் இருபாலினருக்கும் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுக்கத் துவங்கினாள்.. தன்னைப் போன்ற எண்ணம் கொண்ட சிலரை சேர்த்துக்கொண்டு..
கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு தற்காப்பு பயிற்சி.. எல்லாமே இலவசமாக..
இவளது முயற்சிகள் முதலில் தள்ளாட்டம் கண்டபோதிலும் காலங்கள்கடக்கக்கடக்க அவசியமான ஒன்றாக மாறி.. இப்பொழுது எல்லா பள்ளிகளிலும் இவளது முயற்சிகள் சிறப்பாக..
இன்று அதன் பத்தாம் ஆண்டு நிறைவு விழா..
ஆரு ஆதி கவி மித்ரன் நால்வரும் விழாவிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க..
கவி மற்றும் மித்ரனின் பையன் கவினுடன் சேர்ந்துகொண்டு ஆதர்ஷாவும் அரண்யனும் பெரியவர்களுக்குத் துணையாய்..
ஒருவர் பின் ஒருவராய் அந்த ஹால் நிரம்பத்துவங்க ஆருவைத் தயக்குத்துடன் நெருங்கினார் ஆரண்யாக்கா என்றபடி ஒரு தாய்..
“வாங்க சித்ரா.. எப்படி இருக்கீங்க..??”, இயல்பாய் அவள் கேட்க நலமென்பதாய் தலையசைத்த சித்ராவிற்கு ஆருவிடம் எதுவோ கேட்க தயக்கமாய்..
“என்ன சித்ரா..?? எதுவா இருந்தாலும் சொல்லுங்க..”, அவர் முகம் பார்த்துக் கேட்டாள் ஆரு..
“நீங்க லாஸ்ட் வீக் என் பொண்ணோட ஸ்கூளில் குட் டச் பேட் டச் பற்றி டீச் பண்ண வந்தீங்கள்ல.. அன்னைக்கு என் குழந்தை லீவ்.. இந்த ப்ரோக்ராம் முடிச்சிட்டு அவளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா..??”
வாட்சில் டைமைப் பார்த்தவள், “ப்ரோக்ராம் ஸ்டார்ட்டாக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் சித்ரா.. இப்போவே சொல்லித் தந்து விடலாம் குழந்தைக்கு..”, என்றவள் சற்று தூரம் தள்ளி நின்றிருந்த ஆதர்ஷாவை அழைத்தாள்..
“சொல்லுங்கம்மா..”, என்று வந்து நின்றவளிடம் சித்ராவை அறிமுகம் செய்த பெரியவள், ”இவங்க குழந்தைக்கு குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுக்கனுமாம்.. நம்ம ஆபிஸ் ரூமில் உட்காரவெச்சு சொல்லிக் கொடுத்தந்துவிடுகிறாயா..??”
சரிம்மா என்று ஆதர்ஷா தலையசைக்க, “நாங்க வேண்டும் என்றால் ப்ரோக்ராம் முடியும்வரை காத்திருக்கிறோம்.. நீங்களே சொல்லிக்கொடுங்களேன்..”, என்றிருந்தார் சித்ரா..
“இவளும் நல்லா சொல்லிக்கொடுப்பா சித்ரா.. டூ பி பிரான்க்.. எங்களை விட இவ நல்லா சொல்லிக்கொடுப்பா..”, என்றாள் அவ்வளவு நேரம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கவி..
“இருந்தாலும்..”, சந்தேகமே இன்னும் சித்ராவின் குரலில்..
“நீங்க பெரியவங்க சொல்லிக்கொடுத்தா நல்லா இருக்கும்னு பிரியப்படறீங்க..?? ரைட்..”, என்ற கவி, “பட் பெரியவங்க இதை சொல்லித் தருவதைக் காட்டிலும் ஆதர்ஷா போல் இருப்பவர்கள் சொல்லிக்கொடுத்தால் இன்னும் கொஞ்சம் கத்துக்கறவங்க பீல் பண்ணுவாங்க.. எப்படி சொல்றேன்னா.. இவங்களுக்கும் குழந்தைக்கும் இருக்கறது அக்கா தங்கை ரிலேஷன் போல்.. சோ குழந்தை ஏதாவது சந்தேகம் வந்தால் உடனடியாக இவர்களிடம் கேட்டுக்கொள்ளும்.. ஆனால் நம்மைப் போல் பெரியவர்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது அது டீச்சர் ஸ்டூடன்ட் பாண்டிங்காக மாறிவிடும்.. கற்றுக்கொள்வதில் சிறுவர்களுக்கு தயக்கம் இருக்கும்.. சோ.. இவள் கற்றுக்கொடுத்தால் பெஸ்ட் என்று தோன்றுகிறது எங்களுக்கு.. இப் யூ வான்ட் வி ஆல்சோ வில் டீச்..”, என்றாள் புன்னகையுடன்..
“இதுல இவ்ளோ விஷயம் இருக்கா.. நான் பெரியவர்கள் சொல்லிக்கொடுத்தால் நல்லா தெளிவாகச் சொல்லித்தருவார்கள் என்று நினைத்திருந்தேன்.. பட்.. நீங்க சொன்னதைக் கேட்ட பிறகு உங்கள் பெண்ணே சொல்லிக்கொடுக்கட்டும்..”, என்றார் சித்ரா நிறைவாக..
வீட்டினர் நினைத்தை விட விழா சிறப்பாக நடந்து முடிய ஆருவிற்கு அத்தனை சந்தோசம்..
அன்று இரவு வீட்டினர் அனைவரும் தோட்டவீட்டில் குழுமியிருந்தனர்..
மீனாட்சியும் மடியில் படுக்க பிள்ளைகள் மூவரும் சண்டைப்போட்டுக்கொண்டிருக்க.. மூவருக்கும் இடையில் புகுந்து படுத்துக்கொண்டாள் ஆரு.. சிறுவர்களுக்கு பழிப்புக் காட்டியபடி..
“இவங்க மூனு பேரும்தான் சின்னப் பிள்ளைங்க.. நீ இல்லை..”, அல்லி கோவப்பட.. மீனாட்சி ஆருவிற்கு பரிந்துபோனார்..
“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தான் அண்ணி..”, என்று அல்லி மீனாட்சியை குற்றம் சொல்ல அதை உதறித்தள்ளிய மீனாட்சி, “பசங்களா நீங்கெல்லாம் போய் அல்லி பாட்டி மடியில படுத்துக்கோங்க.. பாட்டி கோபப்படறாங்கபாருங்க..”, என்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர்போல் ஆருவின் தலையை தடவத்துவங்கினார்..
அடுத்த நிமிடம் அல்லியின் மடிக்கு ஒரு போரே நடக்க பெரியவர்கள் சிரிப்புமழை பொழிய.. அழகானதோர் காட்சி அது..
“இப்போத்தான் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு.. அதுக்குள்ள பதினஞ்சு வருஷம் ஓடிருச்சு..”, விஸ்வநாதன் சொல்ல..
“ஆமாம்ப்பா.. வருஷம் ஓடிப்போனதே தெரியல..”, என்றாள் கவி..
“எப்படித் தெரியும் உங்களுக்கு..?? இரண்டு அடிமை சிக்கியிருக்கே உங்களுக்கு.. ஒரே என்டர்டைன்மென்ட்டா தானே இருக்கும்..”, கேலி செய்தான் கவின்..
“டேய்.. தப்பா சொல்லாத பையா.. நம்ம தான் உங்க அம்மாவை மேய்க்கறோம்..”, என்று மகனுடன் கவியை கழுதை என்று சொல்லாமல் கேலி செய்ய.. தந்தையும் மகனும் கேலி செய்ய.. மற்றவர்கள் சிரிக்க.. இருவருக்கும் கொட்டுவிழுந்தது கவியிடமிருந்து..
“மாமா.. கவின்.. எல்லா நாளும் உங்கவீட்லதீபாவளிதான் போல..”, அரண்யன் கண்ணடிக்க.. இன்னைக்கு கோட்டா ஓவர்டா.. போதும் என்பதுபோல்அரண்யனைப் பார்த்த மித்ரன்துணைக்கு தன் மருமகளை அழைத்தான்..
“மாமா.. விடுங்க மாமா.. நாம வாங்காத அடியா..?? பார்க்காத பஞ்சாயாத்தா..”, என்று ஆதார்ஷாவும் அவன் காலைவாரிவிட யூ டூ ப்ரூட் என்பதுபோல் முழிபிதுங்கி நின்றான் அவளது மாமன்..
அனைவரும் தங்களுக்குள் காலைவாரிக்கொண்டிருக்க தனது சின்ட்ரெல்லாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான் ஆதிரன்..
அவள் தோளில் கைப்போட்டு தன் தோளோடு சேர்த்துக்கொண்டவன், “இங்கே தான் நான் உன்னை முதலில் பார்த்தேன்.. ஞாபகம் இருக்கா..??”, என்று கேட்டான் கிசுகிசுப்பாக..
ஆம்.. இருவரும் முதன்முதலாக சந்தித்த இடத்தில் நின்று கொண்டிருந்தனர்..
“எப்படி ஞாபகம் இல்லாம.. எனக்கு பிடிச்ச மழையில்.. என்னைப் போலவே அதை இரசிச்சு நனைஞ்சு.. என் முன்னால் வந்து நின்னீங்க.. எல்லாம் இப்போ நடந்த மாதிரி இருக்கு.. இட்ஸ் நாட் ஆன் ஆக்சிடென்ட்.. இட்ஸ் அ டெஸ்டினி..”, அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டே..
“யூ ஆர் மை டெஸ்டினி சின்ட்ரெல்லா..”, என்றபடி தனது சின்ட்ரெல்லாவை தன்னோடு மேலும் சேர்த்துக்கொண்டவன் அவள் கண்களுக்குள் கலந்தான்..
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ..
முடிவும் நீ..
அலர் நீ..

அகிலம் நீ..
அலராய் ஆருயின் வாழ்வில் நுழைந்த ஆதி இன்று அவளது அகிலமாய்..
முற்றும்..

Advertisement