Advertisement

அகிலம் – 5
காலேஜின் அருமை பெருமை காணொளிகள் ஒளிபரப்பாகும் அந்த டிவியில் இன்று அந்தப் பேராசிரியர் ரத்தினத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்..
ஒரு இறுகிய மனநிலையில் அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க ரத்தினத்தின் மனைவி சந்திராவிற்கும் மகள் நிஷாவிற்கும் அதிர்ச்சியும் அருவருப்பும்..
தனது இருண்ட பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கூனிக்குருகினார் ரத்தினம்..
சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளியைக்காண சகிக்காது, “ப்ளீஸ்.. கொஞ்சம் நிறுத்துங்கள்..”, ஆக்ரோஷத்துடன் வெளிவந்தது பேராசியரின் மகளது குரல்..
“நீங்க கொஞ்சம் தான் மிஸ் பாத்திருக்கீங்க இன்னும் ஒரு நான்கைந்து மணி நேரம் படம் இருக்குது..”, நக்கலாகக் கூறினான் மித்ரன்..
தந்தையை நோக்கி அடிபட்ட பார்வை வீசினாள் பெண்.. நீயெல்லாம் என்ன மனிதன் என்பதாக..
அந்த ஒற்றைப்பார்வையில் இறந்திருந்தார் ரத்தினம்..
“மித்ரன்.. ஆப் பண்ணிடுங்க.. இவர் பண்ண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க..??”, என்ற கவி டிவி ஆப் செய்யப்பட்டதும் தாயிடமும் மகளிடமும் திரும்பி, “இந்த வீடியோவை உங்களை அவமானப்படுத்தவோ இல்லை உங்களை கஷ்டபடுத்தவோ ப்ளே பண்ணல.. கண்டிப்பா இது உங்களை ஹர்ட் பண்ணிருக்கும்தான்.. நான் அதை மறுக்கவில்லை.. பட் இவருடைய உண்மையான முகம் உங்களுக்குத் தெரியனும்னு நெனச்சேன்.. அதுக்குத்தான் இந்த வீடியோவை உங்களை பார்க்கவெச்சேன்..”, என்றாள் நிதானமாக..
“எனக்கு புரியுது மிஸ் கவிநயா..”, என்ற நிஷா, “நீங்கள் இவருக்கு என்ன தண்டனை வேண்டும் என்றாலும் வாங்கிக்கொடுங்கள்.. இவருக்கு ஆதரவாக நாங்கள் என்றும் நிற்கமாட்டோம்..”, திடமாகவும் விரக்தியுடனும்..
நிஷாவின் நிலை உணர்ந்தாற்போல் அவளின் தோளில் கவியின் கை பதிந்தது..
“இவரின் நிழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்கு தாங்க்ஸ் கவிநயா..”, என்ற நிஷா இரத்தினத்திடம் திரும்பி, “இந்த பெண்ணிற்கும் என் வயசுதானே இருக்கும்..??”, கேள்வியாய்..
குனிந்தத் தலையை நிமிர்த்தவில்லை அவர்..
“இவங்களுக்கு நடந்த மாதிரி எனக்கு நடந்திருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க..??”
“குட்டிமா..??”, கண்கள் கலங்க கோபமாக நிஷாவை அழைத்தார் இரத்தினம்..
“அப்படி கூப்பிடாதீங்க.. அருவருப்பா இருக்கு..”, என்றவள், “செய்யறதெல்லாம் செஞ்சுட்டு கோபம் வருதோ உங்களுக்கு..??”, நக்கலாக..
இரத்தினத்தை வார்த்தைகளால் கொன்றிருந்தாள் நிஷா அருவருப்பு என்ற வார்த்தையில்..
“ஒரு வீட்டில் தந்தை எப்படியோ அப்படித்தான் பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர் என்பவர்.. தனது உதிரத்தில் இருந்து தனது மாணவர்களை அவர் பெற்றெடுப்பதில்லை.. ஆனால்தனது சிந்தனைகளின் மூலமாக அவர்களைப் பெற்றெடுப்பவர்.. தந்தையைப் போல் வழிநடத்தி ஒருவனை செதுக்கும் சிற்பி அவர்.. ஆனால் நீங்கள்..?? ஆசிரியர் என்னும் புனித பந்ததை இப்படி.. இப்படி..”, தடுமாறியது நிஷாவின் வார்த்தைகள்..
“ஒரு பெண் குழந்தையை உடன் படிக்கும் தோழர்களை நம்பி அனுப்பிவைப்பதில்லை.. ஆசிரியர்களை நம்பி அனுப்பிவைக்கிறார்கள்.. தாயாக தந்தையாக தங்கள் குழந்தையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற பெரிய நம்பிக்கை அவர்களுக்கு.. ஆனால் உங்களைப் போன்ற சிலர் அதை சுக்கு நூறாக்குகிறீர்கள்.. பலமுறை உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்டிருக்கிறேன்.. உங்களைப்போல் ஒரு தந்தை யாருக்கும் கிடைக்கமாட்டார் என்று.. ஆனால் அந்த நம்பிக்கையையும் நீங்கள் சிதைத்துவிட்டீர்.. ஒரே நொடியில்.. ரொம்பவே கேவலமா இருக்கு எனக்கு என்மேலேயே.. இப்படியொருவர் என் அப்பாயென்று அழைத்தது நினைத்து..”
சுத்தமாக பதில் இல்லை இரத்தினதிடம்..
நிஷா பேசப்பேச அனைவர் மனதிலும் மிகவும் இன்னும் இன்னும் கீழே இறங்கியிருந்தார் இரத்தினம்..
சந்திராவும் தலை குனிந்திருந்தார்.. இப்படி ஒருவருடன் தனது வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டதை நினைத்து..
அன்னையின் நிலை உணர்ந்தவள், “நீங்க எதுக்கும்மா தலைக்குனியறீங்க..?? தலைக்குனிய வேண்டியவரே இவ்வளவு அடிவாங்கியும் திடமா குத்துக்கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கும்போது தப்பு செய்யாத நம்ம ஏன்மா கூனிக் குறுகிப் போகனும்..??”, என்று கேள்வி எழுப்பியவள், “இனி நாம் இங்கு இருக்க வேண்டாம்மா.. இவருக்கு என்ன தண்டனை இவங்க கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ கொடுக்கட்டும் அதை..”, இன்னும் சமைந்து நின்று கொண்டிருந்தவரின் கைப்பிடித்து இழுத்தாள் போகலாம் என்பதாய்..
சுயமடைந்தவராக மகளிடமிருந்து தனது கையைப் பிரித்துக்கொண்ட சந்திரா, “நிஷாமா.. ஒரு நிமிஷம்டா.. கடைசியா இவரிடம் ஒன்று சொல்லவேண்டும்..”, என்றவர் ரத்தினத்தை நெருங்கி, “இனி நீங்கள் என் கணவர் என்றும் என் மகளின் தந்தையென்றும் சொல்லிக்கொண்டு எங்களை சந்திக்க வரவேண்டாம்..இனி எங்கள் வாழ்க்கையில் இரத்தினம் என்பவர் இறந்தகாலம்..”, தீர்க்கமாக தீர்மானமாக வெளிவந்தது அவரின் வார்த்தைகள்..
“சந்திரா..??”, இப்பொழுது அதிர்வாய் வெளிவந்தது இரத்தினத்தின் குரல்..
தன்னிடம் பேசுகையில் என்றுமே தலை நிமிர்ந்து குரல் உயர்த்தி பேசாதவரின் இன்றைய நிமிர்வும் கடுமையான பாவமும் ரத்தினத்திற்கு தனது நிலை நன்று விளங்கியது..
தலைநிமிர்ந்து சந்திராவை அதட்டும் இரத்தினம் இல்லை இவர்..
செய்யக்கூடாத தவறை தவறென்று அறிந்தும் செய்துவிட்ட பாவி இவர்..
“என் பெயரை உச்சரிக்கக்கூட உங்களுக்கு தகுதி இல்லை..”, ஒற்றை விரல் தூக்கி எச்சரித்த சந்திரா, “உங்களுக்கும் எனக்குமான உறவு இந்த நொடியே அறுந்துவிட்டது மிஸ்டர் இரத்தினம்..”, ஆக்ரோஷத்துடன் சொன்னவர் அதே வேகத்துடன் நிஷாவை அழைத்துக்கொண்டு அவ்விடம் முதல் இரத்தினம்வரை அனைத்தையும் அனைவரையும் தலைமுழுகினார்..
ஆழிப்பேரலையின் இடியொலி நின்றதுபோல் உணர்வு அங்கிருந்தவர்களுக்கு..
“இப்பொழுது இவரை வேலையைவிட்டுத்தூக்கச் சொல்லு அண்ணா..”, அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது கவியின் குரல்..
ஆதி மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருக்க அவன் அருகில் ஆரு நடந்ததில் இருந்து வெளிவரயியலா நிலையில்..
“ஆர் யூ ஆல்ரைட் ஆரு..??”
நோ என்பதாய் தலையசைப்பு பெண்ணிடம்..
“என்ன ஆச்சுப்பா..??”
“இன்று காலை முதல் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள்.. என்னால் ஒரு பர்சென்ட் கூட டைஜெஸ்ட் பண்ணிக்க முடியலை ஆதி..”
“என்னாலையும்தான்..”, மிகவும் அமைதியாக, “அவ குழந்தை ஆரு.. அவக்கிட்ட போய்..”, அதற்கு மேல் உதிரவில்லை வார்த்தைகள்..
“இல்லை ஆதி.. நீங்கள் நினைப்பது போல் அவ குழந்தை எல்லாம் இல்லைப்பா.. ஷி இஸ் மெட்ச்சூர்ட் இனப்.. எந்த ஒரு சிட்டுவேஷனயும் அவளால் ஹான்டில் பண்ணமுடியும்.. அதுவும் ரொம்ப தைரியமாகவும் சரியாகவும்.. டு பி பிரான்க்.. அவ இடத்தில நான் இருந்திருந்தேனா கண்டிப்பா இவ்ளோ திடமா எல்லாம் இருந்திருக்க மாட்டேன்.. அன்ட் ரியலி அவ அவருக்குக் கொடுத்த தண்டனை நான் சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணாத ஒன்னு..”
“எனக்கும் தான் ஆரு.. தண்டனை கொடுக்கணும் வேலையைவிட்டுத் தூக்கணும் என்று முதலில் சொன்னவள் பிறகு வேண்டாம் என்று சொன்னது கேட்டு பயங்கர ஷாக் எனக்கு.. அப்புறம் அந்த ஆளோட பொண்ணுக்கிட்டையும் மனைவிக்கிட்டையும் அவரோட கேபின் வீடியோ புட்டேஜஸ் எல்லாம் போட்டு காமிக்கனும்னு சொன்னப்போ என்ன சொல்றதுனே தெரியல..”
“ஆதி எனக்கொரு சந்தேகம்.. கேட்கலாமா..??”
“என்ன சந்தேகம் ஆரு..?? கேளு..”
“அவரோட கேபின்ல சிசிடிவி இருக்குன்னு தெரிஞ்சும் அவர் எப்படி இப்படி..??”
“அத ஏன் கேட்கற.. இவரது செயலுக்கு மானிட்டரிங் ரூமில் இருக்கும் ஒருவரும் உடந்தைபோல.. இரத்தினத்தின் ரூமில் இதுபோல் ஏதாவது நடந்தால் அதை அழிப்பது மானிட்டரிங் ரூமில் இருப்பவரின் வேலையாம்.. விசாரித்ததில் தெரிந்தது..”
“அவர் அழித்திருந்தால் வீடியோஸ் சிக்கியிருக்காதே..??”
“முதலில் கிடைக்கவில்லைதான்.. இரத்தினதிற்கு துணை சென்றவரை விசாரித்ததில் அந்த வீடியோக்களை எல்லாம் அவர் தனியாக சேமித்து வைத்திருந்தது தெரிந்தது..”
“ச்சே.. என்ன மனிதர்களோ..??”
“என்ன பண்ண ஆரு.. ஒரு இடத்தில் ஐம்பதுபேர் இருக்கிறார்கள் என்றால் அதில் இவர்களைப் போன்று இரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்..”
“அது என்னவோ சரிதான் ஆதி..”, என்ற ஆரு, “என்னை என் ஆபீஸில் இறக்கிவிடுங்கள்.. நான் என் காரில் வீட்டிற்கு சென்றுவிடுகிறேன்..”, என்றாள்..
ஆதிக்கு அப்பொழுதுதான் அன்று காலை தான் செய்துவைத்த காரியம் நினைவில் மோதியது..
சமாளி ஆதி சமாளி என மனம் சத்தமிட, “டைம் நைட் செவன் ஆகுது.. உன் ஆபிஸுக்குப் போய் உன் கார் எடுத்திட்டு போறதுக்குள்ள விடிந்துவிடும்..”, கேலி போலவே..
“அது ஒன்னும் பிரச்சனை இல்லை ஆதி.. மேனேஜ் பண்ணிப்பேன்..”
“இந்த ட்ராபிக்ல எப்படி ஆரு..??”
“அதெல்லாம் எனக்கு பழக்கம்தான் ஆதி..”
“துணைக்கு ஆள் இல்லாதப்போ பரவாயில்லை.. வேறு வழியில்லை.. பட் இப்பத்தான் நான் இருக்கேனே..”, கொஞ்சம் உரிமை உணர்வோடு..
“ஆதி நீங்க இன்னைக்கு ஒரு நாள் டிராப் பண்ணுவீங்க.. மிச்ச நாள் எல்லாம் நான்தானே போகனும்.. ஐ கேன் மேனேஜ்..”
தன்னை அவள் எட்டி நிருத்தியிருந்ததில் சிறிது கோபம் எட்டிப்பார்த்தது ஆதிக்கு..
முறைத்துவைத்தான் அவளை..
“எதுக்கு ஆதி இப்போ முறைக்கறீங்க என்னை.. உண்மையைத்தானே சொன்னேன்..”, கேஷுவலாக..
தலையை ஆழமாய்க் கோதிக்கொண்டவன், “நான் உன்னை டிராப் பண்ணக்கூடாதா..??”, என்று கேட்டான் அதே ஆழ்ந்த குரலில்..
வழக்கம்போல் அவனது அந்த டோனிற்கு பதில் சொல்ல இயலவில்லை பெண்ணால்..
அவளது நிலை உணர்ந்தவன் போல், “என்ன மேடம் அமைதியாயிட்டீங்க..??”, என்று கேலி எழுப்பினான்..
“வீட்லயே என்னை ட்ராப் பண்ணிடுங்க ஆதி..”, மென்மையாக அவளுக்கே கேட்காத குரலில்..
“நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே..”, என்று யோசிப்பதாய் பாவனை செய்தவனைக் கண்டும் காணாமலும் வெளியே வேடிக்கை பார்ப்பதுபோல் அமர்ந்துகொண்டாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும் 
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அது கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள் 
-அகிலமாவாயோ நீ..??

Advertisement