Advertisement

அகிலம் – 9
ஆதி சென்னையில் இருந்து திரும்பி வருகிறான் என்று சொன்னதும் ஆருவிற்கு மனது முழுதும் மகிழ்ச்சி அலைகள்..
மித்ரன் அவளிடம் ஆதியைப்பற்றி பேச இன்னும் தெளிந்திருந்தாள் அவள்..
அடுத்தநாள் அவனைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு சிறு படபடப்பையும் எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது..
விடியலில் நடக்கப்போவது எதுவும் அறியாமல் ஆதியை நினைத்துக்கொண்டு விட்டதை வெறித்தபடி படுத்திருந்தாள் ஆரண்யா..
“ஆரண்யா..”, ஹாலில் அன்னையின் குரல் கரகரப்புடன் சத்தமாகக் கேட்க தட்டுத்தடுமாறி எழுந்தவள் என்னமா ஆச்சு என்றபடி விரைந்தாள்..
பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தவரைக் கண்டு எதுவோ சரியில்லை என்று புரிந்தது ஆருவிற்கு..
தந்தை எங்கே என்று அவள் தேட போன் பேசிக்கொண்டிருந்தார் அவர்..
“இப்போவே கிளம்பி வரோம்..”, என்று சுப்பிரமணி மறுமுனையில் இருந்தவரிடம் உரைக்கஎதுவோ அசம்பாவிதமென்று உறுதியானது ஆருவிற்கு..
“ம்மா..”, என்று அல்லியில் தோளில் ஆரு கைவைக்க, “தாத்தா நம்மைவிட்டு போயிட்டாரு ஆரும்மா..”, என்று கதறத் துவங்கினார் அல்லி..
தாமதிக்காமல் சிந்தியாபுரம் கிளம்பியிருந்தனர் மூவரும்..
அல்லி அழுதுகொண்டே பயணம் செய்ய அழுகவும் முடியாமல் அவரை சமாதானப்படுத்தவும் முடியாமல் தினறியபடியே கழிந்தது பயணம்..
அதில் ஆதி ஆபிஸ் அனைத்தும் பின்னால் போயிருக்க நினைவில் இருந்தவர் தாத்தா மட்டுமே..
தாத்தாவின் உடலைக்கண்டதும் தங்களுக்கும் சிந்தியாபுரத்திற்குமான கடைசி பிணைப்பு இப்பொழுது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆருவிற்கு..
எல்லாம் வெகு சீக்கிரம் முடிந்துவிட்டதாய் மனதில் ஒரு எண்ணம்..
அழுகையில் கரைந்திருந்தாள் ஆரு..
சிந்தியாபுரத்தில் கடைசி காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகுதான் ஆபிசிற்கு லீவ் சொல்லவில்லை என்ற நியாபகமே வந்தது அவளுக்கு..
அவசரமாக தனது போனைத் தேட அது ஸ்விட்ச் ஆப்பில் இருப்பது கண்டு தலையில் அடித்துக்கொண்டவளது கண்ணில் சரண்யா பட்டாள்..
பல வருடத்திற்கு பிறகான சந்திப்பு..
தன்னைப் பார்த்து ஆரு நின்ற இடத்தில் நிற்பதைக் கண்ட சரண்யா, “ஏதாவது வேணுமா ஆருமா..??”, அதே பாசத்துடன்..
ஆருவிற்கு அவளுடன் பேசுவதா? வேண்டாமா? என்ற குழப்பம்..
தப்பு செய்தவன் வேறு யாரோ.. தண்டனை வேறு யாருக்கோவா..?? மனசாட்சி கேள்வி எழுப்ப, “போன் சுவிட்ச்ட் ஆப்.. சார்ஜர் வேணும்..”, என்றிருந்தாள் ஆரு..
“பின்கட்டுல இருக்க ப்ளக் பாயின்ட்டில் சார்ஜர் இருக்கும் ஆரு..”, என்ற சரண்யா, “கொடு நான் போட்டுவிட்டிட்டு வாரேன்..”, என்றாள்..
“இல்லக்கா.. தாங்க்ஸ்.. பரவாயில்லை..”, தெளிவில்லாமல் வார்த்தைகளை உதிர்த்தவள்சரண்யாயை நேருக்கு நேர் பார்க்காமல் பின்கட்டிற்கு விரைந்தாள்..
“வா..ண்..டு..”
தூக்கிவாரிப்போட்டது ஆருவிற்கு..
அன்று தன்னுடன் வாயாடிய அதே குரல்..
உடல் விறைக்க பக்கவாட்டில் நின்றிருந்தவனின் முகம் பார்க்காது அங்கும் இங்கும் அலைந்தன ஆருவின் கண்கள்..
“வாண்..டு..”
“அப்படிக்கூப்படாதீங்க..”, கடுமையாக வெளிவந்தது ஆருவின் குரல்..
ஓரெட்டு அவளருகில் காலடி எடுத்துவைக்க அருகில் இருந்த குத்துவிளக்கை அவன் கைகளில் இறக்கிருந்தாள் ஆரு..
தோளில் குத்துப்பட்டு குருதி வழிந்தபோதும் இது எனக்குத் தேவைதான் என்பதுபோல் கல்லாய் சமைந்து நின்றிருந்தான் சத்யன்..
சத்தியமாக இந்த அமைதியையும் மௌனத்தையும் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவள்..
இரத்தம் சீறிக்கொண்டு சட்டையை நனைத்துக்கொண்டிருக்க எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் நீ என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள் என்று நின்றிருந்தவனைக் கண்டு ஒருநொடி பாவமாகவே இருந்தது ஆருவிற்கு..
ஒருநொடிதான்.. பழையதெல்லாம் மீண்டும் நியாபகத்திற்கு வர இவனுக்கு இதெல்லாம் பத்தாது என்றே தோன்றியது ஆருவிற்கு..
ஒருவனின் துன்பத்தில் தான் இன்பம் காணக்கூடாதென்று மீண்டும் மனது எடுத்துரைக்க குற்றவுணர்வு எழுந்தபோழுதும் அவன் துடிப்பத்தில் இன்பமே உண்டானது ஆருவிற்கு..
நானும் இப்படித்தானே துடித்தேன் என்று..
“என்னை மன்னிச்சிருன்னு கேட்க எனக்கு தகுதி இல்லைதான் ஆரு.. என்னை மன்னிக்கவாவது முயற்சி செய் ஆரு..”, என்றிருந்தான் சத்யன்..
இவன் மன்னிப்பு கேட்கிறானா..?? நம்பமுடியவில்லையே..
ஆம், நம்பமுடியவில்லை அவளுக்கு..
“எந்த போதிமரத்தில் ஞானம் கெடைச்சுது..??”, படு நக்கலாகவே கேட்டிருந்தாள் கேள்வியை..
தலை தாழ்ந்து போனான் சத்யன்..
“கேள்விக்கு பதில் சொல்லாம தலை குனிந்தால் எப்படி..?? பதிலைச்சொல்லுங்க..”
“வர்ஷா..”
குரலில் அத்தனை சோகம்..
“வர்ஷாவா..?? யாரு..??”, நெற்றியில் முடிச்சுவிழ..
“என் பொண்ணு..”
“ஓ.. உங்க பொண்ணு கிளாஸ் எடுத்துச்சா..??”, நக்கல்தோணி ஒரு சதவிகிதம் கூட மாறாமல்..
“கிளாஸ்தான் எடுத்துச்சு ஆரு.. அதுவும் செத்துப்போய்..”, இழப்பின் சோகம் அப்பட்டமாக..
“வா..ட்..?? எப்..ப்படி..?? என்னாச்சு..??”, இப்படி ஒருபதிலை எதிர்பார்க்கவில்லை அவள்..
“எல்லாம் உனக்கு நான் செய்த பாவம்னு நினைக்கிறேன்.. ஷி வாஸ் ப்ரூட்டலி ரேப்ட் அண்ட் கில்ட்..”, என்ற சத்யனின் குரலில் அத்தனை துயரம்..
இதுபோல் ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை ஆரு..
சத்யனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தாலே ஒழிய அவன் குடும்பத்திற்கு இதுவரை எந்த தீங்கும் நினைக்கவில்லை அவள்..
சத்யனுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியும் ஆருவிற்கு.. ஆனால் அக்குழந்தை இப்பொழுது இல்லை என்ற செய்தியை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை..
அதுவும் ஷி வாஸ் ப்ரூட்டலி ரேப்ட் அண்ட் கில்ட் என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை..
“சாரி மாமா.. உங்க குழந்தைக்கு இப்படி ஆகும்னு நான்.. நான்..”, அதற்கு மேல் என்ன சொல்வதென்று புரியவில்லை அவளுக்கு..
“வேண்டாம் ஆரு.. நீ எனக்கு ஆறுதல் சொல்லவேண்டாம்.. அந்த வயசுல நான் உன்..னை.. உன..க்கு.. தப்புதான்.. எனக்கு அது அப்போ புரியல ஆரு.. ஆனால் என்னைக்கு என் குழந்தையை அப்..படி.. ஒரு குப்பை மாதிரி பார்த்தேனோ.. செத்துட்டேன்.. யோசிக்கும் போதுதான் என் தப்பு புரிஞ்சுது.. மத்தவங்களுக்கு அந்த மாதிரி நடக்கும்பொழுது எனக்கு அது புரியல.. என்னோட இரத்ததுக்கே அது நடந்தப்போ.. என்..னால என்னா..ல.. அதை ஏத்துக்க முடியல.. அப்போத் தான் என் தப்பும் புரிஞ்சுது.. மத்தவங்களோட கஷ்டமும்.. காலம் கடந்த ஞானோதயம்தான்.. உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிரு..”, சட்டென ஆருவின் காலில் விழுந்தவன் அவள் கையில் வைத்திருந்த குத்துவிளக்கைப் பறித்துக்கொண்டு, “கீழ வழுக்கிவிழுந்ததுல குத்திடிசுன்னு சொல்லிக்கறேன்.. நீ போ..”, என்றிருந்தான்..
நடந்தது எல்லாம் சொல்லிமுடித்திருந்தாள் அவனிடம்..
ஆதியிடம் ஒரு ரியாக்ஷன்லெஸ் எக்ஸ்ப்ரெஷன்..
அதைக் கண்டு கலக்கமே தோன்றியது ஆருவிற்கு..
“ஆ..தி.. நா..ன்.. நா..ன்..”
“அந்தக் குழந்தை.. வர்ஷா.. யார் அப்படி பண்ணது..??”, நடுக்கத்துடன் கேட்டிருந்தான் ஆதி..
அவனாலும் அக்குழந்தைக்கு நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
“அது சத்யனோட பக்கத்துக்கு பிளாட்.. விளையாட போவாளாம் அவங்க வீட்டுக்கு.. அப்போ அவளை..”, மீண்டும் அழுகை ஆருவிடம்..
தோளில் சாய்த்து தலையை வருடத்துவங்கியிருந்தான்..
“நாலு வயசுதான்போல அவளுக்கு.. எப்படி ஆதி மனசு வந்துச்சு அவனுக்கு..?? அந்தப் பாப்பாக்கு போர்ஸ் பண்ணி எதையோ குடிக்கவேற வெச்சிருக்கான்.. இடியட்.. அதுக்குப்பு..றம்.. அவன் பண்ண கொடுமையில அந்தக் குழந்தை சுத்தமா சுயநினைவில்லாம போயிருக்கு.. யாருக்கும் தன் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு குப்பையோட குப்பையா குழந்தையை தூக்கிப்போட்டுட்டு போயிருக்கான் போல.. இரத்தம் வடிய குழந்தையை கண்டுபிடிச்சிருக்காங்க.. ஹாஸ்ப்பிடல் போறதுக்குள்..ள.. முடியல ஆதி..”, குலுங்கத்துவங்கியது ஆருவின் உடல்..
பிடியை இறுக்கினான் ஆதி.. எல்லாத்தையும் கொட்டிடு என்பதுபோல்..
“போலிஸ் வந்து விசாரணை நடத்தி ஆளை கண்டுபிடிச்சு விசாரிச்சா அசால்டா அவன் ட்ரின்க் பண்ணிருந்தேன் அப்போ.. எதுவும் தெரியல.. சுயநினைவில்லாம பண்ணிட்டேன்னு அசால்டா சொல்லிருக்கான்.. இப்போ அவன் ஜெயிலில்தான் இருக்கான்.. மேல் முறையீடு பண்ணப்போகிறானாம்.. ஆனால் சத்யன் மாமா பாமிலி நிலைமை..?? ரொம்ப பாவம் ஆதி அவங்கெல்லாம்.. ஊருல இதுவரை நடந்தது யார்க்கிட்டயும் சொல்லல.. குழந்தை ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு நம்பவெச்சிருக்காங்க எல்லாரையும்..”, என்ற ஆரு, ”எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியாக இருக்கு ஆதி.. அவருக்கு தண்டனை கிடைத்திருந்துதுனா கண்டிப்பா நான் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன்.. ஆனால் அவர் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..?? என்னமோ என்னாலதான் இப்படியான மாதிரி ஒரு பீல்.. என்ன அது ரொம்ப கொல்லுது..”, என்றாள்..
“ஆரும்மா.. இங்க பாருங்க அழக்கூடாது.. இதுல நீங்க எந்தத் தப்பும் பண்ணல.. ஒரு சதிவீதம்கூட உங்க மேல தப்பில்லை இந்த விஷயத்துல.. சோ உங்களுக்கு இந்தக் குற்றவுணர்வு எல்லாம் தேவையில்லை.. புரிஞ்சுதா..??”
ஆம் என்பதாய் தலையசைத்தாள் ஆரு..
“குட்.. வர்ஷா.. அந்தக் குழந்தைக்கு இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்.. பட் நடந்திருச்சு.. ப்ராக்ட்டிகலி ஸ்பீக்கிங்.. நம்மால இந்த மாதிரி ஆளுங்கள எதுவும் பண்ணமுடியாது ஆரு.. இப்போ ப்ரெசென்ட்டா நம்ம குழந்தைகளை நம்மதான் பாத்துக்கனும்.. எங்க போறாங்க..  என்ன பண்றாங்க.. யாரோட பேசறாங்க.. யாரோட விளையாடராங்கன்னு எல்லாம் நம்மதான் பாத்துக்கனும்.. சினிமாவில் வருவதுபோல் இப்படி செய்யற ஆட்களை சுட்டுத்தள்ளிட்டு போற ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் யாரும் இல்லை.. பிராக்ட்டிக்களா அது பாசிபிளும் இல்லை..”
“அப்போ எங்க சேப்ட்டியை நாங்கதான் பார்த்துக்கனும்னு சொல்றீங்களா ஆதி..??”
“கிட்டத்தட்ட.. இட்ஸ் அ பிட்டர் ட்ரூத் ஆரும்மா.. நம்ம சேப்ட்டியை நாமதான் பார்த்துக்கனும்.. அது ஆணோ பெண்ணோ.. இப்போ ரீசென்ட்டா மீடூன்னு (#metoo) ஒரு மூவ்மென்ட் வைரல் ஆச்சுல.. அப்போ ஒரு ஆன்லைன் சர்வே எடுத்தாங்க.. அதுல என்பது சதவிகிதம் பெண்களும் நாற்பது சதவிகிதம் ஆண்களும் ஹராஸ்மெண்ட்க்கு உள்ளாயிருக்காங்கன்னு ரிசல்ட் வந்திருக்கு.. ஒரு நிமிஷத்துக்கு இந்த உலகத்துல யாரோ ஒரு பொண்ணு ஹராச்மென்ட்டுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.. பெண் குழந்தைகள் ஐம்பது சதவிகிதம்.. நிறைய பேருக்கு அது ஹராஸ்மென்ட்டுனு கூட தெரியறதில்லை.. அதுதான் உண்மை.. முதலில் அவர்களுக்கு குட் டச் பேட் டச்சைப் பற்றிய புரிதல் அவசியம்.. அதைப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.. அதே போல் பெண்களுக்கு அவர்களை அவர்களே பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளத் தெரியவேண்டும்..”
“நீங்க சொல்றது சரிதான் ஆதி.. நம்மல நாமதான் பார்த்துக்கனும்..”, ஏதோ தெளிவு பிறந்தாற்போல் சொன்னாள் ஆரு..
அதேநேரம் தெளிந்திருந்த வானம் சட்டென இருட்டிக்கொண்டு ஒருதுளி மழையை பூமியை நோக்கி ஏவ மழைத்துளி சரியாக ஆருவின் நெற்றியில் விழுந்தது..
அந்த மனநிலையிலும் உடல் சிலிர்த்தது ஆருவிற்கு..
“ஆதி மழை..”, என்றாள் அத்துளியை அனுபவித்தபடியே..
“ஹ்ம்.. போகலாம் ஆரு.. இதுக்குமேல நாம இருந்தா மித்ரன் அடிக்க வந்திருவான்..”, என்ற ஆதி ஆருவின் கைபிடித்தபடியே மொட்டைமாடியில் இருந்து இறங்கத்துவங்கினான்..
“சார்.. மித்ரன் சார் ஆரண்யா மேடமோட காரை எடுத்துட்டுப் போயிட்டார்.. உங்களிடம் மேடமை டிராப் பண்ண சொன்னார்..”, என்று செக்யூரிட்டி சொல்ல ஆருவின் வீடு நோக்கி கிளம்பியிருந்தனர் இருவரும்..
“இது உங்க வேலையா..??”, கேட்டிருந்தாள் ஆரு..
“எது..??”
“என்னை டிராப் பண்ண மித்ரனை கார் எடுத்திட்டுப் போகச் சொன்னது..??”
“ஹே.. நான் எதுவும் சொல்லல அவன்கிட்ட..”, பாவமாக..
“எப்படி காரைப் பஞ்சர் பண்ணிட்டு ஆக்ட் பண்ண மாதிரியா..??”, கொஞ்சம் கேலியாக..
“உனக்கு எப்படித் தெரியும்..??”
“லேமன்வுட்ல செக்யூரிட்டி கேமரா இருக்கு பாஸ்.. ஐ ஆம் வாட்சிங்..”, சிரிப்புடன்..
“ஹி ஹி.. அதுவந்து..”
“வழியுது ஆதி..”, விரிந்த சிரிப்புடன் ஆரு கூற தனது சின்ட்ரெல்லாவின் சிரிப்பில் வழக்கம்போல் தொலைந்துபோனான் ஆதி..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement