Advertisement

அகிலம் – 10  
கை விரல்கள் எல்லாம் பின்னிக்கிடக்க தனது சின்ட்ரெல்லாவைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் ஆதி..
“என் கையை அப்புறம் பிடிச்சுக்கலாம்.. இப்போ வண்டி ஓட்டும் வேலையை மட்டும் பாருங்க ஆதி..”, சிணுங்கலாய் ஆரு சொல்ல மாட்டேன் என்பதாய் தலையசைந்தான் ஆதி தனது சின்ட்ரெல்லாவின்கண்களுக்குள்வீழ்ந்தபடியே..
அவன் பார்வையில் நாணம் அழைக்கா விருந்தாளியாய் மாலை சூடிக்கொள்ள கன்னங்கள் இரண்டும் சிவந்தது ஆருவிற்கு..
“ஆதி.. ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க..”, அதட்டலாக சொல்ல நினைத்தும் குழைவாய்..
இவள் தன் நாக்கைக் கடித்துக்கொள்ள சிரித்துவிட்டான் அவன்..
அதற்கும் அவள் ஆதியென்று சிணுங்க தலை கோதிக்கொண்டவன் ரிலாக்ஸ் சின்ட்ரெல்லா என்றபடியே அவள் கைகளை விட்டான்..
அந்நொடி எதுவோ தன்னைவிட்டுப் பிரிந்து செல்வதுபோல் இருக்க ஆதியின் விரல்களைத் தேடிச் சென்றது ஆருவின் விரல்கள்..
“இவங்க மட்டும் என் கையைப் பிடிச்சுப்பாங்கலாம்.. நான் பிடிச்சா மட்டும் குத்தமாம்..”, ஆதி கேலி செய்ய அவன் தோளில் இரண்டடி வைத்தாள் ஆரு தன் வெட்கத்தை மறைக்க..
“ஆரு உன் ப்ரென்ட்..”, என்றபடி ஆதி ஒரு திசையைக்காட்ட முதல் துளி விழுந்தது காரின் சாளரத்தில்..
மனது முழுதும் சந்தோஷச் சாரல் மழைக்காதலிக்கு..
அவன் மனதைப் படித்தாற் போன்று எப்எம்மிலும் ஏஆர்ஆரின் இசைச்சாரல்..
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின்திரையின் முன் பார் பிம்பம்

தங்களுக்காக மித்ரன் கேட்டின் முன்னே காத்திருக்க.. அந்நேரத்தில் அவனை எதிர்பார்க்கவில்லை ஆதியும் ஆருவும்..
“எவ்ளோ நேரம் உங்களுக்காகக் காத்திருப்பது..?? கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக்கூடாது..??”, என்று கேட்டவனின் பதற்றமும் படபடப்பும் ஏனோ அன்று புதிதாய்..
“என்னாச்சு மித்ரா..?? ரொம்ப பதற்றமா இருக்க..??”, ஆதி கேட்க, “மாமா அத்தை எல்லாம் வந்திருக்காங்க..”, என்றான் மித்ரன்..
“மாமா..?? அத்தையா..?? யாரு..??”
“நாங்க யாரா..?? நீ இதுவும் கேட்ப இதுக்கு மேலையும் கேட்ப..”, என்றவண்ணம் மீனாட்சி ஆருவின் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தார்..
அவரைக் கண்டஆதி திகைக்க இவர் இப்படி இங்கே அதுவும் திடீரென்று என்று கேள்வி எழ திகைப்புடன் முழிக்கத்துவங்கினாள் ஆதியின் ஆரு..
“அம்..மா..”, என்ற ஆதியைக் கண்டுகொள்ளாத மீனாட்சி ஆருவை நோக்கி நேராகச்சென்றார்..
தன்னை நோக்கி வருபவரைக் கண்டு மேலும் திகைத்து நின்றவளுக்குஎன்ன செய்வதென்றே தெரியவில்லை.. சிறு நடுக்கமும் கூடவே..
அதே நடுக்கத்துடன் புன்னகைத்துவைத்தாள் பெண்..
“வீட்டுக்கு வந்திருக்கோம்.. வான்னு கேட்கமாட்டியாம்மா..??”, கொஞ்சம் கடுமைபோல் வெளிப்பட்ட குரலில் தன்னை மீட்டுக்கொண்டவள், “வாங்க ஆன்ட்டி..”, என்றிருந்தாள் அதே குளிர் புன்னகை நடுக்கத்துடன்..
“என்னது..?? ஆன்ட்டியா..?? கஷ்டப்பட்டு உங்க அம்மா அப்பாவை காக்கா பிடிச்சு உன்னை என் வீட்டுக்கு இன்னொரு மகளா கூட்டிட்டுப் போகப்போறேன்.. ஆன்ட்டின்னு கூப்பிடற என்னை..?? அத்தைன்னு கூப்பிடனும் மருமகளே..”, என்று சிரித்தபடி சொன்ன மீனாட்சி ஆருவின் கன்னத்தை லேசாக தட்டிக் கொடுத்தார்..
அவரின் மருமகளே என்ற அழைப்பில் வானமழையில் நனைந்ததுபோல் குளிர்ந்து போனாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
அதன் வெளிப்பாடாய் கண்கள்கூட லேசாக பொழியத் துவங்கியது கண்மழையை..
அதைத் துடைத்துவிட்ட மீனாட்சி, “எங்கவீட்டுப் பொண்ணு நீ.. சந்தோஷத்துல கூட கண்ணீர் விடக்கூடாது..”, என்று தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் ஆதியையும் மித்ரனையும் டீலில் விட்டுவிட்டு ஆருவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்..
அம்மாவென்று ஆதி அழைத்ததைக்கூடப் பொருட்படுத்தாமல்..
மாமியாரும் மருமகளும் வீட்டிற்குள் சென்று மறைந்ததும், “என்ன மச்சான் நடக்குது இங்க..??”, மகிழ்ச்சியுடனும் குழப்பத்துடனும் கேட்டிருந்தான் ஆதி..
“எல்லாம் உன் அருமை தங்கச்சியோட வேலை மாப்பிளை..”
“கவியா..?? சொதப்பிட்டாளா  அவ..??”, தலையில் கைவைத்தபடி ஆதி கேட்க அவன் பாவனையில் சிரித்திருந்தான் மித்ரன்..
“சிரிக்காதேடா.. என்னன்னு சொல்லித்தொலை..”, ஆதி கோபம் கொள்ள சொல்றேன் சொல்றேன் என்பதாய் சைகை செய்த மற்றவன், “கவியைக் கூட்டிட்டு வரலாம்னு உங்க வீட்டுக்குப் போனேனா.. அப்போ உன் தங்கச்சி.. அண்ணி எங்க போனாங்க..?? அண்ணி ஏன் என் போன் அட்டென்ட் பண்ணலன்னு வரிக்கு வரி ஆர்வத்துல அண்ணிபோட.. அதை உங்க அம்மா கேட்க.. ஒரே கூத்தா போச்சு போ..”, என்றான் வடிவேலுவைப் போல் பாவனையாக..
“அம்மாவோட ரியாக்ஷன் எப்படி இருந்துச்சுடா அதுக்கு..??”, முகம் பயங்கர சீரியஸாக சிறு பயத்துடனே கேட்டான் ஆதி..
“எப்படி இருந்துச்சா..?? வெல் அதை எப்படிச் சொல்ல..??”, கைகளை ஆட்டியபடியே மித்ரன் பில்டப் கொடுக்க பொறுமை பறக்கத் துவங்கியது ஆதிக்கு..
“கடுப்பேத்தாதே மித்ரா..”, என்ற ஆதியை மேலும் வெறுப்பேற்ற மனம் ஆசைக்கொள்ள, “மீதியை உன் தங்கச்சி சொல்வா..”, என்ற மித்ரன் அங்கியிருக்கு எஸ்ஸானான்..
தன்னிடமிருந்து தப்பிச் செல்பவனைக் கண்டு ஆதியால் பல்லைக் கடிக்க இருவரையும் அழைத்துச் செல்ல வெளியே வந்த கவி ஆதியிடம் மாட்டிக்கொண்டாள்..
“அண்ணா.. நான் வேணும்னே பண்ணல.. என் காதைவிடேன்.. ப்ளீஸ்.. ரொம்ப வலிக்குது..”, என்று அவள் கெஞ்ச..
அதில் கொஞ்சம் இறங்கிய தமையன்,“ஏன் குட்டிமா இப்படி பண்ண..??”, என்று கேட்டபடி அவள் காதை விட்டிருந்தான்..
“நான் வேணும்னு பண்ணலடா.. ஒருவாரமா அண்ணிக்கு ட்ரை பண்ணேன்னா.. அவங்கஎடுக்கலையா.. சோ அண்ணியைப் பற்றி நான் யோசிச்சிட்டே இருந்தேன்.. அப்போ மித்ரன் மாமா அண்ணியோட காரில்வர.. நான் ஒரு எக்சைட்மென்ட்ல உளறிட்டேன்டா.. சாரி..”, என்றாள் குழந்தைபோல்..
அவளிடம் அதற்குமேல் கோபித்துக்கொள்ள முடியாமல், “அம்மா ரொம்ப அப்சட்டாகிட்டாங்களா குட்டிமா..??”, என்று கவலையுடன் கேட்டான்..
“எதுக்குண்ணா..??”, புரியாமல்..
“அதான்.. நானு..ம்.. ஆருவும்.. அதான் எங்க விஷயத்தைக் கேட்டுத்தான்..”
வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத்து வைத்தாள் கவி..
அப்படியொரு கேலி சிரிப்பு..
“அடியே.. நான் சீரியஸா கேட்கிறேன்.. நீ என்னடான்னா இப்படி சிரிக்கற..??”, கோபமாகக் கேட்டான் ஆதி அதட்டியபடியே..
“அந்த காமெடிய ஏண்டா கேட்கற..??”, என்றபடி அவன் முதுகில் இரண்டடி போட்டவள் மீண்டும் சிரிக்கத்துவங்கினாள் அங்கும் இங்கும் சற்று தூரம் நடந்தபடி..
கவியின் கையை இறுக்கமாகப் பிடித்து நிறுத்தியவன், “சிரிக்காம சொல்லு கவி..”, இப்பொழுது படு எரிச்சலாக..
அவனது எரிச்சலில் கொஞ்சமே கொஞ்சம் தெளிந்தவள், “அம்மாக்கு உன் விஷயம் முன்னாடியே தெரியுமாம்..”, இடியாக..
“என்ன குட்டிமாசொல்ற..??”, அதிர்ச்சியாக..
“ஆமாண்ணா.. நம்ம தோட்ட வீட்டை ரினோவேட் பண்ற அன்னைக்கே அம்மா கண்டுபிடிச்சுட்டாங்க போல..”, கண் சிமிட்டலுடன் கவி சொல்ல, “எப்படி குட்டி..??”, என்று ஆச்சரியமாக கேட்டான் ஆதி..
“என்ன எப்படி..??”
“அதான்.. அப்போவே எப்படி கண்டுபிடிச்சாங்க..??”
“அம்மா பின்னாடியே சுத்தறவன் வித்யாசாமா பொண்ணு பின்னாடி சுத்துன்னா கண்டுபிடிக்காமலா இருப்பாங்க..??”, கவி கேட்க இப்படியொன்னு இருக்குதுல என்பதுபோல் வாயடைத்து நின்றான் ஆதிரன்..
ஆருவின்அரன்..
கார்காலத்தில் வர்ணன் தன் வேலைகளை முடிந்துவிட்டு அஸ்தமனமாகியிருக்க கூதிர்காலம் தன் வேலையைக்காட்டத் துவங்கியிருந்தது..
(கூதிர்காலம் – இலைகள் கூம்பி உதிரும் காலம்.. ஐப்பசி.. கார்த்திகை..)
பொள்ளாச்சி ரோட்டில் அமைந்திருக்கும் ஆதியின் பண்ணை வீடு பிரமாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது..
மாவிலைத் தோரணங்கள் வீட்டை அலங்கரித்திருக்க புதுப்பொலிவுடன் கண்களை கவர்ந்து கொண்டிருந்தது அனைவரையும்..
தத்தித் தவழும் மழலையர் கூட்டம் ஒருபுறம் ஓடியாடி விளையாட.. மறுபக்கம் பெண்கள் மாநாடு நடத்த.. ஆண்கள் அரசியல் பேச.. இளசுகள் தங்களது வயதினருடன் அவ்விடத்தைச் சுற்றிப்பார்க்க.. வயாதனவர்கள் கூட்டமாய் ஒரே இடத்தில் அமர்ந்து தங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமை பேச.. கூச்சலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பி வழிந்தது அவ்வீட்டிலே..
பெண்கள் மூவரும் (மீனாட்சி.. அல்லி.. அகிலா..)வந்திருக்கும் ஆட்களிடம் நலம் விசாரித்துக்கொண்டும் அவர்களை கவனித்துக் கொண்டும் இருக்க..
ஆண்கள் மூவரும் (விஸ்வநாதன்..தரணிதரன்.. மணிகண்டன்..)டைனிங் மேடை வேலை என தங்களுக்குள் வேலைகளைப் பிரித்துக்கொண்டு அதை மனநிறைவுடன் பம்பரமாகச் சுழன்று செய்துகொண்டிருந்தனர்..
கதிரவன் அஸ்தமித்து நிலவுக் கன்னியை பூமிக்குத்துணை அனுப்ப இரண்டு ஜோடிகளும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மேடையில் ஏறினர்..
பௌர்ணமி இரவில்நிலவின் மடியில் ஆதியின் அந்தமாய் ஆரு அவன் அருகில் நிற்க.. மித்ரனின் அருகில் பாந்தமாய் நின்றிருந்தாள் கவி..
காலையில் திருமணம் முடிந்திருக்க புது பந்தம் அளித்திருக்க மனநிறைவில் பெண்கள் இருவரின் முகத்திலும் அத்தனை அத்தனை ஜாதி மலர்கள் மத்தாப்பூவாய்..
ஆதி விடாது தனது விரல்களை ஆருவுடன் பிணைத்திருக்க மற்றவர்களை ஏறிட்டுப் பார்க்க இயலா வெட்கம் அவளிடம்..
“டேய்.. தங்கச்சிய யாரும் கடத்திட்டுப் போகமாட்டாங்கடா..”, என்று மித்ரன் கேலி செய்ய..
தன்னைப் போலவே தன் தங்கையின் கைகளை பற்றியபடியிருந்தவனின் கைகளைக் கேலியாக ஆதி ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்த்துவைக்க.. மித்ரன் அசட்டை சிரிப்பொன்றை உதிர்க்க  பெரியவர்களின் வெடிச்சிரிப்பு ஆடூரமாய்..
இனிதாகவே நடந்தேறிக்கொண்டிருந்தது திருமண வரவேற்பு..
மேடைக்கு வலப்புறம்  போடப்பட்டிருந்த இன்னொரு மேடையில் இசைமழை இன்னிசையாய்.. மணமக்களின் பேவரெட் பாடல்களை இசைத்துக்கொண்டும் பாடிக்கொண்டுமிருந்தது..
“ஆதி.. எனக்காக ஒரு சாங் பாடுங்களேன்..”, என்று அன்றொருநாள் கேட்டிருக்க அதை இன்று நிறைவேற்ற தன்னவளுடன் மேடை ஏறினான் அவன்..
மைக் கைகளை அடைந்ததும் சின்ட்ரெல்லாவுடன் தன் கண்களைக் கலக்க பாடுங்கள் என்பதாய் மூடித்திறந்தது பெண்ணவளின் இமை மேடுகள்..
தாமதிக்காமல் தொடங்கியிருந்தான் தன் கண்ணமாவுக்கான காதல் பரிசை..
இசையாய்..
இதயத்திலிருந்து இயம்பும் பாடலாய்..
அவளது மூடாவிழிகளைப் பார்த்தபடியே..
சுட்டும் விழிச்சுடர் தான்–கண்ணம்மா..!!
சூரிய சந்திரரோ..??
வட்டக் கரிய விழி – கண்ணம்மா..!!
வானக் கருமை கொல்லோ..??
பட்டுக்கருநீலப் – புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நக்ஷத்திரங்களடீ..!!

சோலை மலரொளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக்கடலலையே – உனது
நெஞ்சிலலைகளடீ!
கோலக்குயிலோசை – உனது
குரலினிமையடீ..!!
வாலைக்குமரியடீ–கண்ணம்மா..!!
மருவக் காதல் கொண்டேன்..!!

சாத்திரம் பேசுகிறாய்–கண்ணம்மா..!!
சாத்திரமேதுக்கடீ..!!
ஆத்திரங்கொண்டவர்க்கே–கண்ணம்மா..!!
சாத்திரமுண்டோ டீ..!!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்..
காத்திருப்பேனோடீ..??–இதுபார்..
கன்னத்துமுத்தமொன்று..!!

வரிவரிக் கவிதைக்கும் இருவரின் கண்களும் கவிகள் பாட..
அலராய் வாழ்வில் நுழைந்தவன் அகிலமே நீயென அவளுள் சிறைபட்டிருக்க..
ஆர்ப்பாட்டமில்லாமல் அவனிடம் புகுந்துவிட்டாள் ஆதியின் சின்ட்ரெல்லா..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement