Advertisement

அகிலம் – 4
வண்ணவண்ண கனவுகள் மனதில் சிறகுவிரித்தாட வாழ்க்கையின் அடுத்த அடிக்கான எதிர்ப்பார்ப்புகள் அனைவர் மனதிலும்..
வழக்கம் போலவே பேச்சும் சிரிப்பும் அவ்விடத்தில் நிரம்பி வழிந்தபோதிலும் யூஜியில் அதுதான் கடைசி வர்க்கிங் டே என்பதால் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவித சோகம் அந்த சிரிப்பிலும் பேச்சிலும் அப்பட்டமாய்..
கவிநயாவும் நித்யாவும் தங்களது ஆஸ்தான இடமான கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க இருவர் முன்னும் நீட்டப்பட்டது ஒரு கல்யாணப் பத்திரிக்கை..
“வைஷு.. கல்யாணமா உனக்கு சொல்லவேயில்லை..??”, ஆர்ப்பரித்தாள் நித்யா..
“லாஸ்ட் வீக்தான் முடிவு பண்ணுனாங்கப்பா.. சடன் அரேஞ்மெண்ட்.. அதான் யாரிடமும் சொல்லவில்லை.. நீங்க இரண்டு பேரும் அவசியம் வரனும்..”, என்ற வைஷு, “நான் ப்ரொபசர்க்கெல்லாம் இன்னும் கொடுக்கனும்ப்பா.. அப்புறம் பார்க்கலாம்..”, என்றுவிட்டு நகர்ந்தாள்..
“என்ன கவி இது இவங்க வீட்ல சைல்ட் மேரேஜ் பண்ணிவைக்கிறார்கள் போல..??”, வைஷுவின் தலை மறைந்ததும் கவியிடம் கிண்டலாகச் சொன்னாள் நித்யா..
“நித்தி.. அவங்க வீட்ல என்ன சிட்டுவேஷன்னுத் தெரியாம பேசக்கூடாது..”, அதட்டலாக..
“நான் விளையாட்டாத்தானே கவி சொன்னேன்.. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற..??”, உள்ளே போன குரலில்..
“டென்ஷன் எல்லாம் இல்லைப்பா.. திஸ் இஸ் தி ஏஜ் டூ மேக் பன்.. நான் இல்லைன்னு சொல்லல்ல.. பட் எல்லா விஷயத்தையும் பன் பண்ணக்கூடாது.. நீ வைஷு பேசைப் பார்த்தியா.. அவகிட்ட கல்யாணம் பண்ணிக்கப்போற ஜோஷ் சுத்தமா இல்லை.. நீ இப்போ விளையாட்டா பேசுனது அவ காதுல விழுந்திருந்துச்சுன்னா எவ்ளோ பீல் பண்ணுவா..??”
“கவிம்மா நான் அவ போனதுக்கப்புறம் தானே சொன்னேன்.. அவளுக்குக் கேட்ருக்காது..”, சமாதானமாக..
“அவளுக்குக் கேக்குது கேக்கல அதெல்லாம் செகண்டரி.. இனி அப்படி பண்ணாதே.. தட்ஸ் ஆல்..”, குரலில் ஒருவித கண்டிப்பு..
சரி சரி என்று நித்தி மண்டையை உருட்டிட அவர்களது டாப்பிக் பல இடங்களில் பயணித்து கடைசியாக தாங்கள் அடுத்து செய்யப்போகும் பிஜியில் வந்து நின்றது..
கவி எப்பொழுதும் இப்படித்தான்..
அவளது சேட்டைகளும் குறும்புகளும் அவளது வீட்டினரிடம் மட்டுமே..
மற்ற இடங்களில் எல்லாம் ஒரு சீரியஸ் லுக்.. அமைதியின் சிகரம்.. புத்தகப்புழு..
அவள் ஓரளவிற்கு வெளியே பேசுவது என்றால் அது நித்யாவிடம் மட்டும் தான்..
அதுவும் பல நேரங்களில் கவி நித்யாவிற்கு சொல்வது வெறும் அட்வைஸ்.. அட்வைஸ்.. அட்வைஸ் மட்டுமே..
நித்திகூட அடிக்கடி கேட்பதுண்டு ஏன் கவி இப்படி இருக்க என்று..
அதற்கு ஒரு மெல்லிய சிரிப்பைத் தவிர வேறெந்த பதிலும் இருக்காது அவளிடமிருந்து..
ப்ரொபசர் அனைவருக்கும் கால்யாணப்பத்திரிக்கை கொடுத்து முடித்த வைஷு கவியிடம் வந்து அவளை அவளது ப்ராஜெக்ட் கைட் அழைப்பதாய் கூறினாள்..
எதுக்காம் என்ற கேள்வியுடன் அந்த ப்ரொபசரின் கேபினை நோக்கிச் சென்றாள் கவி..
“மே ஐ கம் இன் சார்..”
“எஸ் கம் இன் கவிநயா..”, கடுமையாக..
அவர் அமர்ந்திருந்த டெஸ்க்கிற்கு எதிராக நின்றுகொண்டவள், “நீங்க வரச்சொன்னதா வைஷு சொன்னா சார்..”, அமைதியாக..
“வாட் இஸ் திஸ் கவிநயா..?? ப்ராஜெக்ட் ரெவ்யூவில் உங்க டிப்பார்ட்மெண்ட்லையே நீங்க தான் கமியான மார்க்..”
எல்லாவரையும் விட நான் தானே அதிக மதிப்பெண்.. என்ன சொல்கிறார் இவரென மனதில் தோன்ற, “சார்.. இல்லை..”
“அப்போ நான் பொய் சொல்றேனா..??”, அவள் பதில் கூறுவதற்கு முன்பு இடையிட்டவர் ஒரு ஷீட்டைத் தூக்கி அவள் முகத்தில் விட்டெறிந்தார்..
மிகிவும் ஷாக்கானது கவிக்கு..
அவசரமாய் அந்தப் பேப்பரைப் பார்த்தவள் அதில் தனது பெயருக்கு அருகில் இருபத்திஐந்திற்கு ஒன்பதென்றிருக்க, “சார் என் மார்க் தப்பா என்ட்ரி போட்ருக்காங்க சார்..”, என்றாள்..
“அப்போ என்னை தப்பு சொல்கிறாயா..??”, கனலாக..
“அப்படி இல்லை சார்.. பட் திஸ் இஸ் நாட் மை மார்க்ஸ் சார்..”, திடமாக..
பிள்ளைப் பூச்சீன்னு நினைத்தால் இவ என்ன இப்படி பேசறா என்ற மனதிற்குள் நினைத்தவர் அவளை ஒருமாதிரி பார்த்துவைத்தபடி..
“அப்போ என்டர் பண்ண மார்க்ஸ்தான் சரியில்லை..?? அப்படித்தானே..??”, நிதானமாக அவளை அளவெடுத்தபடியே கேள்வி எழுப்பினார்..
அவரது பார்வைகளின் அர்த்தம் புரிந்தபோதும்.. அது ஒருவித அருவருப்பை ஏற்படுத்தியபொழுதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திடமாகவே எஸ் சார் என்றாள் அவளும்..
“ஓகே தென் ப்ரிங் யுவர் ரெவ்யூ ஷீட்ஸ்..”, என்றவரை தீர்க்கமாக பார்த்துவிட்டுச் சென்றவள் தனது ரெவ்யூ ஷீட்ஸை எடுத்துக்கொண்டு மீண்டும் அவரது கேபினுக்கு வரும் வழியில் ஆதியை அழைத்து நான் கொலை செய்தால் என்ன செய்வாய் என்று கேள்வி எழுப்பி அவனிடமிருந்து உரிய பதிலைப் பெற்றுக்கொண்டு மீண்டும் அந்தப் ப்ரபசரின் கேபினுக்குள் நுழைந்தாள்..
அவளுக்காகவே காத்திருந்தார் போல் அவளது ரெவ்யூ ஷீட்ஸை வாங்கியவர் அதில் திருந்தங்கள் சில செய்து அதனை அவளிடமே திருப்பிக்கொடுத்து, “எல்லா ரிவ்யூவிலும் நல்ல மார்க்னு சொன்னீங்க.. ஆனால் எதிலும் பாஸ் கூட ஆகவில்லையே..??”, நக்கலாக..
இவர் இதை செய்வார் என்று எதிர்பார்த்திருந்தார் போல் ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் கவி..
அவள் தன்னைப் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று கணக்கை சரியாய் தப்பாகப் போட்டவர், “இப்போ இந்த மார்க்ஸை நான் எக்ஸாம் கண்ட்ரோலர் ஆபிஸ்க்கு அனுப்பினேன்னு வெச்சுக்கோ.. உனக்கு டிகிரி கிடைக்க இன்னும் ஒரு வருஷமாவது ஆகும்.. உன் அப்பா பார்மராமே.. உன் ரெஸ்யூமில் பார்த்தேன்..”, என்றவர் அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “கொஞ்சம் கஷ்டப்படர பாமிலிதான்.. ரைட்..??”, என்று கேள்வி எழுப்பினார்..
கவியிடம் அதே மௌனம்..
அவளது மௌனத்தை சாதகமாக்கிக்கொள்ள நினைத்தவர், “நீ கேம்பஸ்ஸில் செலெக்ட்டாகி இருக்கன்னு கேள்விப்பட்டேன்.. வேலைக்கு போனாத்தான் பேமிலியைக் காப்பாற்ற முடியும்ல.. ஆனால் ரெவ்யூ மார்க் கம்மியாகி அரியர் ஆச்சுன்னா வேலைக்கு எடுத்துக்கமாட்டாங்களே..?? இப்போ என்ன பண்ண..??”, யோசிப்பது போல் பாவ்லா செய்தவர், “நான் வேணும்னா இரு ஐடியா சொல்லவா..??”, கேள்வியாக..
பெண்ணின் மௌனம் இப்பொழுது அசாத்தியமாக..
அவளின் பதிலை எதிர்ப்பார்க்காமல் இருக்கையைவிட்டெழுந்து அவள் அருகில் வந்துமேஜையின் மேலிருந்த பெண்ணின் கையைப் லேசாகத் தொட்டு, “இன்னும் நான் மார்க்ஸ் சப்மிட் பண்ணல..”, என்றவர் அவளது விரல்களில் லேசாக அழுத்தம் கொடுத்து, “நாளையில இருந்து ஸ்டடி லீவ்தானே.. ப்ராஜெக்ட் சப்மிஷன் இருக்குனு சொல்லிட்டு இங்க வந்திரு.. எப்படியும் உங்க வீட்ல நீ என்ன சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கறேன்.. சோ பிரச்சனை எதுவும் இருக்காது.. கரெக்ட்டா நாளைக்கு நீ வந்தீன்னா உன்னை பாஸ் செய்ய வைக்கிறேன்.. நீயும் நிம்மதியாக வேலைக்குப் போய் வீட்டுக்கு சம்பாரிச்சு கொடுக்கலாம்..”, கண்களை மேயவிட்டபடி..
அவ்வளவு தான்..
கவியின் காலிலிருந்த ஹீல்ஸ் இறங்கியிருந்தது அந்தப் ப்ரபசரின் கன்னத்தில்..
புத்தகப்புழுவாய் என்றும் காட்சியளித்தவள் ருத்ர தேவியாய்..
கவியைத் தடுத்தபடியே, “என்னையே அடிச்சிட்டல்ல உன்னை என்ன பண்றேன்னு பாரு..”, என்று ஆங்காரமாக மொழிந்த அந்தப் ப்ரபசர் கவியின் துப்பட்டாவில் கைவைத்தார்..
கேபினிற்குள் விலாசிக்கொண்டிருந்தவள் அவரைத் தன் முழுபலம் கொண்டு பிடித்திழுத்து வெளியே தள்ளிவிட்டாள்..
காரிடாரில் நடந்துகொண்டிருந்தவர்கள் கவி அந்தப் ப்ரபசரைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுவதைப் பார்த்து அங்கேயே தேங்கினர்..
அக்கூட்டத்தில் கவியின் க்ளாஸ்மேட்டுகளும் இருக்க செய்தி பரவியது எங்கும்..
ஏற்கனவே செருப்படியில் ஆக்ரோஷமாக இருந்த அந்த ப்ரபசர் அவள் வெளியேத்தள்ளியதில் அவமானத்தால் ஒரு நிமிடம் கூனிக்குறுகித்தான் போனார்..
இருந்தபோதும் நான் யாருன்னு தெரியாம என்னையே அவமானப்படுத்திட்டல்ல உன்னை என்றவர் அவளது கழுத்தை நெறிக்க அருகே நெருங்கிட..
அதற்குள் அந்தப் ப்ரபசரைத் தடுத்த கவியின் க்ளாஸ்மேட்டுகள் அவளிடம்  நடந்ததைக் கேட்டறிந்துகொண்டு அந்த ப்ரபசருக்கு தங்களால் முடிந்த பரிசுகளை வாரி வழங்கினர்..
“அண்ணாவுக்கு கூப்பிட்டு சொல்லு கவி..”, கிழிந்திருந்த துப்பட்டாவை சரிசெய்து கொண்டிருந்தவளிடம் கூறினாள் நித்யா..
“அண்ணா வந்திட்டு இருப்பாங்க நித்தி..”, ஆதியைப் பற்றி நன்றாக அறிந்தவளாய் சொன்னவள் ப்ரபசரைப் பிடித்து வைத்திருந்தவர்களிடம், “நான் ப்ரின்சிப்பல்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணப்போறேன்..”, என்றாள்..
“நாங்களும் வரோம் கவிநயா..”, என்று கூட்டத்தில் ஒருவன் சொல்ல ஆபிஸ் ப்ளாக்கிற்கு படையெடுத்தது மாணவர் கூட்டம்..
கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்தவளுக்கு அவள் எதிர்காலத்தைக் காரணம் காட்டி தன் பங்கிற்கு அட்வைஸ் மழை பொழிந்தார் ப்ரின்சி..
அதையெல்லாம் கேட்கும் நிலையில் தான் கவியில்லையே..
பிடிவாதமாக கம்ப்ளைன்ட் எடுத்துக்கொள்ளச் சொல்ல அவளுக்கு ஆதரவாகத் திரண்டது மாணவர்கூட்டம்..
தந்தையும் தாயும் வந்து சேரவும் காலையிலிருந்து அந்நொடிவரை நடந்ததை சொல்லிமுடித்தாள் கவிநயா..
அவள் நடந்ததைச் சொல்லச் சொல்ல ஆதிக்கு மீண்டும் ஆத்திரம் தலைக்கேறுவதாய்..
முறைத்துவைத்தான் அந்தப் ப்ரபசரை..
ஆருவோ கவியின் பரிமாணங்களை எல்லாம் பிரம்மிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள்..
கவியின் மேல் அவளுக்கு இருக்கும் நட்பு பாசம் எல்லாம் இப்பொழுது மரியாதையாகப் பரிமாணம் கண்டதுபோல் தோற்றம் ஆருவிற்குள்..
அவள் செய்த செயலில் தவறெதுவும் இல்லை என்றபோதிலும் பெற்றோர்களுக்கு ப்ரின்சியும் கரெஸ்ஸும் சொன்னது போல் அவள் எதிர்காலத்தை நினைத்த பயமே பிரதானமாய்..
“கவிம்மா.. போலிஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம்மா.. இந்தப் ப்ரபசரை வேலையைவிட்டுத் தூக்க ஏற்பாடு பண்ணிடலாம்..”, என்றார் மீனாட்சி அவள் கோபத்தை நன்கு அறிந்தவராக..
“ம்மா.. வேலையைவிட்டுத் தூக்கிட்டா இவன் வேற காலேஜில் சேர்ந்து அங்கிருக்கும் பெண்களை டார்ச்சர் செய்யவா..??”, என்றான் ஆதி..
“ஆதி.. நீ பேசாமல் இருக்கமாட்ட.. நீ அவளுக்கு நல்லது செய்யறேன்னு யோசிக்காம ஏதாவது ஏடாகூடமா செஞ்சு வைக்காத.. இது அவ பிரச்சனை.. முடிவும் அவளே எடுக்கட்டும்..”, என்ற தந்தையின் அழுத்தமான குரலில் முழுவதுமாக அமைதியானான் அவன்..
“நீ சொல்லு கவி.. உன் முடிவு தான்.. நீ என்ன முடிவு செய்வதாக இருந்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.. ஆனால் எதுவாக இருந்தாலும் நீ எங்கள் நிலையில் இருந்தும் யோசித்துவிட்டு முடிவெடுப்பாய் என்று நம்புகிறோம்..”, என்றார் விச்சு..
“அந்தப் ப்ரபசரை வேலையைவிட்டுத் தூக்கவேண்டாம்ப்பா..”, என்று கரெஸ் உட்பட அனைவரையும் அதிரவைத்தாள் கவி..
கவியின் திட்டம்தான் என்ன..?? காத்திருப்போம்..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement