Advertisement

அகிலம் – 1
கருமேகங்கள் தோட்டத்தை முழுவதுமாக மூடியிருக்க மழைக்காய் மயிலொன்று தோகைவிரித்துக் காத்திருக்க அன்று பூத்த மலராய் இயற்கையின் வண்ணக்கோலங்களை இரசித்தவாறு அந்த பார்ம் ஹவ்ஸையொட்டிய கீற்றுக்கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.. ஆரண்யா..
இயற்கையில் கலாரசிகை.. நிலத்தில் காய்ந்துகிடக்கும் சருகு முதல் வானில் பூத்துக்கிடக்கும் நிலவுவரை அனைத்துமே அவளுக்கு பிடித்தவொன்று..
கோவையின் மிகப்பெரிய கட்டுமான கம்பனியான லெமன்வுட் கன்ஸ்ட்ரக்ஷனில் ஆர்க்கிடெக்ட் அவள்..
புதியதாதத் தொடங்கவிருக்கும் ப்ராஜெக்ட் சம்மந்தமாக கிளைன்ட் ஒருவரைப் பார்க்க கோவை பொள்ளாச்சி ரோட்டில் அமைந்திருக்கும் அவரது தோட்டத்தில் சந்திக்க வந்திருக்கிறாள்..
இளங்காற்று முகத்தில் பட்டுத்தெறிக்க மண்வாசனை மனதைமயக்க முதல் மழைத்துளி தன் மேல் விழ கண்கள் மூடிக்கிடந்தவளின் காதுமடல்களில் சி..ன்ட்ரெ..ல்லா.. என்று காற்றோடுக் காற்றாய் உரசிச்சென்றது ஒரு குரல்..
படக்கென இமைகளைத்திறந்தவளின் முன் வசீகரபுன்னகையுடன் நின்றிருந்தான் அவன்..
ஆதிரன்..
தன்னையே திகைத்தபடி பார்த்திருந்தவளைக் கண்டு கண்களும் சிரிக்க, “ஹலோ மிஸ் ஆரண்யா.. ஐ ஆம் ஆதிரன்..”, கம்பீரமாக வெளிவந்தது ஆதியின் குரல்..
சட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டவள், “ஹலோ சார்.. நைஸ் டூ மீட் யூ..”, என்றாள் இன்ஸ்ட்டன்டாக..
கைகடிகாரத்தைப் பார்த்தபடியே, “சாரி மிஸ்.. கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்..”, என்ற ஆதி, “காபி ஆர் டீ..??”, சம்பரதாயமாக..
“இப்போத்தான் பழனி அண்ணா கொடுத்தாங்க..”
“அதுக்குள்ள பழனியை ப்ரென்ட் பிடிச்சாச்சா..??”, கேலியாக..
“அப்படியெல்லாம் இல்லை சார்..”, என்றவளின் கண்கள் இரசனையாக பார்ம் ஹவுஸின் மேல் சாராலாய்த் தூவும் மழைத்துளிகளின் மீது பதிந்தது..
ஆதியோ மழையை விட்டுவிட்டு பெண்ணவளின் கண்களை இரசிக்க அவன் இதழ்களோ மெலிதாக சின்..ட்ரெ..ல்லா என்று முணுமுணுத்தது..
இரண்டாவது முறையாக உரசிச்சென்ற சின்ட்ரெல்லாவில் சட்டென ஆதியின் புறம் திரும்பினாள் ஆரண்யா..
அவள் தன்னைப்பார்ப்பாள் என்று யூகித்தவனாய் பார்வையை மாற்றியிருந்த ஆதி அவளை டைவர்ட் செய்ய, “இந்த பாரம் ஹவுஸைத்தான் ரினோவேட் பண்ணனும் மிஸ்..”, என்றான்..
மனது சின்ட்ரெல்லாவால் குழம்பிக்கிடக்க அதை ஆதியிடம் வெளிப்படுத்தாமல் கண்கள் இடுங்க அவனைப்பார்த்து தலையசைத்து, “நான் வீட்டைச் சுற்றிப்பார்த்தேன் சார்.. வீட்டுத்தூண் முதல் ஆங்கில் வரை ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு.. எல்லாவற்றையும் மாற்றேவேண்டியது வரும்.. நாங்கள் அனுப்பிய எஸ்டிமேட்டடைவிட இன்க்ரீஸ் ஆகும் சார்..”, என்றாள் புல் ப்ரபெஷனல்லாக மாறி..
அவளின் ப்ரபெஷனல் அவதாரம் ஆதிக்கு சிரிப்பை மூட்டியபோதும் அதைக் கண்களிலேயே அடக்கியவன், “பரவாயில்லை மிஸ் ஆரண்யா.. எவ்ளோ காஸ்ட்டாக இருந்தாலும் பிரச்சனையில்லை.. உங்க கம்பனி இந்த வீட்டைப் பழையபடி மாற்றித்தந்தால் போதும் கொஞ்சம் கொஞ்சம் மார்டர்ன் பெசிளிட்டீஸுடனும் டிசைன்ஸுடனும்..”, என்றான்..
“யா ஸுவர் சார்.. நான் வீட்டை புல்லா போட்டோஸ் எடுத்துவிட்டேன் சார்.. த்ரீ போர் டேசில் டிசைன் வேலைகள் முடித்துவிட்டு மெயில் செய்கிறேன் உங்களுக்கு..”
“மெயில் எல்லாம் செய்ய வேண்டாம் மிஸ்.. நீங்கள் உங்கள் டிசைன் வேலையை முடித்துவிட்டுச் சொல்லுங்கள்.. நான் நேரில் வந்து டிசைன் செலெக்ட் செய்துகொள்கிறேன்..”, வெளியில் கம்பீரமாகவும் மனதில் அடுத்த சந்திப்பைத்தானாக ஏற்படுத்திக்கொண்ட குஷியிலும்..
நேரில் எதற்கு தேவையில்லாமல் என்று ஆரு நினைத்துக்கொண்டாலும் வெளியில் ஒகே சார் என்றுவிட்டு, “மழை ரொம்பப்பெய்யும் போல் இருக்கிறது.. நான் கிளம்பறேன் சார்..”, என்றாள்..
“மே ஐ டிராப் யூ..??”, உடனடிக்கேள்வி பிறந்தது ஆதியிடம்..
“நோ தாங்க்ஸ் சார்.. ஐ ஹேவ் மை கார்..”, என்றவள் ஆதிக்கொரு புன்னகையைப் பரிசளித்துவிட்டுக் கிளம்பினாள் மழையில் நனைந்தபடியே..
முகத்தில் வேர்வைத்துளிகள்போல் மழைத்துளில் படிந்திருக்க வீட்டிற்குள் நுழைந்த ஆரண்யாவைத் தடுப்பது போல், “புள்ளைக்கு வரன் பார்க்கலாம்னு சொல்றேன்.. நீங்க என்னடான்னா காதில் வாங்கிக்காம கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கீங்க..??”, ஹை டெபிசெலில் ஒலித்தது அல்லியின் குரல்..
“அவ தான் ஒரு வருஷம் போய் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னால்ல.. அப்புறம் பார்த்துக்கலாம்..”, இது தரணிதரன்..
“அவ அப்படித்தான் சொல்லுவா.. அதுக்காக நம்ம கடமையைத்தட்டிக்கழிக்கவா முடியும்..”
“உன்னை யாரும் தட்டிக்கழிக்கச் சொல்லல்ல அல்லி.. ஒரு வருஷத்திற்கு பிறகு பார்க்கலாம் என்று தான் சொல்கிறேன்..”, பொறுமையாகவே..
“ஒரு வருஷத்திற்கு அப்புறம் பார்க்கறது இப்போவேப் பார்த்தா என்னன்னு கேட்கறேன்..??
இதற்கு மேல் ஆஜராகாமல் இருந்தால் தந்தையை அன்னைக் கரைத்துவிடுவாளோ என்ற பயத்தில், “என்னம்மா ஒரே சத்தமா இருக்கு..”, என்று எதுவும் தெரியாதது போல் சற்றே சோர்வான குரலுடன் நுழைந்தாள் ஆரு..
அவள் குரலிலிருந்து சோர்வை உணர்ந்து கல்யாணப்பேச்சை மறந்தவராக, “ரொம்ப வேலையா பாப்பா இன்னைக்கு..??”, கேள்வி பிறந்தது அல்லியிடமிருந்து..
“ஆமாம்மா.. ரொம்ப வேலை.. ஒரே டையர்டா இருக்கு..”, தரணிதரனின் அருகில் தொப்பென அமர்ந்தபடி..
“நீ அப்படியே சோபால படுத்துக்கோ சாமி.. நான் உனக்கு டீயும் பஜ்ஜியும் கொண்டுவாரேன்..”, என்ற அல்லி அடுக்களைக்குள் வேகவேகமாக புகுந்துகொண்டார்..
அதற்காகவே காத்திருந்தார் போல், “என் பொண்ணுக்கிட்ட சிவாஜியே தோத்துப்போயிடுவார் போலவே.. உலக மகா நடப்புடா சாமி..”, கொஞ்சம் பெரிதாக நகைத்தபடி ஆருவின் தோளைத் தட்டினார் தரணி..
“டிடியோட (DharaniDharanனின் சுருக்கம்) பொண்ணாக்கும் நான்.. அல்லியைக்கூட சமாளிக்கவில்லை என்றால் எப்படி..??”, இல்லாத காலைரைத் தூக்கிச்சொன்னவள் தனது தகப்பனின் தோள் சாய்ந்துகொண்டாள் எல்லாம் இனி அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன்..
பஜ்ஜி டீ வருவதற்குள் இவர்களைப் பற்றி சிறு அறிமுகம்..
ஆருவின் தந்தை தரணிதரன் வெளியில் புலி அல்லியிடம் எலி.. சுருக்கமாக அக்மார்க் குடும்பஸ்த்தர்.. சிறு அளவில் கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்துகொண்டிருக்கிறார்.. அல்லி குடும்பத்தலைவி.. பெயருக்கேற்றார் போல் வீட்டில் அல்லி ராஜ்ஜியமே..
ஆவி பறக்க தாய் கொண்டுவந்த டீயைக் குடிதுக்கொண்டிருந்தவளின் மனம் கல்யானப்பேச்சில் தொடங்கி சின்ட்ரெல்லாவில் போய் முடிந்தது..
இப்பொழுதும் அந்தப்பெயர் அவள் காதுமடல்களைத் தீண்டிச் செல்வதுபோல்..
ஆதியின் குரலாக இருக்குமோ என்று ஒரு மனம் கேள்வி எழுப்ப ஹலோ மிஸ் ஆரண்யா என்ற அவனது கம்பீரக்குரல் காற்றில் மிதந்துவந்து அவளை இல்லை என்பதுபோல் தலையசைக்க வைத்தது..
தானாகத் தலையை ஆட்டிக்கொண்டிருந்த மகளை விநோதமாகப் பார்த்த தரணிதரன் அவளது தோளைத்தட்டி, “என்ன ஆரு.. நீ பாட்டுக்கு தலையை ஆட்டிட்டு இருக்க..??”, என்றார் கேள்வியாய்..
“ஒன்னுமில்லப்பா.. ஏதோ யோசனை..”, என்றவள் இனி இங்கிருந்தால் கேள்விக்கனைகள் பறக்குமென்றுனர்ந்து, “எனக்கு டயர்டாக இருக்கு.. ரெஸ்ட் எடுக்கனும்..”, என்று எதையோ உளறிக்கொட்டிவிட்டு தனது அறையில் முடங்கினாள்..
“அண்ணா.. இந்தப் புடவை எனக்கு எப்படி இருக்குன்னு பார்த்துச் சொல்..??”, தனது பெட்டில் அமர்ந்தபடியே லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த ஆதியிடம் கேட்டாள் அவனின் ஒரேத் தங்கை கவிநயா..
ராயல் ப்ளூ கலரில் இருந்த அந்தப்புடவையைப் பார்த்ததும் ஆதிக்கு தனது சின்ட்ரெல்லாவின் நியாபகமே..
கார்மெண்ட்ஸில் வேலையை முடித்துவிட்டு தங்களது பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வந்தடைந்தவனை வரவேற்றது ஆருவே..
முழங்காலைத் தொட்ட ராயல் ப்ளூ டாப்ஸ்.. வைட் ஜீன்ஸ்.. காதோரத்தில் வெள்ளைக்கற்கள் பதித்த சின்ன கம்மல்.. முடிக்கு சின்னதொரு காட்ச் க்ளிப்பென நீட் அன்ட் சிம்பிள்ளாக கண்கள் மூடி மழைக்காகக் காதிருந்தவளைக் கண்டவுடன் அவளை பச்சக்கென படமெடுத்துக்குக் கொண்டது ஆதியின் மனது..
மழையை வருவேற்க காத்திருக்கும் மயில் போல் மலர்ந்துகிடந்த அவள் முகதைக்கானும் பொழுது தனக்காகக் காத்திருக்கும் சின்ட்ரெல்லா இவளென்றே அடித்துக்கூறியது ஆதியின் மனம்..
அவளை நெருங்க நெருங்க இதயம் தாறுமாறாக அடித்துக்கொள்ள ஏதோ ஒரு வேகத்தில் சின்ட்ரெல்லா என்று அழைத்தேவிட்டான் அவளை..
அவள் கண்மலர்ந்தும் பின்பு திகைத்தும் மேலும் அவள் மேல் ஒரு ஈர்ப்பை உண்டாக தன்னை நினைத்தே சிரிப்பாகவும் வெட்கமாகவும்..
தானாகவே கைகள் உயர்ந்து தலையை அழுத்தமாக கோதிகொள்ள, “யாருண்ணா அந்தப்பொண்ணு..??”, என்று நிஜத்தில் கேட்டிருந்தாள் ஆதியின் தங்கை..
“எந்தப்பொண்ணு..??”, நிஜத்திற்கு திரும்ப விருப்பபடாமல் கேட்டுவைத்தான் ஆதி..
“உன் வெட்கத்திற்கு காரணமான பொண்ணு..”, கண் சிமிட்டியபடியே..
கவியின் கண் சிமிட்டலில் மேலும் வெட்கம் வர அதைத் தன் கோபப்போர்வையால் மறைத்தவன், “என்ன பேச்சு கவி இது..??”, அவளது காதைத்திருகியபடியே..
“அண்ணா.. சாரிண்ணா வலிக்குது.. தெரியாம சொல்லிட்டேன்..”, துல்லியபடியே..
அவள் வலிக்குது என்றதில் காதை விட்டவன், “இது என்ன பேச்சு.. இப்படி எல்லாம் பேசக்கூடாது..”, சற்றே கடுமையாக..
சரியென்பது போல் மண்டையை மண்டையை உருட்டிவைத்தவள் மீண்டும் தன் தமையனிடம் தான் அணிந்திருக்கும் புடவையைப் பற்றி அவனது அபிப்பிராயத்தைக் கேட்டாள்..
“நல்லா இருக்கு குட்டி..”, என்றவன், “என்ன திடீர் புடவை..??”, கேள்வியாய்..
“நாளைக்கு எங்க காலேஜ் பிரெஸ்ர்ஸ் டே.. சீனியர்ஸ் எல்லாம் ட்ரடீஷனல் வியரில் வரவேண்டும் என்பது ரூல்..”, என்று சலிப்பாகச் சொன்னவள் ஆதியின் அறைக்கதவின் அருகே நின்றுகொண்டு, “அண்ணா.. நீ அப்பா அம்மைக்குத் தெரியாம அண்ணியை ரெடி பண்ணிட்டன்னு யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்..”, என்றாள் ஊருக்கேக் கேட்கும் குரலில்..
ஒரு நிமிடம் ஜெர்க்காகிவிட்டது ஆதிக்கு..
அருகிலிருந்த ஸ்கேலை எடுத்துக்கொண்டு அவளைத் துரந்தத்துவங்கினான் அவள் தனது இரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டக் காரணத்தால்..
கவி சிக்குவாளா என்ன..??
நேராக தனது தந்தை விச்சுவிடம் சரணடைந்திருந்தாள்.. இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ என்பதுபோல்..
தந்தையிடம் தஞ்சமடைந்த தங்கையை முறைக்கமட்டுமே முடிந்தது தமையனால்..
பிள்ளைகள் இருவரின் கூச்சல் வெளிவாசல் வரைகேட்க செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சிக்கொண்டிருந்த மீனாட்சி ஓர்ஸை அப்படியே போட்டுவிட்டு அவசரமாக வந்தவர், “இரண்டு பேருக்கும் இன்னும் பச்சைக்குழந்தைன்னு நெனைப்பா..?? பக்கத்துல்ல எல்லாரும் இருக்கவேண்டாம்..??”, கோபம் மிகிந்திருந்தது குரலிலே..
“மீனு இன்னைக்கு டென்ஷன்ல சுதுதுபோல..”, ஆதியிடம் கிசுகிசுத்தாள் கவி..
“அம்மா மீனுன்னு நான் மட்டும்தான் கூப்பிடுவேன்..”, பிள்ளையை முந்திக்கொண்டு எழுந்தது விச்சுவின் குரல்..
“மீனு இஸ் மை பிராப்பர்டிப்பா..”, உதட்டைச் சுழித்துக்கூறிய கவி தாயின் கோபத்தைக்குறைக்க அவரது கன்னத்தில் பச்சக்கென்று முத்தம் வைத்தாள்..
வழக்கம்போல் அதைத் துடைத்தெறிந்த மீனு, “இரண்டு பேரும் என்னை வெச்சு காமெடி பண்ணாம.. போயி சோலியப்பாருங்க..”, என்று தந்தையையும் மகளையும் விரட்டியவர் ஆதியின் தலையைக் கலைத்துவிட்டு, “யாருப்பா அந்தப்பொண்ணு..??”, என்று கேட்டுவைத்து ஆதியின் ஹார்ட் ரேட்டை எகிரவைத்தார்..
இக்கேள்வியை எதிர்பார்க்காதவனாக, “ம்மா.. அவ சும்மா உளறுகிறாள்.. நீங்க வேற..??”, என்று சமாளிப்பாய் மொழிந்தவன், “பசிக்குதும்மா..”, பேச்சை மாற்றும் விதமாக..
ஆது பேச்சை மாற்றுவது புரிந்திருந்தபோதிலும் கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரத்தானே வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு அவனை ஒரு பார்வைப் பார்த்து, “ஒரு அஞ்சு நிமிஷம் தம்பி.. தோசை சுட்டத்தரேன்..”, என்றுவிட்டு அடுக்களைக்குள் தஞ்சம் புகுந்தார்..
தாய் மறைந்ததும் தப்பித்தோம் பிழைத்தோமென்று ஆசுவாசப்படுதிக்கொண்டவனது மனது தனது சின்ட்ரெல்லாவுடன் டூயட் பாட குன்னூர் சென்றது..
-அகிலமாவாயோ நீ..??

Advertisement