‘எதே..! விஜய் மாமா வேணுமா?’ என்ற வேதா வேகமாய் விஜயை பார்க்க அவனோ வெட்டவா குத்தவா என்ற ரீதியின் நின்றிருந்தான்.
“ஏன் அன்னைக்கு மணமேடை வரைக்கும் வந்து கல்யாணத்துல லெட்டர் எழுதி வச்சுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போகத் தெரிஞ்ச உங்களுக்கு இப்ப என்ன திடீர் ஞான உதயம். எங்க அமுதாம்மா இப்படி இந்த நிலைமைக்கு ஆனதுக்கு காரணமே நீங்க தான். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம இப்ப வந்து விஜய் மாமா வேணுமாமே” என்று கீர்த்தனா பொரிந்து தள்ளிவிட்டாள்.
“தப்பு செஞ்சவங்க திருந்த கூடாதா கீர்த்தனா? இல்ல எனக்கு இங்க வரத்தான் உரிமை இல்லையா?” என்றாள் யாழினி.
“எது? சும்மா இருந்த எங்க அண்ணாவை விஜய் மாமா..விஜய் மாமான்னு பின்னாடியே சுத்தி, கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னவனை, அமுதாம்மாவை வச்சு கல்யாண மேடை வரை கொண்டு வந்து விட்டு, திடீர்ன்னு ஒருத்தன் கூட ஓடிப் போயி, அவன் கூட கூத்தடிக்கிற வரை அடிச்சுட்டு, அப்பறம் நான் திருந்திட்டேன், தெளிவாகிட்டேன்னு நீங்க வருவிங்க. எங்க அண்ணன் இளிச்ச வாயன் மாதிரி நீங்க வந்த உடனே வாம்மான்னு வெத்தலை பாக்கு வெச்சி அழைக்கணுமா?” என்றாள் கீர்த்தனா மூச்சு விடாமல்.
“விஜய் இவ பண்ணது தப்புத்தான். இந்த அத்தைக்காக மன்னிக்கக் கூடாதா?” என்று யாழினியின் தாய் கெஞ்ச,
“தயவு செஞ்சு வெளிய போய்டுங்க” என்றான் பொறுமையாய்.
“நாங்க போக மாட்டோம். இது என் அம்மா பிறந்த வீடு. இந்த வீட்ல அவங்களுக்கும் சரி பங்கு இருக்கு” என்றாள் யாழினி.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட.” என்றவன்,
“இதோ பார்..! இதொண்ணும் பாட்டன் பூட்டன் சொத்து கிடையாது. உங்கம்மாவுக்கு பங்கு வேணும்னு நீ கேட்க.. அதெல்லாம் வேண்டாம்னு தான் நான் இங்க வந்து இருக்கேன். இது என் சொந்த சம்பாத்தியத்துல வாங்கின வீடு. இதுல என் பொண்டாட்டி பிள்ளைங்களைத் தவிர யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. பூர்வீக சொத்துலையும் உங்க அம்மாவுக்கு சேர வேண்டிய பங்கை டாட் எப்பவோ பிரிச்சு குடுத்துட்டார். ஏன் கல்யாணத்தை சாக்கா வச்சு கூட ஒரு வீட்டை எழுதி வாங்குனிங்களே. இப்போ அதெல்லாம் உங்க வசதிக்கு ஏத்த மாதிரி மறந்து போயிடுச்சா?.இதுக்கு மேல பேச ஒண்ணுமில்லை. மரியாதையா கிளம்பிட்டா உனக்கு நல்லது” என்றான் கோபமாய்.
“விஜய் மாமா..! பிளீஸ்” என்றாள் யாழினி.
“இன்னொரு தடவை விஜய் மாமான்னு உன் வாயில இருந்து வந்தது…அடிச்சு பல்லெல்லாம் பேத்துடுவேன்.” என்று கத்தியவன், அடுத்து உடைப்பதற்கு அங்கே பொருளை தேட,
“விஜய் சார் கொஞ்சம் அமைதியா இருங்க” என்றாள் வேதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு.
“நான் என்ன பண்ணேன்? ஏன் என்கிட்ட காட்டு மிராண்டி மாதிரி கத்துறிங்க? பாரு சரண் அண்ணா” என்றவளுக்கு கண்கள் கலங்க,
“சரண் இவளை பேசாம இருக்க சொல்லு. இப்போ நான் நானாவே இல்லை. கோபத்துல இவளை ஏதாவது சொல்லிட போறேன். அப்பறம் மயக்கம் போடுவா, அதுக்கும் நான் தான் ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு ஓடனும்” என்றான் விஜய்.
“எதுக்கு மயக்கம் போடுறவளை தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுறிங்க. போய் சேரட்டும்னு விட வேண்டியது தானே” என்று அவளும் கோபத்தில் வார்த்தையை விட,
“அய்யோ..! வேதா கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன்” என்று சரண் பல்லைக் கடித்தான்.
“போய் சேரட்டும்னு விடவா?அதுக்கா இத்தனை பாடு பட்டோம்?” என்று அவளைப் பார்த்து கோபமாய் பேசினான்.
“ஏண்டி அறிவு கெட்டவளே..! அவதான் உன்னைய அவ்வளவு பேச்சு பேசி, யாருன்னு கேட்டாள்ல. நான் தான் விஜயோட பொண்டாட்டின்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்ல வேண்டியது தான. அதை விட்டுட்டு சரணோட தொங்கச்சி, கீர்த்தனாவோட நாத்தனான்னு அள்ளி வீசிட்டு இருக்க. அப்பறம் உன்மேல கோபம் வராம கொஞ்சத் தோணுமா?” என்றான் வார்த்தைகளில் அனலுடன்.
“பொண்டாட்டியா?” என்ற யாழினி அதிர்ந்து நின்றாள்.
“ஏன் நான்தான் சொல்லனுமா? நீங்க சொல்லியிருக்க வேண்டியது தானே, வேதா என் பொண்டாட்டின்னு.” என்றாள் மீண்டும் விடாமல்.
“அம்மா தாயே உன்கிட்ட பேச எனக்குத் தெம்பில்லை” என்றான்.
“என்ன சொல்றிங்க விஜய் மாமா? உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு. என்னை அனுப்புறதுக்காக பொய் தானே சொல்றிங்க? சொல்லுங்க விஜய் மாமா.” என்று யாழினி கண்ணீருடன் கேட்க,
“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? விஜய் அண்ணாவுக்கு மேரேஜ் ஆகிடுச்சு. வேதாதான் என்னோட அண்ணன் பொண்டாட்டி. இத்தனை நாள் தெரியாட்டி என்ன? இப்போ தான் தெரிஞ்சிடுச்சே.. இடத்தை காலி பண்ணுங்க.” என்றாள் கீர்த்தனா.
“நான் நம்ப மாட்டேன் விஜய். இந்த அத்தைகிட்ட சொல்லாம எப்படிப்பா இப்படி பண்ண மனசு வந்துச்சு உனக்கு. என் அண்ணன் பையன் கல்யாணத்தை எனக்குத் தெரியாம முடிச்சிருக்கிங்க எல்லாரும்” என்று யாழினியின் அம்மா ஒரு பக்கம் கண்ணீர் விட,
“உங்க நாடகத்தை எல்லாம் நம்ப நான் ஒன்னும் எங்கம்மா அமுதா இல்லை. வெளிய போங்க” என்றான்.
“நான் போக மாட்டேன். நான் அமுதா அத்தையை பார்க்கணும். அவங்க என்னை மன்னிப்பாங்க” என்றாள் யாழினி.
“எதுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டிட்டு இருக்குற அவங்க உயிரையும் எடுக்கவா? கெட் லாஸ்ட் ஐ சே” என்று அவன் கோபத்தில் மூச்சு வாங்க, வேதாவிற்கு நிஜமாகவே பயமாய் இருந்தது.
“விஜய் சார் பிளீஸ்..! கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க.இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்லை.” என்ற வேதா அவன் கைகளோட தன் கைகளை இணைத்துக் கொள்ள,
“கையை விடுடி” என்றான் கொஞ்சம் தணிந்த குரலில்.
“விட மாட்டேன்” என்றாள்.
இவளைப் பார்த்த யாழினி வன்மத்துடன் முறைத்து வைக்க, அவளின் பார்வையை உணர்ந்த வேதா,
“என்ன முறைப்பு?இவரு என் புருஷன். நான் கையைப் பிடிப்பேன், ஏன் கட்டி கூட பிடிப்பேன்..” என்றவள் அவனின் இடையில் கைகளைக் கோர்த்து அவனைக் கட்டிக் கொண்டாள்.
அவளின் செய்கையில் கீர்த்தனாவிற்கும் சரணுக்கும் சிரிப்பு வந்தது.
“விஜய் மாமா” என்று யாழினி மீண்டும் ஏதோ சொல்ல வர,
“இப்போ கிளம்ப போறிங்களா? இல்லையா?” என்றான் விஜய்.
“உன்னோட கோபம் எனக்கு புரியுது விஜய். ஆனா, அதுக்காக வீடு தேடி வந்தவங்களை இப்படி அசிங்கப்படுத்தனும்னு அவசியம் இல்லை. என் அண்ணன் உயிரோட இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று அவனின் அத்தை கண்ணீர் சிந்த,
“போதும் மாமா..!அன்னைக்கு ஒன்னும் நான் வேணும்னு ஓடிப் போகலை. அந்த ராஸ்கல் பிளாக்மெயில் பண்ணதால தான் போனேன். நான் தப்பு பண்ணிட்டேன். அப்பவே விஷயத்தை உங்ககிட்ட சொல்லியிருக்கணும். பயத்துல நான் செஞ்ச காரியம் என் வாழ்க்கையையும் சேர்த்தே அழிச்சிடுச்சு” என்றாள் யாழினி.
“இவ்வளவு நல்ல விதமா ஆக்ட் குடுக்க உன்னால மட்டும் தான் முடியும் யாழினி. அவனை லவ் பண்ணிட்டு விஜய் அண்ணாவை கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச. அவன் உன்னை பிளாக்மெயில் பண்ணான். நீயும் எதைப் பத்தியும் யோசிக்காம எல்லாரையும் அசிங்கபடுத்திட்டு போன. இப்போ திரும்பி வந்து மறுபடியும் அதே நடிப்பை ஆரம்பிக்கிற?” என்றாள் கீர்த்தனா.
“விஜய் மாமா மேல நான் வச்ச பாசத்தை மட்டும் நடிப்புன்னு சொல்லாத கீர்த்தனா. அது உண்மை.” என்றாள் யாழினி.