“அந்த உரிமைக்கெல்லம் உன் மக தான் வச்சாளே ஆப்பு. அவ இப்படி ஆனதுக்கு காரணமே நீதான். நீ குடுக்குற இடத்துல தான் இப்படி ஆடுறா.கிளம்புங்க ரெண்டு பேரும்” என்றவர்,
“சாரிப்பா விஜய். உனக்கு கல்யாணம் ஆன விஷயம் எனக்குத் தெரியாது. ஏதோ இனியாவது பொண்ணு வாழ்க்கை சரியாகிடாதான்னு ஒரு நப்பாசை. அதான் இவங்க கூப்பிட்ட உடனே வந்துட்டேன். மன்னிச்சுக்கப்பா” என்றார் அவர்.
“எனக்கு உங்கமேல எப்பவும் எந்த கோபமும் இல்லை” என்றான். மறந்தும் மாமா என்று அழைக்கவில்லை.
“நீ மாமான்னு கூப்பிடாதப்பவே உன்னோட கோபம் எந்த அளவுக்கு இருக்குன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு விஜய். நாங்க வர்றோம்” என்றவர் கிளம்ப,
“நான் இப்ப போனாலும் மறுபடியும் வருவேன். என்னைய யாரும் தடுக்க முடியாது” என்றாள் யாழினி.
“யப்பா சாமி.. இப்ப முதல்ல இடத்தை காலி பண்ணு” என்றாள் கீர்த்தனா.
அவர்கள் சென்று அரைமணி நேரம் ஆகியும் விஜயின் கோபம் குறைந்தபாடில்லை. கண்களை மூடியபடியே அமர்ந்திருந்தான் சோபாவில். அவன் அருகில் செல்லவே பயமாய் இருந்தது வேதாவிற்கு. நடந்ததை எண்ணி உள்ளுக்குள் மறுகுகிறான் என்று மட்டும் புரிந்தது. அவள் சரணைப் பார்க்க,
“இப்போதைக்கு எதுவும் பேசாத” என்றான் மெதுவாய்.
வேதாவிற்கு நடந்தது எதுவும் தெரியாது என்றாலும், யாழியினின் பேச்சிலேயே தெரிந்தது அவள் சுயநலத்தின் அளவு. விஜயை அப்படியே விடவும் மனமில்லை. அவனருகில் சென்று அமர்ந்தவள்,
“விஜய் சார்” என்றாள் அவனின் கையை பிடித்தபடி. அவனோ கையை வெடுகென்று உருவிக் கொண்டான். அவள் மீண்டும் கையைப் பிடிக்க, இம்முறை சற்று எரிச்சலுடனேயே உருவிக் கொண்டான்.
“இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றாள் வெடுக்கென்று.
“நீதாண்டி பிரச்சனை.” என்றான் பட்டென்று. அவன் அப்படி பட்டென்று சொல்லவும் கண்கள் கலங்க, அவளையும் மீறி கண்ணீர் வந்திருந்தது.
“வேதா, நீ மேல போ.” என்றான் சரண்.
“நான் போக மாட்டேன். நான் என்ன பிரச்சனை உங்களுக்கு? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்” என்றாள் விடாமல்.
“அவனே கோபத்துல இருக்கான். நீதான் கொஞ்சம் அமைதியா இரேன் வேதா. இது கூட நான் சொல்லித் தான் தெரியனுமா உனக்கு” என்று சரண் அவளை அதட்ட, அவனை முறைத்தாள் வேதா.
“அவரு அத்தை மக வந்து பேசினதுக்கு என் மேல ஏன் கோபத்தை காட்டுறாரு. நான் என்ன பண்ணேன்? தப்பெல்லாம் இவரு மேல வச்சுகிட்டு மத்தவங்களை பேசுறதே வேலையா போய்டுச்சு” என்றாள் எரிச்சலுடன்.
“என் மேல என்ன தப்பு? சொல்லு நான் என்ன பண்ணேன்?” என்றான் விஜய் கோபமாய்.
“மச்சான் அவ தான் புரியாம பேசுறான்னா.. நீயுமா..? “ என்று சரண் அவனை அமைதிப் படுத்த முயல,
“எனக்கு இப்போ தெரிஞ்சாகனும் சரண்? நான் என்ன தப்புப் பண்ணேன். சொல்லப் போறியா இல்லையாடி?” என்றான்.
“நீங்க உங்களுக்கு கல்யாணம் நடந்த விஷயத்தை மறைச்சதால தான் இப்ப இவ்வளவு பிரச்சனையும். அதனால தான் ஊர்லயும் அன்னைக்கு அவ்வளவு பிரச்சனை. இப்போ இங்கயும் இவ்வளவு பிரச்சனை. நீங்க அன்மேரிட்னு நினைச்சு தான் இவங்க இவ்வளவு அட்வான்டேஜ் எடுத்துகிட்டு வராங்க. என்கிட்டயும் அந்த சேகர் நாய் அப்படி நடந்துகிட்டான்.ஆனா நீங்க எல்லார் மேலயும் கோபப்படுறிங்க?” என்றாள் கோபமாய்.
“வாட்? சே இட் அகைன். உனக்கு மேரேஜ் முடிஞ்ச விஷயம் தெரிஞ்சிருந்தா மட்டும் அந்த சேகர் நாய் நல்ல விதமா நடந்திருப்பானா? சொல்லுடி நடந்திருப்பானா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
எப்படி சொல்லுவாள்? தாலியைக் காட்டிய பிறகும் ஒரு முறை என் கூட இரு என்று வாய் கூசாமல் சொன்னவன் தானே அந்த சேகர். அதை எப்படி விஜயிடம் சொல்லுவாள்.
“நீங்க எத்தனை காரணம் சொன்னாலும் நீங்க செஞ்சது தப்புத்தான். தாலியும் கட்டி, அதை வெளிய சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு, அப்படியே விட்டுட்டு வந்தவர் தான நீங்க?” என்றாள் வேகமாய்.
அவளின் குற்றச்சாட்டில் இருந்த அனைத்து கோபமும் அவள் மேல் திரும்ப,தன்னிலை இழந்தான் விஜய்.
“தாலி கட்டினதை மறைச்சேன்…மறைச்சேன்னு இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி என்னை சாவடிப்ப. நான் என்ன வேணும்னா செஞ்சேன். இதோ இப்ப போனாளே.. அவ மேல கடைசி வரைக்கும் எங்களுக்கு சின்ன சந்தேகம் கூட வரலை. அப்படி இருக்கும் போதே எங்களை அசிங்கப்படுத்திட்டு போனா.” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்,
“அது மாதிரி நானும் போவேன்னு நினைச்சிங்களா?” என்றாள் கோபத்துடன்.
“முட்டாளாடி நீ..! உன் கல்யாணம் நின்னு எப்படி ஒரு சூழ்நிலையில நான் தாலி கட்டுனேன்னு தெரியுமா உனக்கு. உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, நான் என்ன பண்றதுன்னு புரியாம, உங்க அம்மா கடைசி நேரத்துல கேட்ட வார்த்தையையும் மீற முடியாம, மெடிக்கல் எமர்ஜென்சி அது இதுன்னு எப்படி மனநிலையில இருந்தேன்னு தெரியுமா உனக்கு? சொல்லு தெரியுமா உனக்கு?
அந்த நந்தகுமாரை லவ் பண்ணலைன்னாலும் உனக்கு அவன் மேல அந்த சமயத்துல ஈர்ப்பு இருந்தது உண்மைதான? சொல்லு உண்மை தான? சரண் கல்யாணத்துல நான் நேரடியாவே பார்த்திருக்கேன். அப்படி இருக்கும் போது அதை எப்படி என்னால உடைக்க முடியும். ஏற்கனவே உனக்கு அத்தனை அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கும் போது நான் எப்படி இதை சொல்ல முடியும்? அப்படியும் இதை நான் மறைக்கலை. நீதான் மறைக்க வச்ச?” என்றான் வேதனையான குரலில்.
“நானா?” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
“ஆமா, தாலி கட்டினது என்னமோ நான் தான். ஆனா, அந்த சூழ்நிலையில கூட நீ அவன் பேரைத் தான் சொன்ன. அவனே தாலி கட்டின மாதிரி பீல் பண்ணி பேசுன. அந்த நிமிஷம் நான் உள்ளுக்குள்ள எப்படி உணர்ந்தேன்னு உனக்குப் புரியாது. புரியவே புரியாது. அப்பவே செத்துட்டேன்டி.” என்று கண் கலங்கியவன்,
“ஒருத்தி தாலி கட்டுற நேரத்துல ஓடிப் போனா. ஒருத்தி தாலி கட்டி முடிச்சதும் இன்னொருத்தன் பேரை சொன்னா? எப்படி இருக்கும்? சொல்லு எப்படி இருக்கும்? நானும் மனுஷன் தான? ஆனா, நீ நீயா இல்லைன்னு புரிஞ்சு அப்பவும் உனக்காகத்தாண்டி யோசிச்சேன். உனக்கு சரியாகி அந்த நந்தகுமார் தான் வேணும்னு சொல்லியிருந்தா கண்டிப்பா நானே சேர்த்து வச்சிருப்பேன்.” என்றவன் பேச்சை நிறுத்தி சில நிமிடம் அவளையே ஆழ்ந்து பார்க்க,
“அப்பறம் என்ன சொன்ன? அப்படியே விட்டுட்டு வந்தேனா?உன்னையவா? நானா?” என்று விரக்தி சிரிப்பு சிரித்தவன்,
“இதோ.. உன் அண்ணன் இருக்கானே, எங்க அவன் கிட்ட கேளு? நான் அப்படியே விட்டுட்டு வந்தேனான்னு” என்றான்.
“விஜய் அவதான் புரியாம பேசுறா? நீ ஏன் இப்படி விரக்தியா பேசிட்டு இருக்க?” என்றான் சரண். விஜய் மேலும் உடைந்து போவதை விரும்பவில்லை அவன்.
“உன் தங்கச்சி கேட்ட கேள்வியை நீயும் கேட்ட தானே..!” என்றவன்,
“தாலி கட்டுறதுக்கு முன்னாடி வேணும்னா உன் வாழ்க்கையில என்னென்னமோ நடந்திருக்கலாம். ஆனா எப்போ உன் கழுத்துல தாலி கட்டினேனோ அப்ப இருந்து நீ என்னோட பொறுப்பு. அதுக்கப்பறம் உன் வாழ்க்கையில நடந்த எல்லா விஷயத்துக்கு பின்னாடியும் இந்த விஜய் இருக்கான்.
உன்ன காலேஜ் மாத்துறதுல மட்டும் தான் எனக்கு விருப்பமில்லை. அது கூட உன் அப்பா கூட இருந்தா நீ உயிர்ப்போட இருப்பேன்னு நினைச்சேன். சரண் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தான். அப்பவும் நான் என் பொறுப்பை விடலை. என் மனைவியா இல்லைன்னாலும் என் கூட என் வீட்ல தான இருந்த. அதுல இருந்தே தெரிய வேண்டாம்” என்றான் துவண்டு போன சிரிப்புடன்.
வேதா அதிர்ச்சியாக பார்க்க,
“என்ன பார்க்குற? என்னைய பார்த்தா வீடு வாடகைக்கு விடுறவன் மாதிரியா இருக்கு? எதையாவது சாக்கா வச்சு உன்னை என்கூட வச்சுக்கனும்னு நினைச்சேன். அகரன் மூலமா உன்னைய இங்க வர வச்சேன். உன்னைய என் கண் பார்வையிலேயே தான் வச்சிருந்தேன். இவ்வளவு ஏன்? நீ மேல தங்கியிருக்கிற ரூம் கூட என்னோட பெட்ரூம் தான். நான் கீழ கெஸ்ட் ரூம்ல தங்கிட்டு உன்னை அங்க தங்க வச்சேன். உன்னை எல்லா இடத்துலயும், எல்லா வகையிலும் என் வொய்பா தான் நினைச்சிருந்தேன். அப்படித்தான் இருக்கவும் வச்சேன். இவ்வளவும் எதுக்கு செஞ்சேன். உனக்காக மட்டும் தான். உன்னால மட்டும் தான். ஆனா இன்னைக்கு என்னோட வொய்ப்னு அவங்க முன்னாடி சொல்றதுக்கு அவ்வளவு யோசிக்கிற?” என்றான் வேதனையான குரலில்.
“அண்ணா பிளீஸ்” என்று கீர்த்தனா அவனை அமைதிப் படுத்த, கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்த வேதா,