Wednesday, November 11, 2026

    நீ மட்டும் நிஜமாக

    "எல்லாரும் சாப்பிட்டாச்சா" என்று அவள் கேட்டு வைக்க, "எல்லாரும் சாப்பிட்டாங்கடா. உன் வீட்டுக்காரன் தான் சாப்பிடணும்." "நீங்க" "அவனுக்கு வச்சுட்டு சாப்பிடறேன் மீனு" என, "அட... முதல்ல நீங்க சாப்பிடுங்க. மாமா தூங்கி எழுந்தா சாப்பிட போறாங்க. நீங்க சாப்பிட்டு போய் தூங்குங்க அத்தை" என்றவள் அவர் மறுப்பை கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு தட்டு வைத்து பரிமாறிவிட்டாள். "இல்லம்மா. அவன் வரட்டுமே"...
    நீ மட்டும் நிஜமாக 22 சக்தி-மீனாட்சியின் திருமணம் முடிந்து அத்தனைப் பேரும் வீடு திரும்பிய பின்னும் கூட, வள்ளியம்மை மகளை வந்து பார்க்கவில்லை. முத்தையன் கோவிலில் இருந்து மனைவியின் பின்னே ஓடியவர் தான். அவரும் இதுவரை வந்து சேரவில்லை. இதோ அதோ என்று நேரம் கடந்து கொண்டிருக்க, மதியம் முடிந்து மாலை ஆரம்பித்த நேரம் முத்தையன் மட்டும்...
    தோட்டத்தின் வாயில் அருகே நின்று தங்கையை கையை காட்டி அவன் அழைக்க, "அண்ணா வந்துட்டாங்க. நான் போயிட்டு வரேண்டா. வர்றேன் அண்ணி" என்று வேல்விழி விடைபெற, ஆவலுடன் கூடவே வாசல் வரை வந்தனர் வெற்றியும், தேனருவியும். "உள்ளே வாங்கண்ணா" என்று தேனருவி அழைக்க, "எப்படி இருக்கம்மா? கால் காயம் பரவாயில்லையா? எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க? "...
    நீ மட்டும் நிஜமாக 21 மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடந்த பூசல்களுக்குப் பின், ஒரு வழியாக சக்தி-மீனாட்சியின் திருமண வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது. அழைப்புகளை சொக்கநாதரும், மனோன்மணியும் கவனித்துக் கொள்ள, முத்தையனும், தங்க வேலுவும் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கியிருந்தனர். 'ஆடம்பரமாக எதுவும் செய்ய வேண்டாம்' என்று சக்தி கூறியது எதுவும் மூத்த தலைமுறையின் காதுகளில்...
    நீ மட்டும் நிஜமாக 20 வள்ளியம்மைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பத்து நிமிடங்கள் கழிந்திருக்க, காலையில் காபிக்காக காத்திருந்த சக்தி, அதற்குமேல் முடியாமல் அன்னையைத் தேடிக் கொண்டு அறையை விட்டு  வெளியே வந்தான். கீழே பேச்சு சத்தம் கேட்கவும், புருவம் சுருக்கியவனாக அவன் கீழே இறங்கி வர, முத்தையன் சொக்கநாதரிடம் பேசிக் கொண்டிருந்தார். "வாங்க மாமா" என்று அழைத்தவன்,...
    நீ மட்டும் நிஜமாக 19 அன்று காலையிலேயே சக்தியைப் பார்க்க V2 வந்திருந்தான் வெற்றி. கடையின் மேலாளர் அவனைக் கவனித்து வாசலுக்கு வர, அவரிடம் நலம் விசாரித்து முடித்தவன், "உங்க ஓனர் இருக்காரா?" என்றான். "சக்தி சார் உள்ளே தான் இருக்கார் சார். இன்னைக்கு என்னனு தெரியல, காலையில சீக்கிரமே வந்துட்டார்" "அது தெரிஞ்சு தான் நானும் வந்திருக்கேன்"...
    நீ மட்டும் நிஜமாக 18 அன்று காலையில் எப்போதும் போல் தனது வழக்கமான நேரத்திற்கு சக்திவேல் கடைக்கு வர, அவனுக்கு முன்னே வந்து காத்திருந்தார் முத்தையன். சக்தியைப் பார்க்கவும் எழுந்து நின்றபடி, "வாங்க மருமகனே" என, அவர் வார்த்தையில் கொஞ்சம் குளிர்ச்சியாக உணர்ந்தான் சக்தி. "வரேன் மாமா. வாங்க நீங்களும்" என்று அவரை அழைத்துக்கொண்டு தனது அறைக்குள்...
    நீ மட்டும் நிஜமாக 17 சக்தி தன் செயல்களுக்கு இதுவரை மீனாட்சியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. ஆனால், எப்படியோ ஒருவழியாக அவளை இயல்பாக்கி இருந்தான். அன்று காலையில் அவன் கடைக்கு வந்தவள் பின்மதிய நேரம் வரை அவன் கடையில் தான் இருந்தாள். மதிய உணவு நேரத்திற்கு பிறகு, மீனாட்சியை அவனே அழைத்துச் சென்று...
    நீ மட்டும் நிஜமாக 16 மீனாட்சி தன் காதில் விழுந்த வார்த்தைகளை கேட்டு, பெரிதாக அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. சுவேதாவின் எண்ணம் அவள் ஏற்கனவே அறிந்தது தானே. காவல் நிலையம் வரை சென்று இருந்தாளே?. மீனாட்சியின் கவனம் எல்லாம் சக்தியின் மீது தான் இருந்தது. அவன் முகம் பார்த்த அந்த ஒற்றைக் கணத்தில், அவன் முகத்தை அங்குலம்...
    நீ மட்டும் நிஜமாக 15 மீனாட்சி வீட்டிற்கு வந்து இரண்டு தினங்கள் ஆகி இருக்க, நாள் முழுவதும் மகளின் அருகில் தான் இருந்தார் வள்ளியம்மை. அவளின் தேவைகளுக்காக ஒரு செவிலியை ஏற்பாடு செய்து இருந்தாலும், முழு திருப்தி அடையவில்லை அவர். என்னவோ மகளை விட்டு அசையவே முடியவில்லை. பாதி நேரம், 'எப்படி ஓடி ஆடித் திரிந்த பிள்ளை'...
    நீ மட்டும் நிஜமாக 14 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாசுவின் நிலை கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. கைகால்களில் வெட்டு காயங்கள், உடல் முழுவதும் சிராய்ப்புகள், ரத்த கசிவு, எலும்பு முறிவு என்று சக்தி புரட்டிப் போட்டிருந்தான் அவனை. செண்பகப்பாண்டியன் தான் அவனையும் மருத்துவமனையில் சேர்த்தது. கூடவே, அவன் தந்தைக்கும் அவனே அழைத்து தகவல் சொல்லியிருக்க, அரக்கப்பரக்க ஓடி...
    நீ மட்டும் நிஜமாக 13 சக்திவேல் மருத்துவமனையில் இருந்து கிளம்பி முழுதாக இரண்டு நாட்கள் முடிந்திருக்க, சர்க்கரை ஆலையில் தான் அமர்ந்திருந்தான். அந்த ஆலையில் இருந்த வாசுவின் விசுவாசிகளை சக்தி விரட்டியடித்து இருக்க, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை தேர்ந்தெடுக்கும் வேலை தான் நடந்து கொண்டிருந்தது அன்று முழுவதும். இரவு ஏழு மணி அளவில் அத்தனையும் முடித்து தலையை...
    நீ  மட்டும் நிஜமாக 12 மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் மீனாட்சி. இரண்டு நாட்களாக சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்க, அபாய கட்டத்தை தாண்டி இருந்தாலும், இன்னும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தான் இருந்தாள்.  இன்னமும் நினைவு திரும்பாமல் இருக்க, "அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம். மயக்கம்" என்றிருந்தனர் மருத்துவர்கள். தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அவளுக்கு...
    நீ மட்டும் நிஜமாக 11 தலையில் துண்டுடன் சமையல் அறையில் நின்றிருந்தான் வெற்றி. மதிய நேரத்து வெயில் அவனை குளிப்பாட்டிக் கொண்டிருக்க, கையில்லாத ஒரு பனியன், மடித்து கட்டிய வேட்டி சகிதமாக சமையல் அறைக்குள் புகுந்திருந்தான். மருத்துவமனையில் இருந்து வந்த தேனருவி முடியாமல் படுத்துவிட, அவளுக்காக சமையலில் இறங்கியிருந்தான் வெற்றி.  பெரிதாக ஒன்றும் இல்லை. சாதம், ரசம், தோட்டத்தில்...
    நீ மட்டும் நிஜமாக 10 மீனாட்சியுடனான அலைபேசி உரையாடலுக்குப் பின் ஓரளவு தெளிந்திருந்தான் சக்தி. 'எவ்ளோ வளர்ந்துட்டா. என்ன பேச்சு பேசறா' என்ற பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. அவனது சஞ்சலங்கள் முழுதாக மறைந்து போகாமல் போனாலும், மருந்திட்டது போல் இதமாகியிருந்தது அவன் காயங்கள்.  'நான் தான் அதிகமாக சிந்தித்துக் குழப்பிக் கொல்கிறேனோ' என்று சுய அலசலில் இறங்கியவன்,...
    நீ மட்டும் நிஜமாக 9 நிச்சயம் முடிந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்திருக்க, அப்போதே தொடங்கிவிட்டான் சக்தி.  "யாரைக் கேட்டு அடுத்த மாசம் தேதி குறிச்சிங்க நீங்க. உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க." என்று அவன் கத்த, "என்ன இப்போ? நீ கல்யாணத்துக்கு ஒப்புதல் கொடுத்தது நெசம் தானே. நீ ஆறு மாசம் கழிச்சு வைக்க...
    "சொல்லுங்க சார்" என்று அவன் நேரே ஆய்வாளரின் முன்னே சென்று அமர, "சக்தி இவங்க ஏதேதோ சொல்றாங்களே" என்று அவர் சுவேதாவை கைகாட்ட, "என்ன சொல்றாங்க சார். அவங்க சொல்றதுக்கெல்லாம் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா? நடந்த விஷயங்கள் ஊருக்கே தெரியுமே. என்கிட்டே விசாரிக்க என்ன இருக்கு?" என்று சக்தி அவரிடமே கேட்டு வைக்க, "உங்க சூழ்நிலை எனக்கு...
    தேனு அவனை கவனித்து விசாரிக்க, "சக்திக்கு நிச்சயம் பண்றாங்க" என்றான் அமைதியாக. "ஓஒ" என்றவளுக்கும் மேலே என்ன பேசுவது என்று புரியவில்லை. வெற்றிக்கு அவன் குடும்பம் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவள் அவள். அப்படியிருக்க, இது அவனை எத்தனை பாதிக்கும் என்பதும் புரிய, வெற்றியின் கையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவளும். இவர்கள் இப்படி சோகத்தில்...
    நீ மட்டும் நிஜமாக 8   இரண்டு நாட்களாகவே சற்று உற்சாகமாகத் தான் காணப்பட்டான் வெற்றி. தேங்காய் வியாபாரம் நல்ல இலாபம் ஈட்டிக் கொடுத்திருக்க, அது கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டான். காத்தன் உற்ற துணையாக கூடவே இருக்க, இவன் தடுமாறும் நேரங்களில் சரியாக அறிவுரை கொடுத்தான் அவன். தேங்காய் நல்ல லாபம் கொடுத்து விட்டாலும், அங்கிருந்த...
    நீ மட்டும் நிஜமாக 07 காலையில் எழுந்தது முதலே சிறு பதட்டத்துடன் தான் நடமாடிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. நேற்றிரவு தந்தையும், அண்ணனும் பேசிச் சென்றது மனதில் ஒரு ஓரம் ஓடிக் கொண்டே இருக்க, மகளிடம் என்ன பேசுவது, எப்படி கேட்பது என்று ஆயிரம் யோசனைகள். சமையல் அறையில் கைகள் அதன் போக்கிற்கு காலை வேலைகளை பார்த்துக்...
    error: Content is protected !!