Thursday, July 16, 2026

    நீ மட்டும் நிஜமாக

    நீ மட்டும் நிஜமாக 04 காலையில் விடிந்தது முதலாகவே ஏதோ யோசனையுடன் தான் இருந்தான் வெற்றி. மீனாட்சியின் தயவில் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அது அடுத்த பத்து தினங்களுக்கு கூட தாக்கு பிடிக்காது என்று புரிந்தது அவனுக்கு.  இப்படியே உட்கார்ந்திருக்க முடியாது என்று உணர்ந்தவன், சீக்கிரமே ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று...
    நீ மட்டும் நிஜமாக 07 காலையில் எழுந்தது முதலே சிறு பதட்டத்துடன் தான் நடமாடிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. நேற்றிரவு தந்தையும், அண்ணனும் பேசிச் சென்றது மனதில் ஒரு ஓரம் ஓடிக் கொண்டே இருக்க, மகளிடம் என்ன பேசுவது, எப்படி கேட்பது என்று ஆயிரம் யோசனைகள். சமையல் அறையில் கைகள் அதன் போக்கிற்கு காலை வேலைகளை பார்த்துக்...
    நீ மட்டும் நிஜமாக 10 மீனாட்சியுடனான அலைபேசி உரையாடலுக்குப் பின் ஓரளவு தெளிந்திருந்தான் சக்தி. 'எவ்ளோ வளர்ந்துட்டா. என்ன பேச்சு பேசறா' என்ற பிரமிப்பு இன்னமும் நீங்கவில்லை. அவனது சஞ்சலங்கள் முழுதாக மறைந்து போகாமல் போனாலும், மருந்திட்டது போல் இதமாகியிருந்தது அவன் காயங்கள்.  'நான் தான் அதிகமாக சிந்தித்துக் குழப்பிக் கொல்கிறேனோ' என்று சுய அலசலில் இறங்கியவன்,...
    நீ மட்டும் நிஜமாக 8   இரண்டு நாட்களாகவே சற்று உற்சாகமாகத் தான் காணப்பட்டான் வெற்றி. தேங்காய் வியாபாரம் நல்ல இலாபம் ஈட்டிக் கொடுத்திருக்க, அது கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டான். காத்தன் உற்ற துணையாக கூடவே இருக்க, இவன் தடுமாறும் நேரங்களில் சரியாக அறிவுரை கொடுத்தான் அவன். தேங்காய் நல்ல லாபம் கொடுத்து விட்டாலும், அங்கிருந்த...
    இருவரும் தென்காசியில் இருந்த ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருக்க, அங்கிருந்து பத்து நிமிட இடைவெளியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு தான் வந்து சேர்ந்தனர் இருவரும். ஆளுக்கொரு தோசையை கையில் வாங்கி, வாயைத் திறக்கும் நேரம், வெற்றி அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து, அவனுக்கு முன்னே இருந்த மேசையின் மீது விழுந்திருந்தான். அவன் சாப்பிட வாங்கிய தோசை...
    நீ மட்டும் நிஜமாக 3 காவல் நிலையத்தில் இருந்து நேரே தங்களுக்கு சொந்தமான அந்த தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் வெற்றி. அந்த தோட்டத்தில் இருந்த ஓட்டு வீட்டின் படியில் அவன் அமர்ந்திருக்க, அவன் அருகில் தேனருவி. இருவருக்குமே அடுத்து என்னவென ஒன்றும் புரியாத நிலைதான். பார்த்து பழகி, காதலித்து, இன்று வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவே முடிவெடுத்து...
    நீ மட்டும் நிஜமாக 9 நிச்சயம் முடிந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்திருக்க, அப்போதே தொடங்கிவிட்டான் சக்தி.  "யாரைக் கேட்டு அடுத்த மாசம் தேதி குறிச்சிங்க நீங்க. உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க." என்று அவன் கத்த, "என்ன இப்போ? நீ கல்யாணத்துக்கு ஒப்புதல் கொடுத்தது நெசம் தானே. நீ ஆறு மாசம் கழிச்சு வைக்க...
    "சொல்லுங்க சார்" என்று அவன் நேரே ஆய்வாளரின் முன்னே சென்று அமர, "சக்தி இவங்க ஏதேதோ சொல்றாங்களே" என்று அவர் சுவேதாவை கைகாட்ட, "என்ன சொல்றாங்க சார். அவங்க சொல்றதுக்கெல்லாம் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா? நடந்த விஷயங்கள் ஊருக்கே தெரியுமே. என்கிட்டே விசாரிக்க என்ன இருக்கு?" என்று சக்தி அவரிடமே கேட்டு வைக்க, "உங்க சூழ்நிலை எனக்கு...
    நீ மட்டும் நிஜமாக 5 அன்று காலையில் நேரமாகவே எழுந்து இருந்தான் வெற்றி. அவனது அசைவில் அருவியும் எழுந்து கொள்ள, "படு படு" என்று மனைவியின் தோள் தட்டி உறங்க வைத்து விட்டு, தான் மட்டும் எழுந்து வாசலுக்கு வந்தான். அப்போதுதான் லேசாக பொழுது புலரத் தொடங்கியிருக்க, அத்தனை ரம்யமாக இருந்தது கண்ட காட்சி. இதுவரை தனது...
    நீ மட்டும் நிஜமாக 2 மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தான் சக்திவேல். அவன் தம்பி வீட்டை விட்டுச் சென்று இன்றுடன் ஒருவாரம் ஆகி இருந்தது. பெயருக்கு, 'அவனை காணவில்லை' என்று ஒரு புகார் கொடுத்தவன், தனது ஷோ ரூமை அடித்து நொறுக்கியவர்களை பற்றி உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தான். அவன் புகார் கொடுத்து, ஷோ...
    நீ மட்டும் நிஜமாக 11 தலையில் துண்டுடன் சமையல் அறையில் நின்றிருந்தான் வெற்றி. மதிய நேரத்து வெயில் அவனை குளிப்பாட்டிக் கொண்டிருக்க, கையில்லாத ஒரு பனியன், மடித்து கட்டிய வேட்டி சகிதமாக சமையல் அறைக்குள் புகுந்திருந்தான். மருத்துவமனையில் இருந்து வந்த தேனருவி முடியாமல் படுத்துவிட, அவளுக்காக சமையலில் இறங்கியிருந்தான் வெற்றி.  பெரிதாக ஒன்றும் இல்லை. சாதம், ரசம், தோட்டத்தில்...
    நீ மட்டும் நிஜமாக 1 மதுரை மீனாட்சியம்மன் கோவில் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்திருந்தது அந்த இருசக்கர வாகன விற்பனையகம். மூன்று அடுக்கு கட்டிடத்தில் முழுவதுமாக கண்ணாடியால் சுவர் எழுப்பியது போல் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருந்தது. விலையுயர்ந்த நவீன ரக இருசக்கர வாகனங்கள் அத்தனையும் எப்போதும் வெகு அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அங்கே. எப்போதும் வாகன...
    error: Content is protected !!