செங்கோலும் செண்பகப்பூவும்
வாடிய முகத்துடன் அமைதியாக மனைவி வேலைக்கு கிளம்பிச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான் ரத்னதீபன். சமீபமாக கிடைத்து வந்த காபியும் மனைவியின் மனதை கொள்ளை கொண்டதன் பலனாய் கைக்கே வந்த உணவும் மாறிப்போய் இப்போது சிறு பார்வைக்கே பஞ்சமாகிவிட்டது. தானே சென்று பேசினால் அவ்விடத்தில் நிற்பதையே தவிர்த்துவிடுகிறாள் மனைவி. கோபத்தின் பிடியில் இருந்தபோது கூட ஒன்றாக அருகருகே...
“என்னோட இல்லாம எப்படி மேடம்? முன்னாடி ரூம்ல இருந்தேன் அதுனால அவங்க ஊர்ல இருந்தாங்க. வீடு பார்க்கவும் இங்கேயே வந்துட்டாங்க. அவங்க இல்லைனா எனக்கு எதுவும் ஓடாது.” என்று இவன் கொஞ்சம் அழுத்தம் கூட்டிப் பேச, அவள் அதற்கு மேல் துருவவில்லை.
“ஓகே தீபன். நீங்க ஊருக்கே போகாம இங்கேயே இருக்கவும் உங்களுக்கும் உங்க வொய்ப்புக்கும்...
பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்த ரத்னதீபனின் தோள் தட்டிய வேலுச்சாமி தன் இருக்கையில் அமர்ந்து அவனையும் அமரச்சொன்னார்.
“கூப்பிட்டிருந்தீங்கன்னு சொன்னாங்க தலைவரே.” என ஆரம்பித்தான் ரத்னதீபன்.
“உன் பேர் அடிக்கடி நம்ம டெஸ்குக்கு வருதயா.” என்றார் அவர்.
நல்லவிதமாக சொல்கிறாரா இல்லை குதர்க்கமாக சொல்கிறாரா என்று ரத்னதீபன் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, சுற்றி வளைத்து விஷயத்திற்கு...
*22*
ஞாயிறு நிதானமாக எழலாம் என்ற எண்ணத்தில் விழி திறவாமல் உறக்கத்திலேயே புரண்டுப் படுக்க முயன்றவளை எதுவோ தடுக்க, பட்டென கண்விழித்துப் பார்த்தாள் செண்பகா. ரத்னதீபனின் கைகள் அரணாய் அவளை சுற்றி வளைத்திருப்பது மட்டுமில்லாமல் அவள் தோள்களை அவன் மஞ்சமாக்கி பாதி உடலை இவள்மேல் கிடத்தி உறங்கிக் கொண்டிருந்தான். சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள,...
*21*
இருளும் விடியலும் மனைவி வாசத்தின் பிடியில் அவளின் அருகாமைக்கு மீண்டும் பழக ஆரம்பித்திருந்தான் ரத்னதீபன். இன்னும் எதுவும் சரியாகவில்லை, அட இயல்பான பேச்சுக்களுக்கு கூட பஞ்சம் என்ற நிலைதான். அவள் ஓய்வாக இருக்கும் சமயம் இவன் வீட்டில் இருப்பதில்லை. இவன் இலகுவாக இருக்கும்போது அவள் உறக்கத்தின் பிடியிலோ சமையலறையிலோ இல்லை வீட்டு வேலையிலோ தன்னை...
*20*
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்லக்கூடிய அதிகாரத்தில் இருந்தாலும் நிதர்சனம் அப்படி இருக்காதே. குடும்பத்தை பார்க்கலாம் என நினைக்கையில்தான் அவன் பார்வைக்கு பிரச்சனைகளோ கூட்டங்களோ சலசலப்புகளோ வருகிறது. அதனை உதறித் தள்ளிவிட்டு வரவும் முடியவில்லை. வீட்டு சாவி வாங்கும் சாக்கில் நேரமே மனைவியை பார்க்க செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவன் வேறொரு வேலையில் மாட்டிக்கொள்ள,...
*19*
“வர வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருது ரத்தினம். விரதம் இருந்து வீட்ல ஒரு பூஜை போட்டா எல்லாம் சரியா வரும். நாங்க அங்க வரோம் அன்னைக்கு வீட்ல இருக்குற மாதிரி பாத்துக்கோ.”
“என்ன ம்மா புதுசா?” இதுபோன்ற பழக்கங்கள் தங்கள் வீட்டில் இல்லையே என்ற குழப்பத்தில் ரத்னதீபன் கேட்க,
“திவ்யா மாமியார் சொன்னாங்க ரத்தினம். செஞ்சிதான் பாப்போமே.”...
*18*
எண்பதுகளில் பண்ணையாராக இருந்த ஒருவர் பள்ளி கட்ட தானமாக கொடுத்த இடத்தை இப்போது அரசியல் பிரமுகர் ஒருவர் அபகரித்து அதில் இருந்த பள்ளியை இடித்துவிட்டு சொகுசு விடுதி கட்ட ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். தர்மத்திற்காக கொடுத்த நிலத்தில் வணிக நோக்கத்துடன் கட்டப்படும் விடுதியை அனுமதிக்கமாட்டோம் என நிலம் கொடுத்தவரின் வாரிசுகள் எதிர்க்கின்றனர். நகரத்திற்கு வெளியே பஞ்சாயத்து...
*17*
ஆடி முடிந்த மறு முகூர்த்த நாளில் அந்த திருமண வீடே பரபரப்பாய் இருந்தது. பிரபலங்களும் கட்சிக்காரர்களும் தொழிலதிபர்களும் வந்தவண்ணம் இருக்க, அந்த மாபெரும் மண்டபம் கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது. எங்கு திரும்பினும் பளிச்சிடும் விளக்குகளும் அதற்கு தோதாய் பட்டுகளில் வலம் வரும் பெரிய தலைகளும் என பகட்டு வெளிப்பட்ட அவ்விடத்தை பார்வையிட்டுக்கொண்டே பிரபுவுடன் உள்நுழைந்தவன் தங்கள்...
*16*
“அவருக்கு நான் இங்க இருக்குற விஷயத்தை எதுக்கு நீ சொன்ன?” தங்கை அழைக்கிறாள் என ஆர்வமுடன் அழைப்பை ஏற்றவன் செவி அடைந்தது அவளது வசவு.
அலைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் செவிக்கு கொடுத்த வளவன், “என்ன பாப்பா? ஏன் இவ்ளோ சூடா இருக்க? சாப்பிட்டியா?”
“உன் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டதுக்கு அது ஒன்னுதான் குறைச்சல் இப்போ.” அவளின்...
*15*
அன்று அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம். இரு நாட்களுக்கு நடைபெறுமென முன்னரே அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்திற்கு சென்றால் போதுமென்று பொறுமையாகதான் எழுந்தான் ரத்னதீபன். அவன் எழுவதற்காகவே காத்திருந்தது போல் மருதுவும் அபிராமியும் சொல்லிக்கொண்டு கிளம்ப, மனைவிக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தவன் பெருமூச்சுடன் அன்றைய நாளை துவங்கினான்.
“என்னைய்யா யாரும் எதிர்பார்க்காத மாதிரி...
*14*
“திரும்பத் திரும்ப உங்க பேர் ஏன் அந்த ஹீரோயினோட வந்துட்டே இருக்கு. அதுவும் ஹோட்டல்ல, மால்ல இருக்குற மாதிரி போட்டோஸ் எல்லாம் வருது? எப்போ பாத்தீங்க அவங்களை? ஏன் எங்கிட்ட சொல்லல?” என வரிசையாக கேள்விகள் எழுப்பினாள் செண்பகா.
நடுஇரவு தாண்டி அப்போதுதான் வீடு வந்திருந்த ரத்னதீபன் பயங்கர சோர்வாய் இருந்தான். அன்றைக்கு என பார்த்து...
*13*
அழுகையுடன் சென்ற மனைவியின் பின் செல்லத்துடித்த கால்களை அவளை நோக்கி நகர்த்தவும்தான் குடும்பத்தினர் தங்களையே பார்த்து நின்றது புரிந்தது. அவர்கள் முன்னிலையிலா சண்டையிட்டோம் என சங்கடப்பட்டு அவன் நெற்றியைத் தேய்த்து, தொண்டை செருமி நிற்க, வேகமாக உள்ளே வந்தான் பிரபு.
“பால் காய்ச்சியாச்சா அண்ணே?” குரலிலும் உடல்மொழியிலும் அவசரம் தென்பட, உணர்வுப் பிடிகளிலிருந்து வெளிவந்த விமல்...
*12*
அடர்நிறச் சேலையுடத்தி ஆர்வமும் படபடப்புமாய் நின்றவளிடம் பேசத் துடித்த மனதை அடக்கிக்கொண்டு சுற்றத்தினரை பார்த்தான் ரத்னதீபன். ஜாதகங்கள் பரிமாறிக்கொண்டு ஒத்துப்போகிறது என்று இருக்குடும்பங்களும் பேசி இன்று பெண் பார்க்கும் வைபவம் நடக்கிறது. பெண்ணை பெயருக்கு காட்டி உள்ளே அனுப்பிவிட்டு இங்கு தங்களின் குடும்பப் பின்னணி குறித்து பேசிக்கொண்டிருந்தனர் பெரியவர்கள்.
அவன் அருகில் அமர்ந்திருந்த விமல் லேசாக...
*10*
இரண்டு பயணப் பைகளில் தனக்குத் தேவையானதை அடைத்து வைத்திருந்தாள் செண்பகா. தங்கள் கடையிலிருந்து அவள் புழங்கத் தேவையான அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டான் வளவன்.
“எதுக்குண்ணா இவ்ளோ? அங்க போய் வாங்கிக்கலாம்ல.” பையின் கொள்ளளவை மீறி அங்குமிங்கும் இறுக்கமாய் இழுத்துக் கட்டப்பட்டிருந்த பையின் மேல் நுனியை லேசாக பிரித்துப்பார்த்தவள் அதில் குளிக்கத் தேவையான பக்கெட், மக்...
*9*
“சென்னைக்கு வேலை மாத்திட்டாங்களாமே. நல்லதா போச்சு. ரத்தினமும் வீடு பாத்துட்டான், அடுத்த வாரத்துல நல்ல நாள் இருக்கு அன்னைக்கே பால் காய்ச்சி குடி போய்டுங்க. இப்போ விட்டா ஆடி வந்துடும். அங்கிருந்தே நீ வேலைக்கு போய்க்கலாம். கல்யாணத்தப்போ உனக்கு வாங்கிக்கொடுத்த சீர் வரிசை சாமான் எல்லாம் மேல தான கடக்கு அதை எடுத்துக்கலாம். மத்த...
*8*
விழுப்புரம் இரயில் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகமாவதை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த ரத்னதீபனிடம் வந்த பிரபுவின் கையில் சுடச்சுட பாதாம் பாலும் டீயும் இருந்தது. ஆவி பறக்கும் பாதாம் பாலை வாங்கி ஒரு மிடறு உள்ளே இறக்கிய ரத்னதீபன், “அந்த டீயை எப்படிடா குடிக்குற? சக்கரை தண்ணி மாதிரி இருக்கு.” முகம் சுழிக்க,
“புலி பசிச்சாலும்...
*7*
மதிய உணவு நேரம் முடிந்தும் சில நிமிடங்கள் வெறுமெனக் கடக்க, கடுப்பான மேலாளர், “இன்னும் எவ்ளோ நேரம் சார்? ரெபியூட்டட் பொஷிஷன்ல இருக்கோம் எங்களையே இவ்ளோ நேரம் காக்க வைக்குறீங்க? இந்த அம்மாதான் பொய் கேஸ் கொடுத்தா நீங்களும் உங்க பங்குக்கு எங்களை காக்க வச்சி அவமானப்படுத்துறீங்க.” என்று பொங்கினார்.
“நாங்க என்ன சார் பண்ண...
*6*
சமைத்து வைத்திருந்த காலை உணவை அமைதியாக உண்டு முடித்தவள் நிதி நிறுவனத்திற்குச் செல்ல ஆயத்தமானாள். அமுதா அவளை பார்ப்பதும் ஏதோ வேலை செய்வதுமாய் இருந்தார். மகனின் திருமணம் தள்ளிப்போகிறது என பேசியதிலிருந்து ஒதுக்கம் காட்டும் மகளை காணக் காண உள்ளம் வெதும்பியது. மகளின் மனது இளகிவிடாதா என்ற எதிர்பார்ப்பில் அவர் எய்த அம்பு அதன்...
*5*
“என்னங்க ஏதோ யோசனைல இருக்குற மாதிரி இருக்கு?” கடையிலிருந்து வந்ததிலிருந்து சிந்தனை வயப்பட்டிருக்கும் கணவரை பார்த்துக் கேட்டார் அமுதா.
“இதை சொல்லக்கூடாதுதான் ஆனா… வளவன் கல்யாணம் பாப்பாவால தள்ளிப்போகுதோனு தோணுது அமுதா.” கவலையுடன் வையாபுரி சொல்ல, பெற்றவள் மனது பதைபதைத்தது.
“பாப்பா கல்யாணம் முடிஞ்சதுலேந்து வளவனுக்கு பாக்குறோம். எதுவும் தகைஞ்சி வரமாட்டேங்குதேன்னு யோசனையாவே இருந்துது. இன்னைக்கு நாம...