Wednesday, November 11, 2026

    செங்கோலும் செண்பகப்பூவும்

    *6* சமைத்து வைத்திருந்த காலை உணவை அமைதியாக உண்டு முடித்தவள் நிதி நிறுவனத்திற்குச் செல்ல ஆயத்தமானாள். அமுதா அவளை பார்ப்பதும் ஏதோ வேலை செய்வதுமாய் இருந்தார். மகனின் திருமணம் தள்ளிப்போகிறது என பேசியதிலிருந்து ஒதுக்கம் காட்டும் மகளை காணக் காண உள்ளம் வெதும்பியது. மகளின் மனது இளகிவிடாதா என்ற எதிர்பார்ப்பில் அவர் எய்த அம்பு அதன்...
    *18* எண்பதுகளில் பண்ணையாராக இருந்த ஒருவர் பள்ளி கட்ட தானமாக கொடுத்த இடத்தை இப்போது அரசியல் பிரமுகர் ஒருவர் அபகரித்து அதில் இருந்த பள்ளியை இடித்துவிட்டு சொகுசு விடுதி கட்ட ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். தர்மத்திற்காக கொடுத்த நிலத்தில் வணிக நோக்கத்துடன் கட்டப்படும் விடுதியை அனுமதிக்கமாட்டோம் என நிலம் கொடுத்தவரின் வாரிசுகள் எதிர்க்கின்றனர். நகரத்திற்கு வெளியே பஞ்சாயத்து...
     *8* விழுப்புரம் இரயில் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகமாவதை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த ரத்னதீபனிடம் வந்த பிரபுவின் கையில் சுடச்சுட பாதாம் பாலும் டீயும் இருந்தது. ஆவி பறக்கும் பாதாம் பாலை வாங்கி ஒரு மிடறு உள்ளே இறக்கிய ரத்னதீபன், “அந்த டீயை எப்படிடா குடிக்குற? சக்கரை தண்ணி மாதிரி இருக்கு.” முகம் சுழிக்க, “புலி பசிச்சாலும்...
    *12* அடர்நிறச் சேலையுடத்தி ஆர்வமும் படபடப்புமாய் நின்றவளிடம் பேசத் துடித்த மனதை அடக்கிக்கொண்டு சுற்றத்தினரை பார்த்தான் ரத்னதீபன். ஜாதகங்கள் பரிமாறிக்கொண்டு ஒத்துப்போகிறது என்று இருக்குடும்பங்களும் பேசி இன்று பெண் பார்க்கும் வைபவம் நடக்கிறது. பெண்ணை பெயருக்கு காட்டி உள்ளே அனுப்பிவிட்டு இங்கு தங்களின் குடும்பப் பின்னணி குறித்து பேசிக்கொண்டிருந்தனர் பெரியவர்கள்.  அவன் அருகில் அமர்ந்திருந்த விமல் லேசாக...
    *10* இரண்டு பயணப் பைகளில் தனக்குத் தேவையானதை அடைத்து வைத்திருந்தாள் செண்பகா. தங்கள் கடையிலிருந்து அவள் புழங்கத் தேவையான அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டான் வளவன். “எதுக்குண்ணா இவ்ளோ? அங்க போய் வாங்கிக்கலாம்ல.” பையின் கொள்ளளவை மீறி அங்குமிங்கும் இறுக்கமாய் இழுத்துக் கட்டப்பட்டிருந்த பையின் மேல் நுனியை லேசாக பிரித்துப்பார்த்தவள் அதில் குளிக்கத் தேவையான பக்கெட், மக்...
    *27* “கார் வாங்கிட்டிங்களாம் எப்போ இந்த பக்கம் வர்றீங்க?” உரிமையுடன் அழைத்துப் பேசிய விமலுக்கு என்ன பதில் சொல்வது என நெற்றியில் விரலால் கோடிழுத்து அமைதியாக இருந்தான் ரத்னதீபன். “என்ன மச்சான் சத்தத்தையே காணோம்?” “டெண்டர் கிடைச்சிருச்சே வேலை ஆரம்பிச்சிட்டீங்களா? எப்படி போகுது எல்லாம்?” பேச்சை மாற்றினான் சாமர்த்தியக்காரன். “இன்னும் ரெண்டு டிராக்டர் தேவைப்படுது லோன் போட்டு சொந்தமா வாங்கிடலாமா...
    பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்த ரத்னதீபனின் தோள் தட்டிய வேலுச்சாமி தன் இருக்கையில் அமர்ந்து அவனையும் அமரச்சொன்னார். “கூப்பிட்டிருந்தீங்கன்னு சொன்னாங்க தலைவரே.” என ஆரம்பித்தான் ரத்னதீபன்.  “உன் பேர் அடிக்கடி நம்ம டெஸ்குக்கு வருதயா.” என்றார் அவர். நல்லவிதமாக சொல்கிறாரா இல்லை குதர்க்கமாக சொல்கிறாரா என்று ரத்னதீபன் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, சுற்றி வளைத்து விஷயத்திற்கு...
    *7* மதிய உணவு நேரம் முடிந்தும் சில நிமிடங்கள் வெறுமெனக் கடக்க, கடுப்பான மேலாளர், “இன்னும் எவ்ளோ நேரம் சார்? ரெபியூட்டட் பொஷிஷன்ல இருக்கோம் எங்களையே இவ்ளோ நேரம் காக்க வைக்குறீங்க? இந்த அம்மாதான் பொய் கேஸ் கொடுத்தா நீங்களும் உங்க பங்குக்கு எங்களை காக்க வச்சி அவமானப்படுத்துறீங்க.” என்று பொங்கினார்.  “நாங்க என்ன சார் பண்ண...
    *14* “திரும்பத் திரும்ப உங்க பேர் ஏன் அந்த ஹீரோயினோட வந்துட்டே இருக்கு. அதுவும் ஹோட்டல்ல, மால்ல இருக்குற மாதிரி போட்டோஸ் எல்லாம் வருது? எப்போ பாத்தீங்க அவங்களை? ஏன் எங்கிட்ட சொல்லல?” என வரிசையாக கேள்விகள் எழுப்பினாள் செண்பகா. நடுஇரவு தாண்டி அப்போதுதான் வீடு வந்திருந்த ரத்னதீபன் பயங்கர சோர்வாய் இருந்தான். அன்றைக்கு என பார்த்து...
    *13* அழுகையுடன் சென்ற மனைவியின் பின் செல்லத்துடித்த கால்களை அவளை நோக்கி நகர்த்தவும்தான் குடும்பத்தினர் தங்களையே பார்த்து நின்றது புரிந்தது. அவர்கள் முன்னிலையிலா சண்டையிட்டோம் என சங்கடப்பட்டு அவன் நெற்றியைத் தேய்த்து, தொண்டை செருமி நிற்க, வேகமாக உள்ளே வந்தான் பிரபு. “பால் காய்ச்சியாச்சா அண்ணே?” குரலிலும் உடல்மொழியிலும் அவசரம் தென்பட, உணர்வுப் பிடிகளிலிருந்து வெளிவந்த விமல்...
    *3* “நாளைக்கு லீவ்தானே இருந்துட்டு போகலாம்ல.” என்ற அபிராமியை வெறுமையாக பார்த்தாள் செண்பகா. பரந்தூரில் இருக்கும் புகுந்த வீட்டில் வந்து இறங்கியதும் விழுப்புரம் கிளம்புகிறேன் என்றவளை தடுத்து நிறுத்தி வாதம் புரிந்தார் அபிராமி.  “அவனும் இங்க வர்றது இல்லை நீயும் இல்லைனா எப்படி? இதுதான் உன் குடும்பம்.” “எனக்கு மட்டும்தானா அத்தை?” உங்கள் மகனுக்கு மட்டும் இது குடும்பம்...
    *15* அன்று அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம். இரு நாட்களுக்கு நடைபெறுமென முன்னரே அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்திற்கு சென்றால் போதுமென்று பொறுமையாகதான் எழுந்தான் ரத்னதீபன். அவன் எழுவதற்காகவே காத்திருந்தது போல் மருதுவும் அபிராமியும் சொல்லிக்கொண்டு கிளம்ப, மனைவிக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தவன் பெருமூச்சுடன் அன்றைய நாளை துவங்கினான்.  “என்னைய்யா யாரும் எதிர்பார்க்காத மாதிரி...
    *25* ஆயுத பூஜைக்கு முந்தைய நாள். திங்கட்கிழமை. இடையில் வந்துபோன விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி என எதற்கும் ஊருக்கு செல்லவில்லை. ஆரம்பத்தில் தனியாக சென்று சிக்கிக்கொள்ள விரும்பவில்லை, பிறகு அவனுடனான மனக்கசப்பு அவளை இறுக்கத்திற்கு தள்ள, வேலைக்குச் செல்வது ஒன்றே அவளை இலகுவாக்கும் வழியாகிப்போனது. இப்போது ஊருக்கு செல்கிறோம் என்றதும் ஒரு குறுகுறுப்பு. அவனிடமிருந்து...
    *4* கோடைக்கேற்ற கேப்பங்கூழ் குடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே அவனது அலுவலகத்திற்குச் சென்றான். கோரிக்கை மனு கொடுக்கவென ஆங்காங்கு மக்கள் நின்றுகொண்டிருக்க, இருசக்கர வாகனத்தில் வந்திறங்கியவனை பார்த்ததும் முணுமுணுப்புகள் வந்தது. மக்கள் நெருங்கி வந்தனர்.  “என்ன குறை இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க என் அதிகாரத்துக்கு உட்பட்டு முடிச்சி கொடுக்குறேன்.” என இன்முகமாக சொல்லி மனுக்களை பெற்றுக்கொண்டான்....
    வாடிய முகத்துடன் அமைதியாக மனைவி வேலைக்கு கிளம்பிச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான் ரத்னதீபன். சமீபமாக கிடைத்து வந்த காபியும் மனைவியின் மனதை கொள்ளை கொண்டதன் பலனாய் கைக்கே வந்த உணவும் மாறிப்போய் இப்போது சிறு பார்வைக்கே பஞ்சமாகிவிட்டது. தானே சென்று பேசினால் அவ்விடத்தில் நிற்பதையே தவிர்த்துவிடுகிறாள் மனைவி. கோபத்தின் பிடியில் இருந்தபோது கூட ஒன்றாக அருகருகே...
    *28* “வாழ்வின் வளமே! வெற்றியின் வல்லவனே! வாழ்க்கை என்னும் சட்டமன்றத்தில் அன்பை ஆட்சியாக்கு! இன்பத்தை அமைச்சராக்கு! சந்தோஷத்தை எதிர்க்கட்சியில்லா ஆட்சியாக்கு! இன்று மணமேடை ஏறும் வளவனே! உன் திருமண வெற்றியை எங்கள் வாழ்க்கையின் வெற்றியாய் கொண்டாடும் - விமல், கமல், திவ்யா!”` “வளவமாய் வாழ வளவனை வாழ்த்துகிறோம்.” “மக்கள் மன்றத்தில் குரலாய்! சட்டமன்றத்தில் வீரமாய்! எங்கள் மனங்களில் உறவாய்! இன்று வளவன் திருமண விழாவில் சிறப்பு வருகை தரும் மாண்புமிகு MLA ரத்னதீபன் அவர்களே...
    *22* ஞாயிறு நிதானமாக எழலாம் என்ற எண்ணத்தில் விழி திறவாமல் உறக்கத்திலேயே புரண்டுப் படுக்க முயன்றவளை எதுவோ தடுக்க, பட்டென கண்விழித்துப் பார்த்தாள் செண்பகா. ரத்னதீபனின் கைகள் அரணாய் அவளை சுற்றி வளைத்திருப்பது மட்டுமில்லாமல் அவள் தோள்களை அவன் மஞ்சமாக்கி பாதி உடலை இவள்மேல் கிடத்தி உறங்கிக் கொண்டிருந்தான். சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள,...
    *26* பளிச்சென்று வந்தமர்ந்திருந்த ரத்னதீபனை ஆச்சரியமாய் பார்த்த பிரபு, “ஊருக்கு போயிட்டு வந்ததும் முகமே டாலடிக்குது. என்ன விஷேஷம் அண்ணே?” “போய் வேலையைப் பாருடா.” கடிய முயன்றவன் முகம் புன்னகை தாங்கி நின்றது. மனைவியுடனான சமாதான உடன்படிக்கை வெற்றி கண்டபின் ஆசுவாசம் கொண்ட மனதின் உல்லாச கூச்சல் முகத்தினில் வெளிப்பட்டது. “என்ன அண்ணி செமத்தியா கவனிச்சு விட்டாங்களா?” என...
    *5* “என்னங்க ஏதோ யோசனைல இருக்குற மாதிரி இருக்கு?” கடையிலிருந்து வந்ததிலிருந்து சிந்தனை வயப்பட்டிருக்கும் கணவரை பார்த்துக் கேட்டார் அமுதா.  “இதை சொல்லக்கூடாதுதான் ஆனா… வளவன் கல்யாணம் பாப்பாவால தள்ளிப்போகுதோனு தோணுது அமுதா.” கவலையுடன் வையாபுரி சொல்ல, பெற்றவள் மனது பதைபதைத்தது. “பாப்பா கல்யாணம் முடிஞ்சதுலேந்து வளவனுக்கு பாக்குறோம். எதுவும் தகைஞ்சி வரமாட்டேங்குதேன்னு யோசனையாவே இருந்துது. இன்னைக்கு நாம...
     *19* “வர வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருது ரத்தினம். விரதம் இருந்து வீட்ல ஒரு பூஜை போட்டா எல்லாம் சரியா வரும். நாங்க அங்க வரோம் அன்னைக்கு வீட்ல இருக்குற மாதிரி பாத்துக்கோ.”  “என்ன ம்மா புதுசா?” இதுபோன்ற பழக்கங்கள் தங்கள் வீட்டில் இல்லையே என்ற குழப்பத்தில் ரத்னதீபன் கேட்க, “திவ்யா மாமியார் சொன்னாங்க ரத்தினம். செஞ்சிதான் பாப்போமே.”...
    error: Content is protected !!