செங்கோலும் செண்பகப்பூவும்
‘என் பேருக்கு என்ட்ரி பாஸ் போட்டு அனுப்பத் தெரியுது. கண்ணுக்கு முன்ன இவ்ளோ பெரிய உருவம் இருக்கிறது தெரியலையமாம். போடா போடா நீ பாக்காட்டி நிம்மதிதான் எனக்கு.’ என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள் செண்பகா.
“வீட்டுக்கு வாப்பா ரத்தினம். எவ்ளோ நாளாச்சு நீ அங்க வந்து.” மகனிடம் முறையிட்ட அபிராமியின் வருத்தம் அவர் குரலிலேயே தெரிந்தது.
“இங்க...
*8*
விழுப்புரம் இரயில் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகமாவதை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த ரத்னதீபனிடம் வந்த பிரபுவின் கையில் சுடச்சுட பாதாம் பாலும் டீயும் இருந்தது. ஆவி பறக்கும் பாதாம் பாலை வாங்கி ஒரு மிடறு உள்ளே இறக்கிய ரத்னதீபன், “அந்த டீயை எப்படிடா குடிக்குற? சக்கரை தண்ணி மாதிரி இருக்கு.” முகம் சுழிக்க,
“புலி பசிச்சாலும்...
*5*
“என்னங்க ஏதோ யோசனைல இருக்குற மாதிரி இருக்கு?” கடையிலிருந்து வந்ததிலிருந்து சிந்தனை வயப்பட்டிருக்கும் கணவரை பார்த்துக் கேட்டார் அமுதா.
“இதை சொல்லக்கூடாதுதான் ஆனா… வளவன் கல்யாணம் பாப்பாவால தள்ளிப்போகுதோனு தோணுது அமுதா.” கவலையுடன் வையாபுரி சொல்ல, பெற்றவள் மனது பதைபதைத்தது.
“பாப்பா கல்யாணம் முடிஞ்சதுலேந்து வளவனுக்கு பாக்குறோம். எதுவும் தகைஞ்சி வரமாட்டேங்குதேன்னு யோசனையாவே இருந்துது. இன்னைக்கு நாம...
*10*
இரண்டு பயணப் பைகளில் தனக்குத் தேவையானதை அடைத்து வைத்திருந்தாள் செண்பகா. தங்கள் கடையிலிருந்து அவள் புழங்கத் தேவையான அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டான் வளவன்.
“எதுக்குண்ணா இவ்ளோ? அங்க போய் வாங்கிக்கலாம்ல.” பையின் கொள்ளளவை மீறி அங்குமிங்கும் இறுக்கமாய் இழுத்துக் கட்டப்பட்டிருந்த பையின் மேல் நுனியை லேசாக பிரித்துப்பார்த்தவள் அதில் குளிக்கத் தேவையான பக்கெட், மக்...
*9*
“சென்னைக்கு வேலை மாத்திட்டாங்களாமே. நல்லதா போச்சு. ரத்தினமும் வீடு பாத்துட்டான், அடுத்த வாரத்துல நல்ல நாள் இருக்கு அன்னைக்கே பால் காய்ச்சி குடி போய்டுங்க. இப்போ விட்டா ஆடி வந்துடும். அங்கிருந்தே நீ வேலைக்கு போய்க்கலாம். கல்யாணத்தப்போ உனக்கு வாங்கிக்கொடுத்த சீர் வரிசை சாமான் எல்லாம் மேல தான கடக்கு அதை எடுத்துக்கலாம். மத்த...
*4*
கோடைக்கேற்ற கேப்பங்கூழ் குடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே அவனது அலுவலகத்திற்குச் சென்றான். கோரிக்கை மனு கொடுக்கவென ஆங்காங்கு மக்கள் நின்றுகொண்டிருக்க, இருசக்கர வாகனத்தில் வந்திறங்கியவனை பார்த்ததும் முணுமுணுப்புகள் வந்தது. மக்கள் நெருங்கி வந்தனர்.
“என்ன குறை இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க என் அதிகாரத்துக்கு உட்பட்டு முடிச்சி கொடுக்குறேன்.” என இன்முகமாக சொல்லி மனுக்களை பெற்றுக்கொண்டான்....
*3*
“நாளைக்கு லீவ்தானே இருந்துட்டு போகலாம்ல.” என்ற அபிராமியை வெறுமையாக பார்த்தாள் செண்பகா. பரந்தூரில் இருக்கும் புகுந்த வீட்டில் வந்து இறங்கியதும் விழுப்புரம் கிளம்புகிறேன் என்றவளை தடுத்து நிறுத்தி வாதம் புரிந்தார் அபிராமி.
“அவனும் இங்க வர்றது இல்லை நீயும் இல்லைனா எப்படி? இதுதான் உன் குடும்பம்.”
“எனக்கு மட்டும்தானா அத்தை?” உங்கள் மகனுக்கு மட்டும் இது குடும்பம்...
*13*
அழுகையுடன் சென்ற மனைவியின் பின் செல்லத்துடித்த கால்களை அவளை நோக்கி நகர்த்தவும்தான் குடும்பத்தினர் தங்களையே பார்த்து நின்றது புரிந்தது. அவர்கள் முன்னிலையிலா சண்டையிட்டோம் என சங்கடப்பட்டு அவன் நெற்றியைத் தேய்த்து, தொண்டை செருமி நிற்க, வேகமாக உள்ளே வந்தான் பிரபு.
“பால் காய்ச்சியாச்சா அண்ணே?” குரலிலும் உடல்மொழியிலும் அவசரம் தென்பட, உணர்வுப் பிடிகளிலிருந்து வெளிவந்த விமல்...
*15*
அன்று அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம். இரு நாட்களுக்கு நடைபெறுமென முன்னரே அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்திற்கு சென்றால் போதுமென்று பொறுமையாகதான் எழுந்தான் ரத்னதீபன். அவன் எழுவதற்காகவே காத்திருந்தது போல் மருதுவும் அபிராமியும் சொல்லிக்கொண்டு கிளம்ப, மனைவிக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்தவன் பெருமூச்சுடன் அன்றைய நாளை துவங்கினான்.
“என்னைய்யா யாரும் எதிர்பார்க்காத மாதிரி...
*14*
“திரும்பத் திரும்ப உங்க பேர் ஏன் அந்த ஹீரோயினோட வந்துட்டே இருக்கு. அதுவும் ஹோட்டல்ல, மால்ல இருக்குற மாதிரி போட்டோஸ் எல்லாம் வருது? எப்போ பாத்தீங்க அவங்களை? ஏன் எங்கிட்ட சொல்லல?” என வரிசையாக கேள்விகள் எழுப்பினாள் செண்பகா.
நடுஇரவு தாண்டி அப்போதுதான் வீடு வந்திருந்த ரத்னதீபன் பயங்கர சோர்வாய் இருந்தான். அன்றைக்கு என பார்த்து...
*16*
“அவருக்கு நான் இங்க இருக்குற விஷயத்தை எதுக்கு நீ சொன்ன?” தங்கை அழைக்கிறாள் என ஆர்வமுடன் அழைப்பை ஏற்றவன் செவி அடைந்தது அவளது வசவு.
அலைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் செவிக்கு கொடுத்த வளவன், “என்ன பாப்பா? ஏன் இவ்ளோ சூடா இருக்க? சாப்பிட்டியா?”
“உன் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டதுக்கு அது ஒன்னுதான் குறைச்சல் இப்போ.” அவளின்...
*17*
ஆடி முடிந்த மறு முகூர்த்த நாளில் அந்த திருமண வீடே பரபரப்பாய் இருந்தது. பிரபலங்களும் கட்சிக்காரர்களும் தொழிலதிபர்களும் வந்தவண்ணம் இருக்க, அந்த மாபெரும் மண்டபம் கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது. எங்கு திரும்பினும் பளிச்சிடும் விளக்குகளும் அதற்கு தோதாய் பட்டுகளில் வலம் வரும் பெரிய தலைகளும் என பகட்டு வெளிப்பட்ட அவ்விடத்தை பார்வையிட்டுக்கொண்டே பிரபுவுடன் உள்நுழைந்தவன் தங்கள்...
*18*
எண்பதுகளில் பண்ணையாராக இருந்த ஒருவர் பள்ளி கட்ட தானமாக கொடுத்த இடத்தை இப்போது அரசியல் பிரமுகர் ஒருவர் அபகரித்து அதில் இருந்த பள்ளியை இடித்துவிட்டு சொகுசு விடுதி கட்ட ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். தர்மத்திற்காக கொடுத்த நிலத்தில் வணிக நோக்கத்துடன் கட்டப்படும் விடுதியை அனுமதிக்கமாட்டோம் என நிலம் கொடுத்தவரின் வாரிசுகள் எதிர்க்கின்றனர். நகரத்திற்கு வெளியே பஞ்சாயத்து...