செங்கோலும் செண்பகப்பூவும்
*13*
அழுகையுடன் சென்ற மனைவியின் பின் செல்லத்துடித்த கால்களை அவளை நோக்கி நகர்த்தவும்தான் குடும்பத்தினர் தங்களையே பார்த்து நின்றது புரிந்தது. அவர்கள் முன்னிலையிலா சண்டையிட்டோம் என சங்கடப்பட்டு அவன் நெற்றியைத் தேய்த்து, தொண்டை செருமி நிற்க, வேகமாக உள்ளே வந்தான் பிரபு.
“பால் காய்ச்சியாச்சா அண்ணே?” குரலிலும் உடல்மொழியிலும் அவசரம் தென்பட, உணர்வுப் பிடிகளிலிருந்து வெளிவந்த விமல்...
*12*
அடர்நிறச் சேலையுடத்தி ஆர்வமும் படபடப்புமாய் நின்றவளிடம் பேசத் துடித்த மனதை அடக்கிக்கொண்டு சுற்றத்தினரை பார்த்தான் ரத்னதீபன். ஜாதகங்கள் பரிமாறிக்கொண்டு ஒத்துப்போகிறது என்று இருக்குடும்பங்களும் பேசி இன்று பெண் பார்க்கும் வைபவம் நடக்கிறது. பெண்ணை பெயருக்கு காட்டி உள்ளே அனுப்பிவிட்டு இங்கு தங்களின் குடும்பப் பின்னணி குறித்து பேசிக்கொண்டிருந்தனர் பெரியவர்கள்.
அவன் அருகில் அமர்ந்திருந்த விமல் லேசாக...
*10*
இரண்டு பயணப் பைகளில் தனக்குத் தேவையானதை அடைத்து வைத்திருந்தாள் செண்பகா. தங்கள் கடையிலிருந்து அவள் புழங்கத் தேவையான அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டான் வளவன்.
“எதுக்குண்ணா இவ்ளோ? அங்க போய் வாங்கிக்கலாம்ல.” பையின் கொள்ளளவை மீறி அங்குமிங்கும் இறுக்கமாய் இழுத்துக் கட்டப்பட்டிருந்த பையின் மேல் நுனியை லேசாக பிரித்துப்பார்த்தவள் அதில் குளிக்கத் தேவையான பக்கெட், மக்...
*9*
“சென்னைக்கு வேலை மாத்திட்டாங்களாமே. நல்லதா போச்சு. ரத்தினமும் வீடு பாத்துட்டான், அடுத்த வாரத்துல நல்ல நாள் இருக்கு அன்னைக்கே பால் காய்ச்சி குடி போய்டுங்க. இப்போ விட்டா ஆடி வந்துடும். அங்கிருந்தே நீ வேலைக்கு போய்க்கலாம். கல்யாணத்தப்போ உனக்கு வாங்கிக்கொடுத்த சீர் வரிசை சாமான் எல்லாம் மேல தான கடக்கு அதை எடுத்துக்கலாம். மத்த...
*8*
விழுப்புரம் இரயில் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகமாவதை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த ரத்னதீபனிடம் வந்த பிரபுவின் கையில் சுடச்சுட பாதாம் பாலும் டீயும் இருந்தது. ஆவி பறக்கும் பாதாம் பாலை வாங்கி ஒரு மிடறு உள்ளே இறக்கிய ரத்னதீபன், “அந்த டீயை எப்படிடா குடிக்குற? சக்கரை தண்ணி மாதிரி இருக்கு.” முகம் சுழிக்க,
“புலி பசிச்சாலும்...
*7*
மதிய உணவு நேரம் முடிந்தும் சில நிமிடங்கள் வெறுமெனக் கடக்க, கடுப்பான மேலாளர், “இன்னும் எவ்ளோ நேரம் சார்? ரெபியூட்டட் பொஷிஷன்ல இருக்கோம் எங்களையே இவ்ளோ நேரம் காக்க வைக்குறீங்க? இந்த அம்மாதான் பொய் கேஸ் கொடுத்தா நீங்களும் உங்க பங்குக்கு எங்களை காக்க வச்சி அவமானப்படுத்துறீங்க.” என்று பொங்கினார்.
“நாங்க என்ன சார் பண்ண...
*6*
சமைத்து வைத்திருந்த காலை உணவை அமைதியாக உண்டு முடித்தவள் நிதி நிறுவனத்திற்குச் செல்ல ஆயத்தமானாள். அமுதா அவளை பார்ப்பதும் ஏதோ வேலை செய்வதுமாய் இருந்தார். மகனின் திருமணம் தள்ளிப்போகிறது என பேசியதிலிருந்து ஒதுக்கம் காட்டும் மகளை காணக் காண உள்ளம் வெதும்பியது. மகளின் மனது இளகிவிடாதா என்ற எதிர்பார்ப்பில் அவர் எய்த அம்பு அதன்...
*5*
“என்னங்க ஏதோ யோசனைல இருக்குற மாதிரி இருக்கு?” கடையிலிருந்து வந்ததிலிருந்து சிந்தனை வயப்பட்டிருக்கும் கணவரை பார்த்துக் கேட்டார் அமுதா.
“இதை சொல்லக்கூடாதுதான் ஆனா… வளவன் கல்யாணம் பாப்பாவால தள்ளிப்போகுதோனு தோணுது அமுதா.” கவலையுடன் வையாபுரி சொல்ல, பெற்றவள் மனது பதைபதைத்தது.
“பாப்பா கல்யாணம் முடிஞ்சதுலேந்து வளவனுக்கு பாக்குறோம். எதுவும் தகைஞ்சி வரமாட்டேங்குதேன்னு யோசனையாவே இருந்துது. இன்னைக்கு நாம...
*4*
கோடைக்கேற்ற கேப்பங்கூழ் குடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே அவனது அலுவலகத்திற்குச் சென்றான். கோரிக்கை மனு கொடுக்கவென ஆங்காங்கு மக்கள் நின்றுகொண்டிருக்க, இருசக்கர வாகனத்தில் வந்திறங்கியவனை பார்த்ததும் முணுமுணுப்புகள் வந்தது. மக்கள் நெருங்கி வந்தனர்.
“என்ன குறை இருந்தாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க என் அதிகாரத்துக்கு உட்பட்டு முடிச்சி கொடுக்குறேன்.” என இன்முகமாக சொல்லி மனுக்களை பெற்றுக்கொண்டான்....
*3*
“நாளைக்கு லீவ்தானே இருந்துட்டு போகலாம்ல.” என்ற அபிராமியை வெறுமையாக பார்த்தாள் செண்பகா. பரந்தூரில் இருக்கும் புகுந்த வீட்டில் வந்து இறங்கியதும் விழுப்புரம் கிளம்புகிறேன் என்றவளை தடுத்து நிறுத்தி வாதம் புரிந்தார் அபிராமி.
“அவனும் இங்க வர்றது இல்லை நீயும் இல்லைனா எப்படி? இதுதான் உன் குடும்பம்.”
“எனக்கு மட்டும்தானா அத்தை?” உங்கள் மகனுக்கு மட்டும் இது குடும்பம்...
‘என் பேருக்கு என்ட்ரி பாஸ் போட்டு அனுப்பத் தெரியுது. கண்ணுக்கு முன்ன இவ்ளோ பெரிய உருவம் இருக்கிறது தெரியலையமாம். போடா போடா நீ பாக்காட்டி நிம்மதிதான் எனக்கு.’ என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள் செண்பகா.
“வீட்டுக்கு வாப்பா ரத்தினம். எவ்ளோ நாளாச்சு நீ அங்க வந்து.” மகனிடம் முறையிட்ட அபிராமியின் வருத்தம் அவர் குரலிலேயே தெரிந்தது.
“இங்க...
*2*
“ம. ரத்னதீபன் எனும் நான்…” என ஆளுநர் முன்னிலையில் கணீரென துவங்கியவன் இந்திய அரசியல் அமைப்பின்பால் அறுதியிட்டு உறுதிமொழி ஏற்று மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டான். உறுதிமொழி வாசித்ததும் கையொப்பமிட ஆவணங்கள் நீட்டப்பட பிறக்கத் துடித்த வெற்றிப் புன்னகையை இருக்கும் இடம் கருதி அடக்கியவன் அரசியல் மரபுகள் வழி அனைத்தையும் முடித்து அவையில் கூடியிருந்தவர்களுக்கு...
*1*
வாட்டி வதக்கிய வெயிலை தணிக்க எழும்பிய நிலவின் ஒளி அந்த இருளை விரட்ட போதாதென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பதாகையை பார்த்தவன் முகத்தில் அதிருப்தி எழுந்தது, “என்னடா இது?” என அருகில் இருப்பவனை உக்கிரத்துடன் பார்க்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என தலையை சொரிந்தபடி,
“என்ன அண்ணே? எல்லாம் நீங்க...