அன்பரே... அன்பரே!
"வெற்றி அந்த கஸ்டமரை கவனி, அந்தப்புள்ள நேத்து தான் புதுசா சேர்ந்திருக்கு, அதுக்கு அவங்க கேட்டது தெரியல பாரு.... முழிக்குது....நீ போய் என்னன்னு விசாரி...." என்று வெற்றியை அனுப்பி விட்டு பில் போடும் இடத்தில் அமர்ந்தார் சுந்தரம்.சொன்னது போலவே கண்மணி பதினொரு மணி போல கடைக்கு வர,
"என்ன சித்தப்பா இந்நேரம் இங்க உட்கார்த்திருக்கீங்க?"
"இன்னைக்கு...
ஒரு வருடத்திற்குப் பிறகு,
"தேனு அப்பா கிளம்பிட்டேன் டா. இன்னைக்கு பசங்க வருவாங்களா?"
"ஆமாப்பா... மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடுங்க" என்று அடுப்படியிலிருந்து அவள் குரல் கொடுக்க,
"சரி டா... சரணோட சித்தப்பா வருவாரு அவர்கிட்ட அவங்க வீட்டு சாவி கொடுத்திடு"
"ம்ம்...சியாமளா அத்தை எப்போ வராங்கப்பா?"
"அடுத்த மாசம்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி ஒருமுறை சரண் வருவான். வீட்ல கொஞ்சம்...
வாசலை நோக்கி நடந்து வந்தவள் அங்கிருந்தவனை பார்க்கவும் மனது படபடக்க, ' அவங்களா? இருக்காது...' என்று மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக்கொண்டே மேலும் நெருங்கிட, அவனோ தலையை கோதியவாறு திரும்பினான்.
அவன் தானா? அவனா? என்று அவனின் கண் பார்த்து கேட்டவள், அவனின் கூற்பார்வை 'அது நான் தான்' என்று சொல்ல, அவளின் கை நீண்டது அவனை...
படுக்கையில் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்த இரட்டையர்கள், கனியின் கைபேசி இசையில் கலைந்து அதை, கனி எடுப்பதற்குள் தேன் கையில் எடுத்துவிட்டாள்.
"கனி நிலன் அத்தான்" என்று கண்கள் விரிய சொன்னவள், "நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. அவரு கண்டுபிடிக்கிறாரானு பார்ப்போம். ரெண்டு வருஷ காதல்ல" என்றவள் அவளுக்குச் செய்கையாக வாயில்...
தனது கைபேசியில் இருந்து தேன்மொழிக்கு அழைக்க, சாதாரண சுடிதாருக்கு மாறியவள் அவனின் அழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய அதனை எடுக்கவில்லை. அவளின் அலைபேசி திரையில் அவனின் பெயர், "ருத்ரன் காலிங்" என்று மிளிர, அழைப்பு நிற்கும் தருவாயில் அதனை ஏற்றிருந்தாள்.
"மொழி...."
"சொல்லுங்க அத்தான்"
அவளின் அத்தான் என்ற அழைப்பே அவனை காக்க வைத்ததை மறக்கடிக்க போதுமானதாக இருந்தது.
மென்னகையுடன்,...
வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய பொழுதைக் கழித்து இரவில் கூடியிருக்க, "கனி, தேனு எங்க?" என்றார் சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தவாறு.
"அப்பா அவ சித்ராவை வீட்டுல விட போயிருக்கா. இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நீங்க வாங்க சாப்பிட, எல்லாம் ரெடி பண்ணிட்டேன்."
"ஒன்பது மணி வரையா பாடம்...
"ஆமாங்க சம்பந்தி, நல்ல பெரிய மண்டபம் தான். மெயின் ரோட்டிலேயே இருக்கு, கார் பார்க்கிங் விசாலமா இருக்கும்.ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல ஹோட்டல் இருக்கு. அங்க ரூமுக்கும் பேசிட்டேன். பக்கத்துல இருக்கிறது தான் தோது பாருங்க" என்று இன்னும் பல தகவல்களை பகிர்ந்துவிட்டு, கலந்தாலோசித்து...
மும்பையில் வெங்கடேசன் தேவிகாவிடம், "இன்னைக்கு மாப்பிள்ளை பேசினாரு தேவி..."
"எந்த மாப்பிள்ளை?"
"சுந்தரம்"
"ஹ்ம்ம்..." என்று வேண்டாவெறுப்பாக கட்டிலில் இருந்த துணியை மடித்து வைத்துக்கொண்டே கேட்டார்.
மனைவியின் மனச்சுனக்கம் எதனால் என்று அறிந்தவராதலால் தான் சொல்லும் செய்தி நிச்சியம் அவரை சமாதானப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், "அது தேவி, நம்ம ருத்ரனுக்கு தேன்மொழியை"
"ஓ! மூனு வருஷம் கழிச்சு தான்...
சுந்தரம் வீட்டின் நடுகூடம் சொந்தபந்தங்களால் நிரம்பி இருந்தது. தேவிகா பெண்களுடன் கீழே அமர்ந்திருக்க, மற்றொரு புறம் ஜமுக்காளம் விரித்து தாம்பூலங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி ஊர் பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு பின்னால் சுவரை ஒட்டி சில நாற்காலிகள்...
ருத்ரன் பணிக்குச் சென்று ஒரு மாத காலம் முடிந்திருந்தது. கனிமொழி, நிலன் தம்பதிகள் ருத்ரன் சென்ற ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா பயணப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று சேர்ந்து, கனிமொழிக்கு அங்கு அனைத்தும் பரிச்சியம் ஆக நாட்கள் பிடித்தது. தினமும் தேனுவும் கனியும் பேசிக்கொள்வார்கள். கனியும் இப்போது பணிக்கு திரும்பிவிட,...
நாட்கள் நகர்ந்தோட, கனி நிலனின் திருமண பத்திரிக்கை அடித்து வந்தாயிற்று, இன்னும் இரு மாதங்கள் தான் இருந்தது திருமணத்திற்கு. ஒரு நல்ல நாளில் குலதெய்வ கோவிலில் பத்திரிக்கை வைத்து கும்பிட்டு வந்திருந்தார்கள்.
"கனி லீவ் எல்லாம் சொல்லிட்டியா?" கண்மணி விசாரிக்க,
"ம்ம் சொல்லிட்டேன் அக்கா, விசா இன்டர்வியூ அடுத்த மாசம், விசா வந்ததும் ரெண்டு பேருக்கும் சேர்த்து...
கனியின் தோழியுடன் சென்றவள், குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கவும், விடாமல் அழுதுக் கொண்டே இருந்தது. ஆகையால் அவர்களுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவளும் சென்று வந்தாள். அவர்கள் திரும்பும் பொழுது, நேரம் பத்தை நெருங்கிவிட்டது. மருத்துவமனைக்கு செல்லும் போது தந்தைக்கு அழைத்துச் சொல்லியிருந்தாள். அதன் பின் அவர் தொடர்பு...
அன்றைய சமையலுக்கு உதவியவள், வேலைகளை முடித்துக் கொண்டு வர, கனிமொழி கைகளுக்கு மருதாணி இட்டு முடித்திருந்தாள்.
தேன் சமையலை முடித்துக் கைகளை தனது துப்பட்டாவில் துடைத்தவாறு வந்தவள் கண்டது ருத்ரனின் பெற்றோர்களை. அவர்களைக் கண்டதும் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நிற்க, "வணக்கம் அண்ணி!" என்று சர்வேஷின் குரலில் தன்னை மீட்டு,
"வா...வாங்க... வாங்க அத்தை.வாங்க...
அன்றைய இரவு வழமைப் போல அப்பாவுக்குச் சாப்பாடு கொடுத்து, அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வர,சுந்தரம் உறங்காமல் சோஃபாவில் அமர்ந்திருந்தார்.
"தூங்க போகலையாப்பா?"
"இல்ல டா, வா உக்காரு..."
"என்னப்பா? ஏதாவது பேசணுமா? கனி எதுவும் சொன்னாளா?" என்று வேகமாக வினவினாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல தேனு. உன்கிட்ட தான் பேசணும். உனக்கு..." என்று சற்று தயங்கியவர்,...
மாதங்கள் உருண்டோடியிருக்க எட்டு மாதங்கள் கடந்திருந்தது. எல்லையில் பதற்றம் நிலவுவதால், ருத்ரனால் வர இயலவில்லை. எண்ணி ஐந்து முறை தான் தேன்மொழியோடு பேசியிருப்பான் இந்த எட்டு மாதத்தில். அவன் பேசிய நிமிடங்கள் யாவையும் பொக்கிஷமாய்த் தன் மனதினுள் செதுக்கிக்கொண்டாள் தேன்மொழி. பேச்சுக்கள் அதிகம் இல்லையென்றாலும், அவனுடனான நெருக்கம் அதிகமாகியிருந்தது.
ஆயிரமாயிரம் கற்பனை பொழுதுகள் அவளுக்குள். எல்லாம்...
கனியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. சுந்தரமும், தேன்மொழியும் பம்பரமாகச் சுழன்றார்கள் என்றால், கண்மணியும், வேணுகோபாலும் தம்பதி சகிதமாய் உறுதுணையாகச் செயல்பட்டனர்.
"தேனு மா... மாப்பிள்ளை பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பால் பழம் கொடுக்கணும். நீ கண்மணியையும் கூட்டிக்கிட்டு அவங்களோட போ. அப்பா மண்டபம் செட்டில் பண்ணிட்டு வரேன் டா" என்று தேன்மொழியை அனுப்பி...
மருத்துவமனையிலிருந்து வீடு வந்து ஒரு வாரக்காலம் கடந்திருந்தது. தேன்மொழி இரண்டு வார விடுப்பு எடுத்து இருந்தாள். கல்லூரி முதல்வருமே உடல்நிலை சீரானதும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவள் இல்லையென்றால் கல்லூரிக்கு கெட்ட பெயர் வந்திருக்குமே.
இவள் விரைந்து செயல்பட்டதால் தான் இரு மாணவிகளும் உயிர் பிழைத்திருந்தார்கள். அவள்...
இருவரின் கண்களும் சந்தித்துக் கொள்ள, "ஒழுங்கா குடு" என்றான் அவள் செய்த அழிச்சாட்டியத்தில் தோன்றிய சிரிப்பை உள்ளடக்கி.
"என்ன அத்தாச்சி சப்போர்டுக்கு ஆளா?" என்று அவளிடம் சொன்னவள், அவனை பார்த்து, "எங்க அத்தாச்சியை நாங்களே பத்திரமா பார்த்துப்போம்" என்றாள் அவளுக்கு உணவை ஊட்டி விட்டுக்கொண்டே.
அவன் சிரிப்பை மீசைக்குள் மறைத்து அழகாக தலையசைத்தான்.
"நீங்க சாப்பிடலையா?" அவனை விசாரித்தாள்...
மாதங்கள் இரண்டு கடந்திருந்தது. கனிமொழி தன் குழந்தையின் மொட்டைக்காக அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாகக் கூறியிருந்தாள்.
இந்த இரண்டு மாதத்தில் சுந்தரம் தான் ஓய்ந்துப் போயிருந்தார். அவர் மனதில் எதையோ நினைத்து மறுகுகிறார் என்பது வரை மட்டும் புரிந்திருந்தது தேன்மொழிக்கு. தந்தையை உற்று கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.கனியிடம் இதைப் பற்றி சொல்லவில்லை.
கண்மணியிடம் கேட்டிருக்க,...