அன்பரே... அன்பரே!
ருத்ரன் பணிக்குச் சென்று ஒரு மாத காலம் முடிந்திருந்தது. கனிமொழி, நிலன் தம்பதிகள் ருத்ரன் சென்ற ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா பயணப்பட்டனர். அவர்கள் அங்கு சென்று சேர்ந்து, கனிமொழிக்கு அங்கு அனைத்தும் பரிச்சியம் ஆக நாட்கள் பிடித்தது. தினமும் தேனுவும் கனியும் பேசிக்கொள்வார்கள். கனியும் இப்போது பணிக்கு திரும்பிவிட,...
தனது கைபேசியில் இருந்து தேன்மொழிக்கு அழைக்க, சாதாரண சுடிதாருக்கு மாறியவள் அவனின் அழைப்பை பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய அதனை எடுக்கவில்லை. அவளின் அலைபேசி திரையில் அவனின் பெயர், "ருத்ரன் காலிங்" என்று மிளிர, அழைப்பு நிற்கும் தருவாயில் அதனை ஏற்றிருந்தாள்.
"மொழி...."
"சொல்லுங்க அத்தான்"
அவளின் அத்தான் என்ற அழைப்பே அவனை காக்க வைத்ததை மறக்கடிக்க போதுமானதாக இருந்தது.
மென்னகையுடன்,...
சுந்தரம் வீட்டின் நடுகூடம் சொந்தபந்தங்களால் நிரம்பி இருந்தது. தேவிகா பெண்களுடன் கீழே அமர்ந்திருக்க, மற்றொரு புறம் ஜமுக்காளம் விரித்து தாம்பூலங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி ஊர் பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு பின்னால் சுவரை ஒட்டி சில நாற்காலிகள்...
வாசலை நோக்கி நடந்து வந்தவள் அங்கிருந்தவனை பார்க்கவும் மனது படபடக்க, ' அவங்களா? இருக்காது...' என்று மனதுக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக்கொண்டே மேலும் நெருங்கிட, அவனோ தலையை கோதியவாறு திரும்பினான்.
அவன் தானா? அவனா? என்று அவனின் கண் பார்த்து கேட்டவள், அவனின் கூற்பார்வை 'அது நான் தான்' என்று சொல்ல, அவளின் கை நீண்டது அவனை...
கனியின் தோழியுடன் சென்றவள், குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கவும், விடாமல் அழுதுக் கொண்டே இருந்தது. ஆகையால் அவர்களுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவளும் சென்று வந்தாள். அவர்கள் திரும்பும் பொழுது, நேரம் பத்தை நெருங்கிவிட்டது. மருத்துவமனைக்கு செல்லும் போது தந்தைக்கு அழைத்துச் சொல்லியிருந்தாள். அதன் பின் அவர் தொடர்பு...
கனியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. சுந்தரமும், தேன்மொழியும் பம்பரமாகச் சுழன்றார்கள் என்றால், கண்மணியும், வேணுகோபாலும் தம்பதி சகிதமாய் உறுதுணையாகச் செயல்பட்டனர்.
"தேனு மா... மாப்பிள்ளை பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பால் பழம் கொடுக்கணும். நீ கண்மணியையும் கூட்டிக்கிட்டு அவங்களோட போ. அப்பா மண்டபம் செட்டில் பண்ணிட்டு வரேன் டா" என்று தேன்மொழியை அனுப்பி...
அன்றைய சமையலுக்கு உதவியவள், வேலைகளை முடித்துக் கொண்டு வர, கனிமொழி கைகளுக்கு மருதாணி இட்டு முடித்திருந்தாள்.
தேன் சமையலை முடித்துக் கைகளை தனது துப்பட்டாவில் துடைத்தவாறு வந்தவள் கண்டது ருத்ரனின் பெற்றோர்களை. அவர்களைக் கண்டதும் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நிற்க, "வணக்கம் அண்ணி!" என்று சர்வேஷின் குரலில் தன்னை மீட்டு,
"வா...வாங்க... வாங்க அத்தை.வாங்க...
"ருத்ரா... நீ லீவ் கேட்டிருந்தியே.கிடைச்சிருக்கு டா.கர்னல் கூப்பிடுறாறு.போய் பேசு போ"
நண்பன் சொன்ன செய்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சி ருத்ரனிற்கு. இப்போது தான் எல்லையில் மீண்டும் அமைதி நிலவ தொடங்கியிருந்தது. விடுமுறை கிடைப்பது கஷ்டம் என்று அவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவனுக்கு கேட்பதற்கு கூட மனம் வராமல் இருக்க, வெங்கடேசன் தான் மகனுக்கு விடாது அழைத்து,...
நாட்கள் நகர்ந்தோட, கனி நிலனின் திருமண பத்திரிக்கை அடித்து வந்தாயிற்று, இன்னும் இரு மாதங்கள் தான் இருந்தது திருமணத்திற்கு. ஒரு நல்ல நாளில் குலதெய்வ கோவிலில் பத்திரிக்கை வைத்து கும்பிட்டு வந்திருந்தார்கள்.
"கனி லீவ் எல்லாம் சொல்லிட்டியா?" கண்மணி விசாரிக்க,
"ம்ம் சொல்லிட்டேன் அக்கா, விசா இன்டர்வியூ அடுத்த மாசம், விசா வந்ததும் ரெண்டு பேருக்கும் சேர்த்து...
"ஆமாங்க சம்பந்தி, நல்ல பெரிய மண்டபம் தான். மெயின் ரோட்டிலேயே இருக்கு, கார் பார்க்கிங் விசாலமா இருக்கும்.ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல ஹோட்டல் இருக்கு. அங்க ரூமுக்கும் பேசிட்டேன். பக்கத்துல இருக்கிறது தான் தோது பாருங்க" என்று இன்னும் பல தகவல்களை பகிர்ந்துவிட்டு, கலந்தாலோசித்து...
மும்பையில் வெங்கடேசன் தேவிகாவிடம், "இன்னைக்கு மாப்பிள்ளை பேசினாரு தேவி..."
"எந்த மாப்பிள்ளை?"
"சுந்தரம்"
"ஹ்ம்ம்..." என்று வேண்டாவெறுப்பாக கட்டிலில் இருந்த துணியை மடித்து வைத்துக்கொண்டே கேட்டார்.
மனைவியின் மனச்சுனக்கம் எதனால் என்று அறிந்தவராதலால் தான் சொல்லும் செய்தி நிச்சியம் அவரை சமாதானப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், "அது தேவி, நம்ம ருத்ரனுக்கு தேன்மொழியை"
"ஓ! மூனு வருஷம் கழிச்சு தான்...
இருவரின் கண்களும் சந்தித்துக் கொள்ள, "ஒழுங்கா குடு" என்றான் அவள் செய்த அழிச்சாட்டியத்தில் தோன்றிய சிரிப்பை உள்ளடக்கி.
"என்ன அத்தாச்சி சப்போர்டுக்கு ஆளா?" என்று அவளிடம் சொன்னவள், அவனை பார்த்து, "எங்க அத்தாச்சியை நாங்களே பத்திரமா பார்த்துப்போம்" என்றாள் அவளுக்கு உணவை ஊட்டி விட்டுக்கொண்டே.
அவன் சிரிப்பை மீசைக்குள் மறைத்து அழகாக தலையசைத்தான்.
"நீங்க சாப்பிடலையா?" அவனை விசாரித்தாள்...
படுக்கையில் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்த இரட்டையர்கள், கனியின் கைபேசி இசையில் கலைந்து அதை, கனி எடுப்பதற்குள் தேன் கையில் எடுத்துவிட்டாள்.
"கனி நிலன் அத்தான்" என்று கண்கள் விரிய சொன்னவள், "நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. அவரு கண்டுபிடிக்கிறாரானு பார்ப்போம். ரெண்டு வருஷ காதல்ல" என்றவள் அவளுக்குச் செய்கையாக வாயில்...
வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய பொழுதைக் கழித்து இரவில் கூடியிருக்க, "கனி, தேனு எங்க?" என்றார் சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தவாறு.
"அப்பா அவ சித்ராவை வீட்டுல விட போயிருக்கா. இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நீங்க வாங்க சாப்பிட, எல்லாம் ரெடி பண்ணிட்டேன்."
"ஒன்பது மணி வரையா பாடம்...
"வெற்றி அந்த கஸ்டமரை கவனி, அந்தப்புள்ள நேத்து தான் புதுசா சேர்ந்திருக்கு, அதுக்கு அவங்க கேட்டது தெரியல பாரு.... முழிக்குது....நீ போய் என்னன்னு விசாரி...." என்று வெற்றியை அனுப்பி விட்டு பில் போடும் இடத்தில் அமர்ந்தார் சுந்தரம்.சொன்னது போலவே கண்மணி பதினொரு மணி போல கடைக்கு வர,
"என்ன சித்தப்பா இந்நேரம் இங்க உட்கார்த்திருக்கீங்க?"
"இன்னைக்கு...
"இதோட இன்னைக்கு முடிச்சுக்கலாம்... அசைன்மென்ட் சப்மிட் பண்ண மன்டே தான் லாஸ்ட் டேட்... முடியாதுனு நினைக்கிறவங்க இப்பவே என்கிட்ட சொல்லிடுங்க... கடைசி நிமிஷத்துல வந்து.... மேம்... அது... மேம் இதுனு நிக்க கூடாது.... இதுவும் இன்டர்னல் மார்க்குக்கு இங்கிளுட் ஆகும்... நினைவு வைச்சு செஞ்சிட்டு வாங்க...." என்று தேன்மொழி சொல்லி முடிக்க வகுப்பு முடிந்ததற்கான...
சுந்தரம் குளிக்கச் செல்லவும், கடையில் வேலை செய்யும் வெற்றி கடை சாவி வாங்கிக்கொண்டு செல்ல, உள்ளே வந்தார் கண்மணி.
"ஹே கனி.... எப்படி டி இருக்க? தேனு காலேஜ் போயாச்சா?... சித்தப்பா கிளம்பிட்டாங்களா?" என்று ஒரு தூக்குச் சட்டியை அவளிடம் கொடுத்து, "உளுந்து பால் செஞ்சேன்.... குடி..."...
மதுரை மாவட்டத்தின் மேலூர் ஊராட்சியின் அமைந்துள்ள அரிட்டாபட்டி கிராமத்தைப் பூர்விகமாக கொண்டவர் தான் சுந்தரம். அவர் அதே ஊரைச் சேர்ந்த அய்யாகண்ணு, தாயம்மாள் அவர்களின் கடைசி புதல்வி வேதமீனாட்சியை மணந்துக் கொண்டார். சுந்தரத்தின் குடும்பம் விவசாயத்தை நம்பி இருந்தது. சுந்தரம்...
வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளவில்லை,
கண்களால் களவாடிய பொழுதுகளில்லை,
ஸ்பரிசங்கள் தீண்டிக்கொள்ளவில்லை,
எனினும்,
உன் பேச்சும்,
உன் குரலும்,
உன் அருகாமையும்,
அன்றும், இன்றும், என்றும்
நினைவுகளாக என்னை தழுவிக்கொள்ள
"தேனு, ட்யூசனுக்குப் பிள்ளைங்க வந்துட்டாங்க பாரு…" அப்பாவின் குரலைக் கேட்டதும், எழுதிக்கொண்டிருந்த நோட்புக்கைச் சட்டென்று மூடி மேஜையில் இருந்த டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியைத் தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். "ஹான்… வந்துட்டேன் ப்பா…" என்று சொல்லிக்கொண்டே, தன்னை ஒருமுறை...