“அண்ணா ரொம்ப தூரம் வந்துட்டோம்..!!” என்றாள். நடையை நிறுத்தியவன் திரும்பிப் பார்க்க,
“ஆமால்ல..!பேசிட்டே இவ்வளவு தூரம் வந்துட்டோம். சரி திரும்பப் போவோமா? உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஜாகிங் சென்று திரும்பி வந்து கொண்டிருந்த விஜய் கண்ணில் பட்டான்.
“இவர் எங்க இங்க?” என்றாள்.
“அதோ..! அந்த பார்க்கு உள்ள தான் ஜாகிங் போவான்,!” என்றவன், அவனை நோக்கி கையசைக்க,
“நாங்க பேசுனதுல என்ன கேட்ட?” என்றான் முக்கியமான சந்தேகமாய்.
“எனக்கு இது தான் வேலையா? நீங்க என்ன பேசுனா எனக்கென்ன?” என்றான் விஜய்.
“சரண் அண்ணா ! எனக்கு பசிக்குது” என்றாள் வேதா.
“இதுக்குத்தான் அப்பவே டீ குடிச்சுட்டு வரலாம்னு சொன்னேன். எங்க கேட்ட நீ? பாரு எனக்கும் வயித்துக்குள்ள சத்தம் கேட்குது” என்ற சரண்,
“அங்க ஒரு டீக்கடை இருக்கு. ஒரு டீ குடிச்சுட்டு போவோமா?” என்றான்.
“ம்ம்..! டபுள் ஓகே..!” என்றாள்.
“மச்சான் உனக்கு?” என்று விஜய்யிடம் கேட்க,
“நோ..! மார்னிங் எப்பவும் காபி தான். நோ அவுட் சைட் புட்.” என்றான்.
“உன்னளவுக்கு என்னால சின்சியரா இருக்க முடியாது. நாங்க டீ குடிக்கிறோம். நீ வேடிக்கை பாரு?” என்றான்.
“ஒழுங்கா வீட்டுக்கு நடங்க..! இங்கல்லாம் அவ்வளவு ஹைஜீனிக்கா இருக்காது. ஏற்கனவே நேத்து தான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திருக்கிங்க” என்றான் பொதுப்படையாய். பார்வை அவளையும் பார்த்து வைத்தது.
“அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். எனக்கு வேணும் அண்ணா” என்றாள்.
“இல்ல வேதா..! விஜய் சொல்ற மாதிரி வீட்லயே போய் குடிச்சுக்கலாம் வா..” என்று நடக்கத் தொடங்கினான் சரண்.
‘இவன் ஹைஜீனிக்ல தீயை வைக்க..! ஒரு டீ குடிக்கிறதுல என்ன ஹைஜீனிக் வேண்டி கிடைக்கு? இன்னைக்குன்னு பார்த்து இப்படி பசிக்குதே..! நேத்து ஈவ்னிங்ல இருந்து ஒண்ணுமே நான் சாப்பிடலை. அகரன் வாங்கிட்டு வந்த இட்லியை கூட சாப்பிடலை.. பேசிப் பேசியே பசி எடுத்திருக்கும் எனக்கு. போற போக்கைப் பார்த்தா சிறுகுடலை, பெருங்குடல் தின்னுடும் போல’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.
விஜய் வேகமாக நடந்து கொண்டிருக்க, சரணும் அவனுக்கு ஈடு கொடுத்து நடந்து கொண்டிருந்தான். வேதாவின் நிலைதான் பரிதாபம். அவர்கள் வேகத்திற்கு நடக்க முடியாமல் மெதுவாக சென்று கொண்டிருந்தாள்.
சரணுக்கு போன் வரவும் அவன் பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தான். பார்த்தும் பார்க்காததும் போல், வேதாவைப் பார்த்து வைத்தான் விஜய். அவள் மெதுவாக வந்து கொண்டிருக்க, அவளையே பார்த்தவன் சற்று நிதானித்து வேகத்தைக் குறைத்து அவளுடன் நடந்தான்.
சட்டென்று நாசியில் ஏறிய அவனின் நறுமணத்தில், அப்போது தான் தன்னை ஒட்டி வந்து கொண்டிருந்த அவனை கவனித்தாள் வேதா.
‘இப்ப எதுக்கு இவ்வளவு பக்கத்துல நடக்குறாரு?ஆத்தா மகமாயி, எங்கயும் தடுமாறாம, விழுந்து வைக்காம வீடு போய் சேர்ந்திடனும் ஆத்தா. இல்லைன்னா, அதுக்கும் சேர்த்து கிளாஸ் எடுப்பார் புரொபசர்.’ என்று மனதிற்குள் நினைத்தவள், அதி கவனத்துடன் எட்டு வைத்தாள்.
அந்த காலை நேரக் காற்றும், அவளின் அருகாமையும் அவனுக்கு இனிமையாய் இருந்ததோ என்னவோ? தோள்கள் பட்டும் படாமல் உரசியதில், அவளுக்குள் மின்சாரம் பாய்ந்ததை போன்று உணர்வுகள் வெட்டி இழுக்க, படபடப்புடன் சற்று விலகி நடந்தாள்.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அவர்கள் கைபிடித்து இணைந்து நடந்து வருவதைப் போன்றே தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் மட்டுமே அந்த நூலளவு இடைவெளி தெரியும்.
போன் பேசி முடித்த சரண் அருகில் யாரையும் காணாமல் திரும்பிப் பார்க்க, இருவரும் இணைந்து நடந்து வருவதைப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்து போனது. கூடிய சீக்கிரம் இது உண்மையாகிடனும் என்று மனமார எண்ணியவன், அவர்களை கலைக்க விரும்பாமல், வராத போனை வந்தது போல் பேசிக் கொண்டே சென்றான்.
‘ரொம்ப தூரம் வந்துட்டோமா? இன்னும் வீடு வர மாட்டேங்குது?’ என்று புலம்பியவள்,
“அண்ணா..!கால் வலிக்குது” என்று கத்தினாள். சரணின் காதில் விழுந்தாலும், கவனிக்காதவன் போல் போனை காதில் வைத்திருக்க,
“யார்கிட்ட பேசுறான் இவ்வளவு நேரம்?” என்று முனங்கினாள்.
“என்னாச்சு?” என்றான் விஜய். குரலில் பதட்டம் இருந்ததோ, அதை மறைத்தானோ?
“இல்ல..! கால் கொஞ்சம் வலிக்குது அதான்” என்றாள் மெதுவான குரலில்.
ஆப்ரேஷன் செய்த கால் அவ்வப்போது வலிக்கத்தான் செய்தது அவளுக்கு. அதிலும் சேர்ந்தார் போல் நடந்தால் வலி எடுக்கும்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் பட்டென்று. அவனும் அவளை நேர் பார்வையாக பார்த்தவன்,
“கீர்த்தனா சொன்னா” என்றான் அவனும் பட்டென்று.
“ஹோ..!!” என்றவள் அவனைப் பார்த்துவிட்டு திரும்பி கொள்ள,
“நடந்தா வலிக்குதுன்னு தெரியுதுல்ல? அப்பறம் ஏன் நடக்குற?” என்றான்.
“அதுக்காக நடக்காமையே இருக்க முடியுமா?” என்றாள்.
“நடக்கக் கூடாதுன்னு இல்லை.! அது டெய்லி ப்ராக்டிசா இருக்கணும். இப்படி என்னைக்கோ ஒரு நாள் ஓவரா நடக்கக் கூடாது. ஓவரா ஸ்ட்ரெயின் பண்ணா, பெயின் ஆகும்ல” என்றான்.
“ம்ம்ம்” என்றாள்.
“இன்னும் பைவ் மினிட்ஸ் தான். வீடு வந்திடும்” என்றான்.
“ம்ம்..!” என்றாள்.
அந்த ஐந்து நிமிடம் அமைதியாய் கழிய,
“சாரி சார்..!!” என்றாள் திடுமென்று.
“எதுக்கு?” என்றான்.
“இல்ல, நேத்து எங்களுக்காக சமைச்சு குடுத்திங்க. நான் ஏதோ டென்ஷன்ல கண்டவங்க அப்படி இப்படின்னு பேசிட்டேன். ஏன் அப்படி ரியாக்ட் பண்ணேன்னு தெரியலை.எப்படின்னாலும் அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணியிருக்கக் கூடாது. ஐம் சாரி..” என்றாள்.
‘ஹப்பா..! ஒரு வழியா சொல்லி முடிச்சுட்டேன். இவர்கிட்ட மட்டும் தான் நாலு வார்த்தை சேர்ந்தாப்படி பேசுனா நாக்குத் தள்ளுது..’ என்று நினைத்துக் கொண்டாள்.
“என்ன திடீர்ன்னு ஞான உதயம்?” என்றான்.
“இல்ல..! என்ன இருந்தாலும் நீங்க கீர்த்தனா அண்ணியோட அண்ணா. சரண் அண்ணாவோட பிரண்ட். எனக்கும் அண்ணன் மாதிரி வேற. அப்படி பேசுனது தப்புத் தான?” என்றாள். இதழ்கடித்த சிரிப்புடன் பாவமாய் அவள் நிற்க,
‘அண்ணன் மாதிரியா?’ என்று உள்ளுக்குள் எகிறியவன், பல்லைக் கடித்தவன்,
“லுக்..! அல்ரெடி ஐ டோல்ட் யு. டோன்ட் கால் மீ அண்ணா.” என்று எரிச்சலுடன் சொன்னவன்,