மழைவர பூமி மறுத்திடுமா?
ஆனால், பிள்ளைகளின் சேட்டைகள் கூடக்கூட, வேதிகாவின் வாய்ப்பூட்டு மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அவன் வீட்டிலிருக்கும் நேரத்திலும் சின்னவர்கள் எதையாவது செய்து வைக்க, அதில் ஈர்க்கப்பட்டு அருள்மித்ரன் குழந்தைகளை அள்ளி அணைத்து கொஞ்சினால், அதை ரசித்துப் பார்ப்பவள், , “தெரியுமா? இன்னைக்கு மதியம் கூட இப்படித்தான்...” எனத் தொடங்கி, அன்று அவர்கள் செய்த குறும்புத்தனங்களை ஒரு கதையாகவே விவரிப்பாள்.
அருள்மித்ரனின் மனம் அவள் சொல்லும் கதைகளை லயித்ததை விட, அதைச் சொல்லும்போது மாறும் அவளது முகபாவனைகளிலும் அழகிலும்தான் மயங்கி நிற்கும். அவனது...
மழைவர பூமி மறுத்திடுமா? – 13
கல்யாணிக்கு, அருள்மித்ரன் இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டதே பிடிக்கவில்லை. வேதிகாவை வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்று ஒதுக்காமல், ‘முறைதவறி அப்பன் பெயர் தெரியாத குழந்தையைப் பெற்றெடுத்தவள்’ என்கிற சமூகப் பழியையும் பொருட்படுத்தாமல் அவன் மணந்தது, கல்யாணியின் அகங்காரத்திற்குக் கிடைத்த பலமான அடி!
எவனோ பெற்றுப்போட்ட கவின், தன் கண் முன்னே இந்த வீட்டில் வளர்வதைப் பார்க்கப் பார்க்க அவருக்கு வயிறு பற்றி எரிந்தது. ‘நாளைக்கு இவன்...
“இது என் வீடு, இங்கே எந்தப் பொருளை எடுக்கணும், எதை எடுக்கக் கூடாதுன்னு நீ எனக்கு சொல்லாத” என்றார் கல்யாணி அதிகாரமாக. ‘என் வீடு’ என்பதில் அவர் கொடுத்த அழுத்தம், அவனுக்கும் இந்த வீட்டிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதைப் பறைசாற்றுவது போல இருந்தது.
அதை சரியாக கவனிக்காதவனோ, “அப்படியா? அதெல்லாம் நான் சம்பாரிச்சது. அதுவும் என் பொண்டாட்டிக்காக வாங்கி போட்டது. அதுல எடுத்துக்க உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனா, அவளுக்கே இல்லாம துடைச்சு...
மழைவர பூமி மறுத்திடுமா? – 12
இதுநாள் வரையிலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்த அருள்மித்ரனுக்கு, இன்று அன்னையின் மனதில் அப்படி என்னதான் இருக்கிறது, ஏன் அவர் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார் என்பதை உடைத்துத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்கிற தீவிரம் எழுந்தது. தீவிரம் என்று மட்டுமின்றி ஒருவிதத் துடிப்பு, வேட்கை, ஆதங்கம் என எல்லாம் ஒன்று சேர்ந்து அவனைப் போட்டு ஆட்டிப்படைத்தன.
பிரீத்தியுடனான அவனது திருமண விஷயத்தில், அவனின் நலனைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் கல்யாணி தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தார்....
அவர் என்னதான் சண்டையிட்டாலும், பழைய உணவுகளை அவளால் உண்ண முடியாது. குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாத எதையும் ஒரு தாயாக அவளால் நிச்சயம் செய்ய முடியாது.
நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “நீங்க சொல்ற மாதிரியே நான் உங்க மகனை என் கைக்குள்ள வச்சிருக்கிறதாவே இருக்கட்டும். அதுக்காக நான் பழைய சாப்பாட்டைச் சாப்பிட்டா, உங்க மகன் என் கையை விட்டு...
மழைவர பூமி மறுத்திடுமா? – 11
புயலுக்கு முன் அமைதி நிலவும் என்பார்கள்! அது எத்தனைக்கு எத்தனை நிஜம் என்பதை உணர்வதற்கு வேதிகாவிற்கு இதுவரை எவ்வித அனுபவ அறிவும் கிட்டியதில்லை. ஆனால், இனி கிடைக்குமோ என்கிற அச்சம் அவளுள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
அந்தளவிற்கு மாமியாரின் அதீத அமைதி, எப்பொழுது என்ன பூகம்பம் வெடிக்குமோ என்ற நடுக்கத்தை...
“நான் மறுபடியும் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காத, நாம தனியா போயிடலாம். எங்க அம்மா கொஞ்சம் கூட கருணையோ, மனிதாபிமானமோ இல்லாம பேசறாங்க. அவங்க பேசறதை எல்லாம் எத்தனை நாள் பொறுத்துப் போக முடியும்? பதிலுக்கு பேசப்போனா இன்னும் தான் வார்த்தைகளை நெருப்பு துண்டு மாதிரி கொட்டி நம்மை நோகடிக்கிறாங்க. அவங்ககிட்ட பேசறதும் நம்மளை நாமே...
மழைவர பூமி மறுத்திடுமா? – 10
அடுத்தடுத்து வந்த நாட்கள் ஒருவிதமான இறுக்கத்திலேயே அனைவருக்கும் கழிந்தன. அருள்மித்ரன் அவளைத் தேற்ற எடுத்த எந்த முயற்சிகளும் வேதிகாவிடம் பயனளிக்காமல் போக, மேற்கொண்டு அவளிடம் என்ன பேசி சமாதானம் செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.
எப்போதும் ஒரு மெல்லிய புன்னகையுடனும், அமைதியுடனும் வலம் வருபவள், இப்போது தனக்குள் சுருங்கிப் போனவளாகவே காட்சியளித்தாள். அவளது...
யாரையும் அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. எப்பொழுதும் இடம், பொருள் அறிந்து தான் கணவர் கண்டிப்பார். இப்பொழுது பிறந்த வீட்டில் வைத்து, அதுவும் தான் துச்சமாக நினைக்கும் வேதிகா முன்னிலையில் இப்படி திட்டியதில் மிகுந்த அவமானமாக உணர்ந்தாள்.
கல்யாணியால் பேசவே முடியவில்லை. எப்பொழுதும் மகள் இங்கே வந்தால், ஒன்றும் பேசாத மருமகன், இன்று அவள் வந்த கையோடு அழைத்துப் போக வந்திருப்பது ஏன்...
மழைவர பூமி மறுத்திடுமா? – 9
வேதிகா மௌனமாக அனைவருக்கும் உணவு பரிமாறினாள். அருள்மித்ரன் அருகில் இருந்ததால், வழக்கம்போலத் தரம் தாழ்ந்த பேச்சுக்களைப் பேச முடியாமல் மாலதி சற்று அடக்கி வாசித்தாள். இருப்பினும், வேண்டுமென்றே வேதிகாவின் சமையலைக் குறை கூறித் தன் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்படி ஏனோதானோன்னு சமைச்சு வச்சா குழந்தைங்க எப்படிச் சாப்பிடுவாங்க?” என்று முகம் சுளித்து அவள் கூற, வேதிகா...
“அண்ணி அப்ப கிச்சன்ல இருந்தாங்க அண்ணா... அநேகமா அக்கா பேசினதெல்லாம் கேட்டிருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, அக்கா அண்ணிக்கு கேட்குமேன்னு சங்கடப்படற ஆள் மாதிரி எல்லாம் தெரியலைண்ணா. அவ பேசினதையெல்லாம் கேட்ட எனக்கே தாங்கிக்க முடியலை. அண்ணி முன்னாடி இந்த மாதிரியெல்லாம் பேசினா ரொம்ப உடைஞ்சி போயிடுவாங்கண்ணா” என்றாள் தேம்பலுடன்.
“ம்ப்ச்...” என்று வேதனையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்....
மழைவர பூமி மறுத்திடுமா? – 8
கவிதா இலகுவானதை புரிந்து கொண்டு, “சரி கவி... இப்ப சொல்லு. வேலைக்கு போகலையான்னு கேட்டா ஷாக்காயிட்டியே? ஏன் அது சம்பந்தமா நீ எதுவுமே யோசிக்கலையா?” என்று தான் பேச விரும்பிய விஷயத்திற்கு வேதிகா வந்தாள்.
உண்மையில் கவிதாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. அவள் வேலையைப் பற்றியோ, மேற்படிப்பை பற்றியோ யோசித்திருந்தால் தானே சொல்வதற்கு!
“அண்ணி...
“உருப்படியா ஒரு வேலையைச் செய்யத் தெரியாது... இருக்கிற பாத்திரத்தை எல்லாம் உடைச்சுத் தள்ளுறயா? இப்ப பாலுக்கு யாரு உங்க அப்பனா காசு தருவான்? ஏற்கனவே இருக்கிற லட்சணத்துக்கு, நீ இப்படி உருப்படியில்லாம இருந்தா உன்னை எவன் வந்து கட்டிக்குவான்? பெத்த கடனுக்கு உன்னை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் சோறு போட்டு வீட்டுல தண்டமா வைப்பனோ தெரியலையே!” என்று விஷத்தைக் கக்கினார் கல்யாணி.
அன்னையின்...
மழைவர பூமி மறுத்திடுமா? – 7
குழந்தைகளும் கணவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, வேதிகா விழித்துக்கொண்டாள். விரைவாகக் குளித்துத் தயாராகி வந்தவளிடம், புவனாவும் சந்திராவும் அருளை எழுப்பிவிடுமாறு கூறினார்கள்.
அவளுக்கு அதில் எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. கணவன் தன் நம்பிக்கையைக் காப்பாற்றியதாலோ அல்லது இரவு அத்தனை இணக்கமாகவும் மென்மையாகவும் நடந்துகொண்டதாலோ என்னவோ, அவளிடம் எந்த அந்நியத்தன்மையும் எட்டிப்பார்க்கவில்லை.
இன்முகத்துடன் அவள் அருளை எழுப்ப, ஒரு தேவதையின்...
உங்கள் மகளும் கணவனும் மட்டும் தான் அழுவார்களா என மகனுக்கும் தோன்றி விட்டதோ என்னவோ சற்று நேரத்தில் பசிக்காக கவினும் சிணுங்கத் தொடங்கி விட்டான். வேதாவுக்கு தன்னுடைய நிலையை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது.
ஏதோ நினைப்பில் அழுகை தீர்ந்த பிறகும் மனைவியின் கையை சிறை செய்து வைத்திருந்த அருள், மகனின் அழுகையில் அதிர்ந்து போய் வேகமாக...
மழைவர பூமி மறுத்திடுமா? – 6
திருமண வேலைகளில் நிறைய அலைச்சல் என்பதால், படுத்தவுடனேயே அருள்மித்ரன் உறங்கியிருந்தான்.
நள்ளிரவுக்கு மேலே மகள் தீபாலி சிணுங்கவும் உறக்கம் கலைந்தவன், புட்டி பாலுக்காகக் கையை துழாவ அதற்குள் சின்னவளின் சிணுங்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து திடீரென்று சுத்தமாக நின்றிருந்தது. கூடவே என்னவோ உச்சுக்கொட்டும் சத்தமும். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
மகளைக் கவனிக்க வேண்டுமே என்று அடித்து...
கந்தசாமியின் அக்கா சந்திராவும், தங்கை புவனாவும் தான் வேதிகாவோடு இருந்தார்கள். அவர்கள் கல்யாணிக்குத் துளியும் சலித்தவர்கள் இல்லை.
“நீ கூடத்தான் எங்க அண்ணனை முழுசா முழுங்கிட்டு பட்டும் பவுனுமா சுத்தற. எங்க அண்ணனை உறிஞ்சு குடிச்சது பத்தாம என் மருமகன் இரத்தத்தையும் உறிஞ்சு குடிச்சிட்டு இருக்க, நாங்க அதுக்கெல்லாம் எதுவும் கேட்கிறோமா என்ன?” என்று இங்கிதம் பாராமல் புவனா பேச,
வேதிகாவிற்கு...
மழைவர பூமி மறுத்திடுமா? – 5
செஞ்சேரிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி சன்னிதானத்தில் மிகவும் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் அருள்மித்ரன், வேதிகாவின் திருமணம் நல்லபடியாக நடைபெற்றது.
அசோகன், யமுனா இருவருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்த்ததும் கண்கள் தழும்பி, மனம் நிறைந்து போனது. இப்படியொரு பாக்கியம் தங்களுக்குக் கிடைக்கவே கிட்டாது என்று எண்ணியிருந்தவர்களின் கவலையை அவர்கள் வணங்கும் வேலாயுத சுவாமி போக்கியிருந்தார். தங்கள்...
அவ நல்ல குணத்தை புரிஞ்சுக்கிட்ட கொஞ்ச பேரு அவளை நம்பினாங்க அருளு. ஆனா, எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா, என் குழந்தையை வார்த்தையாலேயே குத்தி கிழிச்சாங்க. ஏற்கனவே ஏன் சுமக்கறோம்ன்னு தெரியாம ஒரு குழந்தையை அவ சுமக்கிறா. அதுனால அவ படிப்பை இழந்து, மானம், மரியாதையை இழந்து, எதிர்கால வாழ்க்கையை இழந்து நிற்கிறா. இதுல எல்லாரும் கண்டபடி பேசவும், வீட்டுக்குள்ளேயே முடங்கி போயிட்டா....
மழைவர பூமி மறுத்திடுமா? – 4
காவ்யாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததிலிருந்து, கல்யாணி முன்பைவிட அதிகமாகப் பேயாட்டம் ஆடத் தொடங்கிவிட்டார்.
எந்த நிலையிலும் தன்னை எதிர்த்துப் பேசாத மகன், ஏதோ ஒரு பெண்ணிற்காக எதிர்த்துப் பேசினால் அவரின் தன்னகங்காரம் சும்மா இருக்குமா? அதோடு அவர் அத்தனை மறுத்தும் பிரீத்தியின் நகைகள் மொத்தத்தையும் கல்யாணத்திற்கு சீராக செய்துவிட்டானே என்ற கோபம் அவரின் ஆத்திரத்தை பலமடங்காக்கி இருந்தது.
அவர் பேசிய...